Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 5 May 2016

பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யலாம் 1-12 ம் வகுப்பு வரை!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இந்த இணையதளத்தில் பெறலாம் 1 to 12 Std, DTE I & II year


Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
 
Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
 
  Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கசகசா – மருத்துவ பயன்கள்"

கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.

தினம் ஒரு புத்தகம் 'வள்ளுவர் தமிழ் இலக்கணம் "


தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடக்கம்

தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளில் தமிழக தேர்தல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இறுதியாக 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் வழங்கும் பணியை, அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படி வழங்கப்படுகிறது பூத் சிலிப்:

ஒவ்வொரு தொகுதிக்கும் பகுதிவாரியாக பூத் சிலிப்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனி கவர்களில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்குவது தொடர்பாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

வரும் 10-ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பூத் சிலிப்களை அளிக்கக் கூடாது. வழங்கப்படாத சிலிப்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்குவதால், அரசியல் கட்சிகள் தனியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

பூத் சிலிப் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

பூத் சிலிப் கிடைக்காத பட்சத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆணையம் அங்கீகரித்த அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.

வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 65,616-ல் இருந்து 66,001 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை உள்ளிட்ட தேவையான பொருட்களை பிரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

உடம்பு எப்படி இருக்கிறது? - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

நுழைவுத் தேர்வு சரியா?

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்திவிடலாம் எனும் வாதம் தவறு

மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும் மாணவர் சேர்க்கையில் உள்ள முறைகேடுகளைக் களையவும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு சில காலமாகச் சொல்லிவருகிறது. மாணவர்கள் எழுத வேண்டியுள்ள ஏராளமான நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிலாக ஒரே நுழைவுத் தேர்வு வேண்டும் என்றும் அது சொல்கிறது. உச்ச நீதிமன்றமும் இதை அனுமதிப்பதால், தற்போது மத்திய அரசின் தேசிய அளவிலான தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு தமிழகத்திலும் நடந்துள்ளது.

மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்தவர்களை இது பாதிக்கும். அதுமட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளும், கல்வி முறைகளும் நமது நாட்டில் உள்ளன.

பட்டியல் மீறல்

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள கடமைகளை அரசியல் சாசனம் தனித் தனிப் பட்டியலாகப் பிரித்துள்ளது. அதில் மாநில அரசின் பட்டியலில் சுகாதாரம் உள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பொதுப்பட்டியலில் மருத்துவக் கல்வி உள்ளது. அதை மத்திய அரசு பட்டியலுக்கு முழுமையாக மாற்ற மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் முயல்கின்றன. சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில், மருத்துவக் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, மாநில மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வைத் திணிக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுகிறது.

வாதங்கள் உண்மையா?

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்திவிடலாம் எனும் மத்திய அரசின் வாதம் தவறு. மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்தித்தான் தரத்தை மேம்படுத்த முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வின் மூலமாக மேம்படுத்த முடியாது. இன்னொருபுறம், ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிற மத்திய அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை இன்றும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

மாணவர் சேர்க்கையில் உள்ள முறைகேட்டைத் தடுக்கவே இந்த நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசின் இன்னொரு வாதம். அது உண்மையானால், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் கட்டாய நன்கொடை வசூலிப்பதைத் தடுக்கவும், அந்த நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மத்திய அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எதையும் செய்யவில்லை. தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் பெறவில்லை. இது மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

‘ஒரே தேசம்.. ஒரே நுழைவுத் தேர்வு’ என்ற கொள்கைகளுக்குப் பின்னால், இந்துத்துவா கருத்தியலும், உலகமயத்துக்கு ஆதரவான கல்விக் கொள்கையும் ஒளிந்துள்ளன. இந்தியாவில் கடை திறக்க விரும்பும் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் அதில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் வசதிக்காகவும் இந்தத் தேர்வு திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இதுவரை மத்திய அரசின் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை என்பதும் இங்கு நாம் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த கவனம் செலுத்தாத போக்கை மத்திய அரசு தொடர்கிறது. அப்படி இருக்கும்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களையும் இணைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதை மட்டும் நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உண்மையாகவே மாணவர்களின் நலன்மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், கட்டாய நன்கொடையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கும், தனியார் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும் சேர்த்து ஒற்றைச் சாளர முறையில்’ மாணவர் சேர்க்கையை மத்திய அரசே நடத்தவும் முன்வர வேண்டும்.

சமூக நீதிக்கு எதிரானது

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரக் குறைந்தபட்சத் தகுதி 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2-வில் தேர்ச்சி என்பதுதான். இந்தத் தகுதி இருந்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும். ஆனால், மத்திய அரசின் நுழைவுத் தேர்வில் மீண்டும் ஒரு குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அது தேவையில்லை.

ஒருகுறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணை நுழைவுத் தேர்வில் பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் சேரத் தகுதிபெற முடியும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. மத்திய அரசின் இந்த முறையால், பட்டியல்சாதியினர் மற்றும் பழங்குடி மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களைப் பெறவில்லை என்றால் அந்த இடங்கள் காலியாகப் போகும் வாய்ப்புகள் உள்ளன. இது இடஒதுக்கீட்டுக்கும் சமூக நீதிக்கும் எதிராக அமையும்.

இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனமான எய்ம்ஸ்-ல் 1995 முதல் 2012 வரை 6 தமிழக மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர் என்ற விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் சேர்ந்து படிக்க தமிழக மாணவர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பெற்ற இடங்கள் 1% க்கும் குறைவாகவே இருக்கின்றன. இத்தகைய நிலை தொடர்வது தமிழக மாணவர்களின் நலனுக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கும் நல்லதல்ல.

நிரந்தரத் தீர்வு

தமிழகத்தின் கல்வித் தரம் குறைந்திருப்பது, நமது மாணவர்கள் மத்திய அரசு வசம் உள்ள இந்த லட்சக்கணக்கான இடங்களில் சேரத் தடையாக உள்ளது. இது தமிழகத்துக்குப் பேரிழப்பு. எனவே, தமிழக அரசு கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு தமிழக அரசு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியையும் வழங்க வேண்டும்.

தற்போதிருக்கும் உயர் கல்விக்கான இடங்களை மேலும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். எந்தப் படிப்பைப் படித்தாலும் வேலை கிடைக்கும். கவுரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான வருமானம் கிடைக்கும். சமூகப் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும் என்று மாணவர்கள் நினைக்கும் சமூக நிலையை உருவாக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகள் என்ற அரக்கன்களிடமிருந்து நமது மாணவர்களை நிரந்தரமாக மீட்பதற்கு அதுவே வழி!

கட்டுரையாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்,

தொடர்புக்கு: daseindia@gmail.com

எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வு விவகாரம்:மாணவர்கள் பாதிக்காதவாறு முடிவு- இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் சி.வி.பிரம்மானந்தம் தெரிவித்துள்ளார்.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்யக்கோரி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மேல் முறை யீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா? உச்ச நீதிமன்றத்தின் நுழைவுத் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் தமிழகம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (மே 9) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. எனினும், தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவிக்கும் முடிவைப் பொருத்து விண்ணப்பம் வழங்குவது தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

746 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக் கூடாது ஐகோர்ட்டில் வழக்கு.

விதிமுறைகளை பின்பற்றாத 746 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தபால் ஓட்டு அனுப்பும் பணி சென்னையில் துவக்கம்.

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணி செய்ய உள்ள ஊழியர்களுக்கான, தபால் ஓட்டு அனுப்பும் பணி நேற்று(மே 4) துவங்கியது.சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 3,770 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு, தேர்தல் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு அனுப்பி வைக்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சந்திரமோகன் நேற்று துவக்கி வைத்தார்.

ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை சென்னையில் சிறப்பு ஏற்பாடு.

சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், 2016 - 17ம் ஆண்டிற்கான, ஓய்வூதியர் நேர்காணல் நடந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.

பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை கோரி வழக்கு: அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
நெல்லை புது நேருநகரைச் சேர்ந்தவர் சாமுவேல்ஆசீர்ராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது: மத்திய மந்திரி தகவல்

செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.
புதுடெல்லி :
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், பதில் அளித்து கூறியதாவது:-