Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 6 May 2016

வாக்குசாவடி நிலையத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டியவை!!!

தேர்தல் ஆணையம் வாட்ஸ்ஆப் எண் !

முக்கிய செய்தி;
அன்பான ஆசிரிய பெருமக்களே நாம் அனைவரும் தேர்தல் பணியில் பல்வேறு இடங்களில் பணியாற்ற போகிறோம்.

அங்கு கட்சிகாரர்கள் சார்பிலோ அல்லது வேறு ஏதேனும் வகையில் தங்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் அல்லது அனைத்து விதமான 
புகார்களையும் தெர்விப்பதற்க்கு தேர்தல் ஆணையம்  வாட்ஸ்ஆப் எண் வெளியிட்டுள்ளது.

 வாட்ஸ்ஆப்எண்: 9444123456

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
ஆபத்து ஏற்படும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்.

'செல்பி' எடுக்க தடை..

ஓட்டுச்சாவடியில் அலைபேசியில் 'செல்பி' எடுக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் தண்டனைக்கு உள்ளாவார்கள் என, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.இன்று அலைபேசியில் 'செல்பி' எடுக்கும் மோகம் 
வளர்ந்துவிட்டது. ஓட்டுச்சாவடிக்குள் ஓட்டளிக்கும்போது, அலைபேசியில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றோரை உடனடியாக ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி இடத்தில் இருந்து 200 மீட்டர் துாரத்திற்குள் புகைப்பிடிக்கவும் தடை செய்யப்
பட்டுள்ளது.

பாடநூல்களைப் பெறுவதற்கு, இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டம் !!!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் பாடநூல்களைப்பெறுவதற்கு, இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பள்ளிகளுக்குத் தேவைப்படும் பாடநூல்களை பள்ளிகள் தாங்களே, www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து அதற்கான தொகையை இணையதளம் மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.மேலும், பாடநூல் தேவைப்படும் பெற்றோர் மற்றும் மாணவர்களும் இணையதளம் மூலம் பதிவு செய்து, பணம் செலுத்தி அவர்கள் விரும்பும் முகவரிக்கு பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது."இ' சேவை மையங்கள்: தமிழ்நாடு அரசுகேபிள் தொலைக்காட்சியின் மூலம் அனைத்து தாலுகா தலைமையிடங்களில் செயல்படும் 285 பொது இ-சேவை மையங்களின் மூலம் மாணவர்கள் மற்றும் தனியார் பாடநூல்களை பெற்றுக் கொள்வதற்குமான சேவை கடந்த பிப்ரவரி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் தங்களின் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் பொது இ-சேவை மையங்களில்புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு, வேண்டிய புத்தகங்களை பதிவு செய்து அதற்கான தொகையைச் செலுத்தி தங்களின் முகவரிக்கு கூரியர் சர்வீஸ் மூலம்பெற்றுக் கொள்ளலாம். 285 பொது இ-சேவை மையங்களின் முகவரிகள் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்

புது தில்லி:தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு  இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது.

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான  வழக்கு இன்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் விகாசிங் தனது விளக்கத்தை எடுத்துரைத்தார்.அதில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது.  அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்கில் தகவல் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் மாநில அரசுகள் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உச்சசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.நுழைவுத்தேர்வு வழக்கு விசாரனை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - அரசு பள்ளியின் முகத்தை மாற்றிய ஆசிரியர் - வாழ்த்துவோம்


மே 17-ல் பிளஸ் 2; மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் : மருத்துவ கவுன்சில்

டெல்லி : நடப்பாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம்

என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர, பிற கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்"

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

தினம் ஒரு புத்தகம் "மன வலிமை என்னும் மந்திரக்கோல் "


தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை உள்ளது.

வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி.

ஓய்வூதிய அலுவலகங்களில் வாழ்வு சான்று அளிக்க நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அரசுஅறிவித்தும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேரில் வந்துஅவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஓய்வூதியர்கள் இறந்த பின்னும், அவருக்கு ஓய்வூதியம் சென்றுகொண்டிருப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

+ 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு

சென்னை:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in,
dge3.tin.nic.in ஆகிய இணையதளங்களில்
முடிவுகள் வெளியாகும். அதில்,
பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ளலாம்'' எனக்
கூறப்பட்டுள்ளது.

Breaking News:

+2 தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும்

பத்தாம் வகுப்புத்தேர்வுமுடிவுகள் மே25 ம் தேதியும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு நெல்லை மாவட்டத்தில் 96.18% தேர்ச்சி:மாணவிகளே அதிகம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிளஸ் 1 தேர்வு முடிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

பணி செய்யாமல் ஓய்வு எடுத்தவர்களுக்கு நிரந்தர ஓய்வு பிரதமர் அதிரடி !!!

ஒழுங்காக வேலை செய்யாத சோம்பேறி அதிகாரிகள் 33 பேர் இனம் காணப்பட்டதையடுத்து பிரதமர் மோடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டது.
  இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், வருவாய்த் துறையில் 33 மூத்த அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது. இவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30

Mr. Mishra further added, the Home Minister Mr. Rajnath Singh assured that every effort will be taken to insure that the 7th Pay Commission be implemented before June 30th 2016.
7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30 – Mr. Mishra said, they have demanded for the old pension system to be implemented.

Annamalai University Directorate of Distance Education DDE- Hall Ticket for May 2016 Examinations Published

இ’ கிரேடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

தமிழகத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்விமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று பருவ தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள், பள்ளி சார்ந்த செயல்பாடுகள், சுற்றுச்சூழல் செயல்பாடுகள், விளையாட்டு திறன், தனித்திறன் உள்ளிட்டவை அடிப்படையில், கிரேடு வழங்கப்படுகிறது. இதில், ஏ, பி, சி. டி, இ என, ஐந்து கிரேடுகள் வழங்கப்படுகிறது.

+ 2, பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி?

தமிழகத்தில் ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வௌியிடப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர். தேர்தலுக்கு முன்பு தேர்வு முடிவுகள் அல்லது தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையாவது அறிவிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2016 தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடைபெறும் நாளில் அனுப்பி வைக்க வேண்டிய குறுஞ்செய்திகள் விபரங்கள்


கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் பாடநூல்களைப் பெறுவதற்கு, இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு குறித்த அறிவிக்கை தமிழக அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி :
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு குறித்த அறிவிக்கை தமிழக அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு சாவடி மைய அலுவலர்களுக்கு நாளை 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்

வாக்கு சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (மே 7) நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.