Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 9 May 2016

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை புதிய உத்தரவு

ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ''பொறியியல் பாடத்தில் டிப்ளமா படிப்புகள் வழங்கும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 2016-17-ம் கல்வி ஆண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தை பெற்றிருந்தால் மட்டுமே இந்த கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

2016-17-ம் கல்வி ஆண்டுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்றால் முதல் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அந்த மாணவர் சேர்க்கைக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கு பதிவுசெய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு

கோப்புப் படம்: ஆர்.ரகு

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 415 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 96 ஆயிரத்து 632 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு'':சென்னையில் 10 லட்சம் பேர் நாளை உறுதிமொழி ஏற்பு

நேர்மையான வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், ""போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு'' எனும் வாசகங்களை கூறி, 10 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 10) நடைபெறுகிறது.

இது குறித்த விவரம்:

                          சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலகம் நடத்தி வருகிறது. அந்தவகையில், ""போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு'' எனும் வாசகங்களை 10 லட்சம் பேர் உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

                  மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், ஊடகத்துறை, மருத்துவமனைகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், உயர் நீதிமன்றம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் அந்தந்த அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒருகோடி பேர்:

                     இதேபோல தமிழகம் முழுவதும் 66 ஆயிரம் வாக்குச் சாவடிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு கோடி பேர் நேர்மையான வாக்குப்பதிவுக்கு உறுதிமொழி எடுக்க உள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்திருந்தார்.

உறுதிமொழி வாசகம்:

                "ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு துண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதி அளிக்கிறோம்' என்ற உறுதிமொழியை தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

மேலும், உறுதிமொழி எடுக்கும் நிகழ்வின் புகைப்படம், உறுதிமொழி எடுத்தவர்கள் எண்ணிக்கை போன்றவற்றை 9445190997, 9445190473, 9884534765 உள்ளிட்ட கட்செவி அஞ்சல் எண்களுக்கும் (அ) dceducation@chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

CBSE& ICSE உட்பட அனைத்து பள்ளிகளும் 10.05.2016 க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்'1 டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்'

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தினம் ஒரு புத்தகம்'The Teacher's Grammar of English"


VILUPPURAM DISTRICT - ELECTION DUTY - 07.05.2016 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மட்டும் 12.05.2016 கலந்துகொண்டால் போதும் - விழுப்புரம் ஆட்சியர்


POSTAL VOTE - TIPS


மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் எச்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

EMIS Student Capture Form - New Format


ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.


விவசாய படிப்புக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

விவசாயம், தோட்டக்கலை, வன வியல் உள்ளிட்டபடிப்புகளில் சேர 12ம் தேதி முதல் ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம்), பிஎஸ்சி (தோட்டக்கலை),பிஎஸ்சி (வன வியல்), பி.டெக். (வேளாண் பொறியியல்), பி.டெக். (உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பம்), பி.டெக்.பயோ இன்பர் மேட்டிக்ஸ் உட்பட 15 விதமான வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள்.!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.மொத்தம் 375 விஞ்ஞானி,என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியில் சேர பி.இ.,அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை படித்திருக்கவேண்டும்.

தனியார் பள்ளியில் ’சீட்’ பெற இரவு முழுவதும் காத்திருப்பு.

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.தமிழகத்தில், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து,அரசு, தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

SBI ATM இரசிய எண் அறிய & ATM கார்டினை BLOCK செய்யும் வழிமுறைகள்...


புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப் பின் இன்று வானில் நடக்கிறது.

சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை  (மே- 9) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தெரிவித்த தகவல்,

தபால் ஓட்டுகள் 61 சதவீதம் பதிவு

தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் நாளில், 61 சதவீதம் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகம் முழுவதும், தேர்தல் பணியில், 1.32 லட்சம் ஆண்கள்; 1.97 லட்சம் பெண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.