Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 14 May 2016

முதுநிலை மருத்துவ படிப்பு 27 இடங்கள் காலி !!!

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஏப்ரலில் நடந்தது. இதில், மீதம் இருந்த இடங்கள்; இடம் ஒதுக்கீடு பெற்று, மாணவர்கள் சேராத இடங்கள் என, 174 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, அரசு 
பல்நோக்கு மருத்துவமனையில், மே, 12ல் துவங்கியது.நேற்றுடன் கலந்தாய்வு முடிந்தது. இரண்டு நாட்களில், 1,700 பேர் பங்கேற்றனர். இதில், 147 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும், எம்.எஸ்., - எம்.டி., படிப்பில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில், 27 இடங்கள் மீதம் உள்ளன. 'இதற்கான அடுத்த கட்ட கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது.

கருவூலம்-சம்பளம் வழங்கும் அலுவலகங்கள் சனி, ஞாயிறன்று (மே 14, மே 15) செயல்படும் !

தமிழகத்தில் கருவூலம்-சம்பளம் வழங்கும் அலுவலகங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 14, மே 15) செயல்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வரும் திங்கள்கிழமை (மே 16) விடுமுறை விடப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறையால், சம்பளம்- தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்தப் பிரச்னையும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதால் மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
 ஆகவே, சனி-ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் கருவூலம்-சம்பளம் வழங்கும் அலுவலகங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, இந்த அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று கருவூலம்-கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது.
 இதனால், தேர்தல் உள்பட அனைத்துச் செலவினங்களுக்கான பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கலாம் என்று கருவூலம்-கணக்குத் துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மே 16ம் தேதி திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்டவை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test (CTET) Public Notice on CTET FEB/MAY 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"விளாம்பழம்"

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

தினம் ஒரு புத்தகம்"நம் குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்"


பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு.

பிளஸ்2தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.,நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.வரும், 17ம் தேதி பிளஸ்2தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.,நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

தமிழகத்தில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்; ஓட்டுப்பதிவு நாளில் மின்தடை கூடாது என்று உத்தரவு; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற திங்கட்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

அதிகாரிகள் மும்முரம்

தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில், இதுவரை ஒருவர் கூட சேர்க்கைபுரியாதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுப் பிழைகளை பொருட்படுத்த வேண்டாம்: தேர்தல் கமிஷன்

'ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் அடையாள அட்டையில் உள்ள அச்சுப்பிழை, எழுத்து பிழையை பொருட்படுத்த வேண்டாம்' என, தேர்தல் பணியாளர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஓட்டளிப்பது எப்படி?

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வரும் 16 ம் தேதி தங்களின் ஜனநாயக கடமையாற்ற வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்க முடியும்.
தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம் வருமாறு :

1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)

2. ஒட்டுநர் உரிமம்

3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்)

4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)

5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)

6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்

10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு

11. பார்லி., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

இந்த ஆவணங்களில் ஏதேனும் வாக்காளர்கள் காண்பித்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

What's App குரூப்பில் உள்ள வர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை......

(14/5/2016) சனிக்கிழமை மாலை 6.00 (pm) மணியளவில் இருந்து கருத்துக்கணிப்புகள், பிரச்சாரங்கள், போன்ற பதிவுகளை வாட்ஸ் அப்பிலும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை உத்தரவு .......

💥Ⓜஇது What's App -க்கும் உண்டு மீறினால் வழக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை யாராவது ஆர்வக்கோளாறு காரணமாக மெசேஜை பார்வர்ட் செய்தால் மெசேஜ் போட்டவர் சிக்க வாய்ப்புள்ளது........

💥Ⓜஎந்த ஒரு (Whats App) குரூப்பிலும் பதிவு செய்வதை தவிர்க்கவும் சைபர் கிரைம் போலிசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.....

💥Ⓜமேலும் குரூப் அட்மினுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் ......  புரிந்துகொள்ளுங்கள்.......

மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !

ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, வேட்பாளர்களின் சார்பில், பூத் ஏஜென்ட்கள் இருப்பர்.அவர்கள் ஓட்டுப்போட வரும் வாக்காளர், உண்மையான வாக்காளரா, போலியான வாக்காளரா என சரி பார்ப்பர். தவறில்லாமல் ஓட்டுப்பதிவு நடக்கிறதா என கண்காணிப்பர்.

அவர்கள் ஓட்டுச்சாவடி உள்ளே, மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர், மொபைல் போன் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, உயர் அதிகரிகளுக்குமொபைல் போன் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

மாலை, 3:00 மணிக்கு மேல், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு விவரத்தை தெரிவிக்க வேண்டும். மாலை, 3:00 மணிக்கு மேல், ஓட்டுப்பதிவு முடியும் வரை பூத் ஏஜென்ட் இருக்க வேண்டும். அவருக்கு மாற்று ஆள் வரமுடியாது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள், மொபைல் போன் எடுத்துச் செல்லலாம். ஆனால், அதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.