Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 16 May 2016

தினம் ஒரு புத்தகம்"300 நன்னெறிக்கதைகள்"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"கொய்யாவின் மருத்துவக் குணங்கள்"

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ்2 தேர்வு முடிவு நாளை (செவ் வாய்க்கிழமை) காலை 10.30 மணி யளவில் வெளியிடப்படுகிறது.

உலக வானியல் தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கு உத்தரவு!

மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலகவானியல் தினத்தை கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்.

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியைபயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

CTET தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான, சி.டெட்., தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டபள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, மத்திய அரசின், சி.டெட்., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, சி.டெட்., தேர்வு, பிப்ரவரியில் நாடு முழுவதும் நடந்தது.

தஞ்சாவூர் தேர்தல் ஒத்திவைப்பு.

அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது