Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 June 2016

பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 133000 மாணவர்கள் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தகவல்

பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.

சென்னை:

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடங்கியது. அன்று முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்தனர். ஆன்லைனில் பதிவு செய்ய மே 31-ம் தேதி கடைசி நாள் என்றும், ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து போதிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. 

அதன்படி, மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பங்களை நேரடியாகவும், தபால் மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர். கடைசி நாளான இன்று ஏராளமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. 

விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான காலக்கெடு மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பம் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓசூர், நத்தம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ. மீட்டர் மழை பதிவானது. காவேரிப்பாக்கம் 40 மி.மீ., சோளிங்கர், அரக்கோணத்தில் தலா 30 மி.மீ., மேட்டூரில் 20 மி.மீ., மேலூர், தாம்பரம், வாணியம்பாடி, காஞ்சீபுரம், அரூர், சூளகிரி, வாலஜா, ஊட்டி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 
“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். 
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் உள்ளாட்சி தேர்தலுக்கும் வருது....!!

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 12 மாநகராட்சிகளில் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தை (வி.வி.பி.ஏ.டி.,) பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதலில் வார்டுகளில் வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வார்டுகள் 
பிரிக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம்தமிழகத்தில் மே 16ல் நடந்த சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ('ஓட்டர் வெரிபிகேஷன் பேப்பர் ஆடிட் ட்ரையல்') பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் 1,300க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ள இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பது இந்த இயந்திரத்தில் 7 நொடிகள் தெரியும். இந்த இயந்திர பயன்பாட்டின் மூலம் யாருக்கு ஓட்டை பதிவு செய்தோம் என்பதை எளிதாக வாக்காளர்கள் அறிந்து கொண்டனர். 'எந்த பட்டனை அழுத்தினாலும், குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கே செல்கிறது' என்று யாரும் குறை கூறாமல் இருப்பதற்காக இந்த கருவி பயன்படுத்தப்பட்டது.
மாநகராட்சி தேர்தல்தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் உட்பட 12 மாநகராட்சிகளின் தேர்தலிலும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி..

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016

வட்டியில்லா EMI வசதியை அறிமுகப்படுத்துகிறது ப்ளிப்கார்ட்

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் ப்ளிப்கார்ட் (flipkart). ப்ளிப்கார்ட் இன்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட்டியில்லா மாதத் தவணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ப்ளிப்கார்ட், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோக மின்னியல் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. 
இதன் மூலம், வாடிக்கையாளர் 5000 ரூபாய்க்கு அதிகமான மின்சாதனங்களை மாதத் தவணைத்திட்டத்தில் வாங்கும்போது, அதற்கு கட்டணமோ அல்லது வட்டியோ கிடையாது. இதுமட்டுமில்லாமல், இதற்கு முன் பணமாக எதுவும் செலுத்தத் தேவையில்லை. Bajaj Finserv லிமிடெட் மற்றும் மின்னியல் சாதனங்களின் முக்கிய விற்பனையாளர்களுடன் இணைந்து ப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த லாப ஏற்ற இறங்களை சமன்படுத்திக்கொள்ளும். மாதத் தவணையை Bajaj Finserv மற்றும் முக்கிய ப்ராண்ட்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்.
தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின் போன்ற மின்னியல் சாதனங்களின் ஆன்லைன் விற்பனை குறைவாக உள்ளது. ப்ளிப்கார்ட்டின் இந்தச் சலுகையின் மூலமாக இந்த வகை பெரும் செலவுகொண்ட மின்னியல் பொருட்களின் விற்பனை பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த “No cost EMI" மூலமாக ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் செலவை எளிதாக்குவதே நோக்கம் என்று ப்ளிப்கார்டின் டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் நிதிசார் சேவைகளின் தலைவர் மயாங்க் ஜெய்ன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடத் திட்டம் இல்லாமல் நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடியுமா?- குழப்பத்தில் ஆசிரியர்கள்

மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகளை ஆசிரியர்களே நடத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான பாடத் திட்டமும், துணைப் பாடப் பகுதியும் இல்லாமல் எப்படி சொந்தமாக கதைகளைச் சொல்லி பாடம் நடத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்ஆசிரியர்கள்.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் முன்பு வழங்கப்பட்டு வந்த மொழிப்பாட புத்தகங்களில் துணைப் பாடம் என்ற பிரிவு இருந்தது.

நன்னெறி நீதிக் கதைகள் கொண்ட துணைப் பாடம், மாணவர்களை நல்வழிப்படுத்தும் எனக் கருதப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் துணைப் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டு, பாடங்களுடன் இணைந்த நன்னெறிக் கதைகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நீதிபோதனை வகுப்புகளை நீதிபோதனை வகுப்புகளாகவே நடத்த வேண்டும், வேறெந்த வகுப்பாகவும் நடத்தக்கூடாது. நீதிபோதனை வகுப்புகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், நல்ல கதைகள், கருத்துகளை தாங்களே தயார் செய்து மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறது.துணைப் பாடத்தை நீக்கிவிட்டு, பாட இணைச் செயல்பாடுகளுக்கு தனியே பாடத் திட்டம் தயார் செய்து வழங்காமல், நன்னெறிக் கதைகளையும், கருத்துகளையும் ஆசிரியர்களே தயார் செய்து கற்பிக்க வேண்டுமென்பது சரியான நடைமுறையல்ல என கருத்து தெரிவிக்கின்றனர்.

துணைப் பாடம் தேவை

கலையாசிரியர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ‘ஒவ்வொரு வகுப்புக்கும், மாணவர்களின் ஏற்றுக் கொள்ளும் திறன், வயது ஆகியவை அடிப்படையில் பாடத்திட்டத்தின் படி துணைப் பாட நீதிக்கதைகள் இருக்கும். துணைப் பாடம் நீக்கப்பட்டபின், விழுமக் கல்வி, உடல்நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக் கல்வி உள்ளிட்ட 6 தலைப்புகள் கீழ் ஆசிரியர்கள் பாட இணைச் செயல்பாடுகளை நடத்த வேண்டுமென உத்தரவு உள்ளது. இதில் விழுமக் கல்வியின் கீழ் நீதிக்கதை, நீதிபோதனை, நன்னெறிக் கதை ஆகியவை உள்ளன. பாடம் நடத்த வேண்டுமென அறிவிப்பு உள்ளதே தவிர, பாடத் திட்டம் எதுவும் இல்லை.

நன்னெறிக் கதைகளுக்கான துணைப் பாடமும் இல்லை. நீதிபோதனைவகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை அறிவிக்காமல், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு கதைகளைக் கூறவும், அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தவும் சொன்னால் எப்படி சரியாக இருக்கும்? எனவே துணைப் பாடத்தை மீண்டும் இணைத்து, அதற்கான பாடத் திட்டத்தையும் வெளியிட வேண்டும்’என்றார்.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்) பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்றுமாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக இருந்தாலும்,

ஜியோ எல்ஒய்எப் ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் மட்டுமே இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியும்.தவிர 4,500 நிமிடங்கள் இலவசமாக பேசவும் முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ5,490 முதல் ரூ.19,399 வரை விற்கப்படுகின்றன. மேலும் ஜியோ டாட் காம் என்னும் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எல்ஒய்எப் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி சிம்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் கடைகள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரீடெய்ல் கடைகளில் விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் குழும பணியாளர்களுக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழும பணியாளர்கள் தங்களுடைய 10 நண்பர்களுக்கு பரிந்துரை செய்து வாங்கி கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. இப்போது வர்த்தக ரீதியாக அனைவரும் 4ஜியை பயன்படுத்துவற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையனஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்பெக்ட்ரம் அலைவரியை பகிர்ந்துகொள்கிறது. தவிர பார்தி இன்பிராடெல், ரிலையன்ஸ் இன்பிராடெல், இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட பல செல்போன் டவர் நிறுவனங் களுடன் டவர்களை பகிர்ந்து கொள்கிறது. முன்னதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ரிலையன்ஸ் ஜியோ என்று குறிப்பிட்டார். ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டதினால் ஏற்கெனவே சந்தையில்இருக்கும் பார்தி ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பங்கேற்கும் ’பட்டசபை’ நாளை கூடுகிறது!

தமிழகம் முழுவதிலும் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்கும்’பட்டசபை’ நிகழ்ச்சி, நாளை, அண்ணா நகரில் நடக்க உள்ளது.’தினமலர்’ நாளிதழ் மாணவர் இதழான ’பட்டம்’ சார்பில், நாளை சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை’பட்டசபை’ நிகழ்ச்சி நடக்கிறது.

சட்டசபை நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 50 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.உடன் அவர்கள் பெற்றோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். கல்வி தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து மாணவர்கள் விவாதித்து, தீர்மானங்கள்நிறைவேற்ற உள்ளனர்.சிறப்பு விருந்தினர்களாக, இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் டி.ரவிக்குமார் ஆகியோர்பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், அனைவரும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

நன்றி
தினமலர்

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்"

நமது நண்பர்களில் சிலர் கீரைகளை குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாமா? வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா? இந்தகீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? இந்த கீரையை இந்த நோய் தாக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்பது மாதிரியான சந்தேகங்களை கேட்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவினை இப்போது தருகிறேன். இதன் படி நீங்கள் கீரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

#கோடை காலத்தில் (பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை) சாப்பிடும் கீரைகள் பற்றி முதலில் பார்ப்போம்.

வல்லாரைக்கீரை
பசலைக்கீரை
வெந்தயக்கீரை
சக்ரவர்த்தி கீரை
பசலைக்கீரை
கரிசலாங்கண்ணி கீரை
மணத்தக்காளி கீரை
தண்டுக்கீரை
அகத்திக்கீரை (மாதம் இருமுறை மட்டுமே)

மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் (புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை) சாப்பிட ஏற்ற கீரைகள்.
கற்பூரவள்ளி
அரைக்கீரை
முசுமுசுக்கை
தூதுவளை
மூக்கிரட்டை
புதினா
சுக்கான்கீரை

வருடம்_முழுதும் சாப்பிட தகுந்த கீரைகளும் உள்ளன. அவை:

வல்லாரைக்கீரை
முருங்கைக்கீரை
புளிச்சக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணி கீரை

குழந்தைகளுக்கு இப்படிபட்ட கீரைகள் கொடுக்கலாம்.

தூதுவளை
மூக்கிரட்டை
முருங்கை
கற்பூரவள்ளி
அரைக்கீரை
வல்லாரைக்கீரை

உடலின்_உறுப்புகளை காக்கும் கீரைகள்:

தாம்பத்திய உறவு சிறக்க.
வல்லாரைக்கீரை
பசலைக்கீரை
முருங்கைக்கீரை
தூதுவளைக்கீரை
பசலைக்கீரை
புளிச்சக்கீரை

தோல்களை மென்மையாக்கும் கீரைகள்:

பருப்புக்கீரை
சுக்கான் கீரை
பொன்னாங்கண்ணி கீரை

மூளைக்கு வலு சேர்க்கும் கீரைகள்:

வல்லாரைக்கீரை
முருங்கைக்கீரை

கல்லீரலை பாதுகாக்கும் கீரைகள்:

கீழாநெல்லி
கரிசலாங்கண்ணி

குடலைப்பாதுகாக்கும் கீரை:

மணத்தக்காளி கீரை

நரம்பு மண்டலத்தை சீராக்க உதவும் கீரைகள்:

தூதுவளை
புளிச்சக்கீரை
கொத்தமல்லிக்கீரை

கண்களின் பார்வை தெளிவுடன் இருக்க உதவும் கீரைகள்:

முருங்கைக்கீரை
கருவேப்பிலை
பொன்னாங்கண்ணி
கொத்தமல்லி கீரை

மூட்டுவலி போக்கும் கீரைகள்:

முடக்கறுத்தான் கீரை
கருவேப்பிலை

கீரை_உண்பதை_தவிர்க்க_வேண்டியவர்கள் பற்றி பார்ப்போமானால்,

சிறுநீரக கற்கள், பித்தப்பையில் கற்கள், கருப்பைக்கட்டி, உள்ளவர்கள் பொதுவாக கீரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயாளிகள் அதிக குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயக்கீரை, மணத்தக்காளி, முளைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவே கூடாது. அதற்குப்பதிலாக, கருவேப்பிலை, கற்பூர வள்ளி, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நரம்புத்தளர்ச்சி மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் கொண்டவர்கள் முருங்கைக்கீரை, தூதுவளை கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய கீரைகளை பருப்பு, மிளகு, சீரகம், நெய் போன்றவை சேர்த்து உண்டு வர நிவாரணம் கிடைக்கும்.

இரவு நேரத்தில் கீரைகளை உணவில் சேர்க்கக்கூடாது என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அது பொருந்தாது. அதாவது,

செரிமானக் கோளாறு உள்ளவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் இரவில் தாமதமாக உணவு உண்பவர்கள் இவர்களைத்தவிர்த்து மற்றவர்கள் இரவில் கீரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை.

New Health Insurance Scheme -மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு.

G.O.(Rt).No.421
Dt: May 24, 2016
New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – List of Approved Hospitals – Addition of new hospitals, Deletion of existing hospitals, Deletion of procedures of existing hospital and change of name of existing hospitals based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders issued.

இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.வனத்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பனகல் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார்.

தேனி கல்லூரியில் மருத்துவ கவுன்சில் ஆய்வு: மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில்மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு நடத்தினர். பேராசியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் காலியாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைகண்டறிந்தனர். அவர்கள் அனுமதியளித்த பின்னரே இந்தாண்டுமாணவர் சேர்க்கை நடைபெறும்.

இ - சேவை மையங்களில் இனி சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்

தமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில், 10,500 இடங்களில், இ - சேவைமையங்களை அரசு நடத்தி வருகிறது. 'எல்காட்' எனும் தமிழக மின்னணு நிறுவனம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், வறுமை ஒழிப்பு திட்ட மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவற்றை நிர்வகித்து வருகின்றன.

'டான்செட்' நுழைவுத்தேர்வு'ஹால் டிக்கெட்' வெளியீடு

சென்னை, அண்ணா பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கான,'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, 'டான்செட்' எனப்படும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்.

ஒரே தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும், மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்., மே மாதங்களில் அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடக்க இருந்தது.

8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்.

எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் 320 அரசு பள்ளிகளில் முதன்முறையாக அனிமேஷன் முறையில் கணிதம்,அறிவியல் பாடங்கள் அறிமுகம்....


ஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'செக்'

அரசு பள்ளிகளில் பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட கணக்கு முடித்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 05. 04. 2016


பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்ற வேண்டும்.

தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்படும் மூன்று தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு அரசு கேடயம் - இயக்குனர் செயல்முறைகள்...