Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 6 June 2016

உயர்கல்விக்கு வழியின்றி தவிக்கும் ஏழை மாணவர்கள்: விருதுநகரில் அரசு கல்லூரி தொடங்கப்படுமா?

விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏட்டுப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த காலத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறந்து ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்தவர் காமராஜர். அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 90 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 48 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 200 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

ஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். ஆனால் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பயில்கின்றனரா? என்பது கேள்விக்குறியே. காரணம் 200 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் முயற்சியால் சாத்தூரில் 2011-ம் ஆண்டிலும், வைகைச்செல்வன் அமைச்சராக இருந்தபோது அருப்பு க்கோட்டையிலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்ற தொகுதியான சிவகாசியிலும் 2012-ல் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஆனாலும், இக்கல்லூரிகளில் இதுவரை முழு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வழக்கமான பாடப் பிரிவுகளுடன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வணிகம் சார்ந்த பாடப் பிரிவுகள் தொடங்கப்படவில்லை என்பது மாணவர்கள், பெற்றோரின் குற்றச்சாட்டு.

விருதுநகரில் கடந்த ஆட்சியில் அமைச்சர் தொகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், மாவட்டத் தலை நகரான விருதுநகரில் இதுவரை அரசு கலைக் கல்லூரி தொடங் கப்படாததால் இப்பகுதி ஏழை, எளிய மக்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர்.

அரசு கலைக் கல்லூரி இல் லாததால் விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கர்ணன் கூறியதாவது:

கல்வி என்பது உரிமை. அதை தரமாகவும், இலவசமாகவும் வழங்குவது அரசின் கடமை. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில தனியார் கல்லூரிகளை நாடிச்செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சேர்ந்தாலும் சில மாண வர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை.

குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே மாவட்டத் தலைநகரான விருதுநகரிலும், திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,

பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம், Guide teacher  அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில்  .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

தமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துப வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 34

பணி: Officer (Accounts)

காலியிடங்கள்: 08

தகுதி: CA, ICWAI தேர்ச்சி பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (HR)

தகுதி: கலை, அறிவியல், பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். HR, Social Work பாடப்பிரிவில்எம்பிஏ, எம்ஏ முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Officer (Officer (officer Grade)காலியிடங்கள்: 03

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 8 ஆண்டுபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (R&D and QC)

காலியிடங்கள்: 03

தகுதி: Plup & Paper Technology, Chemistry பாடப்பிரிவில் பொறியியல் பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டம் மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Plant Engineer (Mechanical)

காலியிடங்கள்: 01

தகுதி: Mechanical, Production, Industrial Engineering பிரிவில் பி.இ, பி.டெக் முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Plant Engineer (Safety)

காலியிடங்கள்: 01

தகுதி: Industrial Safety, Physics, Chemistry பிரிவில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (Stores)

காலியிடங்கள்: 03

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (HR), Tamil Nadu Newsprint andPapers Limited,Kagithapuram - 639136, Karur District, Tamil Nadu.

பணி: Deputy Manager (Finance)

காலியிடங்கள்: 02

பணி: Manager (Marketing)

காலியிடங்கள்: 06

பணி: Officer (Marketing)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, CMA, MBA (Marketing), B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (Corporate Technical Cell), Tamil Nadu Newsprint and Papers Limited, No.47,Mount Road, Guindy, Chennai - 600 032, Tamil Nadu.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.tnpl.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்

பட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்'...!!

பட்டசபையில் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை, சட்டசபையில் நிறைவேற்றினால், பள்ளிக் கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்படும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார் பேசினார். 'தினமலர்' நாளிதழின் மாணவர் இதழான 'பட்டம்' சார்பில், சென்னை, அண்ணாநகர் மேற்கு 
பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில், மாணவர்கள் பங்கேற்ற 'பட்டசபை' என்ற கல்விக்கான, 'மாதிரி சட்டசபை' நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், 'தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார், 'பட்டம்' இதழ் ஆலோசகர் ஞாநி, 'பட்டம்' இதழ் ஆசிரியர் ரமேஷ் வைத்யா

உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வணிகமாக்க வேண்டாம்நிகழ்ச்சியில், டி.ரவிக்குமார் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளி முதல், சர்வதேச பள்ளி வரை அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு மதிப்பெண் சுமையை குறைத்து, 'கிரேடு' முறை கொண்டு வருவது பற்றி பேசினர். பல மத்திய அரசு பள்ளிகளில் அந்த முறை உள்ளது. கற்பனை, சிந்தனை திறன் அற்ற கல்வியை பல மாணவர்கள் விமர்சித்தனர்.

கழிப்பறைகள் பற்றி பல மாணவர்கள் பேசினர்.உலக வங்கி குழுவின் தமிழக ஆய்வில், பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்று தெரியவந்தது. உலக சுகாதாரத்துறை அறிக்கையில், கழிப்பறைகள் இல்லாததால் தான், இளம்பெண்களில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதாக கூறியுள்ளது.

நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 'மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும்; நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களை கழிப்பறைகளில் அமைக்க வேண்டும்' என,

கோரிக்கை வைத்தேன் அதைக் கேட்டு, பல எம்.எல்.ஏ.,க்கள் சிரித்தனர்; ஆனால், பெண் எம்.எல்.ஏ.,க்கள், பாராட்டினர். ஒரு மேதை சொன்னதுபோல, 'அரசியல், அயோக்கியர்களின் கூடாரம்' இல்லாதிருக்க, சிந்திக்கும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அனைவரும் அதிகாரத்தை அடைய வேண்டும். அதற்கான வழிகாட்டியாக தலைவர்கள் மாற வேண்டும்.

அரசு பள்ளிகளில் நல்ல கட்டமைப்பு, அதிக ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் இருந்தும், அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில், தனியார் பங்களிப்புடன் தான் கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும். என்றாலும், கல்வியை வணிகமாக்காமல், அதை ஒரு சேவையாக கருதி, தாங்கள் செலவழிக்கும் தொகைக்கேற்ப, நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி.,கல்வி முறையில் உள்ள பாடத்திட்டம் மிகவும் தரமானதாக உள்ளது. அதன் உரிமையை பெற்று, அதன் பாடங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும்.

தன்னார்வலர்களை கொண்டே, ஒரு ஆண்டிற்குள் மொழிபெயர்ப்பை செய்து முடிக்கலாம். இவற்றை, சட்டசபையில் கல்வி அமைச்சரும், முதல்வரும் பரிசீலித்தால், பள்ளிக்கல்வி துறை வளர்ச்சி அடையும். இவ்வாறு, அவர் பேசினார்.அனைவருக்குமானது அரசியல்

'தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

இந்த பட்டசபை நிகழ்ச்சியில், அனைத்து மாணவர்களும் நன்றாக பேசினர்.

இங்கு பல பிரச்னைகள் குறித்து, தெளிவாக பேசினர். இந்த மாணவர்கள் இதோடு விட்டு விடாமல், தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்.

அரசியலில் தொழில்முறை அரசியல்வாதி தான் ஈடுபட வேண்டும் என்றில்லை; அனைவரும் ஈடுபடலாம். மனு அளிப்பது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்கள் கூட அரசியல் தான். அனைவரும், அரசியலில் பங்கேற்று பிரச்னைகள் பற்றி பேச வேண்டும்.தினமும் எந்தெந்த கட்சிகள் என்னென்ன சொல்கின்றன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்கள், இங்கு விவாதித்த விஷயங்களை ஆரோக்கியமான கருத்தாக எண்ணி அரசு ஏற்றால், கல்வி மேம்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:பட்டசபை நிகழ்ச்சியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், எதிர்க்கட்சியினர் வைத்த கோரிக்கைகளை கல்வி அமைச்சரும், முதல்வரும் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இப்படி சட்டசபையும் இருந்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது, இப்படி இருக்காது. பிரச்னைகள் இருக்க வேண்டும்; பிரச்னைகள் இருந்தால் தான் தெளிவு பிறக்கும்.

ஒரு மாணவி, ஆட்டுமந்தையை போல, மருத்துவர், பொறியாளர்களை உருவாக்குவதற்கான கல்வி மட்டுமேபோதிக்கப்படுவதாக கூறினார். அவர் கூறிய 'ஆட்டுமந்தை' என்ற வார்த்தை சுயசிந்தனை அற்ற நிலையை காட்டுகிறது. அதுதான் இன்றைய பள்ளிக்கல்வியின் நிலை.

அதனால் தான், அந்த துறைகளுக்கு அதிகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மருத்துவத் துறைக்கு, 75 லட்சம் ரூபாய் கேட்கப்படுகிறது. தற்போது நிறைய பேருக்கு, கலெக்டர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது.மாணவர்களுக்கு அரசியல் சிந்தனை வரவேண்டும். அரசியல், யாருக்கும் பாரம்பரிய உரிமையோ, தொழிலோ அல்ல. மக்கள், தங்கள் பிரச்னைகளை பற்றி தைரியத்துடன் பேச முன்வர வேண்டும்.

புதிய சூழல் தேவை;கற்பனைத் திறனுக்கான வாய்ப்பை தமிழக கல்விக்கூடங்கள் மறுத்து வருகின்றன என்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். அருகாமை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால், அவர்களின் சிந்தனை, விளையாட்டு நேரம் அதிகமாகும். இன்னும், கிராமப்புறங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. ஜாதி பார்த்து, மாணவர்கள் நட்பு வைத்துக்

கொள்ளும் அவலம் நிலவுகிறது. சுதந்திரம் அடைந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பின்

தான், அபுல்கலாம் ஆசாத்தால், கல்வித்துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, பின் மனிதவள மேம்பாட்டு துறை என பரிணாமம் அடைந்தது. ஆனால், கல்வி மனிதவளத்தை மேம்படுத்த, புதிய சிந்தனைகளை உருவாக்கும் சூழலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வசூல்! ரசீது வழங்காமல் ஏமாற்றுவதாக பெற்றோர் புகார் !!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பு வாரியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள், ரசீது தராமல் ஏமாற்றுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.

இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் இலவச பொருட்களும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் அரசு நிதியில் தான் சம்பளம் தரப்படுகிறது.

ஆனாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைமுகமாக பலவித கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வசூலுக்கு எந்த ரசீதும் வழங்காமல் பள்ளி நிர்வாகங்கள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ள நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றுக்கு மாணவர்களை சேர்க்க, மறைமுக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளுக்கு நிகராக, பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், தமிழ் வழிக்கு தலா
250 ரூபாய்;ஆங்கில வழிக்கு 400 ரூபாய்
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு தமிழ் வழிக்கு 350 ரூபாய்; ஆங்கில வழிக்கு, 550 ரூபாய்
* பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தமிழ் வழிக்கு 700 ரூபாய்; ஆங்கில வழிக்கு 900 ரூபாய் என, பெரும்பாலான பள்ளிகள் வசூலிக்கின்றன; இதற்கு, எந்த விதமான ரசீதும் வழங்குவதில்லை.
* இந்த வசூலில், அரசியல் மற்றும் உள்ளூர் செல்வாக்கில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தில் நியமிக்கப்பட்ட வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
* பெற்றோர் ஆசிரியர் கழக நன்கொடை என்ற பெயரில் தனியாக மற்றொரு கட்டணமும் வசூலிக்கப்பட்டு அதற்கு ரசீது தரப்படுகிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்ட போது, : 'அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவில் பள்ளி வளர்ச்சிக்காக மாணவர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம்' என்றனர்.சில ஆசிரியர்கள் கூறும் போது, 'அரசின் நிதி ஒதுக்கீடு பள்ளிக்கு வந்து சேர்வதில்லை. எனவே பள்ளி பராமரிப்பு பணிக்கு இந்த நிதி தேவைப்படுகிறது' என்றனர்.

'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்': தமிழகத்தில், 800 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பல பள்ளிகள் பல லட்சம் ரூபாய் நன்கொடை வசூலித்து எல்.கே.ஜி.,
அட்மிஷன் கொடுத்தன. பல பெற்றோர் கட்டணம் செலுத்த முடியாமல், கட்டணம் குறைந்த மெட்ரிக் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் பிள்ளைகளை மாற்றினர்.

கட்டணம் செலுத்த முடியாதவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியேற்றிய சம்பவமும் நடந்தது. தற்போது எல்லாம் முடிந்த பின், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல், பெயரளவில் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வணிக நிறுவனங்கள் போல், லாப நோக்கில் செயல்படாமல் சமூக நோக்கில் செயல்பட வேண்டும். கட்டண கமிட்டி நிர்ணயித்த

கட்டணத்தை விட அதிக கட்டணமோ, நன்கொடையோ வசூலித்தால் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்

ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார் ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை எளிமையாக்கி உள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட் பெற வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி

உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த ரயில்வே பட்ஜெட்டில், முன்பதிவில்லாத டிக்கெட்டை, 'மொபைல் ஆப்' மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான ஆலோசனை தற்போது துவங்கியுள்ளது.

ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், 'டில்லி, மும்பையில் இதற்கான பரிசோதனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், 'டாப் -10' நகரங்களில், 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டு, முன்பதிவில்லாத டிக்கெட் பெறும் வசதி

கொண்டு வரப்படும். இதன்பின், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட்களும் இத்திட்டத்தில் பெற வசதி செய்யப்படும்' என்றனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறை தீர்க்க 20 பேர் குழு...!!

அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்க்க, குறைதீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் இவர்கள் குறைகளை கேட்டனர்.அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு மற்றும் விண்ணப்பங்கள் 
அனுப்புவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. ஆனால், 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் தொடர்பான குழப்பங்களால் பெற்றோர் தவித்தனர்.

இது தொடர்பாக, அண்ணா பல்கலை ஏற்கனவே அறிவித்த, 044 - 2235 8041, 2235 8042, 2235 8043, 2235 8044 என்ற, குறை தீர் தொலைபேசி எண்களில் அழைத்தால், பதில் அளிக்க யாரும் இல்லை. எப்போது தொடர்பு கொண்டாலும், 'உபயோகத்தில் உள்ளது; பின்னர் அழைக்கவும்' என்ற ஒலி மட்டுமே கேட்டதாக, மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து நமது நாளிதழில், ஜூன், 4ல், விரிவான செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி, பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோரிடம் உயர்கல்வி செயலர் அபூர்வா விசாரணை நடத்தி, உடனடியாக குறையை தீர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று முதல், குறை தீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, இந்த எண்களில் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு விடை அறிந்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே அறிவித்த நான்கு எண்களுடன் கூடுதலாக, 16 குறை தீர் தொலைபேசி எண்களையும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, 044 - 2235 8041 முதல் 44 வரை, 044 - 2235 8301 முதல் 8310 வரை, 044 - 2235 8265 முதல் 8268 வரை, 044 - 2235 8411 முதல் 8413 ஆகிய எண்களிலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

விண்ணப்ப நிலைஅறிய புது வசதி:அண்ணா பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க, இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், 4ம் தேதி முடிந்தது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தபாலிலும், நேரிலும், அண்ணா பல்கலையில் ஒப்படைத்தனர்.

பல்கலையில் ஒப்படைத்த விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை பிரிவில் சேர்க்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள, இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்

பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில், 'அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்' என்ற பகுதியில், விண்ணப்ப எண்ணை செலுத்தி,

விண்ணப்ப நிலையை அறியலாம்.

தமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி...!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், 6,000 பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா உதவியாக உள்ளது. எனவே, பள்ளிகள் அளவில் யோகா கற்றுக் கொடுக்க முடிவு செய்தோம்.

30 ஆயிரம் பள்ளிகளில், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். அவர்கள், மாணவர்களுக்கு எளிமையான, 'உப யோகா' பயிற்சியை அளிக்கின்றனர்.தமிழகத்தில், 11 ஆயிரத்து, 500 தன்னார்வ யோகா ஆசிரியர்கள் மூலம், 6,000 பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் பொது நிறுவனங்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பணிபுரிவோருக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னையில் இதுவரை, 4,500 தன்னார்வ தொண்டர்களுக்கு, யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றோர், சென்னை மக்களுக்கு, இம்மாதம் முழுவதும் இலவச யோகா பயிற்சி அளிக்க உள்ளனர். இலவச யோகா கற்றுக்கொள்ள, 83000 11000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதனையா, வேதனையா? வெள்ளத்தில் தொலைந்த குடிசைகளால் மாறியது வாழ்க்கை!

வெள்ளத்தின் போது, அடையாறு, கூவம் ஆற்றையொட்டிய பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டதால், சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியவை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில், கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்

சேர்க்கை நடைபெறும்.

கணக்கெடுப்பு

குடும்பச்சூழலுக்கு ஏற்ப, பெற்றோர் சம்மதத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் இதுவரை 1,821 பேர், பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் 1,141 குழந்தைகளை கண்டறிந்தது. குழந்தை தொழிலாளர் மீட்பு குழு, 450 குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 957 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதே போல, கடந்த ஆண்டு 2,350 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டில், அது 1,821 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு, சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளமே காரணம்.

பெரும்பாலும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டி வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், அதை ஒட்டிய குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் தான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வெள்ளத்தில், இவர்களின் குடிசைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

அங்கிருந்த குடும்பங்கள், புறநகர் பகுதிகளுக்கு, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறு குடியமர்வு செய்யப்பட்டன. இதன் காரணமாக, மாநகரில், குடிசைப் பகுதிகளும் படிப்படியாக, குறைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி செல்லா குழந்தைகளும், குழந்தை தொழிலாளர்களும் குறைவதற்கு இது முக்கியக் காரணம்.

வெளிமாநில குழந்தைகள்

விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் தற்போது நடந்த கணக்கெடுப்பில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 263 பேரும், தி.நகரில் குறைந்தபட்சமாக 62 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். ஆந்திரா, ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் குழந்தைகளே, பள்ளி செல்லாதவர்களாக உள்ளதும், கணக்கெடுப்பின் போது

தெரியவந்து உள்ளது.

கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் வசம் உள்ள 60 பயிற்சி மையங்கள் மூலம், சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். இதுவரை, ஐந்து உண்டு, உறைவிட பள்ளிகளிலும் 150 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகள் படிப்படியாக குறைந்து வருவதற்கு, பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு முக்கியக் காரணம். சென்னையில் குடிசை பகுதிகள் முழுவதுமாக குறைந்து விட்டால், பள்ளி செல்லா குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம், இந்த விஷயத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறது' என்றார்.

அரசின் கடமை

மாநகரில் குடிசைகள் இருக்கக் கூடாது என்று அரசு நினைப்பது நல்ல விஷயமே. ஆனால், குடிசைகள் குறைந்ததால், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறைந்துள்ளனர் என்பது, சாதனையாக சொல்லிக் கொள்ளும் விஷயமில்லை. புதிய குடிசை ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்க விடாமலும், மறுகுடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது, அரசின் தார்மீகக் கடமை