Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 15 June 2016

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு!

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்விமையம் வழியாக கடந்த டிசம்பர் 2015-ல் மாணவர்கள் தேர்வுகளை  எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இதில் இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பலர் சான்றிதழ்கள் இதுவரை கிடைக்கப்பெறாததால் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேரமுடியாமல் தவிக்கின்றனர்.தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து ஸ்டடி சென்டர்களின் நடத்துனர்களிடம் விசாரித்த போது சரியான பதிலும் இல்லை.இது குறித்து மாணவர் ஒருவர் கூறும் போது, சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்தால் உயர்கல்வி சேர்கைக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கும் என்றார்

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளன.பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை  லிட்டருக்கு ரூ.1.24ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறப்பு: 33 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை.

விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் நாளை வியாழக்கிழமை (ஜூன் 16) திறக்கப்படுகின்றன.

           பல கல்லூரிகள் பள்ளிப் படிப்பை முடித்து புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கும் வகையில், முதல் நாளில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகத்திலுள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 140 அரசு உதவு பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 6 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மணவர்களின் விண்ணப்பம் அதிக அளவில் இருந்ததால் கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள பல்கலைக்கழகங்கள் அனுமதி அளித்தன  சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் அளவுக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அளவுக்கும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத அளவுக்கும் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. எனினும் 33 அரசுக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 80 அரசுக் கல்லூரிகளில் 2500-க்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 4 மண்டல இணை இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதன் காரணமாக கல்விப் பணிகள் மட்டுமின்றி, நிர்வாக ரீதியிலான பணிகளும் முடங்கும் நிலை உருவாகியிருக்கிறது என்று அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளார்

1 to 5 ENGLISH : Dictation Words

ENGLISH : Dictation Words

1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு,  உணவு இடைவேளைக்குப் பின்னான பிற்பகல் செயல்பாடான "ஆங்கிலத்தில் சொல்வது எழுதல்" செயல்பாட்டிற்கான வகுப்பு  வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

தினம் ஒரு புத்தகம்"கண்ணாமூச்சி விளையாட்டு"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"உலர்ந்த திராட்சை"

திராட்சை! நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டு தான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு இறையருளால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு !

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான 
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள்http://www.periyaruniversity.ac.in/என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.....

தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு..!

மும்பையில் செயல்பட்டும் தேனா வங்கியில் நிரப்பப்பட உள்ள 48 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 48
பணி: Chief Manager (IT-CISO)
பணி: Chief Manager (Operation Risk)
பணி: Chief Manager (Credit Risk)
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Model Development & Validation Under Basel)
பணி: Manager (Operation Risk Management)
பணி: Market Risk Management)
பணி: Manager (CA, ICWA)
பணி: Manager (Security Officer)
பணி: Company Secretary: CA,ICWA
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் பிரிவில் ஐடி, கணினித்துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம், எம்சிஏ, பொருளாதாரம், புள்ளியியல், CA, ICWA முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2016
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.denabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.denabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு...!

தொழில்நுட்ப காரணங்களால் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் (JIPMER) நடத்தும் எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15-க்குள் 
வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு, இந்தாண்டு 200 இடங்கள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 5-ம் தேதி நாடு முழுவதும் 75 நகரங்களில் 275 மையங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 17-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி புனர்வாழ்வு மையம் (விஆர்சி) சார்பில் காது கேளாத மற்றும் கை, கால் செயலிழந்தவர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 17-ம் தேதி கிண்டி, சிடிஐ வளாத்தில் உள்ள விஆர்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எனினும் முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் காலை 9.30 மணிக்கே செல்ல வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிடெக், எம்டெக், பட்டப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்க செல்லும் போது தங்களது கல்விச் சான்றிதழ் மற்றும் தொழிற்பயிற்சி புனர்வாழ்வு மையத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-22501534, 9500705061, 9677244065, 9444113092 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு முடிவு

கேரள மாநிலத்தில் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் போலியோ நோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான தடுப்பூசிகள் போடப்படாத பகுதிகளில் குழந்தைகளுக்கு வேறு சில நோய்களின் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் குழந்தைகளிடையே உள்ள நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு தடுப்பூசியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதன் தொடக்கமாக மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளிடையே தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அரசு சேகரிக்கும். பின்னர் தடுப்பூசி போடாத குழந்தைகளை வகைப்படுத்தி அவர்களுக்கு முறையான தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

இந்த தகவல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூலம் சேகரிக்க உள்ளது. பள்ளிகளின் தலைவர்கள் இதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பள்ளிகள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். 

தடுப்பூசி போடுவதற்கு எதிராக சிலர் தீவிரமாக பிரச்சாரம் செய்வதாக வந்த தகவல்களை அடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.இ. படிக்க ஆர்வம் குறைந்தது: வேளாண் படிப்புக்கு மவுசு அதிகரிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. வேளாண் சார்ந்த படிப்புகளில் சேர அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை:

பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர் கல்வியில் சேர பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நேரம் இது.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளின் மீது மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2 வருடமாக பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராததால் காலியாக உள்ளன.

லட்சக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு குறைவான அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

1.5 லட்சம் பேர்தான் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமல்லாது தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பாமல் பெரும்பாலான கல்லூரிகள் அந்த இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் சரண்டர் செய்து வருகிறது.

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை நடத்துவதே சிரமமான நிலையில் உள்ளது. எந்த அளவிற்கு பி.இ., பி.டெக் படிப்புகள் மீது முன்பு ஆர்வம் இருந்ததோ, இப்போது அதைவிட பல மடங்கு வீழ்ச்சியில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது.

ஐ.ஐ.டி. என்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்புகள் படிப்பதற்கான ஆர்வமும் குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள சிறந்த இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்) மற்றும் முதன்மை தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு தமிழகத்தில் குறைந்துள்ளது. தென் இந்தியாவில் தமிழகத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4147 பேர் மட்டும்தான்.

ஆனால் தெலுங்கானாவில் 11,435 பேரும், ஆந்திராவில் 7,486 பேரும், கேரளாவில் 5,156 பேரும், கர்நாடகாவில் 4,901 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வுக்கு தயார் ஆவதை விரும்பாத மாணவர்கள் தற்போது பொறியியல் படிப்புகளை உதறி தள்ளிவிட்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருகிறார்கள்.

எவ்வித நுழைவுத் தேர்வும் இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்து வங்கித்துறை, ரெயில்வே, மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதி வேலைக்கு செல்லலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குறைந்த செலவில் 3 ஆண்டு கல்லூரி படிப்பை படித்து முடித்தவுடன் “போட்டித் தேர்வு”க்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று எளிதில் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர்ந்தால் உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளை ஆராய்ந்து தேர்வு செய்து படிக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் வேளாண்மை படிப்புகளுக்கும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் நிறைய உள்ளன.

அதனை படித்தால் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதால் வேளாண்மை பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக் கழக முதல்வர் மகிமை ராஜா கூறியதாவது:-

இந்த ஆண்டு வேளாண்மை படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 13 இளங்கலை விவசாய பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இளங்கலை பாடப்பிரிவில் 2600 இடங்கள் உள்ளன. இதற்கு 39,872 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டு 32,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விவசாயம் சார்ந்த துறைகளில் மாணவர்களுக்கு உடனே வேலை வாய்ப்பு இருப்பதால் ஆர்வத்துடன் வேளாண்மை படிப்புகளில் சேருகிறார்கள். வேளாண்மை படிப்புகளை முடித்தால் வங்கி துறைகள், ஆராய்ச்சி பண்ணைகள் மற்றும் அரசு வேலைகளில் மிக எளிதாக சேர முடியும். பாடத்திட்டங்கள் மாணவர்கள் போட்டித் தேர்வை எளிதாக சமாளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

துணை வேந்தர் கே.ராமசாமி கூறுகையில், “வேளாண்மை பாடப் பிரிவுகள் மாணவர்களுக்கு இன்றைய காலத்தில் எளிதாக வேலை கிடைக்கக் கூடியதாக அமைந்துள்ளது. பி.எஸ்.சி. வேளாண்மை படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

நமது பாரம்பரிய விவசாயத்தைப் பற்றி படிக்க 80 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Directorate of Government Examinations - NEET - National Eligibility cum Entrance Test -II (UG) Admission Notice

பிளஸ் 1 புத்தகம் 17 முதல் வினியோகம்

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1புத்தகங்கள் கிடைக்கும்.

பாடநுால் கழகத்தின், https://www.textbookcorp.in இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை பெறலாம். மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு வருகின்றன.