Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 17 June 2016

பல்கலை.களில் 7 யோகா படிப்புகளை தொடங்க துணைவேந்தர்களுடன் ஸ்மிருதி இரானி ஆலோசனை

வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் யோகா தொடர்பாக 7 வகை படிப்புகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாளை ஆலோ சனை நடத்துகிறார்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து யோகாவை வளர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதில் ஒன்றாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட யோகா படிப்புகளில் சில மாற்றங்கள் செய்து அனைத்து கல்வி நிலை யங்களிலும் அறிமுகப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் மீது ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்க அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணவேந்தர்கள் கூட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் டெல்லியில் நாளை கூட்டியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “இந்தக் கூட்டத்தில் ஜுன் 21-ல் உலக யோகா தினத்தை பல்கலைக்கழகங் களில் எப்படி கொண்டாடுவது எனவும் ஆலோசனை செய்யப் படும். கல்லூரி பேராசிரியர்களுக் கான தேசிய தகுதித் தேர்விலும் யோகாவை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

யோகா படிப்புகளை தொடங் கும் கல்வி நிலையங் களுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிப்பதும் பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவித்தன.

கடந்த 2002-ல் பல்கலைக்கழக மானியக் குழுவால் பி.எஸ்சி. யோகா பட்டப்படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டது. பி.எட். படிப்பி லும் யோகா பாடங்கள் அறி முகம் செய்யப்பட்டன. ஆனால் இதை ஒருசில மாநில பல்கலைக் கழகங்கள் மட்டும் அறிமுகப் படுத்தின. சுமார் 5 வருடங்களுக்கு பின், இந்த படிப்புக்கு போதுமான மாணவர்கள் சேராதது உட்பட பல்வேறு காரணங்களால் நிறுத் தப்பட்டு விட்டது. எனினும் டெல்லி யில் உள்ள மொரார்ஜி தேசாய் இன்ஸ்ட்டியூட் ஆப் யோகா போன்ற சில கல்வி நிலையங்கள் யோகா படிப்புகளை தொடர்ந்து வருகின்றன.

தற்போது யோகாவை வளர்க் கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள குழு புதிதாக 7 வகை படிப்புகளை யோகாவில் அறிமுகப்படுத்தும்படி பரிந்துரைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் யோகா குருவான டாக்டர் ஹெச்.ஆர்.நாகேந்திரா உள் ளார். இவர், பெங்களூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானா என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார்.

நாகேந்திரா குழுவின் பரிந் துரையின் பேரில், மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் யோகா படிப்புகளை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 6 மாத சான் றிதழ் படிப்பு, பி.எஸ்சி மற்றும் எம்.எஸ்சி.யில் யோகா, அனைத்து பிரிவிலும் பட்டப்படிப்பு முடித்தவர் களுக்கு யோகாவில் ஓராண்டு பி.ஜி. டிப்ளமோ, எம்.எஸ்சி. முடித்தவர்களுக்கு பிஎச்.டி படிப்பு, பி.எஸ்சி முடித்தவர் களுக்கு ஒருங்கிணைந்த 4 வருட பிஎச்.டி ஆகியவை இடம் பெற் றுள்ளன. இதன் முதல் கட்டமாக துணைவேந்தர்கள் கூட்டம் டெல்லி யில் நாளை நடைபெறுகிறது.

தினம் ஒரு புத்தகம்

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'வேப்பம்பூவின் பயன்கள்"

வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் கேட்டு இயக்குநர் உத்தரவு.

பள்ளிக்கு அடிப்படை வசதி கேட்டு போராட்டம்! குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு.

திருப்பூரில், ஆதிதிராவிடர் நல பள்ளியில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டி, குழந்தைகளை அனுப்ப மறுத்து, பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு....!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் வகுப்புகள் மீது கல் வீச்சு, கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு...!

சென்னை, தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் வகுப்பறை மீது கல் வீசப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

7 வது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்...!

7th Pay Commission – NJCA Writes to PM on 7th Pay Commission related issues and regarding NPS – He reports that the central government employees are very much disappointed with the recommendations of the 7th pay commission.

தயாராகிறது வல்லுநர் குழு - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

நிகர்நிலை பல்கலைக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

நிகர்நிலை பல்கலைக்கான புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.தேசிய தரவரிசை செயல் திட்டத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டாயம் இணைய வேண்டும். வெளிநாடுகளில் கிளைகள் துவக்க வெளியுறவு, உள்துறை அமைச்சக அனுமதி பெறுவது அவசியமாகும்.

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு.

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் போலி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த சர்ச்சை காரணமாக, தேர்வுநிலை தகுதி பெறக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்ததற்கான உண்மைத் தன்மை சான்று அவசியமென கூறப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சான்றை எப்படிப் பெறுவது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

23ம் தேதி முதல் +1 வகுப்புகள் துவக்கம்...

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர்.

சி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவு

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேருவதற்காக, சென்னை, ஆவடியில் நடந்த எழுத்துத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

சி.ஆர்.பி.எப்., தொழில்நுட்பம் மற்றும், 'டிரேட்ஸ்மென்' பணியிடங்களில் சேர, ஆண், பெண் ஆகிய இரு பிரிவினருக்காக, கடந்த மே, 29ல் எழுத்துத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், crpfindia.com மற்றும் crpf.nic.in ஆகிய, இரு இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டு உள்ளன.

ராகிங்செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி! கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

கல்லுாரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த ராகிங் தடுப்புக் குழு அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், புகாருக்குள்ளாகும் மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் துவங்கியுள்ளன. 

மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.

மேல்நிலை பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:

5 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை வேனில்அழைத்து வர விரைவில் தடை.

பள்ளி வேன் மோதி, மூன்று வயது குழந்தை பலியானதை தொடர்ந்து, பள்ளி வாகனங்களில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை, பள்ளிக்கு ஏற்றி செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.

TNPSC:குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மூவர் முதலிடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.இதில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். 

தமிழக நோபல் விஞ்ஞானிகள் பிறந்த ஊர்களில் இலவச 'வை-- - பை'

தமிழகத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, சர் சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் சொந்த கிராமங்களில், இலவச இணையதள வசதி பெற உதவும், 'வை - பை' இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உலகெங்கும், 'வை - பை' வசதியை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களுக்கான தலைமை அமைப்பு, 'வயர்லெஸ் பிராட்பேண்ட் அலையன்ஸ்.' அது, தங்கள் உறுப்பினரான, சென்னையைச் சேர்ந்த, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைவர் கைலாசநாதனிடம், 'இந்த ஆண்டு முதல், ஜூன், 20ம் தேதியை உலக, 'வை - பை' தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்யுங்கள்' என, கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் உதயமானது. இதுகுறித்து, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜித் சிங் கூறியதாவது: நோபல் பரிசு பெற்றதின் மூலம், சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நாட்டுக்கு புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன.

அதனால், அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில், இலவச, 'வை - பை' வசதி ஏற்படுத்தி உள்ளோம். அங்கு, அதற்கான அடிப்படை வசதி இல்லை. இருந்தாலும், யூ.பி.எஸ்., போன்றவற்றின் உதவியுடன் அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம மக்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்துள்ளனர். அதனால், 'வை - பை' வசதியை பயன்படுத்தி, இணைய வசதியை அவர்கள் பெறலாம். மாங்குடியில் உள்ள பள்ளிக்கு, கணினி தர உள்ளோம். இதனால், மாணவர்கள் பயன் அடைவர். இதன் மூலம், இந்த, இரு கிராமங்களுக்கும், காலாகாலத்திற்கு 'வை - பை' வசதி அளிப்பது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

குளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி

கம்ப்யூட்டர், பளபளக்கும் தரைதளமும் உண்டு.
கிணத்துக்கடவு அருகே, சிறு கிராமமான சங்கராயபுரத்தில், 'ஏ.சி ஹாலில்' ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.

200க்கு 200 'கட் - ஆப்' பெறுவது எத்தனை பேர்?: மருத்துவ படிப்பு தரவரிசை இன்று வெளியீடு

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. கடந்த ஆண்டு, 17 பேர், 200க்கு, 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கூடுமா, குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, மாநில அரசு ஒதுக்கீட்டில், 2,853 இடங்கள் உள்ளன.
இதற்கு, 26 ஆயிரத்து, 17 பேர் விண்ணப்பித்து இருந்தனர்; இதில், 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, சம வாய்ப்பு எண் என்ற, 'ரேண்டம்' எண் ஜூன், 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தர வரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார்.
கடந்த ஆண்டில், 17 பேர், 200க்கு, 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தனர். இன்று எத்தனை பேர், இந்த இடங்களை பெறுவர் என, மருத்துவ கல்வி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, ஜூன், 20ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது

17 பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் பாதியாகக் குறைப்பு:முதுநிலைப் படிப்பு இடங்கள் முற்றிலும் ரத்து

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 17 பொறியியல் கல்லூரிகளின் இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை பாதியாகக் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதோடு, அந்த 17 கல்லூரிகளின் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்களை முழுவதுமாக ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து அனுமதி நீட்டிப்புப் பெற்ற பிறகே மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இதற்கு சம்பந்தப்பட்ட இணைப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய பல்கலைக்கழகம் மூலமாக பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென பொறியியல் கல்லூரிகள் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கையையும் கல்லூரிகள் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம், உதாரணமாக தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டு முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும். அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகள், போதிய பேராசிரியர்கள் இல்லையெனில் அந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
பொறியியல் கல்லூரிகள் மீது தொடரும் புகார்கள்: இவ்வாறு பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றபோதும், பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையெனக் கூறி மாணவர்கள் போராடுவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னைக் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களுடைய கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையென பெற்றோருடன் புதன்கிழமை (ஜூன் 15) போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மாற்று கல்லூரியில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப் போவதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும், பல பொறியியல் கல்லூரிகள் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளும், போதிய தகுதி
வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமலும் இயங்குகின்றன. எனவே, தரமான பொறியாளர்கள் உருவாகும் வகையில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு, உறுதியான நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
17 கல்லூரிகளில் இடங்கள் 50 சதவீதம் குறைப்பு:
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:
பொறியியல் கல்லூரிகளில் ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி போதிய உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல நிகழாண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 17 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கல்லூரிகளில் 2016-17 கல்வியாண்டுக்கு அனைத்து இளநிலை பொறியியல் படிப்புகளிலும் இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன.
அதாவது கடந்த 2015-16 கல்வியாண்டில் இந்த 17 கல்லூரிகளும் நடத்திய சேர்க்கை எண்ணிக்கையில், பாதி இடங்களில்தான் மாணவர்களை இம்முறை சேர்க்க முடியும்.
அதுமட்டுமின்றி இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த அனைத்து முதுநிலை பொறியியல் படிப்புகளின் அனைத்து(100 சதவீதம்) இடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த கல்லூரிகள் 2016-17 கல்வியாண்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க முடியாது.
இதுதவிர, ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி தமிழகத்திலுள்ள 3 பொறியியல் கல்லூரிகளுக்கு 2016-17 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று கல்லூரிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அவர்.
உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து
ஏஐசிடிஇ கூறுவது என்ன?
ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும்.
கணினி ஆய்வகத்தைப் பொருத்தவரை 6 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற விகிதத்தில் இருக்க வேண்டும
   
அதாவது, கணினி அறிவியல், இசிஇ, இயந்திரவியல் என ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்சம் 20 கணினிகளைக் கொண்ட ஒரு கணினி ஆய்வகம் இருந்தாகவேண்டும். அதோடு 100 கணினிகளை உள்ளடக்கிய ஒரு பொதுவான கணினி ஆய்வகம் ஒன்றும் இருக்க வேண்டும்.
மேலும் கல்லூரியில் மொத்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றபடி இண்டர்நெட் வேகத்தின் அளவை வினாடிக்கு 16 மெகா பைட்ஸ் அளவில் இருந்து அதிபட்சம் 100 மெகா பைட்ஸ் என்ற அளவில் இருக்க வேண்டும்.
மேலும் பாதுகாப்பான வை-ஃபை வசதியை இடம்பெறச் செய்ய வேண்டும்.
இதுபோல பொறியியல் கல்லூரிகளில் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. ஏஐசிடிஇ இணையதளத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பெற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்குத்தான் இணைப்பு அந்தஸ்தையும், மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்க முடியும்.
எங்கு புகார் தெரிவிப்பது?
பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கலாம்.
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தை 044 - 22351018 (இணைப்பு 223) என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம். அல்லது ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்க்ர்ற்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்கெனவே எச்சரிக்கப்பட்ட கல்லூரிகளில் இரண்டாவது முறை ஆய்வின்போதும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
கல்லூரிகள் விவரம் வெளியிடப்படுமா?
உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாத 17 பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு, அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் 2016-17 கல்வியாண்டில் மறைமுகமாக கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திவிடாமல் இருக்கவும், புதிதாக பி.இ. சேரவுள்ள மாணவர்களிடையே அந்தக் கல்லூரிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நடவடிக்கைக்கு உள்ளான 17 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்?

ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது.ஆசிரியர்களின் இடமாறுதல், பணி உயர்வு உத்தரவுகள், முதன்மைக் கல்வி அலுவலகங்களின் வழியே, 'ஆன்லைனில்' வழங்கப்படும். முதலில், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது;

இப்போது, அதிகாரிகள், அமைச்சர்கள், ஆசிரியர் சங்கங்களின் சிபாரிசு அடிப்படையிலான இடமாறுதலாக மாறிவிட்டது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வுஎப்போது நடைபெறும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கே இன்னும் தகவல் இல்லை. துறை செயலர் சவீதா தான் முடிவு செய்வார் என காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன், பல முக்கியமான இடங்கள் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி,திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கு, சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

எனவே, காலியிடங்கள் மறைக்கப்படவோ, விதிகளை மீறி நிரப்பப்படவோ, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், விரைவில்ஆசிரியர் கலந்தாய்வை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்விஇயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்ககல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர்வா மாற்றம்

உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்களை தொடர்ந்து, செயலர் அபூர்வா மாற்றப்பட்டுள்ளார்.உயர் கல்வித்துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வா, 2014 டிசம்பரில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், உயர் கல்வித் துறையில் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் செயலர் மீது, பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகங்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.பல்கலை துணைவேந்தர் நியமன பிரச்னை, பல்கலைகளில் துணைவேந்தர் இடங்கள் காலியான போது, அவற்றில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமனம் என, பல்வேறு நடவடிக்கைகளிலும், விதிமீறல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.சமீபத்தில், சென்னை பல்கலையில், 'செனட்' மற்றும், 'சிண்டிகேட்' கூட்டத்தில் நடந்த விவாதங்களும், தீர்மானங்களும், பேராசிரியர்கள் மத்தியில், செயலரின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை பல்கலைக்கு வந்த, யு.ஜி.சி., நிதியை, விதிகளை மீறி, 'சிண்டிகேட்' ஒப்புதல் இல்லாமல், வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக எழுந்த புகார், 'செனட்' கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நீதி விசாரணை கேட்டு, 'செனட்' தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

சென்னை பல்கலை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் நியமனத்தில் விதி மீறல் ஏற்பட்டதால், செயலரின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் வழக்கு பதிவு செய்ததுடன், கவர்னரிடமும்மனு கொடுத்தனர்.இந்த பிரச்னைகள் குறித்த செய்தி, நமது நாளிதழில், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், உயர் கல்வி செயலர்அபூர்வா, அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக மாற்றப்பட்டு,அந்த இடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கார்த்திக்குக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவு.

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேருவதற்காக, சென்னை, ஆவடியில் நடந்த எழுத்துத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

சி.ஆர்.பி.எப்., தொழில்நுட்பம் மற்றும், 'டிரேட்ஸ்மென்' பணியிடங்களில் சேர, ஆண், பெண் ஆகிய இரு பிரிவினருக்காக, கடந்த மே, 29ல் எழுத்துத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், crpfindia.com மற்றும் crpf.nic.in ஆகிய, இரு இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டு உள்ளன.