Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 18 June 2016

படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாடு வேண்டும்: மாணவர்களுக்கு கு.ஞானசம்பந்தன் அறிவுரை

படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. விழாவில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:

புதிய அத்தியாயத்தை கல்லூரியில் தொடங்க உள்ளீர்கள். பிறரைச் சார்ந்து இருந்த நீங்கள் இனி உங்களைச் சார்ந்து வளர வேண்டிய பருவம். கல்லூரி வாழ்க்கை சினிமாவில் வருவது போல் அல்ல, சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணமே கல்லூரிக் காலம்.

எச் செயலையும் மிக வேகத்துடன் செய்வதுடன் விவேகமாகவும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது சோதனைகள் பல நம்முன் வரும். சோதனைகளை எதிர் கொண்டு சாதனைகளாக்க கடும் முயற்சி எடுக்க வேண்டும். எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இன்றே தீர்மானியுங்கள்.

கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றனர். எந்தப் படிப்பையும் ஏளனமாகக் கருதாமல், ஆர்வத்துடன் முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் சிறப்பாகப் படிக்க முடியும். தமிழைப் படிக்கப்போகிறோம் என்று எண்ணாமல், அக்கரையுடன் படித்தால் இத் தமிழ் நம்மை புகழின் உச்சிக்கு உயர வைக்கும். தமிழைப் பாடமாக எடுத்தவர்கள் தாயகம் மட்டுமின்றி உலகெங்கும் பறந்து வருகின்றனர்.

படிக்கும் புத்தகங்களை தெளிவாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். பாடம் மற்றும் பிற புத்தகங்களை படிக்கும்போது தெளிவுடன் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். புரிந்து படிப்பதால் தெளிவான கோட்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இதுவே ஆய்வு மற்றும் கற்பனைத் திறனை வளர்க்கும். கற்பனைத் திறனே பல ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டி.

படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும். மனதை அடக்கிய மாணவர்கள் மாயச் சூழலை அடக்கி வாழ்கின்றனர். மனக் கட்டுப்பாடு நல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

நல்ல சூழ்நிலை, நட்புறவு நமது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையிருந்தால் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும். படிக்கும் காலங்களில் பல பரிசுகளை வாங்குங்கள். படித்த பின்னர் பிறருக்கு பரிசுகளை வழங்கும் நிலைக்கு வாருங்கள். எல்லா சக்திகளும் நம்மிடம் உள்ளன. எனவே எதையும் தன்னம்பிக்கையுடன் செய்தால் வாழ்க்கையில் உயர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

SCERT given new period Allocation...

TNTET தேர்வு எப்பொழுது?

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை.
காத்திருப்பு:
அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித்தேர்வு
அறிவிக்கப்படவில்லை. எனவே, பெரும்பாலான பட்டதாரிகள் தகுதித்தேர்வு எழுதி, தனியார் பள்ளியில் கூட சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் வரும் முன், தமிழக அரசு, புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவித்து, ஆசிரியர்களை நியமனம் செய்யும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
போட்டி தேர்வு:
சிறப்புபாடங்களுக்கு மட்டும், 1,188 பேர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, கூறப்பட்டு உள்ளது.
.
இதுகுறித்து,
அதிகாரிகளிடம் விசாரித்த
போது, ‘ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என, தெரிவித்தனர்.
1,390 சிறப்பு ஆசிரியர்கள்
நியமிக்க
நடவடிக்கை: பள்ளிக்கல்வி மானியத்தில், அரசின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 338 பாட வாரியான ஆசிரியர் பணியிடங்களில், 72 ஆயிரத்து, 843 பணியிடங்கள், இதுவரை நிரப்பப்பட்டு உள்ளன. பார்வையற்ற இளங்கலை பட்டம் பெற்ற, 654 பேருக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க, பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழங்குடியின பட்டதாரிகள், 906 பேருக்கு, 66 லட்சம் ரூபாய் செலவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி தரப்படும்.மாற்றுத்திறனாளிகளின் இடைநிலை கல்விக்கு, அரசு
பள்ளிகளில், 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். மேலும், சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு, 1,188 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 530 விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, 192 உதவி பேராசிரியர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு, 605 உதவி பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்ப, விரைவில் பணிகள்
மேற்கொள்ளப்படும். பள்ளிகளின் நிர்வாக வசதிக்கு, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர் மற்றும் துப்புரவாளர் போன்ற இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பள்ளிகளின் தரம் பாதிக்கும்:
சட்டசபையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது, ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும்,
பெருமளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அலட்சியமான நடவடிக்கை என்பது, அரசு பள்ளிகளின் தரத்தை குறைக்கவும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் சேர்க்கை குறையவும் வழிவகுக்கும். மேலும், அரசின் இந்த போக்கு, மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது

தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஊதிய உயர்வு வேண்டிமுதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?"

* பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.

* ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

* பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

* பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.

* பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.

* பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

*பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

* சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

* உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.

* நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.

* ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பஸ் பாஸ்' விண்ணப்பங்கள் தருவதில் தாமதம்

மாணவர்களின் புகைப்படங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த மாத துவக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பஸ் பாஸை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸுக்கான விண்ணப்பங்களைபோக்குவரத்து கழகங்களிடம் இருந்து, பள்ளிகள் பெற்று செல்கின்றன. விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், மாணவர்களின் புகைப்படத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், போக்குவரத்துகழகங்களுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு, பள்ளி மாணவர்களிடம்இருந்து, 3.80 லட்சம் விண்ணப்பங்கள் வர வேண்டும். ஆனால், 5,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இதே நிலையே, மற்ற போக்குவரத்து கழகங்களிலும் நீடிக்கிறது.இந்த நிலை நீடித்தால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி முடிய பல மாதங்களாகும்.ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது போல, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும், ஆன்லைன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்குஅனுப்பினால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.பஸ் பாஸ் நிலவரம்போக்குவரத்து கழகம் பஸ் பாஸ் எண்ணிக்கை (லட்சத்தில்)

சென்னைமாநகர் 4.23
விழுப்புரம் 5.27
சேலம் 3.65
கோவை 4.10
கும்பகோணம் 6.41
மதுரை 4.70
நெல்லை 2.75

ஜூலை, 31க்குள் அனைத்து விண்ணப்பங்களையும் வழங்கி விடும்படி, கூறியுள்ளோம். இப்பணி விரைவுப்படுத்தப்படும். 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் பெறுவது பற்றி, அடுத்த ஆண்டில் பரிசீலிப்போம்.
-போக்குவரத்து கழக அதிகாரி

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் முதலிடம் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி, எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மாநில ரேங்க் பெறாத மாணவர், தர வரிசையில், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, வித்யாமந்திர் பள்ளி மாணவியான ஆர்த்தி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கணிதம், வேதியியல் மற்றும் உயிரியலில், தலா, 200 மதிப்பெண்களும்; இயற்பியலில், 199 மதிப்பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75 ஆனதால், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்ற மாணவர், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல் இடம் பெற்றார். இவரும், கணிதம், வேதியியல் மற்றும் உயிரியலில், தலா, 200 மதிப்பெண்களும்; இயற்பியலில், 199 மதிப்பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75. இவர் பொதுப் பிரிவான ஓ.சி.,யைச் சேர்ந்தவர் என்பதாலும், பிறந்த தேதி அடிப்படையிலும், முதல், 10 இடங்களில் வர முடியாமல், 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதி மாணவர்விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம் என்றாலும், தர வரிசையில், இரண்டாம் இடமே கிடைத்துள்ளது. 'இதன் மூலம் மாநில ரேங்க் பெறுவதை விட, மருத்துவம், இன்ஜி., படிப்புக்கான கட் - ஆப் மதிப்பெண் பெறும் வகையில், அதற்கான முக்கிய பாடங்களில் முதலிடம்பெறுவதே, உயர் கல்வியில் முதலிடம் தரும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

க்யூசெட்' நுழைவு தேர்வு'ரிசல்ட்' வெளியீடு.

ஒன்பது மத்திய பல்கலைகளில் பட்டப் படிப்பில் சேர்வதற்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், ஒன்பது மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன.

இதில், தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை உள்ளது. இந்த பல்கலைகளின் இணைப்பிலும், பல்கலைகளிலும் நேரடியாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், க்யூசெட் என்ற மத்திய பல்கலை நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இந்தத் தேர்வு, மே, 21, 22ல் நடந்தது. அதன் முடிவுகள், நேற்று இணையதளத்தில் வெளியாகின. இந்த முடிவின்படி, தர வரிசையிடப்பட்டு மாணவர்கள் அவர்கள விரும்பிய கல்லுாரிகளில் சேர்க்கப்படுவர். தேர்வு முடிவுகளை, http:/cucet16.co.in/ என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்த மாணவி எம்.வி.ஆதித்யா மகேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 3 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பட்டியலை வெளியிட்டார். சுகாதாரத் துறை சிறப்புச் செயலர் எஸ்.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா, தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

25,379 பேருக்கு...:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 26,017 ஆகும். அவற்றில் ஒரு முறைக்கு மேல் விண்ணப்பித்த 203 விண்ணப்பங்கள், தகுதியில்லாத 435 விண்ணப்பங்கள் நீங்கலாக 25,379 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டுக்கு 92 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டுப் பிரிவுக்கான 3 இடங்களுக்கு 316 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டுக்கு 5 எம்.பி.பி.எஸ்., ஒரு பல் மருத்துவ இடம் ஆகியவற்றுக்கு 377 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

200-க்கு 200:

தரவரிசைப் பட்டியலில் 3 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் வெளி மாநிலங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டைச் சேர்ந்த வி.ஆதித்யா மகேஷ் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டைச் சேர்ந்த மாணவர் இ.ஜெ.ஞானவேல் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

7 மாணவர்கள் 200-க்கு 199.75:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.கார்த்திக், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஹீப்ரான் மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர் ஜி.சுஜின் குமார், ஈரோடு ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பி.கே.அருணேஷ், தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி ஆர்.அக்ஷயா, திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ஏ.அப்துல் ஷாரூக், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் எஸ்.தீனேஷ்வர், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி வி.ஆர்த்தி ஆகிய 7 பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் பிற மாநில ஆதிக்கம் ஏன்?

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில், முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இருவரும், முறையே கேரளா, ஆந்திராவில், பிளஸ் 2 படித்துள்ளனர்.

இவர்கள் எப்படி, தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்;தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் படித்தோராக இருந்தாலும், தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருந்தால், விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், வெளிமாநில பள்ளிகளில் படித்த,தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்குமாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தனித் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

அழைப்புக் கடிதம் இல்லாமலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் அரசு எம்.பி. பி.எஸ். இடங்கள் 2,383, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 என மொத்தம் 2,853 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநிலஅரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் 970 என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

20-ஆம் தேதி முதல்:

வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு:

ஜூன் 20-ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்குத் தொடங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க 92 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஒரு பி.டி.எஸ். இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 60 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான 3 இடங்களுக்கு தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்.

பொதுப் பிரிவு:

ஜூன் 21-ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். கட்-ஆஃப் மதிப்பெண் 200-லிருந்து 198 வரை பெற்றவர்கள் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

அழைப்புக் கடிதம் கிடையாது:

கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அழைப்புக் கடிதம் இல்லாவிட்டாலும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் அட்டவணையைக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பழைய மாணவர்களுக்கு வாய்ப்புதமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 3,266 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர 4,679 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 544 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துள்ளதையடுத்து, விண்ணப்பித்துள்ள 3,266 மாணவர்களில் 500-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களுக்குபடிப்பில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்:

மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைக் காட்டிலும், மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, 9,017 மாணவர்களும், 16,361 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். 50 வயதுக்கு மேற்பட்ட இவர், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி உள்ளது என்றாலும், மிகக் குறைந்த கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதால், மருத்துவ இடம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்று தேர்வுக்குழுஅதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த கல்வியாண்டிலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.