Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 20 June 2016

நாளை சர்வதேச யோகா தினம்: ஜோத்பூரில் ராம்தேவ் தலைமையில் சிறப்பு விழா - 3,000 துணை ராணுவப் படையினர் பங்கேற்பு

நாளை (21-ம் தேதி) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் தலைமையில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெறும். இதில், 3,000-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஜுன் 21-ம் தேதி (நாளை) யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை மத்தியில் அரசு ஏற்பாடு செய்துள்ளது. சண்டீகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உள்பட அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



இதில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ திபெத்திய எல்லைப்படை மற்றும் சஷாஸ்ட்ரா சீமா பால் ஆகியவற்றைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் பணியில் உள்ள துணை ராணுவத்தினருக்காக ஜோத்பூரில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகா குரு ராம்தேவ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3,000 பேர் பங்கேற்கின்றனர்.

சண்டீகர் நிகழ்ச்சியில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும், டெல்லி கன்னாட்பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் நடைபெறும் விழாவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைப் பிரிவினரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதத்தை உயர்த்த இரு உண்டு உறைவிடப் பள்ளிகள்: சென்னை மாநகராட்சி நடத்துகிறது

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த இரு உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 87 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 85 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்த, வீட்டில் போதுமான கற்றல் சூழ்நிலை இல்லாத மாணவர்களின் நலன் கருதி, இரு அதிநவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் தங்கவைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அறிவியல் கல்வி மையத்துடன் இணைந்து, ரூ.2 கோடி செலவில் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. டீச் ஃபார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




கல்விக்கு வயது ஒரு தடையல்ல: 52 வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மேயர்

கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் நகர மேயர் 52 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பரத்பூர் மேயராக பதவி வகித்துவரும் சிவ சிங் (வயது 52) 44.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 53 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிவசிங் கூறுகையில், ‘தினமும் இரவில் இரண்டு மணி நேரம் கடினமாக படித்தேன். பகலில் அதிக பணிகள் இருப்பதால் இரவு நேரத்தில் மட்டும் படித்தேன். 1971-72ம் ஆண்டு சொந்த பிரச்சனை காரணமாக 8-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தினேன். ஆனால், அனைவருக்கும் கல்வி மிக முக்கியம் என பின்னர் உணர்ந்தேன். 

சமீபத்தில் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னால் அங்கு ஆங்கிலத்தில் பேச முடியவில்லை, அதை மிக மோசமாக உணர்ந்தேன். இந்த தேர்வில் நான் தோல்வியடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்திருப்பேன். தற்போது மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன்” என்றார்.

சிவ சிங் படிக்க முன்வந்ததற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. புதிய சட்டத்தின்படி நகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படை தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மேயருக்கு போட்டியிட்டால், அவரது இந்த கல்வித்தகுதி உதவியாக இருக்கும்.

இவரைப் போன்று ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான சிவ சரண் யாதவ் என்பவரும், 10ம் வகுப்பு படித்துவிட வேண்டும் என்ற வேட்கையில் தொடர்ந்து பரீட்சை எழுதி வருகிறார். நம்பிக்கை தளராமல் 47வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியும் தோல்வியடைந்துள்ளார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"தேங்காயின் மருத்துவக் குணங்கள்"

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு மாணவி அசத்தல்: 1,330 குறள்கள் ஒப்புவிப்பு


 காரைக்குடி அழகப்பா அகாடமி பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி,6, 1,330 திருக்குறள்களையும் அடிபிறழாமல் ஒப்புவித்து அசத்தி வருகிறார். காரைக்குடியைச் சேர்ந்த பெரிச்சியப்பன், லதா தம்பதி மகள் வைஷ்ணவி. 1,330 குறள்களையும் திணறாமல் ஒப்புவிக்கிறார். அவருக்கு எல்.கே.ஜி., யிலேயே திருக்குறள்களை படிக்க அவரது தாயார் லதா கற்றுக் கொடுத்தார்.
சென்ற ஆண்டு திருச்சி திருமூலநாதர் அறக்கட்டளை நிகழ்ச்சியில் 500 குறள்களை ஒப்புவித்து பரிசு பெற்றார். காரைக்குடி வள்ளுவர் பேரவை விழாவில் 38 அதிகாரங்களை ஒப்புவித்து அறம் விருதை பெற்றார்.
வைஷ்ணவியின் தாயார் லதா கூறியதாவது: ஆரம்பத்தில் திருக்குறளை கதையாக கூறி புரிய வைத்தோம். அதன்பிறகு, அலைபேசி 'வாய்ஸ் ரெக்கார்டரில்' திருக்குறளை படித்து, அதை விளையாடும்போது கேட்கும்படி செய்தோம். எந்த முறையில் கேட்டாலும் 1,330 குறள்களையும் ஒப்புவிப்பாள். தமிழாசிரியர் ஜெயம்கொண்டானும் பயிற்சி அளித்தார். ஜூலையில் அனைவரது முன்னிலையிலும் அரங்கேற்றம் செய்யவும், திருக்குறள் செல்வி விருதுக்கு விண்ணப்பிக்கவும் உள்ளோம், என்றார்.
வைஷ்ணவி கூறுகையில், “அம்மா கற்றுக் கொடுத்ததால் சாதனை படைக்க முடிந்தது. ஒரு நாளைக்கு 20 குறள்கள் வீதம் படித்தேன்,” என்றார்.

6,9 மற்றும் 11 ம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்...!


கூடுதலாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் "due notice" வழங்கியபின்னர் பிடித்தம் செய்யப்பட வேண்டும்...!

பேருந்தில் ஃபுட்போர்டில் பயனித்தால் இலவச பஸ்பாஸ் ரத்தாகும்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

சென்னை:பேருந்து படிகட்டில் ஃபுட்போர்டு அடித்துச் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

விரைவில் பணிநியமனமா?பாலிடெக்னிக்குகளில் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு.

தமிழ்நாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், விரிவுரையாளர், துறைத்தலைவர் முதலான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

சென்னை:தமிழகத்தில் பொறியியல் படிப்பக்கான சமவாய்ப்பு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை ஏப்ரல் 15-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது.

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்கல் நிரப்பப்படும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விரைவில் கணினி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக்கல்வி அமைச்சர்,செயலாளர், உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அரசு மேல் நிலை பள்ளிகளில் காலியாகஉள்ள பணியிடங்களில் பணியமர்த்தும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்குமுன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் இது நாள் வரை பல பள்ளிகளில் ஆசிரியர்பற்றாக்குறையினை போக்க பகுதிநேர கணினி ஆசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் சிறப்பானமுறையில் மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்காமல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்பணியாற்றி மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர் என்பது குறித்தும் விளக்கமாகநிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

செய்தி:திரு.சிவா

சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை! கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை.

பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது;கூடுதல் ஊழியர் நியமித்த பின்பே, திட்டத்தை துவங்க வேண்டும் என, சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான முழுச் செலவையும் ஏற்கமத்திய அரசு முடிவு.

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவு செய்துள்ளது.

பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு 29-ல் தொடக்கம்:8 மையங்களில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 மையங்களில் ஜூன் 29-ஆம் தேதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.2016 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.

புதிய கல்வி கொள்கை...

கல்வி முறையில் மாற்றம், தரம் வேண்டும் என்பதில் யாருக்கும் சந்ேதகமில்லை. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் புதிய கல்வி கொள்கை வகுப்பதற்காக மத்திய அரசின் கேபினட் செயலராக இருந்த டிஎஸ்ஆர் சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

உதவி பேராசிரியர் தேர்வு முடிவு அண்ணா பல்கலை இழுத்தடிப்பு.

அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு, நான்கு மாதங்களாக வெளியிடப்படாததால் தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர். இப்பல்கலை சார்பில் மெக்கானிக்கல், மின்னியல், மின்தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கட்டடவியல் துறைகளில் 25 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜன., 24ல் நடந்தது.

10 ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2 க்கு இணையாக சான்றிதழ் மத்திய அமைச்சர் தகவல்

“10 ம் வகுப்பு முடித்து விட்டு ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக சான்றிதழ் வழங்கப்படும். நேரடியாகஉயர் கல்விக்கு செல்ல முடியும். இந்த புதிய திட்டம் குறித்து ஜூலை 15 ல் பிரதமர் நரேந்திர மோடிஅறிவிப்பார்”என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

மின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு.

மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர் மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பத்தாம்வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்வதற்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்.

10 ம் வகுப்பு மற்றும்  பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளேநீங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்க்கு  எங்கும் அலயவேண்டாம்உங்கள்  பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

கல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு.

கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், 2,000 சிறிய பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்புவசதியை உயர்த்திய நிலையில், பழைய கட்டணத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

TOP 50 ENGINEERING COLLEGES IN TAMILNADU 2016

தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்! 
1.)கோவை பி.எஸ்.ஜி.,கல்லூரி, 97.32 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 
விபரம் 
1)பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32சதவீதம்
2)கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம்
3)சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம்
4)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம்
5)பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம
6)வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78சதவீதம்
7)மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61 சதவீதம்
8)ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58 சதவீதம்
9)கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37சதவீதம்
10)ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம்
11)ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52 சதவீதம்
12)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம் 13)ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி-87.96சதவீதம்
14)அருணாசலா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - கன்னியாகுமரி-87.61சதவீதம்
15)ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்- 86.70 சதவீதம்
16)வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர்-86.36 சதவீதம்
17)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம் -86.16 சதவீதம்
18)வீரம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-85.93சதவீதம்
19)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - சேலம்-85.74சதவீதம்
20)வேலம்மாள் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-85.42சதவீதம்21)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-85.32 சதவீதம்
22)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - திருநெல்வேலி-85.09 சதவீதம்
23)பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-84.86 சதவீதம்
24)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - பர்கூர் - கிருஷ்ணகிரி-84.74 சதவீதம்
25)ஆர்.எம்.டி. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர் -84.68 சதவீதம்
26)நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-84.53சதவீதம்
27)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருவள்ளூர்-83.97சதவீதம்
28)சாராநாதன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.96 சதவீதம்
29)பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-83.27 சதவீதம்
30)பி.ஏ. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கோவை-83.08 சதவீதம்
31)கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.07 சதவீதம்
32)மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் - சென்னை-81.57சதவீதம்
33)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் டெக்னிகல் கேம்ஸ் - கோவை-81.52சதவீதம்
34)மஹாராஜா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-81.08 சதவீதம்35)இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி - ஈரோடு-80.73 சதவீதம்
36)நந்தா இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-79.96 சதவீதம்37)ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் - கோவை-79.94 சதவீதம்
38)பி.எஸ்.ஆர். ரங்கசாமி மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-79.68சதவீதம்
39)ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் காலேஜ் - தூத்துக்குடி-79.44 சதவீதம்
40)அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் - திருவாரூர்-79.31சதவீதம்
41)வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-79.02 சதவீதம்
42)யுனிவர்சிடி இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-78.85 சதவீதம்
43)அல்ட்ரா மகளிர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-78.84சதவீதம்44)என்.எஸ்.என். இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கரூர்-78.82 சதவீதம்
45)உடையப்பா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-78.79சதவீதம்
46)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - வேலூர்-78.74 சதவீதம்
47)எஸ்எஸ்எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி - திண்டுக்கல்-78.67 சதவீதம
48)தேனி கம்மாவர் சங்கம் காலேஜ் ஆப் டெக்னாலஜி - தேனி-78.58 சதவீதம்
49)பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - காஞ்சிபுரம்-78.18 சதவீதம்
50)ஸ்ரீ ஷண்முகா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - சேலம்-78.13சதவீதம்

7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டம்...!

7-ஆவது ஊதியக் குழுவிலும் பாதிப்பு ஏற்பட்டால் போராட்டத்தி் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் ச.ரெக்ஸ் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் கே.கண்ணன் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசின் 6-ஆவது ஊதியக் குழுவில், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முரண்பாட்டால், ஆசிரியர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.6 லட்சம் வரை தொகை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உடனடியாக அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
சி.பி.எஸ் களைவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது என்ற
அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வலியுறுத்துவதோடு, அதனை அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டத்தை கையில் எடுக்கப்படும்.
மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தியவுடன், மாநில அரசும் அதனை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலைநாட்களை குறைக்க வேண்டும் - TNPTF

உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை

அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து வரவும், அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடைவிதித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சவுகான்.

மேலும், ஆட்சியர் அலுவலகம் என்பது சாதாரண இடம் இல்லை; அதற்கென உள்ள விதிமுறைகளை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்துக்கு வரும்போது கண்ணியமான உடைகளை  அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளார்.ஊழியர்கள் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை மூத்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதே சமயம் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.