Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 21 June 2016

அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி தரம் சரிவர இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அதிக கல்வி கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய பெற்றோர்கள் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் பெற்றாவது தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.



இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு முதல் உடை, காலணி, புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகினறது. மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வுகளில் அதிக மதிபெண் பெற்று வருவதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  முதல் முறையாக ஒன்றாம் வகுப்பில் ஒரே நாளில் 54 மாணவ, மாணவிகள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த தகவல் அனைத்து பகுதிகளிலும் தெரிவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் தரமான கிடைப்பதால் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  கிராம கல்விகுழு, பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பின்னர் 54 மாணவர்கள் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கபட்டது. இன்று ஒரே நாளில் மாணவர்கள் சேர்க்கபட்டு நடைபெற்ற துவக்க நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாரயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும்  என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியின் தரமான கல்வி கிடைப்பதை உணர்த்தும் வகையில் திருத்துறைப்பூண்டியில் பேரணியும் நடத்தப்பட்டது.

ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு

ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர் சரத், 1,149 மதிப்பெண் பெற்று, மாவட்ட அரசுப் பள்ளி அளவில், முதலிடம் பிடித்திருந்தார். மாணவி ரம்யாகிருஷ்ணன், 1,146 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அரசுப் பள்ளி அளவில், மூன்றாம் இடம் பெற்றிருந்தார். இவர்கள், இருவரும் தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

கிராம பகுதியில் செயல்படும் ஓர் அரசுப் பள்ளியில் இருந்து, இரு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த, இருவருக்கும், சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் ஏலகிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்.

நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :

*.ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

*.ஆசிரியர் தேர்வானது வெளிப்படை தன்மையுடனும் நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.

*.தொடக்கப்பள்ளி அசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.

*.அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதி சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

*.ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதைமாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த 4 வருட படிப்பாக மாற்றலாம்.

*.முன்பள்ளி கல்வி என்று சொல்லப்படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

*.5 வது வகுப்பு வரையிலான கட்டாய பாஸ் முறையானது தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும். அதேபோல் மேல் நிலைபள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிருபிக்க 2வாய்ப்பு வரை வழங்கலாம்.

*.10வது வகுப்பு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 2 வகையாககலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்க போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், அல்லாதவர்கள் 2ம் தர தேர்வுகளை எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.

*.போர்ட் தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கு வகையில் இருக்க வேண்டும். 12 வது வகுப்பை எந்த முறையினால கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதி தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.

*.5 வது வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளின் 2 வது மொழியையும், செக்கண்டரி வகுப்புகளில் 3 வது மொழியையும் அந்தந்த மாநில அரசுகளேமுடிவு செய்யும்.

*.மத்திய உணவு திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்ன்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டசத்து குறைபாடு, இரத்த சோகை நோய் ஆஅகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது எனவே உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

*.கல்வி உதவி தொகைகள் சரியாக பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைகழகங்களுக்கான மாணிய குழு ஆணையம் (யூஜிசி) எளிமையானது வரை  முறைகளை உருவாக்க வேண்டும்.

*.உலகின் தலை சிறந்த 200 வெளிநாடு பல்கலைகழகங்கள் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

*.பல்கலைகழகங்களில், கல்வி நிறுவங்களில் மாணவ்ர்கள் பிரச்சனை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்து சுதந்திடம் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

*.கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாகதகுதி உயர்த்தப்பட வேண்டும்.

*.கல்வி கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலை குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி தரம் சரிவர இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அதிக கல்வி கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய பெற்றோர்கள் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் பெற்றாவது தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.



இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு முதல் உடை, காலணி, புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகினறது. மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வுகளில் அதிக மதிபெண் பெற்று வருவதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  முதல் முறையாக ஒன்றாம் வகுப்பில் ஒரே நாளில் 54 மாணவ, மாணவிகள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த தகவல் அனைத்து பகுதிகளிலும் தெரிவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் தரமான கிடைப்பதால் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  கிராம கல்விகுழு, பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பின்னர் 54 மாணவர்கள் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கபட்டது. இன்று ஒரே நாளில் மாணவர்கள் சேர்க்கபட்டு நடைபெற்ற துவக்க நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாரயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும்  என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியின் தரமான கல்வி கிடைப்பதை உணர்த்தும் வகையில் திருத்துறைப்பூண்டியில் பேரணியும் நடத்தப்பட்டது.

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் சொன்னவை இவை.

1. எங்களை அடிக்க கூடாது
2. எங்களுக்கு பாடம் நன்றாக சொல்லித்தர வேண்டும்
3. வகுப்பை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்
4. நல்லவராக இருக்க வேண்டும்
5. எங்கள் வகுப்பறையிலேயே இருக்க வேண்டும்
6. புது புது கதைகள் சொல்ல வேண்டும்
7. புது புது பாட்டுகள் சொல்லி தர வேண்டும்
8.அன்பாக இருக்க வேண்டும்
9. நண்பர்களோடு விளையாட விடவேண்டும்
10. எங்கள் ஆசிரியர் எந்த தப்பும் பண்ணக்கூடாது
11. மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
12. எங்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடவேண்டும்
13. வகுப்பறையில் தொலை பேசியில் பேசக் கூடாது.
14. எங்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
15. எங்கள் ஆசிரியர் எல்லாரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
16. எங்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்
17. எங்களை தூய்மையாக இருக்க பழக்கப்படுத்த வேண்டும்.
18. எங்கள் மேல் அக்கரையுடன் இருக்க வேண்டும்
19. எங்களை புரிந்து கொள்ள வேண்டும்
20. எங்களை பாதுகாக்க வேண்டும்
21 எங்கள் ஆசிரியர் எங்களை போல (குழந்தையை போல) இருக்க வேண்டும்.
22. எங்களை திட்ட கூடாது
23. எங்களை அமைதிப்படுத்தனும்
24. எங்கள் அம்மாக்களிடம் அன்பாக பேச வேண்டும்.
25. பள்ளியில் விளையாடும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
26.எங்கள் ஆசிரியருக்கு கெட்ட பழக்கம் இருக்க கூடாது.
27. பாடம் நடத்தும் போது செல்லை பேசிக்கொண்டே வெளியே போக கூடாது.
28.அவர் நல்ல ஆசிரியர் என்ற பட்டம் வாங்க வேண்டும்
29. அவர் சிறந்தவராக இருக்க வேண்டும்.
30. அவருக்கு நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக நாம் இருப்போம்.

ஆசிரியர்களை செவ்வனே ஒருங்கிணைத்து, அவர்களின் திறமைகளை அடையாளப்படுத்தி, உலகம் அறியச் செய்யும் அன்பாசிரியர் உமா மகேஸ்வரி


அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர், சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

பகுதி நேர ஆசிரியர்கள் பதிவு தபால் அனுப்பும் போராட்டம்.

சென்னை: தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி, தோட்டக்கலை, கட்டிடக் கலை என பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 4: நூலகத்தில் படித்தே ஐ.ஆர்.எஸ். ஆனவர்!


நான்காம் வகுப்பு படிக்கும்போதே நூலகத்தில் புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தவர் ஆர்.எல்.அருண் பிரசாத். 2010 பேட்ச்சில் ஐ.ஆர்.எஸ். பாஸ் செய்தார். சென்னையில் மத்திய கலால் வரி ஏய்ப்பு தடுப்புத் துறையிலும், தாம்பரத்தின் மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சரகத்திலும் உதவி ஆணையராகப் பணியாற்றினார். தற்போது, சென்னை விமான நிலையத்தில் சுங்க வரித் துறையின் துணை ஆணையராகப் பணியாற்றுகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பெரியபாளையத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத். அம்மா கஸ்தூரி, அப்பா லோகநாதன் ஆகிய இருவருமே பள்ளித் தலைமை ஆசிரியர்கள். அரசு ஆண்கள் பள்ளி பிறகு ரெட் ஹில்ஸின் டி.ஆர்.பி.சி.சி. பள்ளி என பிளஸ் டூ வரை பயின்றார் அருண். அதன் பிறகு காஞ்சிபுரத்தின் அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தார். எம்.பி.ஏ. படிக்க விரும்பி ‘கேட்’ நுழைவுத் தேர்வு எழுதி, கிடைக்கவில்லை. சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். இதுவரையும் இல்லாத யூ.பி.எஸ்.சி. மீதான விழிப்புணர்வு இவருக்கு, நூலகம் செல்லும் பழக்கத்தால் கிடைத்துள்ளது.

கன்னிமாராவில் அறிமுகமான குடிமைப்பணி

“ஒரு ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாக ஏதேனும் ஒரு நாவலை வாசிக்க சென்னை கன்னிமாரா நூலகம் சென்றேன். முதல் தளத்தில் இருந்த ‘குடிமைப்பணி’ பிரிவைப் பார்த்து குழம்பினேன். உள்ளே பலரும் அமைதியாகப் படித்துக்கொண்டிருந்தனர். யார் இவர்கள்? இது என்ன பிரிவு? இங்கு என்னமாதிரியான நூல்கள் கிடைக்கும்? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் அங்கு படித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை. அன்று மாலை கன்னிமாரா எதிரில் உள்ள சாலையோர தேநீர் கடையில் அருள்செல்வத்தைச் சந்தித்தேன். அவர்தான் யூ.பி.எஸ்.சி. தேர்வு முறை குறித்த அத்தனை விளக்கங்களையும் கொடுத்தார்” என்கிறார் அருண் பிரசாத்.

தொடர்ந்து அருள்செல்வத்துடன் ஏற்பட்ட சந்திப்பினால், யூ.பி.எஸ்.சி. எழுத முடிவு செய்தார் அருண். இதற்கான பயிற்சியை டெல்லியில் பெற தன் பணியை ராஜினாமா செய்தார். பயிற்சிக்கு இடையில் 2003-ல் எடுத்த முதல் முயற்சியில் பிரிலிம்ஸில் தேற முடியவில்லை. பயிற்சி முடித்து சென்னை திரும்பியவர், இரண்டாவது முயற்சியில் நேர்முகத் தேர்வு வரை சென்றார். இதில், 15 நிமிடம்கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறினார். மூன்றாவது முயற்சியிலும் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவிப் போனது. அடுத்த முயற்சியில் தன் ஆங்கில அறிவை மேலும் வளர்க்க முடிவு செய்தார். இதற்காக, 2006-ல் சென்னை அண்ணா நகரில் ‘இம்பாக்ட்’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் இன்ஸ்டிடியூட்டை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். ஆனால், 4 -வது முயற்சியில் அருண், பிரிலிம்ஸும் பாஸ் செய்யவில்லை.

ஏழாவது முயற்சியில் வெற்றி

தோல்விக்குக் காரணம் கோச்சிங் இன்ஸ்டிடியூட்டை நடத்தியதுதான் என நினைத்து அதிலிருந்து விலகினார். பிறகு, பணத் தேவைக்காகத் தனியார் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்குச் சேர்ந்தார். இத்துடன், 5 ஆவது முயற்சிக்காகப் படித்தார். “அப்போது, அம்மா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இந்தத் துயரிலிருந்து மீள முடியாமல் ஐந்தாவது முறையும் தோல்வியடைந்தேன். அடுத்து ஆறாவது முயற்சியில் நேர்முகத் தேர்வில் தேறவில்லை.

இனியும் யூ.பி.எஸ்.சி. எழுத வேண்டாம், ஏதாவது வேலைக்குப்போய் கல்யாணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கையை வாழும்படி குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதை ஏற்காமல் வீட்டுக்குச் செல்வதை தவிர்த்தேன். பகுதிநேரப் பணியையும் விட்டு விட்டேன். நண்பர்களிடம் ரூபாய் 25,000 கடன் பெற்று அதை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அவ்வப்போது அதில் செலவிற்கானப் பணத்தை எடுத்தேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் என்னுடைய சகோதரியும் அவரது கணவரும் உதவினார்கள். கடைசியாக எடுத்த ஏழாவது முயற்சியில் ஐ.ஆர்.எஸ். கிடைத்தது” எனப் பெருமூச்சு விடுகிறார் அருண்.

ஆறு முறை தோல்விக்கான காரணங்கள்

ஆறு முயற்சிகளிலும் தோல்வி அடையக் காரணம் தமிழை விருப்பப்பாடமாக எடுக்காததுதான் எனக் கருதுகிறார் அருண். இத்தனைக்கும் கல்லூரிக் காலங்களில் மாணவர்களுக்கான ஒரு சிற்றிதழ் நடத்தியவர். பொது நிர்வாகம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் புலமை இல்லாமலே விருப்பப் பாடமாக எடுத்ததாகவும், புரிதல் திறன் காரணமாக அதில் தேர்ச்சி பெற்றதாகவும் எண்ணுகிறார். இதனுடன் தொடக்கத்தில் இருந்த பயில்திறனை தக்கவைத்துக்கொள்ளத் தவறியதாகவும் கூறுகிறார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவருக்கு அவசியமான ஆளுமை வளர்ச்சித் (Personality Development) திறனை வளர்த்துக் கொள்ளவில்லை என வருந்துகிறார். “பயம் இன்றிப் பேசுவது, சொல்ல வருவதைத் தெளிவாக எடுத்துச் சொல்வது, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது அவசியம். இந்தத் திறன்கள் நான் தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றியபோதுதான் கிடைத்தன. இது கல்வி முடித்து நேரடியாக யூ.பி.எஸ்.சி. எழுதுவோருக்கும், பணி செய்தபடியே படித்து எழுதுபவர்களுக்கும் இடையில் உள்ள பெரிய வித்தியாசம்” என்கிறார் அருண்.

வெற்றிக்கு அடித்தளமிட்ட நாவல்கள்

“பள்ளிப் பாடங்களைப் படிக்கச் சொல்லி அம்மா எப்போதுமே வற்புறுத்தியதில்லை. அப்பா நூலகத்துக்குப்போய் படி எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். இதனால் நான்காம் வகுப்பு முதல் நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அங்கு முத்து காமிக்ஸ், கோகுலம், அம்புலி மாமா, கல்கண்டு போன்றவற்றை தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வாசிப்பேன். அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டுசென்றவர் கல்கண்டு ஆசிரியரான தமிழ்வாணன். அதனை அடுத்து, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களின் நாவல்களையும் படிக்கத் தொடங்கினேன். இவற்றைப் படித்து ரசித்ததால் கிடைத்த புரிதல் திறன் யூ.பி.எஸ்.சி. தேர்விலும் பெரிதும் உதவியது” என்கிறார் அருண்.

தன்னுடைய முயற்சிகளையும் அனுபவங்களையும் ‘யுவர் பேஷன் யுவர் கரியர்’ (‘Your Passion Your Career’) எனும் நூலாக எழுதியுள்ளார் விடா முயற்சிக்கு அடையாளமான அருண் பிரசாத்.

ஆர்.எல்.அருண் பிரசாத்தை தொடர்புகொள்ள: arunkarthikirs@gmail.com




பள்ளி, கல்லூரிகளில் யோகாசனத்தை அறிமுகப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனத்தை மாநில அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என தி.மு.க. பொருளாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனத்தை மாநில அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என தி.மு.க. பொருளாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், படிப்புசார்ந்த மன அழுத்தத்தால் மாணவ-மாணவியர் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இளைய தலைமுறையினருக்கு தேவையான உடல் மற்றும் மனபலம் சேர்க்கும் யோகாசன பயிற்சியை மாநில அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் யோகாசனம் அனைவருக்குமே பொதுவானது. நான் நீண்டகாலமாக யோகாசனம் செய்து வருகிறேன். அது, பொதுவாழ்வில் நான் துடிப்புடனும், அழுத்தம் இல்லாமலும் செயல்பட யோகாசனம் எனக்கு உதவி செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிராவில் யூத சமூக மாணவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை: 

இந்தியாவில் 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, யூத சமூகத்தைச் சேர்ந்த 4650 பேர் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 2466 பேர் வசிப்பதாக தெரியவந்தது. எனவே, மகாராஷ்டிராவில் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவந்தது. 

அவர்கள் மாநில அரசிடம் இருந்து சலுகைகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏக்நாத் காட்சே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இதன்மூலம், பிற சிறுபான்மையினரைப் போன்று யூத சமூக மாணவர்கள் அரசாங்கத்திடம் இருந்து கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற முடியும் என முதலமைச்சர் பட்னாவிஸ் கூறியுள்ளார். 

மேலும், பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான 2 பயிற்சி பள்ளிகளை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சற்றுமுன்:பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 90 வயது முதியவரை பார்த்து கழிப்பறை கட்டிய கிராமம்: மத்திய அரசு செயலர் பாராட்டு


மதுரை  அருகேயுள்ளது அச்சம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர் அழகு(90). இவரது மனைவி அங்கம்மாள்(82). 200 சதுர அடி வீட்டில் வசிக்கின்றனர். தனது வீடு அருகே கழிப்பறை கட்டும் அதிகாரிகள் முயற்சிக்கு அழகு உடனே சம்மதம் தெரிவித்தார்.

வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ஐ.டி.ஐ., சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 461 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அசல் சான்றிதழ் பெறும் மாணவர்கள், தங்களின் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

71,000 முதல் தலைமுறை பட்டதாரிகள் இன்ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பம்

அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில், பி.இ., -- பி.டெக்., படிக்க, வரும், 24ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண், நேற்று காலை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 3,008 பேர் விண்ணப்பம்: ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல்.

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 403 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு

மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் இது சாத்தியமில்லை. இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அடிப்படையிலும் பின்தங்கி உள்ளன. எனவே, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கடந்த காலங்களில் சிறப்பு வழிகாட்டி கையேடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்பட்டன.

பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"அதிமதுரம்"

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.