Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 22 June 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்.: முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கினார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:731 இடங்கள் நிரம்பின

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளிலேயே 731 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

2016- 2017-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 2,383 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 470 இடங்கள், அரசு பல் மருத்துவ இடங்கள் 85, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 970 பல் மருத்துவ இடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 68 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு அரசு பல் மருத்துவ இடமும் நிரம்பியது.
பொதுப்பிரிவினருக்கு: செவ்வாய்க்கிழமை தொடங்கிய பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க 737 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 732 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். முடிவில், 727 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 4 மாணவர்கள் தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் தேர்வு செய்தனர். பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வில் மொத்தம் 731 இடங்கள் நிரம்பின.
முன்னதாக எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்கைக்கான அனுமதிக் கடிதத்தை வழங்கினார். முதல் 10 இடங்களைப் பிடித்த அனைத்து மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியையே தேர்வு செய்தனர்.
தோழிக்கும் இடம்: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் திங்கள்கிழமை பங்கேற்று, தனது தோழிக்கு சென்னை மருத்துவக் கல்லூரி இடத்தை விட்டுக் கொடுத்த திருச்சியைச் சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அதே கல்லூரியில் இடம் கிடைத்தது. பொது தர வரிசைப் பட்டியலில் 140-ஆவது இடத்திலும், பிற்படுத்தப்பட்டோருக்கான தரவரிசையில் 96-ஆவது இடத்திலும் இருந்த அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
2-ஆவது நாள் கலந்தாய்வு: புதன்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது நாள் கலந்தாய்வில் பங்கேற்க 197.75-லிருந்து 197 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 850 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். வரும் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
696 பேருக்கு தரவரிசையில் மாற்றம்
பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 696 மாணவர்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 25,379 பேருக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஜூன் 20-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டதைடுத்து, மாணவர்களின் மதிப்பெண்ணும், கட்-ஆஃப் மதிப்பெண்ணிலும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் இயற்பியல் பாடத்தில் 199 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 29 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது. வேதியியல் பாடத்தில் 128 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது, 18 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது.
உயிரியல் பாடத்தில் 259 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 55 பேருக்கு குறைந்துள்ளது. தாவரவியல் பாடத்தில் ஒரு மாணவரின் மதிப்பெண் குறைந்துள்ளது. விலங்கியல் பாடத்தில் 4 மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. கணிதப் பாடத்தில் 129 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 20 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது.

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) -September 2016 Online Application Form Submission will be started on 22.06.16 upto 18.07.16

தொடக்ககல்வித்துறை தொடக்க/நடுநிலை பள்ளியில் பணிபபணிபுரிந்து லரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை விபரங்கள் கேட்டு தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறை

2,316 PG's & Special Teachers: தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் ?.

அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசின் ஒப்புதல்

இந்த நிலையில், 1,254 சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆசிரியர்கள்) பணியிடங்கள், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,316 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது.இதற்கு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டு பாடப்பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. இதில், சிறப்பு ஆசிரியர் பிரிவில் உடற்கல்வி ஆசிரியர் பணியில் மட்டும் 632 காலியிடங்கள் உள்ளன.காலியிடங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு, விண்ணப்ப விநியோகம் போன்ற ஆயத்தப்பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இது பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டதால் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பி.எட். முடித்த முதுகலை பட்டதாரிகளும், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

TET ARTICLE :"கண்டு கொள்ளவும், கண்ணீர் துடைக்கவும் ஆளில்லாமல் தவிக்கும் காணல் நீர்ஆசிரியர்கள்!"

இன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த ஐந்துஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன் பணியாற்றும்பட்டதாரிஆசிரியர்களின் வேண்டுகோள்கள்  பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையிலும்இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி சாய்க்க யாரும் முன்வராததால்மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலம்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் 23/08/2010 க்குப் பிறகு அரசுவிதிகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டியது கட்டாயம்.ஆனால் இந்த நடைமுறை தமிழகத்தில் முன் தேதியிட்ட அரசாணையாக 15/11/2011 ல்வெளிவந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழக பள்ளிகளில் இது சம்மந்தமான ஆணைகளைமுறையாக பெறப்படாமையாலும் காலம் தாழ்த்தி நடைமுறைப் படுத்தியமையாலும் ஏற்பட்டசிக்கலில் தற்போது சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் மூவாயிரத்திற்கும் மேல்...பதிவு முப்பு அடிப்படையில் தமிழக அரசின்  ஒரே அரசாணையின் கீழ் 2010& 2011 ஆம்ஆண்டுகளில் நடைபெற்ற பலகட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புகளில் கலந்தவர்களில் ஒருசாரருக்கு மட்டும்  TET லிருந்து விலக்கு அளித்ததில் உள்ள முரண்பாடுகள்இன்றுவரை தீர்க்கப்படவில்லை.புதிய ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புதல் தொடர்பாகஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் செயலர்களின்தார்மீக உரிமைகளை முன் அறிவிப்பு மற்றும் அரசாணை ஏதும் இன்றி நீக்கியமுரண்பாடுகள் இன்றுவரை களையப்படவில்லை.இவைகள் காரணமாக பணியில் சேர்ந்த பின்னர் பல பிரட்சனைகளைச் சந்திப்பது இந்தமூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.

இதில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளைக்காரணம் காட்டி இன்று வரை ஊதியம், வளரூதியம், ஊக்க ஊதியம், விடுப்பு பலன்கள்,பணிப்பதிவேடு போன்ற பலவற்றிலும் பலன் இன்றி பிரட்சனைகள் தீராமல் தொடர்கிறன.கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த ஆசிரியர்களின் நிலை மாற அறவழியில் பல்வேறு விதமாகதமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் முயற்சிகளைச் செய்தும் இதுவரைமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்தில் சென்றதா இல்லையா என்றவினாவிற்கு பதில் கிடைக்காமல் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் தவித்துவருகின்றனர்.இது சம்மந்தமான உதவிகளை பல முறை ஆசிரியர் சங்கங்களிடம் கேட்டும் இதுவரை யாரும்செவிசாய்க்க முன் வரவில்லை.போராடிப் பெறக்கூட மனமும்  சக்தியும் இல்லாத நிலையில் கானல் நீராய் காத்துஉள்ளனர்.அரசு விதிகளின்படி ஆசிரியர் பணியில் இவ்வளவு வருடங்கள் சிறப்பாக பணியாற்றிதகுதியை மேம்படுத்தியுள்ள இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களுக்கு தீர்வு TETலிருந்து இந்த மூவாயிரம் நிபந்தனை ஆசிரியர்களுக்கும்  முழுமையான விலக்குஎன்பது மட்டுமே.

கல்வி சார்ந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கல்வித் துறை அரசுஅலுவலர்கள், தமிழக பல்வேறு ஆசிரியர் சங்க முதன்மைப் பிரதிநிதிகள் போன்றஅனைவருக்கும் தாழ்மையுடன் முன் வைப்பது யாதெனில் இந்த  TET நிபந்தனைஆசிரியர்களின் பிரட்சனைகளை முறையாக தமிழக அரசின் கவனத்தில் எடுத்து சென்றுநல்ல தீர்வு காண உதவ வேண்டும் என்பது மட்டுமே.இதுவரை எப்படியோ... 

ஆனால் இனி இந்த  TET நிபந்தனை ஆசிரியர்களின் ஆசிரியப்பயணம் வரும் 15/11/2016 உடன் முடியும் நிலையில் இறுதி நாளை நோக்கி பயணிக்கும்நிலையில் உள்ளனர்.இந்த நிபந்தனை ஆசிரியர்களைகண்டு கொள்ளவும்கண்ணீ்ர் துடைக்கவும் இதுவரை யாருமே இல்லாத சூழலில் இனியாவது நல்ல விடியல்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

ஆக்கம் :ஆ. சந்துரு (கோவை)

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்)செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.இதற்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தங்களதுகோரிக்கையில் பங்களிப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்புப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

யாரெல்லாம் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள்?

1958-59 முதல், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் இறந்த வருடத்திற்கு அடுத்தவருடம்... அதாவது 1976 -ம் ஆண்டு, அவர் பிறந்த தினமான செப்டம்பர் -5 முதல் தமிழ்நாட்டில், சிறப்பாக கற்றலை மேம்படுத்திவரும் ஆசிரியர்களுக்காக நல்லாசிரியர் விருது, டாக்டர் ராதாகிருஷ்ணன்  பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. 2007 முதல் 374- விருதுகள் பள்ளிப் பிரிவுகளைப் பொருத்து பிரித்து வழங்கப்பட்டுள்ளன. 

 இதில், CBSE, CISCE, UT (யூனியன் பிரதேசங்கள்), ஐ.ஈ (Integrated Inclusive Education) உட்பட வருடா வருடம் இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.10 முதல் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், 20 வருடங்கள்  ஆசிரியர் பணியில் இருந்து தலைமையாசிரியராக இருந்து வருபவர் என ஒவ்வொருக்கும் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. தாய், தந்தையருக்குப் பிறகு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் ஆசிரியர்கள் பலர், டியூசன் சென்டர்களை வைத்து சம்பாதிப்பதால் அவர்களுக்கு இந்த உயரிய விருதானது சென்றடையக் கூடாது என்பதற்காக, 'ஆசிரியர்கள் இனி டியூஷன் எடுத்தால் நல்லாசியர் விருது கிடையாது' என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு,  ஆசிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாரார்,  " டியூசன்என்பது காலம்காலமாய் இருந்து வருகிற ஒன்றுதான். பள்ளி செயல்படாத நேரங்களில்தானே ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்கிறோம்..? இதன் காரணமாக பள்ளியில் பாடம் நடத்தும் நேரமானது எந்த விதத்திலும் பாதிப்படைவது கிடையாது. மேலும், எந்தெந்த ஆசிரியர்கள் 'டியூஷன்' எடுக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிந்து'நல்லாசிரியர்' விருதை கொடுப்பீர்கள்?"  எனகேள்வியை எழுப்பியுள்ளனர்.

மற்றொரு தரப்பினரோ, " உண்மையில் இது சமூகத்திற்கு நன்மை செய்யக் கூடிய உத்தரவு. வரவேற்கத் தக்க ஒன்று. பள்ளி நேரம் தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகள் எடுப்பதன் மூலமாக பள்ளியில் சொல்லிக் கொடுக்கும்போது கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், பள்ளியில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் 'டியூசனில்' சரியாக சொல்லிக் கொடுப்பதால், பெற்றோர்கள், 'குழந்தைகள் டியூசனுக்கு செல்வதால்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு, குழந்தைகளை வற்புறுத்தி டியூசன் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.'' என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள். தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு குறித்து கல்வியாளர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருதரப்பிலும்  கேட்டோம்.

ஆயிஷா நடராஜன் - கல்வியாளர்

" நியாயமான, சமூகத்திற்கு அக்கறை உள்ள ஒரு உத்தரவாகதான் இதைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். மேலும், ஏற்கெனவே விருதைப் பெற்றுள்ளவன் என்ற முறையில் எனக்கு சில அதிருப்தியும் உண்டு. பொதுவாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரால் வழங்கப்படும் 'நல்லாசிரியர்' விருதிற்கு ஆசிரியர்களே, அவர்கள் கையால், அவர்களைப் பற்றி 15 பக்கங்களில் எழுதி 'பள்ளிக் கல்வித்துறை'க்கு அனுப்பி வைக்கவேண்டும். இப்படி அவர்களைப் பற்றி அவர்களே புகழாரம் சூட்டி எழுதி கொடுத்திருக்கும் கடிதத்தை வைத்து 'நல்லாசிரியர் விருதை' கொடுக்கிறதுதமிழக அரசு. இப்படி செய்வதன் மூலமாக எப்படி ஒரு சிறந்த, திறமை மிக்க ஆசிரியரை கண்டறிய முடியும்? விருதிற்கு முன்னால் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பள்ளி மாணவர்களைக் கேட்டு அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் என்று தெரிந்தபிறகு கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்திராகாந்தி அவர்கள் இருந்த போது, 'எந்த பள்ளிகளிலும் டியூஷன் எனப்படும் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்கக்கூடாது' என்று அறிவித்திருந்தார். மேலும், மாணவர்களுக்கு எடுத்தாகவேண்டும் என்கிற சூழல் நிலவும்போது, நான்கு மாணவர்களுக்கு மட்டுமே கட்டணம் இல்லாமல் சொல்லிக் கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்று சில ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் கூடத்தில் வாங்கும் சம்பளத்தை விட, டியூசன்கள் மூலம்அதிகமாக சம்பாதிக்கிறார்கள். கணக்கில் வராத இந்த பணத்திற்கு வருமான வரியும் செலுத்துவதில்லை என்பது வேதனையான விஷயம். டியூசனுக்கு அனுப்பப்படும் மாணவர்கள், அதிகாலை 3.30 மணிக்கு கண்விழித்து ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்பது மணி வரை சென்ற பிறகே, பள்ளிக்கு செல்கிறார்கள். மாலை பள்ளி முடித்ததும்,  மாலை நேர டியூஷன்என மாணவர்களை பெற்றோர்கள் அலைக்கழிக்கும்பழக்கமும் அதிமாகிக் கொண்டே வருகிறது. மதிப்பெண்ணுக்காக மட்டுமே டியூசன் அனுப்பப்படுவதால் குழந்தைகளின் உடல் நலத்தையும், சமூகத்தையும் இது பெரிதும் பாதிக்கிறது.பள்ளிக்கூடங்களுக்குக்கூட கட்டடம் இப்படி இருக்கவேண்டும்.. இத்தனை மாணவர்கள்தான் ஒரு வகுப்பறையில் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், டியூஷன்களில் அது போன்ற எந்தகட்டட அமைப்பையோ, அரசு வலியுறுத்தியுள்ள வழிமுறைகளையோ பின்பற்றுவதில்லை. சரியான சுகாதாரம் இல்லாததால் 'தேள் கொட்டி' இறந்த மாணவர்களின் கதையும் இருக்கிறது. பெருமைக்குரிய இந்த விருதானது, மற்ற விருதுகளைப் போல, 'நான் இந்த விருதுக்கு தகுதியானவன் அல்ல.. எனவே, திருப்பித் தருகிறேன்' என்கிற எந்த விதிமுறையும் இதில் இல்லை. இதுவரை யாருடைய விருதையும் திரும்பப்பெற்றதும் இல்லை. எனவே, இந்த 'நல்லாசிரியர்' விருதானது தகுதியானவர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

"திலீப்: அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், சத்தியமங்கலம்." 

அரசின் இந்த உத்தரவால் ஓரளவு மட்டுமே டியூசன் சென்டர்கள் குறைய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். நம் திறமைக்கான விருது நம்மைத் தேடி வரவேண்டுமே தவிர, விருதைத் தேடி நாம் போகத் தேவையில்லை என்று நினைப்பதால் கூட பல பேர் விண்ணப்பிக்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.2011 முதல் தனியார் நிறுவனங்களால், தகுதியான ஆசிரியர்களுக்கு, அரசுடன் இணைந்து விருதுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை அரசு சாரா நிறுவனங்கள் மூலம் 7 விருதுகள் தமிழக ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.   'தகவல் தொழில் நுட்பத்தை கல்வியில் எப்படிபயன்படுத்தலாம்...?' என்பதை நான் செய்து காட்டி, மாணவர்களுக்கு புதுவித கற்பித்தல் பாணியை செய்ததால், 2012- ம் ஆண்டு ஐ.சி.டி நிறுவனம், எனக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது - தகவல் தொழில் நுட்பவிருது' அளித்தது. 

கிரிக்கெட்டர் அனில் கும்ளேவால் நடத்தப்பட்டுவரும் பியர்ஸன் நிறுவனம், இன்ஃபோசிஸ், தரமணியில் உள்ள எல் கார்ட் நிறுவனம் என பல நிறுவனங்கள் வருடாவருடம் அரசுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதளித்து வருகின்றன.பள்ளிக்கூடங்களிலேயே கட்டணம் வசூலிக்காமல் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்கலாம். சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்து காணப்படும். இன்னும் சிலர் கற்றலில் அதிக திறனோடு செயல்படுவார்கள். இவர்கள் இருவருக்குமே சிறப்பு வகுப்புகளை பள்ளிகளிலேயே காலை மற்றும் மாலை நேரங்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக எடுக்கலாம். கட்டணம் ஏதும் வாங்காமல் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது இந்த பணியானது சிறப்பாக இருக்கும். விருதும் அவர்களின் திறமையின் அடிப்படையில் கிடைக்கும் என்பது என்னுடையக் கருத்து.' என்றார் ஆசிரியர் திலீப்.

25 சதவீதம் இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப் பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத் துக்கு அரசு வழங்கிவிடும். 

சிறு பான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2011-ல் தொடங்கி கடந்த 5 ஆண்டு காலமாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும் பாலான தனியார் பள்ளிகள் முழுமை யாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறும்போது, "இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்குவதை பெரும் பாலான பள்ளிகள் பின்பற்றுவதே இல்லை. கல்வித்துறையும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது.பொறியியல் படிப்பில் பின்பற்றப் படும் ஒற்றைச்சாளர முறை மாண வர் சேர்க்கை முறையைக்கூட இந்த இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க் கையில் பின்பற்றலாம்" என்றார்.

தேவை இயக்கம் ஒருங்கிணைப் பாளர் ஏ.த.இளங்கோ கூறும் போது, “25 சதவீத இட ஒதுக்கீட் டில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரங்களை அனைவருக் கும் தெரியும்படி அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், 99% பள்ளிகள் இதை கடைபிடிப்பதில்லை.தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படு கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் அடங் கிய கண்காணிப்புக் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு ஒவ்வொரு வாரமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட் ரிக் பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் கூறும்போது, "ஏழை மாணவர் களுக்கான 25 சதவீத இடஒதுக் கீட்டை பெரும்பாலான பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. யார் யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இடம் கொடுக்கப் படவில்லைஎன்றால் அதற்கான காரணம் என அனைத்து விவரங் களையும் கல்வித்துறை அதிகாரி கள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.இந்த கல்வி ஆண்டில் மட்டும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சுமார் ஒன்றரை லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்" என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செய லாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “தனியார்பள்ளி களில் மொத்த இடங்கள், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன. தனி யார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மக்களிடம் கேட்டால் இந்த விவரங்கள் அவர்களுக்கு தெரி யாது. பள்ளிக்கு வெளியே அறி விப்பு வைத்தால்தானே அவர் களுக்கு விவரங்கள் தெரியும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளி கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும்போது, “தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாணவர்களுக்கு தரமான கல்வியை தான் வழங்குவதற்குப் பதிலாக அந்த பொறுப்பை தனி யாரிடம் வழங்கி தன் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது.தமிழகத்தில் 1978-க்கு பின்னரே தனியார் பள்ளிகள் வர ஆரம்பித்தன. தரமான கல் வியை அரசு வழங்கினால் தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர் களுக்கு இடஒதுக்கீடு என்பதற்கு அவசியமே ஏற்படாது" என்றார்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் கூறும்போது, “ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநில மாக விளங்குகிறது. இடஒதுக் கீட்டை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலை மையில் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்" என்றார்.