Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 24 June 2016

பின்னங்காலில் ரத்தம் உறைதலை தடுக்கும் வகையில் மருத்துவ மாணவர் உருவாக்கிய 2-ம் இதயத்தை தூண்டும் கருவி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஜோதிசித்தார்த்தா, இரண்டாம் இதயம் என அழைக்கப்படும் பின்னங்காலில் ரத்தம் உறைவதை தடுக்கும் வகையில் பின்னங்காலில் இரண்டாம் இதயத்தை தூண்டும் கருவியை (பெரிபெரல் ஹார்ட் ஸ்டிமுலேட்டர்) உருவாக்கியுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைப் பிரிவு கருத்தரங்கு கூடத்தில் புதிய கருவி உருவாக்கத்துக்கான செயல்முறை விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி டீன் (பொறுப்பு) மகேஸ்வரி தலைமை வகித்தார். அறுவை சிகிச்சைப் பிரிவு துறை பேராசிரியர்கள் கே.ஜி.சுபாங்கி, காளி ரத்தினம், செல்வராஜ், அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் ஜோதிசித்தார்த்தா, தான் உருவாக்கிய பின்னங்காலில் இரண்டாம் இதயத்தை தூண்டும் கருவி குறித்து விளக்கியதாவது: காலில் உள்ள பின்னங்கால் தசைகள் சுருங்கி விரி யும்போது ரத்த ஓட்டமானது இதயத்தை நோக்கி மேலே பாயும். ஆகையால் கால் தசைகள் இரண்டாம் இதயம் என அழைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் மருத் துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், வயது முதிர்ந்தோர், அறுவை சிகிச்சை செய்து எழுந்து நடக்க முடியாத நோயாளிகள் ஆகியோருக்கு கால் தசை நார்கள் செயல்படாததால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் காலில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைந்து சிறு துகள்களாகப் பிரிந்து அவை நுரையீரலில் ரத்த ஓட்டத்தை தடுத்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.

இதை தடுக்கும் விதமாக இரண்டாம் இதயமான காலில் உள்ள தசை நார்களை தூண்டும் கருவி மூலமாக வேலை செய்ய வைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். ரத்த உறைதலை தடுக்கப் பயன்படும் பிற மருந்துகளில் ஆபத்தான பின்விளைவுகள் உண்டு. ஆனால், இந்த கருவியில் எந்தவித பின்விளைவுகளும் கிடையாது என்றார். மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சைப் பிரிவு துறை பேராசிரியர் கே.ஜி.சுபாங்கி கூறியதாவது:

கால் தசைகள் இரண்டாம் இதயம் ஆகும். காலில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால்களில் இயக்கமில்லாதபோது ரத்தம் உறைய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவும், இரண்டாம் இதயத்தை தூண் டும் வகையில் புதிய கருவியை மாணவர் உருவாக்கியுள்ளார் என்றார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"ரசம் உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்"

உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.

ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.

2016 -17 கல்வியாண்டு வேலை நாட்கள் விவரம்...


அரசாணை 477 நாள் :27/6/1975-கலப்பு திருமணத்தால் பிறக்கும் குழந்தையின் ஜாதி,தாய் அல்லது தந்தையின் ஜாதி ஏதாவது ஒன்றை தழுவி வாங்கலாம்


RTI-SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA -இணை இயக்குநர்..


அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை என பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு கடிதம்,

தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு.

மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும்மூடிவிடக் கூடாது என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரூவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணி

திருவாரூகில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணி அல்லாத அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

CTET:மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும்.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பி.எப்., கணக்கு 'ஆன்லைனில்'

'தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், சேமநல நிதி எனப்படும் பி.எப்., ஆண்டு கணக்கு விவரங்கள், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படும்' என, தமிழக துணை கணக்காயர் அறிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மீது குறைந்து வரும் ஆர்வம்.

12,000 இடங்களுக்கு 3,008 பேர் மட்டுமே விண்ணப்பம்சமீப காலமாக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள 12 ஆயிரம் இடங்களுக்கு வெறும் 3,008 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4முதல் கவுன்சிலிங் துவக்கம்

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் திடீர் தகுதி நீக்கம்.

அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாண வர்கள் ரூ. 6 லட்சம் வருமான வரம்பை மீறிவிட்டதாக கூறி திடீர் தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளதால், தேர்வான மாணவர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.அகில இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

கல்வியில் பின்தங்கியுள்ள 3,000 மாணவர்களை தத்தெடுத்திருக்கும் அமெரிக்கத் தமிழர்களின் தமிழ்நாடு அறக்கட்டளை

தமிழகத்தில் பின்தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்து எடுத்து அவர்களின் அடிப்படைக் கல்வியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா வாழ் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை.அமெரிக்கா வாழ் தமிழர்களில் 4 குடும்பங்கள் கைகோர்த்து 1974-ல் அமெரிக்காவில் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’யை உருவாக்கினார்கள்.

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங், சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் இன்று துவங்குகிறது.

அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், அதன்செயல்பாடு, கூடாரத்துடன் காலியாகி வருகிறது. மத்திய அரசின் தேசிய மாணவர் படை என்ற தன்னார்வ திட்டம், ராணுவம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி : தமிழகத்தில் துவங்க யோசனை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், 598 இடங்களில், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன.

மருத்துவ படிப்பு: கலக்கும் அரசு பள்ளி

ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் மருத்துவபடிப்புகளில் சேர்ந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 450க்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளிமாணவர்கள் உயர்கல்வி பெறும் நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கலெக்டர் நந்தகுமார் ஏற்பாட்டில் மீள்திறன் மாணவர் சிறப்பு பயிற்சி வகுப்பு(எலைட்) துவங்கப் பட்டது.

ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு.

கடலுார் மாவட்டத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 'ராக்கிங்'கை தடுக்கும்விதமாக, பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே மாதம் 17ம் தேதி வெளியானது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க விண்ணப்பித்து கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து, வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது.கல்லுாரிக்கு வரும் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை சீனியர் மாணவ, மாணவியர்கள் 'ராக்கிங்' செய்வது வழக்கம்.'ராக்கிங்' பிரச்னைக்கு ஆளாகுபவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், தற்கொலைக்கு ஆளாகின்றனர்.இதுபோன்ற பிரச்னைகளை தடுக்கும் விதமாக, கல்லுாரி கல்வி இயக்ககம், மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.அதில்,'ராக்கிங் செய்யும் மாணவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள ,மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், மூன்று முதல், ஐந்து மூத்த பேராசிரியர்கள் அடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'அரசு கல்லுாரிகளில் 'ராக்கிங்' கை தடுக்கும் விதமாக கல்லுாரி கல்வி இயக்கம் அறிவுறுத்தலின் பேரில், எங்கள் கல்லுாரியில் 5 மூத்த பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கல்லுாரி நுழைவு வாயில், கல்லுாரி வளாகம், வகுப்பறைகளை கண்காணித்து, 'ராக்கிங்' செய்வோரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'ராக்கிங்' செய்தால் அரசு விதிமுறைபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவ, மாணவியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது'என்றார்.

இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்.

அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

2015-16 GPF ONLINE ACCOUNT SLIP PUBLISHED