Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 25 June 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"இதயநோயை தடுக்கும் ஓமேகா எண்ணெய்!"

பாஸ்ட்புட், அளவுக்கு அதிகமான நொறுக்குத் தீனி, என ஆரோக்கியமற்ற உணவுகளை இன்றைய இளைதலைமுறையினர் உட்கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்புகள் தேங்கி சிறு வயதிலேயே உடல் பருமன், இதயநோய் உள்ளிட்ட பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நோயில் இருந்து உடலை பாதுகாக்க அளவிற்கு அதிகமான கொழுப்பு சத்து உடலில் சேருவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொழுப்புச் சத்துக்கள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. ஒரு கிராம் கொழுப்புச் சத்து நம் உடலுக்கு 9 கிராம் கலோரியை தருகிறது. இது கிட்டத்தட்ட, மாவுச்சத்து மற்றும் புரதம் அளிக்கும் கலோரி சக்தியை விட இருமடங்கு அதிகம். ஒரு கிராம் புரதம் (அ) மாவுச்சத்து தருவது 4 கலோரிகள் தான்.

கொழுப்புச் சத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட நாட்களாகவே உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து, ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி இதயத்தை தாக்கும் என்பது தற்போது நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவர கொழுப்புகளை விட விலங்கு கொழுப்புகள் ஆபத்தானது என்பது உண்மை. ஆனால் மீன்களிலிருந்து கிடைக்கும் ஓமேகா - 3 எண்ணை கொழுப்பு

உடலுக்கு நன்மை தரக்கூடியது.

கடலுணவுகளில் காணப்படும் ஒமேகா – 3 என்ற எண்ணை ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்த்து, ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. பல வழிகளில் இதயத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமேகா எண்ணெய் வகைகள்

ஒமேகா எண்ணைகளான ஒமேகா – 3, ஒமேகா – 6,ஒமேகா – 9 கொழுப்பு அமிலங்கள் நம் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. உடல் நலத்தை பாதுகாக்க ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 கொழுப்பு அமிங்களை கொண்ட எண்ணை மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலமும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலமும் உணவில், 1 : 1 (அ) 1 : 4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்

ஆரோக்கியம் தரும் மீன்கள்

ஒமேகா – 3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.

ஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது. குறிப்பாக சணல் விதை எண்ணை, வாதாம் கொட்டைகள், பசலைக்கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா – 3 நிறைந்துள்ளது. ஆளி விதைகள் ஆளி விதை எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. அதில் ஒமேகா−3 அதிகம் காணப்படுகிறது.

தினமும் 2 மேஜைக்கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் (அ) பருப்புகளுடன் கலந்து சாப்பிடுவது நல்லது. வாரம் 3 முறை மீன்கள் உட்கொள்வது தேவையான அளவு ஒமேகா – 3 அமிலத்தை தரும்.

தானியங்கள், பருப்புகள்

சருமப் பாதுகாப்பு, முடி வளர்ச்சி, சீரான ரத்த ஒட்டம் இவற்றுக்கு உதவும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் முதலியன – தானியங்கள், முட்டை, கோழி, இறைச்சி, சோள எண்ணை, சூர்ய காந்தி, பருத்தி விதை, சோயா பீன் எண்ணைகளிலும் ஒமேகா – 6 அதிகம் காணப்படுகிறது. ஒமேகா – 9 அமிலங்களை நம் உடலே தயாரித்துக் கொள்ளும்.

நினைவாற்றலை அதிகரிக்கும்

நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. பக்கவாதம் வருவதை தடுக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன. மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும். மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

அதிக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 12 வது இடம்


அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 2 லட்சம் பணக்காரர்கள் இந்தியாவில் வசிக்கின்றனர் என்று கேப் ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு கேப்ஜெமினி வெளியிட்டிருந்த ஆய்வில் இந்தியா 11 வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் 1.98 லட்சம் பேர் இந்தியாவில் அதிக பணக்காரர்களாக இருந்தனர். இந்த வருடம் பணக்காரர்களின் 

இந்த அறிக்கையின்படி, 2025ம் ஆண்டிற்குள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பார்கள் என 13 சதவீத சர்வதேச வெல்த் மேனேஜர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில், வட அமெரிக்காவை விட ஆசிய பசிபிக் பகுதி முன்னணியில் வந்திருப்பது இதுவே முதல் முறை. 2015-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந் தியம் 17.4 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளது.



கல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎஸ் முறையில் இனி ஸ்காலர்ஷிப்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஐடிஐ, நர்சிங் உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர்களுக்கு ரூ.1,250, மாணவிகளுக்கு ரூ.1,750, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு ரூ.1,450, மாணவிகளுக்கு ரூ.1,950, பொறியியல் படிப்பிற்கு ரூ.2,250, மற்றும் ரூ.2,750, விடுதிகளில் தங்கினால் மாணவர்களுக்கு ரூ.4,250, மாணவிகளுக்கு ரூ.4,750 வழங்கப்படுகிறது. இவை தவிர டிகிரி படிப்பவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விஏஓ, ஆர்ஐ, ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாரிடம் கொடுத்தால் நேரடியாக பணம் கொடுக்கப்படும்.

இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப், ஆதார் எண் இணைக்கப்பட்டு, குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலும் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சமுக பாதுகாப்புத் திட்டத்தில் இனிமேல் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம். இதனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்றவைகளை ஒப்படைக்க வேண்டும். இனிமேல் இசிஎஸ் மூலமே ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்’ என்றனர்.

ஜூலை 15ல் இடமாறுதல் கலந்தாய்வு? 'வாட்ஸ் - ஆப்' தகவலால் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக, 'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருவதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு ஏப்., மாதம் விண்ணப்பங்கள் பெற்று, மே இறுதியில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.

நடப்பு கல்வியாண்டில், தேர்தல் காரணமாக கலந்தாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறும் முதல்கட்ட பணிகள் கூட, இதுவரை துவக்கப்படவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வு தேதி அறிவிப்பை ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ள சூழலில், ஜூலை, 15 முதல் கலந்தாய்வு துவங்குவதாகவும், 15ம் தேதி உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், 16ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 17ம் தேதி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 18ம் தேதி ஆசிரியர்களுக்கும் நடக்கவுள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'ல் அவசர செய்தியாக பரவிவருகிறது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் சாமிசத்யமூர்த்தி கூறுகையில், ''இதுவரை, கலந்தாய்வு தேதிகுறித்த அதிகாரி அறிவிப்புகள் வெளிவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையானதல்ல. விரைவில் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தேதியை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீத மாணவர்சேர்க்கை சரிவடைந்துள்ளதற்கு, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,408 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் (2015- 16) 1.22 லட்சம் மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால், நிகழாண்டில் மாணவர்களின் சேர்க்கை சுமார் 10 சதவீதம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.மாவட்ட மற்றும் ஒன்றிய கல்வி அலுவலகத்திலிருந்து அதிக தொலைவில் உள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும் பணித்திறன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4.20 வரை பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி, பல இடங்களில் 2 மணிக்கே பள்ளிகளை மூடி விடுகின்றனர். அதே போல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்காமல் இருக்கக் கூடாது என்ற விதிமுறை, பள்ளியில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு வசதியாக மாறி விட்டது.

இதனால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலருக்கு தமிழ் எழுத்துக்கள் 247-ஐயும் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். 860 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில், 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 40 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகின்றனர். இலவசப் பாடப் புத்தகம், காலணி, சீருடை, மதியஉணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தாலும், சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்பாடு, அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது என நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தெரிவித்தது:

 தமிழக அரசின் உத்தரவுப்படிமாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடத்தி, தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

உலகின் சிறந்த கல்வி முறை எந்த நாட்டுடையது தெரியுமா? அங்கே கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. அது பெரிதும் கொண்டாடப்படும்  பணி மட்டுமல்ல, மிகுந்த மதிப்பு வாய்ந்த பதவியும்கூட. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. அனுபவம், முதிர்ச்சி அடிப்படையில் அவர்களது வருமானமும் உயர்ந்து கொண்டே வரும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அந்த நாடு.. பின்லாந்து.இன்னும் சிலபல ஆச்சர்யங்கள் இருக்கின்றன,  தொடர்ந்து படியுங்கள்...பின்லாந்தில் ஒரு குழந்தை பள்ளியில் சேரும் வயது என்ன தெரியுமா? ஏழு. ஆம் ஏழுவயதில்தான் கல்வி கற்கவே தொடங்குகிறார்கள். அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவேஇருக்கின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டு போல அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது.முக்கியமாக நாம் பின்பற்றும் மனப்பாட முறை கல்வி கிடையாது. முதல் ஆறு வருடங்களுக்கு கற்கும் திறமையை அளவிடுதல் இல்லை, தேர்வு இல்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி அளவில் வீட்டுப்பாடம் என்பதுகூட அறவே கிடையாது.இவ்வாறு ஒன்பது வருடங்கள் வரை பள்ளிப்படிப்பைத் தொடர்கின்றனர். பதினாறு வயதாகும்போதுதான் தேர்வு என்ற ஒன்றையே எதிர்கொள்கின்றனர். அதன் பின்னர் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.மாணவர்கள் அறிவானவர்கள் / திறமை குறைந்தவர்கள் என தகுதி பிரிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஒரே கல்வி முறை / கல்வியறைதான். கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு அதை மேம்படுத்தும் விதத்தில் சற்று அதிக உதவிகள் மட்டும் செய்து தரப்படும்.முதல் ஆறு வருடங்களுக்கு ஒரே ஆசிரியர்.

அந்தக் குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, நெறிப்படுத்தி, கல்வியைப் புகுத்தி வழி நடத்துதல் அவரது கடமை! அதிகபட்சம் ஒரு நாளில் நான்கு வகுப்புகள் மட்டுமே நடைபெறும். அதிலும் வகுப்புகளுக்கிடையே ஒரு மணி நேரம் இடைவெளி விடப்படும். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் நாலு மணி நேரம்தான்.வகுப்பறையில் அதிகபட்சம் பதினாறு மாணவர்களே இருப்பர். வெறுமனே சொல்லித்தருதலை விட செயல்முறைக் கல்வியே அதிகம். எனவே, நிஜ உலகில் நாம் செய்யும் (!) சமைத்தல், சுத்தம் செய்தல் முதற்கொண்டு எல்லா அடிப்படை வேலைகளையும் கற்றுத் தெளிகின்றனர்.படைப்பாற்றலுக்கே அதிக முக்கியத்துவம். கற்றுக்கொள்வதை தனித்திறமையுடன் மேம்படுத்த போதிய ஊக்குவிப்பு, ஆசிரியர்களால் வழங்கப்படும். மாணவர்களுக்குள் போட்டியை உண்டாக்காமல், குழுவாக இணைந்து வெற்றி காணும் வழிமுறைகளே போதிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சிறந்து விளங்கும் பத்து சதவிகிதத்தினரே ஆசிரியராக முடியும்.ஆசிரியர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொண்டே இருத்தல் அவசியம். இதனால் அவர்களது தகுதி மேம்பாட்டுக்காக வாரத்தில் இரண்டு மணி நேரம் செலவிடுகிறார்கள்.அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசால் நிதியுதவி செய்யப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள், அரசினால் நிதியுதவி செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்றவை முற்றிலும் அரசாலேயே அளிக்கப்படுகின்றன.

அரசின் பாடத்திட்டத்தில் வழிமுறைகள் மட்டுமே உண்டு. அதற்கான பயிற்சித் திட்டத்தை அந்தந்த ஆசிரியரே அவரதுவிருப்பப்படி வகுத்துக் கொள்ள வேண்டும். அவர் தம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்களே பொறுப்பு. நம்பிக்கையே இந்த எளிமையான வழிமுறையை கட்டமைத்து வழிநடத்துகிறது!யாருக்கும் யார் மீதும் சந்தேகம் இல்லை. இது நடக்குமா, ஒழுங்காக செய்கிறார்களா என சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல், அனைவரும் தன்னிச்சையாக வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

மாணவன், தன் ஆசிரியர் தன்னை நல்ல முறையில் வழிநடத்துவார் என நம்புவது போல, மாணவன் முழு அர்ப்பணிப்போடு தன்னைத் தருவான் என ஆசிரியரும் நம்புகிறார். அதற்கேற்ற சூழ்நிலையும் சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. சமூகம், 'இந்த அரசு நல்ல கல்வியை தரஅடிப்படை வசதிகளை செய்து தரும்' என நம்புகிறது.இந்த நம்பிக்கை மிகச்சிறந்த முறையில் வேலை செய்கிறது.மனனம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறையிலிருந்து நமது இந்தியா விடுதலை பெறும் நாள் எந்நாளோ..?!

கனவான ஓய்வூதிய உயர்வு

சத்துணவு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த தொகை ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.ஒரு சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை. அதேபோல் கூடுதல் பொறுப்பு கவனிக்கும் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.500ஐ 2010 க்கு பின் வழங்கவில்லை. மேலும் பல மாவட்டங்களில் சமையலர், உதவியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு தரவில்லை. 

இதை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.ஊழியர்கள் கூறுகையில், 'ஓய்வூதிய உயர்வுக்கு பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. ௪ மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை. போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.

நன்னலக் கல்வி பாடத்திட்டம் :1 - 5 வகுப்பு (1,2,3 பருவங்கள்)

ANNA UNIVERSITY B.ARCH ADMISSION NOTIFICATION 2016

அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

GOV ITI சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டிற்கான சேர்க்கைக்கு வரும் 30-ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் இருப்பிடங்களில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை, விலையில்லாச் சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மடிக்கணினி, வரைபட உபகரணங்கள், இலவச பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகங்கள், ரயில் கட்டணச் சலுகை அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் தலையில் விழுந்தது இடி

7th Pay Commission: Bad news for government employees, allowance hike may be delayed by 2 years

New Delhi, June 24: In what could a disappointing news for government employees,Prime Minister Narendra Modi led government may defer the allowance hike proposed in the 7th Pay Commission recommendations.

in order to save about Rs 60,000 crore, the government may delay the a revision of allowances recommended by the 7th Pay Commission by two years to 2018-19, reported.

Source:Business Standard.
Bad news for government employees, allowance hike may be delayed by 2 yearsWhile the Center is likely to give green signal tothe revision of pay and pension as recommended by the 7th Pay Commission, it could delay the revision in allowances by two years. There were reports that the government was concerned about the populist measures suggested by the Empowered Committee of Secretaries. Fearing a steep jump in inflation, Finance Ministry could scale down the recommendations of the 7th Pay Commission, sources said.The 7th Pay Commission, headed by Justice A K Mathur recommended 23.55 per cent increase in salary, which also includes hike in allowances. The panel recommended a 14.27 per cent increase in basic pay, the lowest in 70 years. The panel proposed 63 per cent hike in allowances.

The implementation of 7th Pay Commission recoomednations could adversely impact the economy as it would increase burden on state exchequer by Rs 1,00,000 crores. By delaying allowance rise, government can save about Rs 60,000 crore. The Empowered Committee of Secretaries has reportedly recommended a whopping 30 per cent hike in government employees’s salary, making the minimum amount Rs 23,500 and the maximum  to Rs 3,25,000.

தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு :இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு,ஜூலை 1ல் துவங்கி, ஜூலை 16 வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும், www.tngdc.gov.in என்றஇணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி:உடற்கல்வி ஆசிரியர்கள், உபகரணங்கள் இல்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 152 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 129 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 281 அரசு பள்ளிகள் உள்ளன. 

பணியிடங்கள் காலி

இந்த பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், பள்ளி மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், சதுரங்கம், செஸ், ஹாக்கி, கோ -கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், 130க்கும் மேற்பட்ட பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான ஸ்கிப்பிங் கயிறு, சதுரங்க பலகை, கைப்பந்து உள்ளிட்ட சாதனங்கள் கூட இல்லாதது வேதனைக்குரிய விஷயம். சில பள்ளிகளில், விளையாட்டு பிரிவு என்பதே கிடையாது. பல பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர பணியில்பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறையின் அலுவலகப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் நடத்தப்படும் குறுவள விளையாட்டுபோட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றும், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏனென்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவள விளையாட்டு போட்டி நடைபெறும் போது, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பிற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவதே முக்கிய காரணம். விளையாட்டு பிரிவுக்கு என அரசு ஒதுக்கும் நிதி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், விளையாட்டு போட்டிக்கு அனுப்பவுமே போதுமானதாக இல்லை என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் கோரிக்கை:

இவ்வாறு, பல்வேறு காரணங்களால், அரசுபள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன், எட்டாக்கனியாகவேஇருந்து வருகிறது. எனவே, அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையானஉடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு பள்ளிகளில், நன்னெறி கல்வி, யோகா, கணினி கல்வி, ஓவியம், விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி, நுாலகம் என்பது குறித்து, வகுப்பு பாடவேளையில், பாடப்பிரிவு ஒதுக்க வேண்டும். ஆனால், போதிய ஆசிரியர்களை நியமிக்காததால், பெரும்பாலான பள்ளிகளில், இந்தபாடப்பிரிவுகளுக்கு பாடவேளை ஒதுக்குவதில்லை.மேலும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற துறை ஒதுக்கப்பட்டும்,அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனில், எவ்விதமுன்னேற்றமும் அடையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், திருவள்ளூர்

கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், விளையாட்டு பிரிவுக்கு என, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம், தலா, 10 ரூபாயும், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், 20 ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம், 30 ரூபாயும்வசூலித்து, விளையாடடு பிரிவிற்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பள்ளி கல்விகட்டணம், விளையாட்டு கட்டணங்களை வழங்கும் என, அறிவித்ததையடுத்து, கட்டணம் வாங்குவது நிறுத்தப்பட்டது.மேலும், தற்போது அரசு வழங்கும் பள்ளி பராமரிப்பு பணி மற்றும் உபகரணங்கள் வாங்க, ரூ. 55 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வழங்கி வருகிறது. இதேபோல்,விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை அலுவலர், திருவள்ளூர்