Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 26 June 2016

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில் இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

1.6 கோடி போலியான ரேஷன் கார்டுகள் ரத்து: நிதித்துறை செயலர் தகவல்

நாட்டில் 1.6 கோடி போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மானிய பணம் மிச்சமாகிறது’’ என்று மத்திய நிதித்துறை செயலர் அசோக் லவாசா கூறினார்.
நிதித் துறை செயலர் அசோக் லவாசா ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

சென்னை மாநகராட்சி தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 29.06.2016 அன்று மாறுதல்கலந்தாய்வு நடைபெறுகிறது

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"பாலின் பல நூறு நன்மைகள்!"

இந்தியாவில் அரிசி முக்கிய உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.

பிஹாரில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முதலிட மாணவி ரூபி ராய் கைது


பிஹாரில் முறைகேடு புகாரில் சிக்கிய பிளஸ் 2 முதலிட மாணவி ரூபி ராய் மறுதேர்வில் தேர்ச்சி பெறாததை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்தனர்.

தேர்வு நிலை : ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது.

'ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!

யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.

பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு.

பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.

SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION - 2016

இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசிநாள் 28.07.2016

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நிறைவு: 2,383 அரசு இடங்களும் நிரம்பின.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில்,20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,383 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின.

பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ.,- பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கடந்த, 23ல் துவங்கியது.

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் விரைவில் துவக்கம்.

'தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 41 கல்லூரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41 கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிப்பில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.

குழந்தை நேயப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள்அறிமுகக் கூட்டம்- மாநில தொடக்கக்கல்வி இணை இயக்குனர் திருமதி லதா பங்கேற்பு











ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்

தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.



மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு, செயலர் சபிதா அளித்துள்ள விளக்கம் வருமாறு:

1,096 புதிய பள்ளிகளில், 845 பள்ளிகளுக்கு இன்னும் கட்டடப் பணிகள் முடியாதது ஏன்? ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன; ஒரு ஆண்டில் முடித்து விடுவோம்.

கடந்த, 2010 முதல், 2,031 பள்ளிகளை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. கழிப்பறை தவிர மற்ற பணிகளை மேற்கொள்ளவே இல்லையே?

கட்டுமான செலவு உயர்ந்து விட்டதால், 878 பள்ளிகளுக்கான திட்ட அனுமதியை, திரும்ப ஒப்படைக்கிறோம். மீதமுள்ளவற்றுக்கு, தேவைப்பட்டால் மறு ஒப்புதல் பெற்றுக் கொள்கிறோம்.

(மறு ஒப்புதல் அளித்தாலும், கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்காது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்)

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக, கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34; காஞ்சிபுரம் - 58.57 சதவீதம் என முன்னணியில் உள்ளனவே?

சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள், தொழிற்சாலை, வணிக பகுதிகள் நிறைந்தவை. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும், தொழில் திறன் சார்ந்த படிப்புகளுக்காக, 8ம்    வகுப்பு முடித்ததும், ஐ.டி.ஐ.,யில் படிக்கச் செல்வதால், 9, 10ம் வகுப்பில் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.

பள்ளிப் படிப்பு இடைநிற்றலை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்? 

அதற்காகத்தான், தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப், சைக்கிள்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனரே?விடுதிகள், வாடகை கட்டடத்தில் இயங்குவ தால், இந்த நிலை உள்ளது. இனி, மத்திய அரசின் இலக்கை எட்டி விடுவோம்.

தமிழகத்தில், 10 சதவீத பகுதிகளில், 5 கிலோ மீட்டர் சுற்றளவில், உயர்நிலைப் பள்ளிகள் இல்லாதது ஏன்?எதிர்காலத்தில் இந்த நிலை இல்லாமல், 5 கிலோ மீட்டருக்குள் பள்ளிகளை கொண்டு வருவோம்.

கடந்த, 2015ம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி, உயர்நிலைக் கல்வியின் தரம், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது ஏன்? மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டப்படி, இந்த   கணக்கெடுப்பு நடத்தியுள்ளதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களிடையே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்,  ஆலோசனை நடத்த உள்ளோம்.


தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010 - 11ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு  திட்டங்களை துவங்காதது ஏன்; இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் தூங்குகிறதே? இந்த திட்டத்துக்கான, 'டெண்டர்' விடுவதில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. விரைவில்,  பணிகளை துவங்கி விடுவோம்.


அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லையே? ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.


ஆதார் பதிவில், 34 சதவீத மாணவர்கள் இன்னும் சேர்க்கப்படாமல், தமிழகம் பின்தங்கியுள்ளது ஏன்? இலக்கை எட்ட தேவையான முயற்சிகளை விரைவில் மேற்கொள்வோம்.

தமிழகத்தில் இதுவரை, 9, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் துவங்கவே இல்லை. மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியுள்ளதே?

நடவடிக்கை எடுக்கிறோம்; விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம். இவ்வாறு பள்ளிக் கல்வி செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளதாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.