Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 27 June 2016

7-வது ஊதியக்குழு பரிந்துரை விரைவில் அமலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்கும் 7-வது ஊதியக் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகள் 2016-17-ம் நிதியாண்டு முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக பொது பட்ஜெட்டில் ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவானது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொள்ளும் என்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என்றும் நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில், நிதியமைச்சகம் அமைச்சரவை குறிப்பு தயார் செய்து வருகிறது. அது, ஜூன் 29-ம் தேதிக்கு முன்னதாகவே அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்கும்படி 7-வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருது: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகளை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். உடன் சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்டோர் | படம்: எம்.வேதன்
பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவி யல் விருதுகளை கடலோர பாது காப்புக் குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக் கும் வகையில் ‘தி இந்து’ குழுமம், ‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ், ‘தி இந்து’ (தமிழ்) வெற்றிக்கொடி மற்றும் சாய்ராம் கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து அறிவியல் விருதுகளை (சயின்ஸ் டாப்பர் விருது) ஏற்படுத்தியுள்ளன.

சென்னை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி களில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர் வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகள் வழங்கும் விழா சென்னை கீழ்ப்பாக் கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விருதுகளை வழங்கி னார். பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ள டக்கியது இந்த விருது. சிறந்த மாணவ, மாணவிகளை உரு வாக்கிய பள்ளிகளுக்கு கேட யங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, “ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் 10 சத வீத வினாக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பகுதி களில் இருந்தே கேட்கப்படு கின்றன” என்றார்.

சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வாழ்த்திப் பேசும்போது, “பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்கள் உயர் வாழ்வாதாரத்துக்காகவே வெளிநாடுகளுக்குச் செல்கிறார் கள். அந்த நிலையை நம் நாட்டி லேயே உருவாக்கி அவர்களை இங்கேயே தக்கவைக்க வேண்டும். பொறியியல் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்” என்றார்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ இன் ஸ்கூல் கல்வி உதவித் தொகை களை ‘தி இந்து’ இணை ஆசிரியர் கிருத்திகா ரெட்டி வழங்கினார். முன்னதாக, ‘தி இந்து’ முதுநிலை நிர்வாக ஆசிரியர் பி.ஜேக்கப் வரவேற்றார். ‘தி இந்து’ (தமிழ்) இணைப்பிதழ்கள் ஆசிரியர் அரவிந்தன் நன்றி கூறினார்.

சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்க முடிவு விரைவில் 100 பள்ளிகளில் விரிவாக்கம்

மதுரை மாவட்ட பள்ளிகளில் சிறந்த சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு, நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப்பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

மதுரையில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 359 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் இயங்குகின்றன. இம்மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 50 மாணவர்கள் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு சூழல் பாதுகாப்பு, 'துாய்மை இந்தியா' திட்டம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர். மேலும், இம்மன்றம் சார்பில், கிராமத்தை தத்தெடுத்து அங்கு சுகாதார பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

மூலிகைத் தோட்டம்

இதுதவிர மருத்துவ குணம் நிறைந்த துளசி, துாதுவளை, குப்பை மேனி, சிறியாநங்கை, பெரியாநங்கை, ஓமவல்லி உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் அடங்கிய தோட்டம் அமைப்பதுடன், வேம்பு, சிவப்பு கொன்றை, மஞ்சள் கொன்றை, வாதம், பூவரசு, புங்கை போன்ற நிழல் தரும் மரங்களையும் நட்டு ஆண்டு முழுவதும் பராமரிக்கின்றனர்.

வாரத்திற்கு மூன்று முறை சுற்றுச்சூழல் மன்ற மேம்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. தவிர, பசுமை தினங்களில் இம்மன்றம் சார்பில், சிறந்த பணியாற்றிய மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. சிறந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், பள்ளிக்கல்வித்துறை சான்றிதழும் வழங்கப்படும்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி துாய்மை பணிகளை விரிவாக்க உள்ளோம். மேலும், மாவட்டத்தில் சிறந்த சுற்றுச்சூழல் மன்றங்களை தேர்வு செய்யும் ஆய்வுப்பணியையும் துவக்க உள்ளோம், என்றார்.

பசுமை தினங்களில் இம்மன்றம் சார்பில்,சிறந்த பணியாற்றிய மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. சிறந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், பள்ளிக்கல்வித்துறை சான்றிதழும் வழங்கப்படும்.

Holidays for Central Government Employees during year 2017

12/8/2016-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training
JCA-2 section
North Block, New Delhi
Dated the 24th June. 2016
Subject : Holidays to be observed in Central Government offices during year 2017- reg.
It has been decided that the holidays as specified in the Annexure —I to this O.M. will be observed in the Administrative Offices of the Central Government located at Delhi/New Delhi during the year 2017. In addition, each employee will also be allowed to avail himself / herself of any two holidays to be chosen by him/her out of the list or Restricted Holidays in Annexure — II.
2.Central Government Administrative Offices located outside Delhi / New Delhi shall observe the following holidays compulsorily in addition to three holidays as per para 3. below:
1. REPUBLIC DAY
2. INDEPENDENCE DAY
3. MAHATMA GANDHI’S BIRTHDAY
4. BUDDHA PURNIMA
5. CHRISTMAS DAY
6. DUSSEHRA (VIJAY DASHMI)
7. DIWALI IDEEPAVALI)
8. GOOD FRIDAY
9. GURU NANAK’S BIRTHDAY
10. IDU’L FITR
11. IDU’L ZUHA
12. MAHAVIR JAYANTI
13. MUHARRAM
14. PROPHET MOHAMMAD’S BIRTHDAY (ID-E-MILAD)
3.1. In addition to the above 14 Compulsory holidays mentioned in para 2 , three holidays shall be decided from the list indicated below by the Central Government Employees Welfare Coordination Committee in the State Capitals, if necessary, in consultation with Coordination Committees at other places in the State. The final list applicable uniformly to Central Government offices within the concerned State shan be notified accordingly and no change can be carried out thereafter. It is also clarified that no change is permissible in regard to festivals and dates as indicate.
1. AN ADDITIONAL DAY FOR DUSSEHRA
2. HOLI
3. JANAMASHTAMI IVAISHNAVI)
4. RAM NAVAMI
5. MAHA SHIVRATRI
6. GANESH CHATURTHI VINAYAK CHATURTEA
7. MAKAR SAKARANTI
8. RATH YATRA
9. ONAN
10. PONGAL
11. SRI PANCHAML / BASANT PANCH.AMI
12. VISHU/ VAISAKHI / VAISAKHADI / BHAG BKHU / MASHADI UGADI / CENTRA SUKLADI / CHETI CHAND / GUDL PADAVA 1st NAVRATRA /NAURAJ/CHHATH POOJA/KARVA CHAVTH.
3.2 No substitute holiday should be allowed if any of the festival holidays initially declared subsequently happens to fall on a weekly off or any other non-working day or in the event of more than one festivals falling on the same day.
4. The list of Restricted Holidays appended to this O.M. is meant for Central Government Offices located in Delhi / New Delhi. The Coordination Committees at the State Capitals may draw up separate list of Restricted Holidays keeping in view the occasions of local importance but the 9 occasions left over, after choosing the 3 variable holidays in para 3.1 above, are to be included in the list of restricted holidays.
5.1 For offices in Delhi / New Delhi, any change in the date of holidays in respect of Idu’l Fitr, Idu’l Zuha, Muharram and Id-e-Milad, if necessary, depending upon sighting of the Moon, would be declared by the Ministry of Personnel, Public Grievances and Pensions after ascertaining the position from the Govt. of NCT of Delhi (DCP, Special Branch, Delhi Police).
5.2 For offices outside Delhi / New Delhi, the Central Government Employees Welfare Coordination Committees at the State Capitals are authorised to change the date of holiday, if necessary, based on the decision of the concerned State Governments / Union Territories, in respect of Idu’l Fitr, Idu’l Zuha, Muharram and Id-e-Milad.
5.3 It may happen that the change of date of the above occasions has to be declared at a very short notice. In such a situation, announcement could be made through P.I .B /T.V. /A.I.R. / Newspapers and the Heads of Department / Offices of the Central Government may take action according to such an announcement without waiting for a formal order, about the change of date.
6. During 2017, Diwali (Deepavali) falls on Thursday , October 19, 2017 (Ashvina 28). In certain States, the practice is to celebrate the occasion a day in advance, i.e., on “Narakachaturdasi Day”. In view of this, there is no objection if holiday on account of Deepavali is observed on- “Naraka Chaturdasi Day (in place of Deepavali Day) for the Central Government Offices in a State if in that State that day alone is declared as a compulsory holiday for Diwali for the offices of the State Government.
7. Central Government Organisations which include industrial, commercial and trading establishments would observe upto 16 holidays in a year including three national holidays viz. Republic Day, Independence Day and Mahatma Gandhi’s birthday, as compulsory holidays. The remaining holidays / occasions may be determined by such establishments / organisations themselves for the year 2017, subject to para 3.2 above.
8. Union Territory Administrations shall decide the list of holidays in terms of Instructions issued in this regard by the Ministry of Home Affairs.
9. In respect of Indian Missions abroad, the number of holidays may be notified in accordance with the instructions contained in this Department’s O.M. No.12/5/2002-JCA dated 17th December, 2002. In other words, they will have the option to select 11(Eleven) holidays of their own only after including in the list, three National Holidays and Mahavir Jayanti, Id-ulZuha (Bakrid), Vijay Dashmi, Muharram, Guru Nanak Birthday and Miladun-Nabi(Id-e-Milad (Birthday of Prophet Mohammad) included in the list of compulsory holidays and falling on day of weekly off.
10. In respect of Banks, the holidays shall be regulated in terms of the extant instructions issued by the Department of Financial Services, Ministry of Finance.
11. Hindi version will follow.
sd/-
(K.Salil Kumar)
Under Secretary (JCA)

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது.

2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை. வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும்உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

கடன் வரம்பு:

அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். யாரெல்லாம் கடன் பெறலாம்?: சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின்அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலானமனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கிமூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்: வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.
* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

கடன் ஏற்பளிப்பு: மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும். இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பிடித்தம்:

ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்;பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். இருபது ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

காப்பீடு:

வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப்பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர்இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின்அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

தொடக்கப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுவதற்கான புத்தகங்களுக்கு கதை எழுதுதல் ஆயத்த பணிமனை



தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'மண் பானை சமையல் நல்லதா?"

மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள்  அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தி னால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல் லாமல் மண்பானைகள் பல  நூற்றாண்டுகளாக ஆரோக் கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :

Right to information act 2005
RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை
3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை

தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது.

தமிழக சுற்றுச்சூழல்-வனத்துறையில் அலுவலக உதவியாளர் பணி.

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்-வனத்துறையில் உள்ள 6 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:அலுவலக உதவியாளர்

மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு. பாடப்பிரிவை தேர்வுசெய்வது எப்படி?

பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான். கடந்த சில ஆண்டுகளாக 2-வது இடத்தில் மெக்கானிக்கல் இன்ஜினரியரிங் இருந்து வருகிறது.ஒரு காலத்தில் ஐ.டி எனப்படும் இன்பர்மேசன்டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள்மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

BSNL நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL)  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள்ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்.

தமிழக நீதித்துறையில், ஒட்டு மொத்தமாக, 3,600 காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

DTEd:இடைநிலை ஆசிரியர் பயிற்சி - கலந்தாய்வு ஜூலை 4-ல் தொடங்குகிறது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடை பெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங் களில் ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தப்படும் மையங்கள் ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் (www.tnscert.org) 27-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும்.கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் திங்கள்கிழமை முதல் அனுப்பப்படும். மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ஜூலை 4 (திங்கள்கிழமை) - ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள்,சிறப்புப் பிரிவினர். (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் மற்றும் முன்னாள்ராணுவத்தினரின் மகன், மகள்)கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். கலந்தாய்வுக்கு வருவோர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்று, சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கலந்தாய்வு

ஜூலை 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். பாடப்பிரிவு வாரியான கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:-

ஜூலை 5 (செவ்வாய்க்கிழமை) - தொழிற்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள்
ஜூலை 7 (வியாழக்கிழமை) - தொழிற்பிரிவு மாணவிகள்
ஜூலை 8 (வெள்ளிக்கிழமை) - கலைப்பிரிவு மாணவிகள்
ஜூலை 9 (சனிக்கிழமை) - அறிவியல் பிரிவு மாணவிகள்

மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்.

பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை.கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கிஉள்ளதாகவும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் முன்னிலை பெறுவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

16,459 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழக முதல்வருக்கு கோரிக்கை.


''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''-ச. மாடசாமி

''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.

மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட்டு முறையான சேவையைத் தொடங்க உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கித் தீர்வு காணும் வகையில்,

சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கு, முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது.