Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 July 2016

அறிவு சார் கட்டமைப்பு வினா நிரல்...ஆசிரியர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்ய...

வாட்ஸ்ப்ஆப் மூலம் பாஸ்போர்ட் சேவை;மண்டல அலுவலர் தகவல்


மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு-தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம் ஊதிய உயர்வுக்கு நிபந்தனை


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'செவ்வாழையின் மருத்துவ குணங்கள்"


செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 05.07.2016 அன்று சென்னையில் நடைபெற உள்ளது

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-ம் ஆண்டின் முத்துகுமரன் குழு பரிந்துரையை அரசு நிறைவேற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கலாம் என முத்துகுமரன் குழு பரிந்துரைத்தது.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், 82 மாணவர்கள் அபார சாதனை. எட்டாம் வகுப்பிற்கு இந்திய அளவில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இந்த NMMS  தேர்வில்  தமிழகத்திலேயே நமது திருப்பத்தூர் ஒன்றியத்தில் மட்டும் அரசு பள்ளி  மாணவர்கள் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இது சாதாரண விசயம் இல்லை. அரசு பள்ளிகள் புரிந்துணர்ந்து படிக்கும் கல்விமுறைக்கு கிடைத்த பெரும் வெற்றி , இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே   நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி. எடுத்துக்கொண்ட வேலையில் நேரம் காலம் பார்க்காமல் திட்டமிட்டு கடுமையாக உழைத்து தங்களின் திறமைகளை மாணவர்களுக்கு அளித்து, இம்மாபெரும் வெற்றிக்கு பிண்ணனியாக இருந்து மாணவர்களை வெற்றி பாதைக்கு தாங்கி ஏற்றி செல்லும் வெற்றி ரதமாக செயல்பட்ட ஆசிரிய கர்ண மகாராசாக்களை மனதார பாராட்டுகிறோம்.  அந்த வகையில் இந்த தேர்வு அறிவித்ததிலிருந்து இதை எப்படியெல்லாம் நடத்தலாம் என திட்டமிட்டு இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊக்குவித்த நமது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், வழிகாட்டுதலுமே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும்.  இது போன்ற கல்வி அதிகாரிகளும் , தியாக உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களும் இருக்கும் வரை ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வி அறிவு தடையின்றி கிடைத்திடும்.  எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த கல்வி அதிகாரிகளையும் பாரட்டவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இந்த வெற்றியை நாம் அனைவரும் சேர்ந்து வரும் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெறும் வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு, இவ்வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து பெருமக்களையும் மனதார வாழ்த்திடுவோம் வாருங்கள். மகிழ்விப்போம்.......    மகிழ்வோம்.

"கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை உறுதி செய்ய வேண்டும்'ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது

 கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அனைத்து ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நாகையில் நடைபெற்றது.

RTI -M.Ed.,உயர்கல்வி பயில துறை அனுமதி கோருவது குறித்தும் M.Phil.,பகுதி நேரத்தில் பயில முன் அனுமதி கோருவது குறித்தும் பெறப்பட்ட தகவல்...


6முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு? -RTI Letter



இன்று கால்நடை பல்கலை. தரவரிசை பட்டியல்.

சென்னையில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.

'டான்செட்' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

எம்.இ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லூரிகள், சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., படிப்பில் சேர, 'டான்செட்' என்றதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி.

22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

கடவுச்சீட்டு சேவைகளை கட்செவி அஞ்சலில் பெறும் வசதி:முதன் முறையாக மதுரையில் அறிமுகம்.

கடவுச்சீட்டு சேவையைக் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பெறும் வசதியை நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.கடவுச்சீட்டு சேவை மையங்களில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது முதல் ஒவ்வொரு பரிசீலனை நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது.

காந்திகிராம திறந்தநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை.

காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி சேர்க்கை துவங்கியுள்ளது.

ஆக.,2ல் ராணுவத்திற்கு ஆள்தேர்வு முகாம்.

சென்னை மண்டல தலைமை ராணுவ ஆள் தேர்வு மையம் சார்பில், ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் ஆக.,2 முதல் 10ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் தேர்வு முகாம்நடக்கிறது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்ககேற்கலாம்.

பி.ஆர்க்., படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம்.

தமிழகத்தில் உள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாள் கடைசி நாள். தமிழகத்தில், 'ஆர்கிடெக்ட்' எனப்படும் பி.ஆர்க்., படிப்பு, 41 இன்ஜி., கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், 'ஆர்கிடெக்சர்' கவுன்சிலின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலை இணைப்பில்இந்த கல்லுாரிகள் செயல்படுகின்றன.

சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்.

தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து, கவுன்சிலிங் நடக்கிறது.

சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதி துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம் ஆண்டுக்கான ஒற்றைச் சாளர முறையில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

DEE Proceeding-Free Bus Pass Reg


பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

TNPSC அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்

விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்குபேறுகால விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வார கால பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்.

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TRANSFER NEWS - ADW Schools TRANSFER NEWS - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு பற்றிய விவரம் மற்றும் செயல்முறைகள்...


பள்ளி ஆய்வக உதவியாளர் பணி:எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்அதன் முடிவுகளை வெளியிடப்படவில்லை

எழுத்துத் தேர்வு அடிப்படையில் 4 ஆயிரத்து 362 பள்ளி ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் எழுதி வெளியிட்ட முகநூல் பதிவில்,

''தமிழகத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசுப் பணிகளில் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறை நிரப்பாமல் வைத்துள்ளது.இந்தப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015 மே 31-ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றாலும் பட்டதாரிகள் உள்பட 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர் என அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும் என்றும்,அதற்கு 25 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 150 மதிப்பெண்களுக்கு எழுதப்பட்ட எழுத்துத் தேர்வுக்கு மதிப்பில்லாமல் போனதால் நேரம் செலவிட்டுப் படித்த இளைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதுடன்,தங்களின் நிலை குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.சென்னை உயர் நீதிமன்றம் 7-8-2015 அன்று அளித்த உத்தரவில், இது போன்ற பணிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்வது முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என தெரிவித்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசின் நிலை மாறவில்லை.

எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்அதன் முடிவுகளை வெளியிடாமலும், பணி நியமனம் செய்யாமலும்காலம் தாழ்த்தி வருவது இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, நீதிமன்ற உத்தரவை ஏற்று எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.