Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 5 July 2016

மெட்ராஸ் உயர் நிதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆக பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், பாம்பே உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் பெறும். பாம்பே உயர்நீதிமன்றம் இனி மும்பை உயர்நீதிமன்றம் என மாற்றப்படும். இதேபோல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை கொல்கத்தா உயர்நீதிமன்றமாக மாற்றவும் ஒப்புதல் அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெரிய துறைமுகம் அமைக்க கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை குறுகிய கால கடன் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
5.பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

ரமலான் விடுமுறை ( வியாழன் ) சுப்ரீம் கோர்ட் சுற்றறிக்கை.

ஈரோடு புத்தகத் திருவிழா - 2016 ( 12 நாட்கள் )

07.07.2016 அன்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை - நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படவேண்டும் - கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...

கணினி கல்வியில் தமிழகம் பின்தங்கியதால் 39,000 கணினி பட்டதாரிகள் தவிப்பு

கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் நாட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழக அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததால், 39 ஆயிரம் பிஎட் கணினி பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 2011-ம் ஆண்டில் 6,7,8,9,10-ம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கான பாடப் புத்தகங்கள், கணினி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. மாணவர், பெற்றோர், ஆசிரியர்களிடம் கணினி கல்வித் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திடீரென கணினி புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. சில மாதங்களில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர் களுக்கு கணினிக் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் கணினிக் கல்வி வழங்கப்படுகிறது.இதனால், அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவிக் கின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கூறியதாவது:2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. 

ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த ஆண்டு மாறுமா?

 தமிழக அரசு பரிசீலனைபிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 9 வருடங்கள் ஆகின்றன.இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. பாடத்திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடம் ஒப்படைத்தது. இதையொட்டி முன்னாள் அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. வரைவு பாடத்திட்டம் ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த 3 ஆசிரியர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. பிளஸ்-1 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும், பிளஸ்-2 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும் வரைவுப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்பதற்காக மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் சிறந்த ஆலோசனைகளும், கருத்தும் ஏற்கப்பட்டன. அந்த வரைவுப்பாடத்திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. அந்த கருத்துக்களில் தேவையானவை ஏற்கப்பட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. 

இந்த பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசீலனை இப்போதைய பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் மாறினால் 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு அவசியம்!

இனி, கல்வி உதவித்தொகை உட்பட, அனைத்து வகையான உதவியும், வங்கி கணக்கு வாயிலாகவே வழங்கப்படும்.எனவே,பள்ளி,கல்லூரி மாணவ - மாணவியர் அவசியம் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என,அறிவுறுத்தப்படுட்டுள்ளது.

இதற்கு,தாலுகா வாரியா சிறப்பு முகாம் நடத்த,மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியருக்கும்,தொழிற்கல்வி பயில்வோருக்கும்,தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக,கல்வி உதவி வழங்கப்படுகிறது.மத்திய அரசு வழிகாட்டுதலின் படி,இத்தொகை வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோல்,திருமண நிதியுதவி,மகப்பேறு நிதியுதவி,அரசு திட்டங்களுக்கான மானியம் என,அனைத்து வகையான அரசு மானியமும்,நிதியுதவியும்,வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே வழங்கப்படுகிறது. 

அதனால்,வங்கி கணக்கு வைத்துள்ள மாணவ,மாணவியர் மட்டுமே எளிதாக கல்வி உதவித்தொகை பெற முடியும்.ஆனால்,பள்ளி மாணவ,மாணவியருக்கு பெற்றோர் உதவி இருந்தால் மட்டுமே,வங்கிகளுக்கு சென்று கணக்கு துவங்க முடிகிறது. பள்ளி விடுமுறை நாட்களில்,வங்கிகளுக்கும் விடுமுறை என்பதால்,கணக்கு துவக்குவது தொடர்ந்து தள்ளிப்போகிறது. அதிகம் படிக்காத பெற்றோர்,தங்களது குழந்தைகளுக்கு கணக்கு துவக்க முடியாமல் தவிக்கின்றனர். 

எனவே,மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பெற்றோர் தரப்பில் கூறுகையில்,ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும்,வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவி வழங்கப்படுகிறது;கணக்கு துவங்குவது கஷ்டமானதாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு,தாலுகா வாரியாகசிறப்பு முகாம் நடத்தி,கணக்கு துவக்கிக் கொடுக்க வேண்டும். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு எளிய வழிகாட்டுதலுடன்,விரைந்து துவக்க உதவிட வேண்டும்என்றனர்.முன்னோடி வங்கி அதிகாரிகளை கேட்டபோது,பள்ளி பருவத்தில் இருந்தே,வங்கி கணக்கு பயன்படுத்த கற்றுத்தர வேண்டும். வங்கி கணக்கு துவக்கினால் மட்டும் போதாது;தொடர்ந்து பயன்படுத்தி வர,பள்ளிகள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். 

வங்கி கணக்கு இருந்தால்,ஆண்டுக்கு, 12ரூபாய்செலுத்தி,ஓராண்டுக்கு,இரண்டு லட்சம் ரூபாய் அளவிலான காப்பீடு பெற முடியும்.மேலும், 330ரூபாய் செலுத்தினால்,மத்திய அரசின் மற்றொரு திட்டத்தில்,ஆண்டுக்கு,இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு சேவையை பெற முடியும். வங்கி கணக்கு இருப்பதன் மூலம்,மாணவர் கள் பல வகையில் நன்மையடைய முடியும்என்றனர்.

பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கில மொழி: பயிற்சிக்கு முன்பதிவு செய்ய அழைப்பு.

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையத்தில் வரும்18-ம் தேதி தொடங்கவுள்ள ஆங்கில மொழி பயிற்சிக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சிலில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உகந்த பயிற்சிகளாக பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல்,வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை வழங்கப் படுகின்றன

முதலில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி,விரும்பிய நேரம் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.அதேபோல இளம் வயதின ருக்கான பயிற்சி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இளம் சாதனை யாளர்கள் பயிற்சி (7 முதல் 15 வயது வரை), பேசும், சரியாக எழுதும் பயிற்சி (11 முதல் 15 வயது வரை) அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 01204569000, 01206684353 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். Winya.Suzanna@in.britishcouncil.org என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம். அல்லது English என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் என்றுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளரை சாதனையாளராக மாற்றும்: சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் - மாற்றுப்பணி வழங்குமா அரசு?

குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் கண்ட றியப்பட்டு, அங்கு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் (என்சிஎல்பி) கீழ் கடந்த 1988 முதல் சிறப்பு பள்ளிகள் நடத்தப் படுகின்றன. குழந்தை தொழி லாளர்களாக இருந்து மீட்கப்பட்ட9 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு இங்கு கல்வி கற்றுத்தரப் படுகிறது. 

மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தூத் துக்குடி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப் பட்ட பலர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் சிறப்பு பள்ளிகளின் ஆசிரியர்கள். ஆனால், அவர்களில் பலர் மாதந்தோறும் சரிவர ஊதியம் கிடைக்காமல் வறுமையில் வாடு கின்றனர். மேலும், சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில் சுமார் 1,000 ஆசிரியர் களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி யாகியுள்ளது.

இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி ஆசிரியர், ஊழியர் சங்க மாநிலச் செயலர் எஸ்.அழகுஜோதி, கூறியதாவது:திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் பட்டாசு, தீப்பெட்டிதொழிற் சாலைகள், கல் குவாரிகள், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அந்த மாணவர்கள் அதிகபட்சம் 8-ம் வகுப்பு வரை எங்களிடம் பயின்றாலும், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். அவர்களில் பலர் நல்ல நிலைக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கு இது வரை எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

ரூ.6 ஆயிரம்தான் சம்பளம்

கடந்த 20 ஆண்டுகளாக பணி யாற்றினாலும், ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றும் எங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர் சட்டப்படி, குறைந்தபட்ச சம்பளம்கூட எங்களுக்கு இல்லை. அதுகூட மாதாமாதம் ஒழுங்காக கிடைப்பதில்லை. தாமதமாகவே கிடைக்கிறது.

சிறப்பு பள்ளிகளில் கடந்த ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற னர். தற்போது பல்வேறு நட வடிக்கைகளால் குழந்தை தொழி லாளர் எண்ணிக்கை குறைந் துள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக் கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசி ரியர்களை ஏற்கெனவே வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.மற்ற சிறப்பு பள்ளிகள் எப்போது மூடப்படும் என்று தெரி யாத நிலையில், சுமார் 1,000 ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களது கல்வி, சேவையை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு எங்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியை அடித்ததில் மாணவி பார்வை இழந்த விவகாரம்:ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியை அடித்ததில் மாணவி பார்வை இழந்த விவகாரம்:ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவுஆசிரியை அடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த கே.வெங்கடேஸ்வரியின் மகள் கே.பிரியதர்ஷினி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். இந்நிலையில் 1.3.2012 அன்றுபிரியதர்ஷினிக்கு கண்ணில் அடிபட்டதாகவும் சிகிச்சைக்காக கண் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் வெங்கடேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, சிறுமியின் வலது கண்ணில் குச்சியால் அடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெங்கடேஸ்வரி மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.பத்மாவதியை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அவர் தாக்கல் செய்த பதில் மனு பள்ளி நிர்வாகத்துக்குச் சாதகமாக இருந்ததால், இந்த வழக்கை அப்போதைய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் தாக்கல் செய்த அறிக்கையில், சிறுமியை பள்ளி ஆசிரியை குச்சியால் கண்ணில் அடித்தது நிரூபிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி கே.கே.சசிதரன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு,சிறுமிக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுப்பதற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த அறிக்கை பள்ளி நிர்வாகத்துக்குச் சாதகமாக இருந்துள்ளது. ஆனால், இந்த வழக்கை முழுமையாக விசாரித்த காவல் கண்காணிப்பாளர் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. இதேபோன்று ஒரு வழக்கில், சுற்றுலா சென்ற பஞ்சாப்மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 14 பேர் குளத்தில் மூழ்கி இறந்ததையடுத்து, அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன் அடிப்படையில் வலது கண் பார்வையை இழந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சத்தை மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு நடத்தும் செலவாக ரூ.1 லட்சத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர், மனுதாரருக்கு வழங்க வேண்டும். அந்தத் தொகையை வழக்கைத் திசை திருப்ப முயன்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். அவர் ஓய்வு பெற்றிருந்தால் அவரது ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.