Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 7 July 2016

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!

சென்னை;வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிண்டி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு செல்போன், உடை கட்டுப்பாடு போன்றவற்றை பள்ளி, கல்லுாரிகள் விதித்து வருகின்றன. இருப்பினும் அவை மாணவர்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, செல்போன் உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்களிடையே ஒழுங்குமுறையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.அதன் ஒருகட்டமாக மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டுவந்தால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த கல்லூரியின் நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய சுற்றறிக்கையில், 'கிண்டி பொறியியல் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்தஉத்தரவிட்டுள்ள இடத்திற்கு மாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இருசக்கர வாகனத்தை வளாகத்தில் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினால் அல்லது பட்டாசு வெடித்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலுத்தவேண்டும். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களோ அல்லது மாணவிகளோ ராகிங் செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்.

மேலும் மாணவர் அல்லது மாணவி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரத்திற்கு எல்இடி டிவி... 'ஃப்ரீடம் 251' ஸ்மார்ட் போனை அறிவித்த நிறுவனம் அறிமுகம்!

உலகிலேயே மிக குறைவான விலைக்கு செல்போனை விற்பனை செய்வதாக கூறி, ரூ. 251 க்கு செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம், தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், 'ஃப்ரீடம்  251' என்ற பெயரில் ஸ்மார்ட் போனை டெல்லியைசேர்ந்த ரிங்கிங்பெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் புக் செய்தனர்.ஒரே நாளில் 7.5 கோடியை சம்பாதித்த அந்த நிறுவனத்தால், சொன்னது போல வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க இயலவில்லை. தற்போது, ஜூன் மாதம் 8ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையளர்களுக்கும் ஸ்மார்ட் போன்களை வழங்கி விடுவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கிடையே அதே ரிங்கிங்பெல் நிறுவனம், குறைந்த விலைக்கு எல்இடி டிவியை இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்பெயர் 'ஃப்ரீடம் ஹெச்டி எல்ஈடி டி.வி.'  ஆகும். 32 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலைரூ.9, 990 தான். சுமார் ஒரு லட்சம் டிவிகளை அது தயாரித்துள்ளதாம். அதுபோல் புதிய ரக ஸ்மார்ட் போன்களையும் ரிங்கிங்பெல் அறிமுப்படுத்துகிறது.

இது குறித்து ரிங்கிங்பெல் நிர்வாக இயக்குநர் மோகித் கோயல் கூறுகையில், " ஜூலை 25 ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங்தொடங்கும். ஆகஸ்ட் 1 ம் தேதி டெலிவரி செய்யப்படும்" என்றார்.

Thursday, 7 July 2016 த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

NHIS-அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் முக்கிய பாடங்களுக்கு ஒரே ’சிலபஸ்’

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட,புதிய கல்விக் கொள்கையில்,முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.இது,கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து,ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,புதிய கல்வி கொள்கைகுறித்து, 28பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.இதில்,பத்தாம் வகுப்பு வரை,முக்கிய பாடப்பிரிவுகளான,கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்கு,ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல்,மொழிப்பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு,மாநில அரசுகளே பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

இதை செயல்படுத்தினால்,நாடு முழுவதும் எவ்வித ஏற்றத்தாழ்வு இன்றி,மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட வாய்ப்பாக இருக்கும் என்பது,பலரது கருத்தாக உள்ளது. மேலும்,அடிப்படைகல்வித்தரம் உயரும் பட்சத்தில்,மேல்நிலைக்கல்வி,உயர்கல்வி பெறுவதிலும்,போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்காது. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும்,தேசிய திறனறி தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்பதுகல்வியாளர்களின் கருத்தாக உள்ளது

.கல்வியாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில்,நாடு முழுவதும் ஒரே கல்விமுறை பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கும்போது,மாநில வாரியாக,கல்வியாளர்கள்,மூத்த ஆசிரியர்களின் கருத்துகளை பெற்று,நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.மேலும்,தேர்வு முறைகளும்,ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதை,மேல்நிலை வகுப்புகளிலும் பின்பற்றினால்,தேசிய அளவிலான தேர்வுகளில் அனைத்து தரப்பு மாணவர்களும்பங்கேற்க உதவியாக இருக்கும்,என்றார்

பள்ளி கழிப்பறையில் பெருக்கெடுத்த மணல் ஊற்று!

எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை தரைப் பகுதியில் இருந்து, டன் கணக்கில் கிளம்பிய மணல் ஊற்றால், மாணவ, மாணவியர் பீதி அடைந்தனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

மாணவர்களுக்கு தடை:

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில், தாளமுத்து நடராஜர் மாளிகை எதிரில், மேம்பாலத்துக்கு பக்கவாட்டு பகுதியில், அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 15 மாணவியர் உட்பட, 107 பேர் படிக்கின்றனர். பள்ளிக்கு, நேற்று காலை, 6:45 மணிக்கு, உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் வந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில், ஆறாம் வகுப்பு கட்டடத்துக்கு அருகில், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து, நீர் கலந்த மண், சேறும், சகதியுமாக டன் கணக்கில் ஊற்றெடுத்து வருவதை பார்த்தார்.

அந்த மணல் ஊற்று, கடல் அலை போல் கொந்தளித்து, வெளியேறிக் கொண்டிருந்தது. கழிப்பறை உள்ளே, ஆறடி உயரத்துக்கு எழும்பிய மணல், கதவு அடைக்கப்பட்டிருந்ததால், சிமென்டால் கட்டப்பட்ட ஜன்னல் ஓட்டைகள் வழியே வெளியேறி, பள்ளி வளாகத்தில், 200 மீட்டர் சுற்றளவுக்கு பரவியிருந்தது. இதை கண்ட ஆசிரியர் சிவகுமார், உடனடியாக தலைமை ஆசிரியர் கண்மணிக்கு தகவல் அளித்தார். அதேபோல், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தகவல் அளித்தார். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர், மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.

விடுமுறை:

பின், பள்ளி தலைமை ஆசிரியை, 7:00 மணிக்கு வந்ததும், மெட்ரோ ரயில், பொதுப்பணித் துறை மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பொறுப்பு இன்ஜினியர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து, மெட்ரோ ரயில் பணியாளர்கள் மூலம், மணலை அகற்ற ஏற்பாடு செய்தனர். ஆனாலும், நேற்று மதியம் வரை, அந்த கழிப்பறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. பின், முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மத்திய சென்னை எம்.பி., விஜயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளிக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டது. பள்ளி கட்டடத்துக்கு ஏதாவது சேதம் உள்ளதா என, பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் ஆய்வு நடத்தி, விரிசல் இல்லை என உறுதி செய்தனர். பள்ளி வளாக தரைக்கு அடியில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்ததால், இந்த மணல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கட்டடத்தில் அதிர்வு - கல்வி துறை அலட்சியம் : இந்த பள்ளியின் கழிப்பறை கட்டடம், சில மாதங்களுக்கு முன்புதான், ரோட்டரி சங்கத்தால், ஆறு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது; இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மணல் கொந்தளித்த இடத்தில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஆழ்குழாய் கிணறு இருந்துள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடம் குறித்து, இரண்டு ஆண்டுக்கு முன்பே, பள்ளிக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆழ்குழாய் கிணறு, இடியும் நிலை கட்டடங்கள் இருந்தால், அதுபற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல், சுரங்கப்பாதை தோண்டும்போது, பள்ளி கட்டடத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இத்தனைக்கும், இப்பள்ளி வளாக கட்டடத்தில்தான், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. தற்போது, இந்த சம்பவம் நள்ளிரவு துவங்கி, அதிகாலையில் முடிந்துள்ளது. அதனால், உயிர் சேதம் ஏதும் இல்லை.

10 டன் மணல்:

திடீர் ஊற்றால், அந்த பள்ளிக்கு, 10 டன் அளவுக்கு மணல் கிடைத்துள்ளது. முதலில் கறுமை நிறத்தில், ரசாயனம் கலந்த மணல் வெளியேறி உள்ளது. சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரத்தால், அதிவேக அழுத்ததுடன் பூசப்படும், &'பென்டோனைட்&' கலவையில் நீர் கலந்து, இப்படி வெளியேறியதாக தெரியவந்துள்ளது. பின், மிகவும் குழைவான சவுடு மணல் வெளியானது. இந்த மணல், ஒரு லாரி லோடு, 12 ஆயிரம் ரூபாய் என்பதால், வெளியே கொட்டாமல், பள்ளி வளாகத்தில் தேக்கி வைத்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியே காரணம் : சென்னையில், மெட்ரோ ரயில் பணிகள், சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரையிலும் நடக்கின்றன. இதில், எழும்பூர் - சென்ட்ரல் - சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் இணைக்கும் வழித்தடம், எழும்பூர் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை நடந்து வருகிறது. இதற்கான சுரங்க பாதை தோண்டும் பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. தற்போது, அப்பணி, தாளமுத்து நடராஜர் மாளிகை மற்றும் எழும்பூர் மேம்பாலத்தை கடந்துள்ளது.

மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் அடிப்பகுதியில், 50 மீட்டர் ஆழத்தில், 60 மீட்டர் சுற்றளவுக்கு சுரங்கப் பாதை தோண்டப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் சுரங்கப்பாதை, பள்ளி வளாகத்திற்கு கீழே, இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒன்று சென்ட்ரலை நோக்கியும், மற்றொன்று அண்ணா சாலை நோக்கியும் செல்கிறது. இந்த பணியின் காரணமாகவும், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் அதிவேக அழுத்தம் காரணமாகவும், 50 மீட்டர் ஆழத்திலிருந்த மணல் மேலே பொங்கி வந்துள்ளது.

தொடரும் சம்பவம்!

மெட்ரோ பணிகளால், சென்னையின் பல இடங்களில் வினோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றம் அருகில், சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டது. சென்னை அரசு மருத்துவமனை மற்றும் ஈவ்னிங் பஜார் சாலை சந்திப்பில், திடீர் பள்ளம் ஏற்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில், மூன்று மாடி கட்டடமே பூமிக்குள் இறங்கியது. தற்போது, அரசு பள்ளி வளாகத்தில் மணல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை: வல்லுனர் குழு பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, உள்நாட்டில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, உடனடியாக குறைக்கத் தேவையில்லை என்று மத்திய நிதித் துறைக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரைத்திருக்கிறார். இது ஏற்கப்பட்டால் இனி வரும் 
மாதங்களில் எரிபொருள் விலை தாறுமாறாக உயரும் ஆபத்து உள்ளது.

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த  இரு ஆண்டுகளாக உலக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலனை முழுமையாக மக்களுக்கு வழங்காத மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி கூடுதல் வருவாயை ஈட்டியது. கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு  ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. கடந்த 5 மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அதைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கலால் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்கும்படி  மத்திய அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால், கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.14 ரூபாயும், டீசல் விலை 10.89 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது பெருஞ்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.

இனி கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டுமா அல்லது கலால் வரியை குறைக்க வேண்டுமா? என பொருளாதார ஆலோசகரிடம் அரசு விளக்கம் கேட்டிருந்தது. இதுகுறித்து அரவிந்த் சுப்ரமணியன் அளித்துள்ள பதிலில், ‘‘உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 டாலர் என்ற அளவை எட்டும் வரை கலால் வரியை குறைக்கத் தேவையில்லை. அதன்பின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனால் ஏற்படும் இழப்பில் பாதியளவுக்கு கலால் வரியை குறைக்கலாம்; மீதியை நுகர்வோர் மீது சுமத்தலாம்’’ என்று கூறியுள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய நிலவரப்படி,  ஒரு பீப்பாய் 47.24 டாலராக இருந்தது. அதன்படி உள்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.24&க்கும், டீசல் ரூ.56.25&க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடுத்த இரு மாதங்களில் 65 டாலராகவும், இந்தாண்டு  இறுதிக்குள் 100 டாலராகவும் உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரை ஏற்கப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் பெட்ரோல் விலை 85 ரூபாயாகவும், டீசல் விலை 75 ரூபாயாகவும் இருக்கும். இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத விலையாகும்.

எரிபொருள் விலை உயர்வு அத்துடன் நிற்கப்போவதில்லை. இந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தால் பெட்ரோல் விலை 100 ரூபாயாகவும், டீசல் விலை 90 ரூபாயாகவும் அதிகரிக்கும். இவ்வளவு விலை உயர்வை இந்திய மக்களால் நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது.
கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி பயனடைந்த மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது வரியை குறைக்காமல்  மக்கள் மீது முழு சுமையையும் சுமத்துவது முறையல்ல. ஒரு மக்கள் நல அரசுக்கு இது அழகல்ல. தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை ஏற்கப்பட்டால் மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டால் அது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவுவதாக அமையாது.

எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு குறித்த அரவிந்த் சுப்ரமணியனின் பரிந்துரையை  மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். கடந்த காலத்தில் உயர்த்தப்பட்ட  கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எரிபொருள் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், பெட்ரோல், டீசல் விலைகள் உச்சவரம்பை மீறி உயர்த்தப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

PGTRB விரைவில்- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. 

இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது.என் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரியஇறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்கஇடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங் குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது.இந்தச் சட்டப்படி பெற்றோ ர்களை பராமரிப்பது மகன், மகள்களின் கடமையாகும். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் மகன், மகளிடம் இருந்து நிதி உதவி பெறுவது அவர்களின் உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை அதிகாரிகள் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி வழங்க மறுக்கக்கூடாது. பணிப்பதிவேட்டில் வாரிசுதாரர் பட்டியலில் பெயர் இல்லா விட்டாலும் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் இறுதி பணப்பலன்களில் அவரது தாயாருக்கும் பங்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம்கருதுகிறது. எனவே மனுதாரரின் மருமகளுக்கு பணப்பலன்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக கணக்காயர் ஜெனரல், ராமநாதபுரம் ஆட்சியர், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஜூலை 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு: முதல்வர்.

சென்னை:அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை நான்கு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2012-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 30.6.2016-ல் முடிவடைந்தது. எனவே, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைசில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியை ஏற்கும் குழு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டுநிறுவனம் மூலம் செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது.

இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.