Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 14 July 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"குதிகால் வலி ஏற்படுவது ஏன்?"

 தரையில்கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை படிப்புகளுக்கு இதுவரை 1,840 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது.சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது.

G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms- Important points

*.01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.

*.உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.

*.பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.

TRANSFER NEWS:-2016- 2017 பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு

 *மாறுதல்கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.

மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

புது தில்லி:மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்றுஉச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு கிடையாது என மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து விடுப்பு எடுத்து பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 7 மலைகிராம பள்ளிகளில் 29-ம் தேதி முதல் சத்துணவு

ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் செயல்படும் 7 தொடக்கப்பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல் சத்துணவு வழங்க மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் விரிவுரையாளர் பணி:நாளை விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு ரூ. 980 கோடி :மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் தகவல்

பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு ரூ. 980 கோடி ஒதுக்கியிருப்பதாக, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் டி. ராமசாமி தெரிவித்தார்.

மின் துறை, பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

காரைக்கால் மின் துறை, பள்ளிகளில் புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். மின் துறை அலுவலகத்தில் உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்களிடம் விளக்கம் கோருமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

இளம் விரிவுரையாளர் தேர்வுக்குரிய விண்ணப்பத்தை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ 10 ஆயிரம் கோடி கதி என்ன ?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையில்  வலியுறுத்தப்பட்டு, அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டுமென  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், தமிழக  முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு :

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப். 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான சில அறிவிப்புகள் சட்டப்பேரவையில் பிப். 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிர்வாக ரீதியான வழக்குகளுக்குத் தனி நிர்வாகத் தீர்வாயம் அமைக்கவும் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்ற படிகள் அனைத்தையும் ஊதிய முரண்பாடுகளின்றி வழங்க ஊதியக் குழுவை அமைக்கவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கென அரசு ஒரு காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கித் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

CRC புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ல் கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி  காலை 11 மணிக்கு கூடுவதாக சட்டப்பேரவைசெயலாளர் ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.2016-17-க்கான திருத்திய பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அன்றைய தினமே நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

செல்போனில் தேவையற்ற குறுஞ்செய்திகள்: காற்றில் பறக்கும் 'ட்ராய்' உத்தரவுகள்

செல்போன் சேவைகளில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை,அழைப்புத் திட்டங்கள் என அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுப்புகின்றன. இவை பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. 

R.L LIST-2016

ஜனவரி
14.01.16 வியாழன் - போகிப்
21.01.16 வியாழன் - கர்வின் முகைதீன் அப்துல்காதர்
24.01.16 ஞாயிறு-தைப்பூசம்
பிப்ரவரி
10.02.16 புதன் - சாம்பல் புதன்
22.02.16 திங்கள் - மாசிமகம்

ஆசிரியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

அறிமுகம் - `அம்மா வை-பை?`.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை.

அவன் பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும்.

இனி "பாஸ்வேர்ட்" நினைவில் வைக்க வேண்டாம்.

மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனபடும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:

பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

குழந்தைகளுக்கான அறிவுக்களஞ்சியம் விருது: போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்யலாம்.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 27-ஆவது அறிவுக் களஞ்சியம் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 7-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை 25 ஆண்டுகளாக உயராததால் விரக்தி.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை, 25 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால், அதில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது. தமிழகத்தில், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 1991ம் ஆண்டு முதல், ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி வேளாண்மைபடிப்புகளுக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture),  இளநிலைஅறிவியல் செவிலியர் (B.Sc. Nursing),  மற்றும் இளநிலை மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (Random Number) புதன்கிழமை வெளியிடப்பட்டது.