Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 July 2016

குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை


ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.

ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் 3' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION


நாளை (24.7.2016) இரண்டாம் கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு சென்னையில் 14,500 பேர் எழுதுகிறார்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் நாளை நடக்கிறது. சென்னையில் 14,500 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர். பணி நிரந்தரம்...


அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், முழு பணி நேர பணியுடன் ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு குறையாமல் வழங்கவேண்டும், அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆவண செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.

இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழி கல்வி.புறக்கணிப்பு! .. 1,000 இடங்களில் மாணவர்கள் சேராததால் வீண்.

தமிழ் வழி கல்வியில் இன்ஜினியரிங் படிப்பதைமாணவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி, தமிழ் வழி கல்வி படிப்பில் சேர மறுப்பதால், இந்த ஆண்டில் மட்டும்,பி.இ., படிப்பிற்கான, 1,002 இடங்கள் வீணாகி உள்ளன.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 523 கல்லுாரிகளில், பொது கவுன்சிலிங் முறையில், 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து 1,318 இடங்கள் காலியாக உள்ளன.பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள, 12 உறுப்பு கல்லுாரிகள் மற்றும் சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரியில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகள் உள்ளன. மெக்கானிக்கலில், 718 இடங்கள்; சிவில் பாடப்பிரிவில், 660 இடங்கள் என, 1,378 இடங்கள், தமிழ் வழி கல்விக்கு என, கவுன்சிலிங்கில் ஒதுக்கப்படுகின்றன.இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், தமிழ் வழியில், 1,002 இடங்களில் மாணவர்கள் சேர விரும்பாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை இனி நிரப்ப முடியாது என்பதால், தமிழ் வழி ஒதுக்கீடு வீணாய் போயுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களில்,40 சதவீதம் பேர் ஆங்கில வழியிலும், 60 சதவீதம் பேர் தமிழ் வழியிலும் படித்து, இன்ஜினியரிங் படிக்க வருகின்றனர். இவர்களில் தமிழ் வழி மாணவர்களும், ஆங்கில வழியிலேயே பி.இ., படிக்க விரும்புவதால், தமிழ் வழி பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை.இதுகுறித்து, அண்ணா பல்கலைஅதிகாரிகள் கூறியதாவது:பல்கலை வளாகத்திலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியில், வேறு பாடப்பிரிவுகளில் இடம் இல்லாவிட்டால் மட்டுமே, மாணவர்கள் தமிழ் வழியை தேர்வு செய்யும் நிலை உள்ளது. அதேநேரம், மாவட்டங்களில் இயங்கும் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்பில் சேர தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதில், தனியார் கல்லுாரி இடங்களை தேர்வு செய்கின்றனர்.அண்ணா பல்கலை கல்லுாரிகளில் படிக்கும் போது, பல்கலையின் பெயரில் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும்; கல்வி கட்டணம் பெருமளவு குறையும்; அரசின் விடுதிகளில் தங்கலாம். பல்கலை மூலம் நேரடி வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்படும். ஆனால், பல பெற்றோருக்குஇது தெரிவதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சான்றிதழில் தமிழ் இருக்காது!

தமிழ் வழி மாணவர்களுக்கு, 'தமிழ் வழி' என்று குறிப்பிட்டு, அண்ணா பல்கலை சான்றிதழ் தருவதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக எந்த, 'மீடியமும்' குறிப்பிடாமல், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பாடம் நடத்தும் போதும், முழுவதுமாக தமிழில் நடத்தாமல், ஆங்கிலம் கலந்தே நடத்துகின்றனர். தேர்வையும், ஆங்கிலத்தில் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.இந்த விபரங்களை மாணவர்கள் அறியாமல், தமிழ் வழி என்றால், முழுவதுமாக தமிழ் மொழிபெயர்ப்பாக இருக்கும் என நினைத்து புறக்கணிக்கின்றனர் என, பல்கலை அதிகாரிகள் கூறினர்.ஆங்கிலம் ஆக்கலாம்தமிழ் வழி படிப்பில், ஒவ்வொரு ஆண்டும் அதிக இடங்கள் காலியாவதால், அந்த இடங்கள் மாணவர்கள் சேராமல் வீணடிக்கப்படுகின்றன. இதை மாற்ற, இந்த இடங்களில், 50 சதவீதம் அல்லது, 70 சதவீதத்தை ஆங்கில வழியாக மாற்றினால், பல்கலை கல்லுாரிகளில்கூடுதலாக மாணவர் சேர வாய்ப்பு கிடைக்கும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி: முதல்வர் உத்தரவையடுத்து அமைச்சர் நேரில் பார்வயிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்குப் போராடும் தங்கள் ஆசிரியரின் மருத்துவச் செலவுக்கு உதவி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த புதன்கிழமை பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் தனித்தனி கோரிக்கை மனு எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினர், இந்த செய்தியை கடந்த ஜூலை, 21-ஆம் தேதி தினமணி, கல்லீரல் பாதிப்பு: 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி கோரி மாணவர்கள் முதல்வருக்கு மனு என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. 

இதனையறிந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கருக்கு ஆசிரியரின் நலம் குறித்து விசாரிக்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் ரவிசந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை அழைத்து சிறப்பு சிகிச்சையளிக்க ஆலோசனை வழங்கினார்.

இன்ஸ்பயர்' விருது தொகையில் 'தில்லாலங்கடி' : கொதிப்பில் மாணவர்கள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க அறிவியல் ஆய்வு (இன்ஸ்பயர்) விருதுகளுக்கான மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும் ஆண்டுதோறும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது.முதல்கட்டமாக மாவட்ட அளவில் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவியல் படைப்புகள் உருவாக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இது, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பரிந்துரையில் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவில், பின் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 ஊக்கத் தொகை தான் மாணவர்களுக்கு முழுவதும் வழங்கப்படுவது இல்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. 

மாணவர்களின் வங்கி கணக்கிற்கே இத்தொகை வரவு வைக்கப்பட்டாலும், வங்கியில் இருந்து பணம் எடுத்த பின் ரூ.3 ஆயிரம் வரை வளர்ச்சி நிதிக்கு என கூறி பள்ளிகள் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்கின்றன. மீதத் தொகையில் தான் மாணவர்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். இதனால் தேசிய போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறிப்பிடும் வகையில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பத்து ஆண்டுகளாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலில் இத்தொகை மாணவர்களிடம் நேரடியாக வழங்கும் வகையில் இருந்தது. பின் தலைமையாசிரியர் பெயரில் வழங்கப்பட்டது. இந்த இரண்டு முறையிலும் மாணவர்களுக்கு முழுத்தொகை சென்றடைவதில்லை என புகார் எழுந்ததால் தான் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு துவங்கி, அதில் அத்தொகை வரவு வைக்கப்பட்டது. தற்போது இதிலும் ஆசிரியர்கள், பெற்றோர் முடிந்தளவு பணத்தை 'கை வைத்து' விடுகின்றனர்புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது, என்றார்.

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?


அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துபொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளா?, கல்வித்தரம் குறைவா? அல்லது வே்லை வாய்ப்பின்மையா? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 523 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக். இடங் களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. பொறி யியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 34 ஆயி ரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பொது கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மொத்தம் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியிருக்கின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாகவுள்ள உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி:தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலே வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவுகிறது. வெளிநாடுகளில் தொழில் மந்த நிலை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அது இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு களைப் பார்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்பானது பொறியியல் படிப்பில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும் அவற்றின் உரிமையாளர்களின் செல்வச்செழிப்பை பார்த்தும் ஏராளமானோர் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கிவிடுகிறார்கள். புதிய கல்லூரிகளுக்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படவே இல்லை. புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியான பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய வரும் ஏஐசிடிஇ குழுவினர் பெயரளவுக்கு ஆய்வுசெய்துவிட்டு இஷ்டத்துக்கு அனுமதி வழங்கிவிடு கிறார்கள். 

இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகப் படுத்தாததால் காலியிடங்கள் அதிகரித் துள்ளன என்ற கருத்தை ஏற்க முடியாது. தற்போதைய படிப்பிலே நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய பாடங்களை தெரிவு பாடங்களாக (எலெக்டிவ் சப்ஜெக்ட்)எடுத்து படிக்கலாம்.முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பொறியியல் படிப்பதற்கு தேவையான கல்லூரிகள் உள்ளன. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் தரமான கல்வி கிடைக்கும். தரமான கல்வி பெறும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கவே செய்கின்றன. தரமான கல்வி கிடைக்காததால்தான் மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்:

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பொறியியல் கல்லூரிகளின்எண்ணிக்கை மிக மிக அதிகம். அரசு கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். தற்போது பொறியியல் படிப்பில் சேருவோரில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சிய 32 சதவீதம் பேர்தான் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் வேலைநோக்கில்தான் பொறியியல் படிப்பை தேர்வுசெய்கிறார்கள். பலரின் எண்ணமும் சாப்ட்வேர் பணியில் சேருவதாகத்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொருத்தவரையில் 92 சதவீதம் தகவல்தொழில்நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான மாண வர்கள் இசிஇ, ஐடி பிரிவுகளில் சேர விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் வேலையளிக்கும் நிறுவனங்களின் போக் கும் மாறியிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு 25 ஆயிரம்சம்பளம் கொடுக்க வேண்டும். அதே வேலைக்கு சற்று பயிற்சி கொடுத்தால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளை வைத்து பணியைச் செய்யலாம். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.போதிய அளவு மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோன்று பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். எனவே, அடுத்த ஆண்டு நிலைமை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 07.08.2016 க்குள் முடிக்க உத்தரவு - - இயக்குனர் செயல்முறைகள்

DEE:பணி நிரவலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 22.07.2016)

DEE DEPLOYMENT COUNSELLING GUIDELINES AND INSTRUCTIONS REG 2016-2017

தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: மத்திய அரசு ஊழியர்கள் ஆதங்கம்

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் செலவினங் கள் தொடர்பாக கண்காணிக்க, உதவி செலவின பார்வையாளர் களைக் கொண்ட குழு, தொகுதி தோறும் அமைக்கப்பட்டது. இதில் மத்திய தலைமை கணக்காளர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். 

இவர்கள் மொத்தம் 41 நாட்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கு உதவி யாக வீடியோ பார்வையிடும் குழு, வீடியோ நிலைக்குழு, நிலைக் கண்காணிப்புக் குழு, பறக்கும் படை என 4 விதமான குழுக்கள் பணியாற்றின.தேர்தல் நடக்கும் நாளில் மாநில அரசுப் பணியாளர்கள் வாக்குச் சாவடி அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் என நியமிக்கப்பட்டனர். இது தவிர, நுண் பார்வையாளர் கள் என வாக்குச்சாவடி அமை விடத்தில் நியமிக்கப்பட்டனர். இவர் களுக்கு அன்று ஒரு நாளுக்கான ஊதியம் அன்றே வழங்கப்பட்டுவிட்டது.ஆனால், உதவி செலவின பார்வையாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றிய குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் 16 தொகுதிகளுக்கான உதவி செலவின பார்வையாளர்களுக்கு இன்னும் ஊதியம் வரவில்லை. தேர்தல் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை ஊதியம் வழங்கப்படாத தற்கான காரணம் தெரியவில்லை.ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த மாநகராட்சி ஆணையர் சந்திர மோகனும் மாறிவிட்டார். தேர்தல் ஆணைய இணையதளத்தில் வேட் பாளர்கள் செலவுக் கணக்கு தகவல் களும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு இதுவரை ஊதியம்வழங்கப்படவில்லை. இதே நிலை தமிழகத்தின் பல பகுதிகளிலும்உள்ளது. தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இதில் தலையிட்டு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக தேர்தல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,‘‘மற்ற துறையினருக்கு உட னடியாக ஊதியம் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும்’’ என்றார்.

TIRUNELVELI DISTRICT VACANT LIST

வேலை தேடுவோருக்கு உதவ தேசிய வழிகாட்டி சேவை

பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.

பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்

பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 18 வயது நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு 25 முதல் விண்ணப்பம்

 'பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஒப்புதலுடன், முழு நேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் என்ற எம்.பில்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: