Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 29 July 2016

CEO,DEO TRANSFER LIST







ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்கிறது: நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி முடிவு

ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை திருத்தி அமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.தமிழகத்தில் 600-க்கும் மேற் பட்ட கல்வியியல் கல்லூரிகளும், 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.

 

          இவை தவிர, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிகல்லூரிகளும் இருக்கின்றன. தனியார் ஆசிரி யர் பயிற்சி கல்வி நிறுவனங் களில் அளவுக்கு அதிகமான கல்விக்கட்டணம் வசூலிக்கப் படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தமிழக அரசு முதல்முறையாக கடந்த 2012-ம் ஆண்டில் ஆசிரி யர் பயிற்சி படிப்புகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.

கட்டணம் நிர்ணயம் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கலந்துஆலோசித்து கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கல்விக் கட்டணம் 2012-13, 2013-14, 2014-15 என 3 கல்வி ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் 2014-15-ம் கல்வி ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், கடந்த ஆண்டு பிஎட், எம்எட் படிப்புக்காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக மாற்றப்பட்ட காரணத்தினாலும் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்க சற்று தாமதமான தாலும் கட்டணம் திருத்தியமைக் கப்படவில்லை.

3 ஆண்டுகளுக்குஇந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அதாவது 2016-2017, 2017-18, 2018-19-ம் ஆண்டுகளுக்கு ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட் டணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது. அதன்படி, கடந்த 2015 மார்ச் மாதம் முதல் சென்ற பிப்ரவரிமாதம் வரையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் களுக்கு செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட செலவின விவரங் களை ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் களுக்கும் நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகளிட மிருந்து செலவின விவரங்களைப் பெற்ற பின்பு, கட்டண நிர்ணயம் தொடர்பாக அவர்களிடம் இந்த கமிட்டி ஆலோசனை நடத்தும். அதன்பிறகு, நடப்பு கல்வி ஆண்டு முதல் அடுத்த 3ஆண்டுகளுக்குப் புதிய கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

தற்போதைய கல்விக் கட்டணம் எவ்வளவு?நீதிபதி என்.வி.பாலசுப்பிர மணியன் கமிட்டியால் நிர்ணயிக்கப் பட்டு தற்போது தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம்படிப்புகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில் கடைசியாக நடந்தது. 
வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.

கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.

+2 மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சி: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக,சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு 2,707 பேர் விண்ணப்பித்தனர். இந்த மறுமதிப்பீட்டில் 2,220-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. அதைத் தொடர்ந்து தேர்வுத் துறை சார்பில் தொடர்புடைய ஆசிரியர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது சிலருக்கு மட்டும் மதிப்பெண்களில் மாற்றங்கள் இருக்கும். இந்த முறை ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. இதில் 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. சில மாணவர்களுக்குப் பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாணவர்களுக்கு 80 மதிப்பெண்கள் வரை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்தான் மதிப்பெண்கள் அதிகம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஆசிரியர்கள்விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த விசாரணையில் திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திருத்தப்பட்ட மறுகூட்டல் விடைத்தாள்களில் மதிப்பெண் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது சம்பந்தப்பட்டஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தவறு கண்டறியப்பட்டால், அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு குறைக்கப்படும்' என்றனர்.

அரசுப் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை: அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை.அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில்அதிகமான மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில், 
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, ‘‘தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதனால் பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேராததற்கு என்ன காரணம் என்பதை அரசு கூற வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் பி.பெஞ்சமின்பேசியதாவது:தமிழகத்தில் 24 ஆயிரத்து 103 தொடக்கப் பள்ளிகள், 7 ஆயிரத்து 219 நடுநிலைப் பள்ளிகளில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 995 மாணவர்கள் படித்து வருகின்றனர். தேவை உள்ள இடங்களில் 209 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.கடந்த 5 ஆண்டுகளில் 328 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளி்ல் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப்பட்டதால், கடந்த 2014-15ல் ஆங்கில வழியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 78 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மலைப் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாவலருடன் கூடிய வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இந்த வகையில் 10 ஆயிரத்து 229 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதுதவிர ஆயிரக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எந்த பள்ளியும் மூடப்படவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016

 

முதன்மை கல்வி அலுவலர்கள் (திருவாரூர், கிருஷ்ணகிரி) மற்றும் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் நியமனம்


 

EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:

👉 2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்....
👉 2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்...

👉 2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17  கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின்  தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்.
👉 2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்...
👉 புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்....
👉 தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்
👉 இவை அனைத்து ஆகஸ்ட் 7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்...

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

CPS-அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை -RTI-NEWS


18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

 தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல்: மின்னணு முறையால் குறைந்தது கூட்டம்

வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் ("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

          சட்டசபையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் - கே.ஆர்.ராமசாமி: கிராமங்களில், ஆரம்ப பள்ளிகள் சரியாக செயல்படுவதில்லை. போதிய மாணவர்கள் இல்லாததால், பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவது இல்லை. காரணத்தை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

B.Ed,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின்சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.

சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் காலியாக உள்ள எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர் (பெண்கள் மட்டும்) 13 பணியிடங்கள் மற்றும் சமையல் உதவியாளர் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடி வகுப்பினர் 8- ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 5- ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத படிக்கத் தெரிந்தால் போதுமானது.
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 40 வயது வரையும், பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயது வரையும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் சத்துணவு மையத்துக்கும், குடியிருப்புக்கும் 3 கி.மீ. தூரம் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சமையல் பணியை மேற்கொள்ளும் உடல் தகுதியோடு இருத்தல் அவசியமாகும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் வழங்கப்படும்.
நிறைவு செய்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 8- ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு, மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 22-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மேலும், பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு.முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அன்பாசிரியர் தமிழரசன்- பசுமையை விதைக்கும் சகலகலா வல்லவர்!


தேசிய விளையாட்டு வீரர், கோ கோ, தடகளப் போட்டிகளில் மாநில அளவில் தங்கம் பெற்றவர், கதை, கவிதை, ஓவியக் கலைகளுக்குச் சொந்தக்காரர், பெயிண்ட் அடிக்கத் தெரியும், அடிப்படைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபாடு, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், விவசாயி உள்ளிட்ட பல முகங்களுக்குச் சொந்தக்காரர் இந்த அத்தியாய அன்பாசிரியர் தமிழரசன்.

மத்திய அரசின் இலவச ஆன்லைன் படிப்புகள்!

‘ஸ்வயம்’ எனும் கற்க துடிக்கும் இளம் மாணவர்களுக்கான இணைய வழி கல்வித் திட்டம், கடந்த 2014ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் உதவியுடன் இலவச ஆன்லைன் கல்வி சேவை ஆகஸ்ட்  15ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி 2 பேருக்கு மேல் மியூச்சுவல் டிரான்ஸ்பர் கிடையாது

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளன.

TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...


மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி!!