Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 30 July 2016

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு : ஆக.3ம் தேதி துவக்கம்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு, வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் நாமக்கல் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடக்கிறது.

அதன்படி, 3ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு, 4ம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்ககல்வி அலுவராக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கிறது. 6ம் தேதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல், பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள்), பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஆகியவை நடக்கிறது.

7ம் தேதி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது. 13ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், 14ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்துக்குள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடக்கிறது. 20ம்தேதி பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம், 21ம் தேதி இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம் நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் நடைபெறும் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட தொடக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி தெரிவித்துள்ளார்

தேர்வுநிலை,சிறப்புநிலை , தகுதிகாண்பருவம் குறித்த தகவல்கள்.





தர்மபுரி மாவட்ட பென்னாகரம் ஒன்றியம் இ.நி.ஆஆசிரியர்கள் காலிப் பணியிடம் விவரங்கள்.



மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Assistant

காலியிடங்கள்: 64

தகுதி: +2 தேர்ச்சி + முன்னாள் ராணுவத்தினர், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.09.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + த ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://loksabha.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Joint Recruitment Cell

Room No. 521, Parliament House Annexe,

New Delhi - 110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://164.100.47.132/JRCell/Module/Notice/216Security%20Assistant.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்

பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 
இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரை, பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., ஆகிய படிப்புகளுக்கான, புதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை, ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்ப, சுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. ஆவணங்கள் வந்ததும், கல்லுாரிகளில்ஆய்வு செய்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்

உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:
பல்கலை மானியக்குழு விதிகள்படி பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்காக மாநில அளவிலான தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி.,) நடத்தப்படுகிறது. நான் எம்.பில்., படித்துள்ளேன். 2016 பிப்., 21ல் மாநில தகுதித் தேர்வில் பங்கேற்றேன். ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகவில்லை.தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை கோரி தமிழக உயர்கல்வித்துறை செயலர் மற்றும் மாநில தகுதித் தேர்வு உறுப்பினர் செயலருக்கு, மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதி டி.ராஜா, 'தேர்வு முடிவை, நான்கு வாரங்களில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தொடக்கக்கல்வி - 25.09.2016 குள் அனைத்து 5+ மாணவர்களுக்கும் ஆதார் - கண்காணிக்க NODAL OFFICERS நியமித்து இயக்குனர் உத்தரவு -



டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்' முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் - பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.

இதற்கு, 8,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதன் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 2ம் வாரத்தில் நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், மத்திய அரசால் வழங்கப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்புமாணவர்களுக்கு, 10 மாதம், தலா, 2,500 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு மாதம், 3,000 ரூபாய்வழங்கப்படும். புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கு, இந்த உதவித் தொகையை பெற, மத்திய அரசின் என்.எச்.எப்.டி.சி., இணையதளத்தில்,'ஆன்லைனில்' பதிவு செய்து, அதன் நகலை, புதுடில்லியில் உள்ள நிறுவன அலுவலகத்துக்கு, தபாலில் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விபரங்களை, http://www.nhfdc.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள் வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 'இன்ஸ்பையர் கேம்ப்' என்ற அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான முகாம், ஆகஸ்ட் 25 - ஆக., 29, அக்., 20 - அக்., 24, டிச., 22 - டிச., 26 என மூன்று கட்டங்களாக, சென்னை பல்கலையில் நடத்தப்படவுள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு... : சென்னை பல்கலையின் கிண்டி வளாகத்தில் செயல்படும் புவி அமைப்பியல் துறை சார்பில், இந்த பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், தலா 150 மாணவ, மாணவியரை இந்த முகாமில் பங்கேற்க வைக்கலாம் என, உதவி பேராசிரியர் சுரேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களிலிருந்து

பல்கலை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, பல்கலை வளாகத்தில் தனித்தனியே விடுதிகளில் தங்க வைக்கப்படுவர். அறிவியல் பயிற்சி நடக்கும் ஐந்து நாட்களுக்கும் உணவு, பல்கலையால் இலவச மாக வழங்கப்படும். பயிற்சியின்போது, மாணவர் களுக்கு வழங்கப்படும் அறிவியல் உபகரணங்களும் இலவசம்.

பங்கேற்க தகுதி என்ன? : இந்த பயிற்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில், 94.2 சதவீதம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஏ 1 கிரேடு, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 95 சதவீதம் என மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முகாமில் பங்கேற்கலாம். மாணவ, மாணவியர் மற்றும் கல்வி நிறுவனங்கள், இந்த பயிற்சிக்காக எந்த நிதியும் செலவு செய்ய தேவையில்லை என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

TRB : மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:

பல்கலை மானியக்குழு விதிகள்படி பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்காக மாநில அளவிலான தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி.,) நடத்தப்படுகிறது. நான் எம்.பில்., படித்துள்ளேன். 2016 பிப்., 21ல் மாநில தகுதித் தேர்வில் பங்கேற்றேன். ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகவில்லை.

தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை கோரி தமிழக உயர்கல்வித்துறை செயலர் மற்றும் மாநில தகுதித் தேர்வு உறுப்பினர் செயலருக்கு, மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதி டி.ராஜா, 'தேர்வு முடிவை, நான்கு வாரங்களில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

AUGUST 2016-Diary

🍁2.8.16- Tue, Aadi festival holiday,

🍁 6.8.16- Sat, Grievance day,

🍁12.8.16-Fri- R.L- Varalakshmi Nonbu,

🍁15.8.16- Mon- 70th Independence day -holiday ,

🍁18.8.16- Thurs, R.L, Rig, yazur Upakarma,

🍁19.8.16- Fri- R.L, Gayathri Jebam,

🍁25.8.16- Thurs , Sri Krishna Jayanthi- holiday,

🍁27.8.16-sat, Working day(PRIMARY & MIDDLE SCHOOL)

Elementary education :-

TRANSFER SHEDULE

Application receiving 31.07.2015 to 06.08.2015

1) AEEOs transfer and promotion 08.08.2015 Saturday

2) Middle HM transfer and promotion-16.08.2015 Sunday

3) BTs Deployment – 16.08.2015 Sunday

4) BTs transfer with in Union-16.08.2015 Sunday

5) BTs promotion – 16.08.2015 Sunday

6) BTs transfer union to union -16.08.2015 Sunday

7) Elementary HM transfer – 17.08.2015 Monday

8) Elementary HM promotion – 17.08.2015 Monday

9) SGTs deployment – 17.08.2015 Monday

10) SGTs transfer within Union – 22.08.2015 Saturday

11) SGTs transfer union to union – 22.08.2015 Saturday

12) BTs transfer district to district (Online)-29.08.2015 Saturday

13) SGTs Transfer district to district (Online) – 30.08.2015 Sunday.

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அவர்களது பட்டியல் :

 1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்
2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்
3 எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி தொரப்பாடி, வேலூர்-2 மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்
4 ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  சின்னசேமூர், ஈரோடு மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம் ஈரோடு
5 ஆர்.சண்முகம் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அரிமழம்- 622 201 புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

6 பி.வி.சாவித்ரி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி காசநாடுபுதூர்,  தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவாரூர்
7 இ.மொக்கத்துரை தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி பி.சுப்பலாபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தேனி
8 கே.வீரேஸ்வரன் நாயர் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பொன்மனை, கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகர்கோவில்
9 கே.சங்கரநாராயணன் தலைமையாசிரியர் அரச மேல்நிலைப் பள்ளி ஜாகீர்அம்மாபாளையம் சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்
10 எஸ்.தமிழரசி, தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி,  பட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம்
11 ஆர்.சௌந்தரநாயகி, தலைமையாசிரியை, கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாட்டின்புதூர், தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி

12எஸ்.கற்பகவல்லி, தலைமையாசிரியை  அரசு உயர்நிலைப் பள்ளி புக்கத்துறை, காஞ்சிபுரம் மாவட்டம்மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
13 ஏ.கே.கங்காதரரெட்டி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பழையநாப்பாளையம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
14 ஆர்.லோகநாதன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்
15 கா.பழனிச்சாமி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வெங்கடசமுத்திரம் தர்மபுரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி
16 என்.விசாகமூர்த்தி தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சோளிங்கர், வேலூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் காஞ்சிபுரம்
17 ஜி.லில்லிபுஷ்பராணி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, ஆண்டார்குப்பம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்
18 கே.தேன்மொழி தலைமையாசிரியயை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சிங்காநல்லூர் கோயமுத்தூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோயமுத்தூர்
19 கே.அருளரங்கன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டிப்பாளையம்,  நாமக்கல் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்
20 என்.சரசுவதி தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அஞ்சூர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வாளர் சென்னை-6
21 சி.செல்வராசு தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி புதுப்பாடி, வேலூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி, சேலம் மாவட்டம்
22 எம்.பரிமளம் தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி அனகாபுத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை சென்னை-15
23 இ. செந்தமிழ்ச்செல்வி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி சிவ்வாடா, திருவள்ளூர் மாவட்டம் உதவி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம்,  சென்னை-6
24 ஆர்.எத்திராஜூலு தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அயப்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (வடக்கு), சென்னை-8
25 அ.பாலுமுத்து தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி தேக்கம்பட்டி, தேனி மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்,  தேனி மாவட்டம்
26 ஆர்.எடிசன் தலைமையாசிரியர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரூர், அடையார், சென்னை-90 மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு), சென்னை
27 ஐ.முகம்மது அயூப் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, தென்சிறுவள்ளூர் விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி
28 எஸ்.ஆஷாகிறிஸ்டி எமெரால்ட் தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்பட்டாம்பாக்கம் கடலூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டம்
29 ஏ.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி கோயமுத்தூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி மாவட்டம்
30 கே.தங்கவேல் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  நாழிக்கல்பட்டி, சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்
31 டி.பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி ஓ.சிறுவயல், சிவகங்கை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்
32 எஸ்.முருகேசன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  முடுவார்பட்டி, மதுரை மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் மதுரை

33ஆர்.ஜெயபாண்டி உதவித்திட்ட அலுவலர் (அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தரத்தில்) அனைவருக்கும் கல்வி இயக்கம் திருநெல்வேலிமாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி
34 எம்.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி மாதேயன்குட்டை, சேலம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், கரூர்
35 எஸ்.வளர்மதி தலமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்
36 ஜி.ஜெயராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வினைதீர்த்தநாடார்பட்டி திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மாதேவி திருநெல்வேலி மாவட்டம்
37 எம்.அன்புக்கரசி தலைமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சென்னை-6
38 அ. இராமகிருஷ்ணன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  வி.ராமசாமிபுரம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்
39 எம்.எஸ்.உமா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி இலக்கியம்பட்டி, தர்மபுரி மாவட்டம் மாநகராட்சி கல்வி அலுவலர், கோயமுத்தூர் 
40 மு.வேலம்மாள் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  லட்சுமிபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விருதுநகர்
41 த.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி கோவிலம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்

கல்வி உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் பிரிவைச் சார்ந்த தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை பெறுவதற்கு w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில்  விண்ணப்பிப்பதற்கான (புதியது, புதுப்பித்தல்) காலவரையரை  அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,279 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள்: மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொதுதேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்த பின், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய் துறையிடமிருந்து பெற்ற மதத்துக்கான சான்று, கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மேற்படி  விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து, தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மட்டும் இணைய வழியில் அனுப்புதல் வேண்டும்.

ஆடிப்பூர திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 5–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா வரும் 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு மாதம் 27–ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7-வது சம்பள கமிஷன்: நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் - மத்திய அரசு

புதுடெல்லி,7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும், ஊழியர்களுக்கு நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், உறுப்பினர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவாகும். இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிலுவை தொகை7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். ஊழியர்களுக்கு நிலுவை தொகை ஒரே தவணையாக தரப்படும். ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் நிலுவை தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது