Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 31 July 2016

ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லை.

மாணவர்களிடம் குறைந்து வரும் உடல், மன வலிமைவிளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பது தான் உடற்கல்வியின் பிரதான நோக்கம். வெற்றி, தோல்வியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆனால், படிப்புதான் முதல் நோக்கம். விளையாட்டு, உடற் பயிற்சி என்பதெல்லாம் இரண் டாம் பட்சம்தான் என்று ஆகிவிட்ட நிலையில், அதுகூட மாணவர்களுக்கு பள்ளிகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களை விளையாட விடாததால், அவர்களின் மனநிலை தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விளையாட்டில் தோல் வியைத்தான் முதலில் சந்திப் பார்கள். இந்தத் தோல்வி, மாணவர்களுக்கு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என மன பலத்தை அதிகரிக்க வைக்கிறது. கடந்த காலத்தில் இந்த வகுப்புகளில் விளையாட்டுக்கும், உடற்பயிற் சிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டன.தற்போது மதிப்பெண் கல்விக்கே முக்கியத்துவம் என்ற ஒட்டுமொத்த பெற்றோர், பள்ளிகளின் எதிர் பார்ப்புகள் மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால், விளையாட்டுமைதானங்களும், உடற்பயிற்சி கல்வியும், அத்துடன் மாணவர்களின் மன பலமும் குறைந்து வருவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் 36,956 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 11,462 அரசு உதவி பெறும் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. 8,407 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 1 கோடியே 33 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 5 லட்சத்து 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 3,500 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மொத்த ஆசிரி யர்களைக் கணக்கிடும்போது ஒரு சதவீதம்கூட உடற்கல்வி ஆசி ரியர்கள் இல்லை.மாணவர் விகிதாச்சாரப்படி உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. அரசு நிர்ணயித்துள்ள பணி யிடங்களின்படியே தமிழகத்தில் 435 உடற்கல்வி ஆசிரியர்கள், 43 கிரேடு-2 உடற்கல்வி ஆசிரியர்கள், 39 கிரேடு-1 உடற்கல்வி ஆசி ரியர்கள் பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில்ஏராளமான பள்ளி கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி யிடமே உருவாக்கப்படவில்லை. இருக்கும் ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கு பயன் படுத்துகின்றனர்.மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அள விலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளே தற்போது இப்போட்டிகளில் மாணவர்களை தயார்படுத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கான மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. முன் பெல்லாம் பள்ளி ஆண்டுவிழா காலங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்படும். தற்போது அவை பெயரளவுக்கே நடத்தப்படுகின்றன என்றனர்.

5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான். மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கேற்ப, கல்வித்திட்டங்களும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.


ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் கல்விக்கொள்கை 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். அந்தக் காலத்துக் கல்விக்கொள்கை நிச்சயமாக இந்தக்காலத்துக்கு பொருந்தாது. இப்போது ‘இண்டர்நெட்’ காலத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் பழையகால கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே கல்விச்சக்கரத்தை சுழலவைப்பது ஏற்புடையதல்ல.

எனவே, புதிய கல்விக்கொள்கை அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மத்திய அரசாங்கம் ஓய்வுபெற்ற கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில், ஓய்வுபெற்ற டெல்லி அரசாங்க தலைமை செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மங்கத், ஓய்வுபெற்ற தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் ஜே.சி.ராஜ்புத் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. 

இந்தக்குழு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகே தனது அறிக்கையை மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. கல்விக்கொள்கையை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள்தானே இடம் பெற்றுள்ளனர், அறிவுசால் கல்வியாளர்களையோ, கல்வி நிபுணர்களையோ காணவில்லையே? என்று விமர்சனம் எழுந்துள்ளது. 

இந்த குழுவின் அறிக்கை உடனடியாக அமலுக்கு வந்துவிடப்போவதில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அதன்பிறகே புதிய கல்விக்கொள்கை நாட்டுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்த அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. தற்போது கட்டாய கல்விச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மழலை வகுப்பில் சேரும் ஒரு மாணவனோ, மாணவியோ எப்படி படித்தாலும் 8–வது வகுப்புவரை அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆக்கிவிடுவார்கள். ‘பெயில்’ என்ற வார்த்தையே கிடையாது. எப்படியும் ‘பாஸ்’ ஆகிவிடுவோம் என்ற தைரியத்தில் சிலபல மாணவர்களும் சரிவர படிப்பதில்லை, ஆசிரியர்களும் அக்கறை எடுத்து பல இடங்களில் கல்வி கற்பிப்பதில்லை என்று குறைகூறப்பட்டது.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் 8–வது வகுப்புக்கு பதிலாக, 5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, அதற்குப்பிறகு 6–வது வகுப்பில் இருந்து ‘பாஸ்–பெயில்’ உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து பெயிலானால் அதேவகுப்பில் படிக்கமுடியாது.

அதன்பிறகு மாற்றுக்கல்விதான். மேலும், பள்ளிக்கூட படிப்புகளில் சிறந்து விளங்கும் ஏழை குடும்பங்கள், சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களைச்சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக உதவித் தொகை வழங்க வேண்டும்,

ஆசிரியர் தேர்வுக்காக இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிபோல, இந்திய கல்விப்பணி முறை அமலுக்கு வரவேண்டும், தொடக்க வகுப்புகளில் தாய்மொழி வாயிலாகவே கல்வி இருக்கவேண்டும்,

இப்போதுள்ள கற்பித்தல்–கற்றுக்கொள்ளுதல் முறையில் மாற்றங்கள்வேண்டும், அமைதி, நல்லிணக்கம், வேற்றுமையை மதித்தல், சமத்துவம், உண்மை, தர்மம், அகிம்சை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பதுபோல பல அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்விக்கொள்கை என்பது மிக மிக முக்கியமானதாகும். இதை உருவாக்கும் முன்பு மாநில அரசுகளோடு மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட, கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் என்று கல்வியின் தாக்கம் உள்ள அனைவரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக்கவேண்டும்

மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

 ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி லட்ச தீபதிருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, குறிப்பிட்ட நாளில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும். அவசர தேவைகளை கருத்தில் கொண்டு  மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் போதிய பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்.Revised Mid-HM to Aeeo seniority list

TET - பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழகதலைமைச் செயலகம் செல்லும் TETநிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.

   ஆகஸ்டு 9 ஆம் தேதி TET நிபந்தனை(23/08/2010 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட)ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றிமுழு பணிப்பாதுகாப்பு அறிவிப்பைமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில்வெளியிடுவார் என எதிர்பார்த்து முழுமனதுடன் காத்துக் கொண்டு இருக்கும்சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிஆசிரியக் குடும்பங்கள்.


UGC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை

CLICK HERE...

🍎 ஆசிரியர் மாணவர் - விகிதம் :

🍎தொடக்கப்பள்ளிகளில்  1:25
என்ற விகித்த்திலும்

🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்    

🍊உயர்நிலைப்பள்ளி 1:26
என்ற விகித்த்திலும்

🍑மேல்நிலைப்பள்ளிகளில்1:37
என்ற விகிதத்திலும்

ஆசிரியர் - மாணவர்
விகிதாச்சாரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : Jaya News

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 'இந்த இடமாற்றத்தில் தில்லுமுல்லு இருக்க கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றரை கோடி மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மட்டும், 4.5 லட்சம் ஆசிரியர் பணிபுரிகின்றனர்.ஆகஸ்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்பத்தின்படி, இடமாறுதல் வழங்கப்படும்; இதற்காக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 'இந்த ஆண்டுக்கானகவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடத்தும் முன்,பள்ளிகளில் ஆகஸ்ட் 1ம் தேதிப்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, இந்த விகிதத்தில் கூடுதலாகஉள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறையான பள்ளிகளுக்கு மாற்றுவர். இந்த கணக்கீட்டில், ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தான் நடக்கின்றன. ஆனால், பணி நிரவலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, கல்வித்துறை அக்கறை காட்டுவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், அடுத்தடுத்தஆண்டுகளில், மீண்டும் பணிநிரவல் நடக்கிறது.

ஓராண்டில் அதிக ஆசிரியர்களின் இடங்கள் சரிசெய்யப்பட்டால், மீண்டும் எப்படி அதிக ஆசிரியர்கள் இருக்க முடியும் என்பது கல்வித்துறைக்கே பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. ஆண்டுதோறும் அதிக ஆசிரியர்கள்இருப்பதாக கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதாகவே தெரிகிறது. இதையும் கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு மட்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2,000 ஆசிரியர்; தொடக்க பள்ளிகளில், 3,000ஆசிரியர் கூடுதலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லுமுல்லு :

அதேநேரம், பணி நிரவலில் பல தில்லுமுல்லுகளும் நடப்பதாக தெரிய வந்துள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்கள் என்றால், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், விகிதப்படி அதிக ஆசிரியர்கள் இருந்தாலும், பணிநிரவல் செய்வதில்லை. மேலும், பணி நிரவலில் முக்கிய பணியிடங்களை மறைத்து, சிபாரிசுப்படி, பணிமாறுதல் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.பணி நிரவல் நடவடிக்கையில் காலியாக உள்ள இடங்களை, மாவட்டவாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பணி நிரவலை மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம்நடத்த வேண்டும். பணி முடிந்த பின், வேண்டப்பட்டஆசிரியர்களுக்கு மட்டும் விதிகளை தளர்த்தி இடமாறுதல் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

பேட்ரிக் ரைமண்ட், பொதுச்செயலர், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை பதிவேடுட்டை சரிசெய்யும் காலக்கெடு நீட்டிப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் உள்ள தகவல் தொகுப்பை, தற்போதைய நிலைக்கு சரி செய்து, அதனுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, ஜன., 18ம் தேதி துவக்கப்பட்டது.
இப்பணியில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மொபைல் எண் போன்ற விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது. இப்பணியை பிப்., 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. பணி நிறைவு பெறாததால், ஜூலை, 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்னும் பணி நிறைவு பெறாததால், ஆக., 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் பிரச்னைக்கு 'மொபைல் ஆப்' வசதி: செயலுக்கு வருவது எப்போது?

மின் பிரச்னைக்கு, மொபைல் போன் மூலம் தீர்வு காண, 'மொபைல் ஆப்' செயலியை, மின் வாரியம், விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கும், மின் தடை, கூடுதல் கட்டணம் குறித்து புகார் செய்யவும், மின் வாரிய பிரிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
அங்குள்ள ஊழியர்கள், 'ஆதாயம்' எதிர்பார்த்து, அவர்களை அலைக்கழிப்பு செய்கின்றனர்.மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தில், அனைத்து அரசு சேவைகளையும், கணினிமயமாக்க முடிவு செய்து உள்ளது. இதன் மூலம், மக்கள், இணையதளம் வழியாக, எளிய முறையில், உடனுக்குடன் அரசு சேவைகளை பெற முடியும். இதையடுத்து, 'மொபைல் ஆப்' மூலம், மின் வினியோகம் தொடர்பானபுகார்களுக்கு தீர்வு காணுமாறு, மத்திய அரசு, மாநில மின் வாரியங்களை அறிவுறுத்தியது. அதன்படி, மாநில மின் வாரியங்கள், மின் தடை, மின் கட்டணம் செலுத்துதல், தினசரிமின் உற்பத்தி ஆகிய விவரங்களை உள்ளடக்கிய, 'மொபைல் ஆப்' செயலியை அறிமுகம் செய்ய வேண்டும். அதை, மின் நுகர்வோர், தங்கள் போனில், அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம், மொபைல் போன் மூலமாகவே, மின் வாரிய சேவைகளை பெறலாம். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தாமல், மின் வாரியம் காலதாமதம் செய்து வருகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதளத்தில், மின் கட்டணம் செலுத்தும் திட்டம் உள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறும் திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. மின் தடை புகார் பெற, தனி தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. நிதி மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, புதிய திட்டங்களை செயல்படுத்த தாமதம் ஆகிறது. எனினும், மொபைல் ஆப் வசதி, விரைவாக அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

MBA, படிப்பு: நுழைவு தேர்வு கோரி வழக்கு

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும்படி, 10 பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த, சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்க தலைவர் கலீல் தாக்கல் செய்த மனு: 
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளைப் பொறுத்தவரை, அண்ணா பல்கலை மட்டுமே, நுழைவுத் தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கிறது. சென்னை பல்கலை, வேலுார் - திருவள்ளுவர், காரைக்குடி - அழகப்பா, மதுரை - காமராஜ் உட்பட, 10 பல்கலைகளின் கீழ் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், நுழைவுத் தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் இல்லாமல், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். நுழைவுத் தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் மட்டுமே, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரி களுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைகள் உத்தரவிட வேண்டும்.நுழைவுத் தேர்வு நடத்துமாறு கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, அந்த பல்கலைகள் மற்றும் மாணவர் கள் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி சத்தியநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது. மனு குறித்து, மாணவர்கள் சேர்க்கை குழுவிடம் விளக்கம் பெறும்படி,கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்திக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 14க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

VIJAY TV : வார்த்தை விளையாட்டில்... காலிறுதியில் கால் பதிக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று  மாலை  6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன். 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

பிளஸ் 2 பாடங்களின் முக்கிய அம்சங்களை தொகுத்து, மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற உதவி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்களின் பெற்றோருக்கு, மொபைல் போன் வாயிலாக, பாடத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்தார். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். 

தன் மொபைல்போன் எண்ணை, மாணவர்களுக்கு வழங்கும் இவர், மாணவர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்கிறார். பின், அந்த குரூப் மாணவர்கள், தங்களது சந்தேகத்தை கேட்டால், வாட்ஸ் ஆப்பில் பதிலளிக்கிறார். மேலும், தாவரவியல் மற்றும் உயிரியலில் உள்ள முக்கிய பாடங்களை, தன்னுடன் பணியாற்றும் உயிரியல் ஆசிரியர் இளங்கோவுடன் இணைந்து, சிறிய தொகுப்பாக தயாரித்துள்ளார். இந்த தொகுப்பை, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் இலவசமாக வழங்கி, மாணவர்கள் மதிப்பெண் பெற வழிகாட்டுகிறார்.

தன் சேவை குறித்து, ஆசிரியர் ஆர்.சவுந்தரபாண்டியன் கூறியதாவது: 

பாடங்களில் முக்கிய அம்சங்களை, தனியாக பிரித்து கொடுக்கும்போது, அதை மாணவர்கள் எளிதாக படிப்பர். நான் தயாரித்த தொகுப்புகள், மாணவர்களுக்கு பயன்பட்டதால், அதை இலவசமாகவே வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கிறேன். பள்ளி வேலை நேரத்தில், என் வகுப்பில் மட்டுமே பாடம் எடுப்பேன். மற்ற நேரங்களில்தான், சமூக வலைதளங்களில் பதிலளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.