Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 1 August 2016

01.04.2003க்கு பிறகு அரசு பணிக்கு வந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல் பழைய பென்சன் திட்டம் தொடர அரசு அமைத்துள்ள ஆய்வு குழுவின் தொடக்க உத்தரவு

தொடக்கக்கல்வி - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் "சிறப்பு பரிசளிப்பு திட்டம்"- மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/- நடுநிலைப் பள்ளிக்கு ரூ.12,500/- நிதி அனுமதித்து உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.

7th Pay commission pay and arrears calculator - Excel Download

7th Pay commission pay and arrears calculator :Download

NEW REVISED MIDDLE HM TO AEEO PANEL AFTER DELETING 33 HM's AND ADDING 8 HM's







தொடக்கக்கல்வி - AEEO PANEL - இல் 33 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயர்களை நீக்கி இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

அகஇ - 15.08.2016 அன்று கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


சுட்டி விகடனில் "ஆப்ஸில் அசத்தும் அரசுப்பள்ளிகள்" என்ற தலைப்பில் எங்கள் பள்ளி சின்னாரம்பட்டி மாணவர்கள்.




கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN

கல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலிமையை உணர்த்தும்.

INSPIRE AWARD 2016 - 2017 : சென்னை பல்கலைக்கழகத்தில் விருப்பமுள்ள பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி

TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொடக்கக்கல்வி - AEEO PANEL - இல் 33 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயர்களை நீக்கி இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்



சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றம்:சட்டப்பேரவையில் தீர்மானம், நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி, சட்டப்பேரவையில், முதலமைச்சர்ஜெயலலிதா கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சத்துணவு மையங்களில் 186 பணி: 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 31 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் 155 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் மூன்றில் ஒருவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை: ஆய்வில் அதிர்ச்சி.

தமிழகத்தில் பொறியியல் படிப்பின் தரம் குறித்த ஆய்வில், மூன்றில் ஒரு மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதும், அரியர் தேர்வுகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

பொதுத்தேர்வில் 'ரேங்க்': அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.

புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்குஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்புக்கு விண்ணப்பம்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மற்றும்மதுரை, திருச்சி, கோவை, திரு நெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்புகள் (எல்எல்எம் ) உள்ளன. இதில் நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) சேர இன்று(திங்கள்கிழமை) முதல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன.

தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!

திருச்சி :தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போலவேலை வாங்கிவருகின்றனர்.

எட்டு மாநில இன்ஜி., கல்லூரிகளில் 9,000 போலி பேராசிரியர்கள் தில்லுமுல்லு: தமிழகத்தில் 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரிக்கை-


எட்டு மாநிலங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாககண்டறியப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில், 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

பல்கலை அதிகாரிகள், இணைப்பு அந்தஸ்து வழங்கும் முன் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, நுாலகம் மற்றும் ஆய்வகம் வசதி, பேராசிரி யர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி, 
உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வர்.

இதன்படி, மாநிலங்களில் உள்ள பல்கலை களும், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகளும் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில், 9,060 போலி பேராசிரி யர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

இந்த எட்டு மாநிலங்களிலும், 7,155 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவற்றில் பணியாற்றுவோர் என, 5.16 லட்சம் பேராசிரியர்களின் பெயர்கள், ஏ.ஐ.சிடி.இ., யிடம் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், 9,060 பேர், போலியாக பதிவு செய்யப்பட்ட பேராசிரியர்கள்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிரா வில், 2,452 போலி பேராசிரியர்கள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில், 2,184; ஆந்திராவில், 1,040; தெலுங்கானா, 950; ஒடிசா, 809; குஜராத், 742 மற்றும் கர்நாடகாவில், 363 போலி பேராசிரி யர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், கடந்த கல்வி யாண்டில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலியாக இடம்பெற்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அறிக்கை, மத்திய அரசால் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு,ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்கும்படி எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: இன்ஜி னியரிங் கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பல கல்லுாரிகள், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றளவில், குறைவாகவே நியமித்துள்ளன. பல கல்லுாரி களில், பேராசிரியர்கள் தகுதித்தேர்வான, 'நெட், செட்' போன்றவற்றில் தேர்ச்சி பெறாமலும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்காமலும் உள்ளதாக புகார்கள் வருகின்றன.

அதேநேரம், அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தில், தங்கள் கல்லுாரியில் பணி யாற்றாத பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, உரிய அங்கீகாரம் பெற்று விடுகின் றனர்.

நடப்பு கல்வியாண்டில், போலி பேராசிரி யர்களுக்கு இடம் அளிக்காமல், தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தால் மட்டுமே அங்கீகாரம் என, திட்டவட்டமாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்

துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலையின் சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் மாவட்டங்களில் உள்ள பல்கலையின், 13 உறுப்பு இன்ஜி., கல்லுாரிகள், இன்று திறக்கப்பட உள்ளன.

புதிய மாணவர்களுக்கு, பல்கலையின் மூத்த மாணவர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். 'ராகிங், ஈவ்-டீசிங்' போன்ற பிரச்னைகளை தடுக்க, சீனியர், ஜூனியர் மாணவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுக்கள், பேராசிரியர்கள் தலைமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அண்ணா பல்கலையின் கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம். தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களே எடுக்கப்பட்டுள்ளது. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 1 கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்கள் தெரியவில்லை.

இன்ஜினியரிங்கை பொறுத்தவரை, முதலாம் ஆண்டில் பெரும்பாலும் பிளஸ் 1 பாடங்களே அதிக அளவில் வரும். முதல் செமஸ்டரில் இடம் பெறும் பல பாடங்கள், பிளஸ் 1 சார்ந்தவை. எனவே, ஒரு வாரத்திற்கு புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த உள்ளோம். அதன்பின், பிளஸ் 2 பாடங்கள் ரிவிஷன் செய்யப்பட்டு, இன்ஜி., பாடங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆகஸ்ட் 2... எந்தெந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஆகஸ்ட் 2...
எந்தெந்த  மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை தெரியுமா?

👉🏼கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை

👉🏼காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

👉🏼கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

👉🏼இதே போன்று ஆகஸ்ட் 5 ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

👉🏼 கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 2ம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை

👉🏼 மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பொருந்தாது
இவ்விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று (சனிக்கிழமை) இம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறையான 2ம் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

Aeeo வாக ஏற்கனவே பணி புரிந்த ஒன்றியத்தில் மீண்டும் பணிபுரிய மாறுதல் பெறலாம் என்பதற்கான இயக்குனர் செயல் முறைகள்

தொடக்கக்கல்வி - மாநகராட்சி பள்ளிகள் - அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு தடையின்மை சான்று பெற நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding

உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான  தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல்.
புதுக்கோட்டை,ஜுலை31-

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டுப்பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற5ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.என்று புதுக்கோட்டை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும்இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுபயிற்சி நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரைபுதுக்கோட்டை லேணாவிலக்கு மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும்தொழில்நுட்பக்கல்லூரியில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெறஇருக்கிறது. பயிற்சியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தொடங்கிவைக்கிறார். இப்பயிற்சியில் முதன்மை பயிற்சியாளராக சென்னை உளவியல் நிபுணா்விஜயலட்சுமி மற்றும் பயிற்சியாளா்களாக வெளிமாவட்டங்களைசோ்ந்த கனவுஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன், புதியாச்சலம்,முனிராமையா,தென்கரைமுத்துப்பிள்ளை, நிர்மல்குமார் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டுதலைமையாசிரியா்களுக்கு தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சியினை வழங்க உள்ளனா்.

மேலும் பயிற்சியில் கருத்தாளா்களாக தலைமையாசிரியா்கள் ஜெயந்தி, சேகா், லட்சுமிஆகியோரும் செயல்பட உள்ளனா். இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சோ்ந்த 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்கஉள்ளனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்செ.சாந்தி அவா்களின் வழிகாட்டலின்பேரில் அனைவருக்கும்இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா்ஜே.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பன்னீா்செல்வன்,ராஜா ஆகியோர் செய்துவருகிறார்கள்.

NHIS - CONTACT NUMBERS...

அரசு ஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு.

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri# 3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai# 46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur# Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem# No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli# 4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram# 9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!

மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?

டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.





கூகுள்-ஸியோமி கைகோர்ப்பு

சாம்சங் நிறுவனம் ஓக்குலஸுடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அதே போல், லெனோவோ நிறுவனம், ANT நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் தொழில்நுட்பக் கண்ணாடிகளை வழங்குகிறது. இந்நிலையில் மெ.நி கருவிகள் உருவாக்கத்தில், சீனாவின் ஸியோமி நிறுவனம் கூகுளுடன் கைகோர்த்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில், ஆரம்பித்த ஷியோமியின் வளர்ச்சி, ஸ்மார்ட் ரைஸ் குக்கர், ஏர் ப்யூரிஃபயர் என வேறு தளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டின் கூகுள் டெவலப்பர், மாநாட்டில் ஸியோமியின் தலை தென்பட்டதிலிருந்து, நிச்சயம் ஸியோமி கூகுளுடன் இணைந்து சில கருவிகளை வெளியிடும், என்ற யூகம் பரவி வந்தது..

முக்கிய அம்சங்கள்

வரவிருக்கும் ஸியோமி மெ.நி ஹெட்செட்,  கூகுளின் முந்தைய வெளியீடுகள் போலல்லாமல்  மிகச்சிறந்த உணர்வுபூர்வ அனுபவத்தை ஆன்ட்ராய்டு போன்களின் வழியே அளிக்கக்கூடியது. இக்கருவியுடன் தூண்டில் அல்லது ஸ்டீரிங் (steering) வடிவ இயக்க உணர்வு (motion sensor) ரிமோட் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. கூகுள் ஆண்ட்ராய்டு, இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான நௌகட்(nougat)-ஐ கொண்ட போன்களிலும் செயல்படும் வகையில் தயாராகி இருக்கிறது, இந்த ஹெட்செட்.

இந்த ஹெட்செட் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் மற்ற ஸியோமி தயாரிப்புகளைப் போலவே குறைந்த விலை கொண்டிருக்கும் என்று நம்பலாம். அதற்கு ஏற்றார் போல், ஷியோமி நிறுவனம், புதுரக மொபைல் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- ரா.கலைச்செல்வன்
(மாணவப் பத்திரிகையாளர்)

G.O. D. No. 142 Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


CLICK HERE....