Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 3 August 2016

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2016–2017–ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறwww.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 11 மற்றும் 12–ம் வகுப்பு படிப்பவர்கள் ஆகஸ்டு மாதம் 30–ந் தேதிக்குள்ளும், மற்ற படிப்புகளுக்கு அக்டோபர் மாதம் 30–ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.தகுதிகள்

தமிழ்நாட்டிற்கு 18,989 மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உதவித்தொகை பெறுவதற்கு மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து, சான்றுகளை பதிவேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்று, வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்ட மதத்திற்கான சான்று மற்றும் வருமான சான்றிதழ் அல்லது சுயசான்று ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31–10–2016–க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இணையதளம் மூலம்

கல்வி உதவித்தொகை மாணவ– மாணவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். எனவே சரியான வங்கி கணக்கு மற்றும் வங்கி குறியீடு எண் விவரங்களை சரியாக குறிப்பிடவேண்டும். வங்கி விவரங்களை தவறாக அளித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மாணவ– மாணவிகளால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை 31–10–2016–க்குள் இணையதளம் மூலம் அனுப்பவேண்டும்

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல் பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஜூலை, 25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க, ஆக., 5 கடைசி நாள். இதுவரை, 6,000 விண்ணப்பங்களுக்கு மேல், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்துள்ளன. இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என, www.tnhealth.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்

SG/MG பெறும் வங்கி கணக்கை, VEC கணக்கிலிருந்து பள்ளி மேலாண்மை குழு கணக்காக பெயர்மாற்றம் செய்திட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி..?

உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.

காப்பி அடிக்க உதவி செய்தஆசிரியர்களிடம் தேர்வுகள் இயக்ககம் விசாரணை

கடந்த மார்ச் மாதம் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடாக செயல்பட்ட 50 ஆசிரியர்களிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் 209குருப் "சி" பணியிடங்கள்.

மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் நிரப்பப்பட உள்ள 209குருப் "சி" பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இயக்க குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி


நாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகள் மட்டுமே, சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். மூளை பக்கவாதம், தசை சிதைவு நோய் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இயக்கக் குறை பாடுள்ள குழந்தைகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்மற்றும் தனியார் பள்ளி களில், அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதியுமின்றி கல்வி கற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை சுவாரஸ்யமாக படிக்க உதவும் புதுமையான டிவிடி: 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க முடிவு


எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் போர்டு’ கொண்டுஅசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெ.செந்தில் செல்வன்

'ஸ்மார்ட் போர்டு’ கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதிக்க முடியும்* என்பதற்கு இன்னொரு உதாரணம்.

*ஜெ.செந்தில் செல்வன்.*

சிவகங்கை மாவட்டம் மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் இவர். இப்போது, பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடும் கதாநாயகன் இவர்தான்.

தகவல் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி இவர் கணிதம் கற்பிக்கும் முறையைப் பார்த்து சக ஆசிரியர்களே வியந்து நிற்கிறார்கள்.

க்ளிக் செய்தால் போதும்.

10-ம் வகுப்பு மாணவர்களின் கணக்குப் பாடம் முழுவதையும் தனது ‘லேப்டாப்’பில் வலைத்தளச் சரக்காக அடைத்து வைத்திருக்கிறார். www.tnkanitham.inஎன்ற இவரது ‘பிளாக் ஸ்பாட்’ பக்கத்தைப் புரட்டினாலே எந்த மாணவரும் ஆசிரியர் துணை இல்லாமலேயே கணிதத்தைக் கற்றுக்கொள்ளலாம். 10-ம் வகுப்பு கணிதத்தில் மொத்தம் இருப்பது 208 ஒரு மதிப்பெண் வினாக்கள். பொதுத்தேர்வில் இதிலிருந்துதான் ஏதாவது பதினைந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த 208 கேள்விகளில் ஒவ்வொன்றுக்கும் தலா நான்கு பதில்களை வலைப் பதிவாக வைத்திருக்கிறார் செந்தில் செல்வன். மாணவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று 208 கேள்விகளுக்கும் விடையளிக்கலாம். நான்கு விடைகளில் சரியான விடையை ‘க்ளிக்’ செய்தால் தான் அடுத்த கேள்விக்குப் போக முடியும். அதே சமயம், நான்கு விடைகளில் எதை முதலில் ‘க்ளிக்’ செய்கிறோமோ அதுதான் அந்தக் கேள்விக்கு மாணவர் அளித்த பதிலாக எடுத்துக் கொள்ளப்படும். அது சரியான விடையாக இருந்தால் ஒரு மதிப்பெண் கணக்கிடப்படும். அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து முடிந்த பிறகு, எத்தனை கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்திருக்கிறோம் என்ற விவரம் ‘எக்ஸ்ஸெல் ஷீட்’ வடிவில் கிடைத்துவிடும்.

ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போர்டு

ஒரு மதிப்பெண் கேள்விகள் மாத்திரமல்ல. பத்தாம் வகுப்பு கணிதத்தின் அத்தனை கேள்விகளுக்கும், ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்வற்றுக்கான வழிமுறை விளக்கங்களையும் அழகாக எளிய முறையில் ‘பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்’ வடிவில் வடிவமைத்திருக்கிறார் செந்தில் செல்வன். எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் இவர் உருவாக்கியிருக்கும் ‘ஸ்மார்ட் போர்டு’ மாணவர்களை மாத்திரமல்ல கல்வித்துறை அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் கூட அசர வைத்திருக்கிறது.

ஒரு புரஜெக்டர் மட்டும் இருந்தால் போதும் ஆயிரம் ரூபாயில் இந்த ‘ஸ்மார்ட் போர்டை’ உருவாக்கிட முடியும். கணினி மவுஸ் இல்லாமல் கைவிரல்களையே மவுஸாகக் கொண்டு ‘ஸ்மார்ட் போர்டில்’ விருப்பம்போல் விளையாடவும் முடியும். கேள்விகளுக்கு மாணவர்கள் எப்படிப் பதிலளிக்க வேண்டும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி எப்படிக் கணிதப் பாடங்களை நடத்துவது என்கிற ஆசிரியர்களுக்கான செயல்விளக்கம் உள்ளிட்டவற்றையும் தனது ‘பிளாக் ஸ்பாட்’ பக்கத்தில் ஒளி - ஒலி வடிவில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார் செந்தில் செல்வன்.

“எப்படியாவது மாணவர்களைக் கணிதத்தில் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் எடுக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மாதிரி எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் முறையை உருவாக்கினேன். மாணவர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று அனைத்தையும் கையடக்கத்துக்குள் கொண்டுவந்துவிட்டேன். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்கள் கணிதத்தில் 50 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுப்பதே இல்லை” மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் செந்தில் செல்வன்.

தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்பித்தலில் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டெல்லியிலுள்ள என்.சி.இ.ஆர்.டி. ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து செந்தில் செல்வனும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

தொடர்புக்கு: 90473 14866

Source:The Hindu tamil.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில, மாவட்ட அளவிலும், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று, 'ரேங்க்'களை பெறுகின்றனர்.

ஆனால், இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ, மாணவியர் உட்பட, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர், பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது.

குறிப்பாக, கணிதம் மற்றும் உயிரியலில், மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாக, பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர், அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால், பிளஸ் 1ல் திணறுகின்றனர். இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்ட, அதிகாரிகள் உத்தரவிடுவதால், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். மேலும், விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால், ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல், திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை, ஆசிரியர்கள், வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும்' என்றனர்.

வங்கியில் 'ஸ்காலர்ஷிப்' செப்., 1 முதல் அமல்

அனைத்து மாணவர்களுக்கும், நேரடியாக கல்வி உதவித்தொகை வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும், அதை பின்பற்ற உள்ளன. அதற்காக, அனைத்து மாணவர்களின், 'ஆதார்' எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விரிவான சுற்றறிக்கை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஆகியவற்றால் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில், 'செப்டம்பர், 1ம் தேதி முதல், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை, அந்தந்த மாணவர்களே, நேரடியாக வங்கியில் தான் பெற முடியும். எனவே, உதவித்தொகை பெறும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று, அதை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சி.ஏ., இடைநிலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

ஆடிட்டர் பணிக்கான சி.ஏ., இடைநிலை தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. சி.ஏ., படிப்பில், முதல் கட்டமாக சி.பி.டி., எனப்படும், பொது தகுதி தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால், ஐ.பி.சி., என்ற இடைநிலை தேர்வை எழுத வேண் டும். இதையடுத்து, இறுதி கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டு ஆண்டு கள பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் நிலையில், மே மாதம் நடந்த இடைநிலை தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஐ., என்ற இந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் தலைவர் தேவராஜ ரெட்டி நேற்று வெளியிட்டார். தேர்வு முடிவுகள், ஐ.சி.ஏ.ஐ., இணையதளத்தில் வெளியாகின. மேலும், தேர்வர்களின் இ - மெயில் மற்றும் மொபைல் போன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு பாடங்களுக்கு, 1.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இதில், 10 ஆயிரம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும், 47 ஆயிரத்து, 979 பேர் பங்கேற்று, 8,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பாடங்களிலும், 2,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி, 4.78 சதவீதம். இந்த தேர்வில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த, தனிஷ்க் ஸ்ரீகாந்த் காலே என்ற மாணவர், அகில இந்திய அளவில் முதலிடம்; இந்துார் மாணவி சலோனி ஜிண்டால் இரண்டாம் இடம்; பவிஷ்ய அமிசகட்டா, மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். 

தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஜூலை, 25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க, ஆக., 5 கடைசி நாள். இதுவரை, 6,000 விண்ணப்பங்களுக்கு மேல், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்துள்ளன. இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என, www.tnhealth.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.