Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 17 August 2016

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)-பதவிஉயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தோர் பெயர் பட்டியல்.

அரசு நகராட்சி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்/சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)-பதவிஉயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தோர் பெயர் பட்டியல் click here ...

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கில மொழிப் பயிற்சி வரும் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்க வுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. 
பயிற்சியில் சேருபவர்களின் தற் போதைய மொழித் திறனை அறிந்து பயிற்சி அளிக்க ஏதுவாக தகுதி நிலை சோதனை நடத்தி அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். தொடக்க காலத்தில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி மற்றும் விரும்பிய நேரம் கிடைக்கும்.பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சிஆகியவற்றில் 16 வய துக்கு மேற்பட்டோர் சேரலாம். அதேபோல குழந்தை களுக்கான பயிற்சியும் தொடங் கப்பட்டுள்ளது. இளம் சாதனையாளர்கள் பயிற்சி 7 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும், பேசுதல் மற்றும் சரியாக எழுதும் பயிற்சி 11 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 01204569000/ 01206684353 ஆகிய எண்களிலோ, winya.suzanna@in.britishcouncil.org என்ற இ-மெயில் மூலமே தொடர்பு கொள்ளலாம். Engish என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: 2 கட்டமாக நடந்த தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகின்றன. 
இதர 85 சதவீத இடங்கள், அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதே போல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட் டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலமா கவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கல்லூரி நிர்வாகங்கள் மூலமாகவும் நிரப்பப்பட்டன.ஆண்டுதோறும் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை (AIPMT) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்தது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. தமிழகத்தில் இருந்து 26 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 6.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இந்த சூழலில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத்தேர்வு மூலமாகவே நிரப்பப்பட வேண்டும். மே 1-ம் தேதி நடக்கும் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக கணக்கில் கொள்ள வேண்டும்.

 ஜூலை24-ம் தேதி 2-வது கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதல்கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காத வர்கள் 2-ம்கட்ட தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்’’ என்று தெரிவித்தது.இதன்படி, சிபிஎஸ்இ கடந்த மே 1-ம் தேதி நடத்திய முதல்கட்டதேசிய தகுதித் தேர்வை நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 26,000 பேரில் 22,750 பேர் தேர்வு எழுதினர். 2-ம்கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 4.75 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 14,500 பேரில் 13,500 பேர் தேர்வு எழுதினர்.

இணையதளத்தில் அறியலாம்.

இந்நிலையில், 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. www.aipmt.nic.in மற்றும் www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். வரிசை எண், பிறந்த தேதியைபதிவு செய்து, தேர்வு முடிவுகளுடன், தரவரிசைப் பட்டியலையும் பார்க்க முடியும். ஆன்லைன் மூலமாகவும், நேரடி யாகவும் அடுத்த வாரம் கலந் தாய்வை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது.

எத்தனை இடங்கள்?

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 397 எம்பிபிஎஸ் இடங்கள், 6 தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 760 எம்பிபிஎஸ் இடங்கள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 30 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 பிடிஎஸ் இடங்கள், 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துக் கல்லூரிகளில் 640 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை: கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்படுமா? - 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா? என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு அப் போதைய திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் கணினி அறிவியல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டது. தனியார் பள்ளி களுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு கணினி கல்வி அளிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மாக வழங்குவதற்காக கணிப் பொறி இயல் பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது. இதனால், அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங் கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர்களை நியமிக்கும் அவசியமும் அரசுக்கு ஏற்படவில்லை. இந்நிலையில் சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிஎட் முடித்த கணினி பட்டதாரிகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பிஎட் முடித்துவிட்டு 39 ஆயிரம் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரிகளும், பிசிஏ பட்டதாரிகளும், பிஎஸ்சி (ஐ.டி.) பட்டதாரிகளும் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களில் 39,440 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலை யில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் உ.ராமச் சந்திரன், மாநிலச் செயலாளர் வெ.குமரேசன் ஆகியோர்கூறியதாவது:இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களை அவர் களுக்கு வழங்க வேண்டும். தற்போது அந்த புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி பாடநூல் கழக குடோன்களிலும், கல்வித் துறை அதிகாரிகளின் அலுவல கங்களிலும் கிடக்கின்றன.அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் கணினி பயிற்றுனர் பதவியில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த 2006-க்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு தொடங் கப்படவில்லை. எனவே, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தொடங்கி தேவை யான கணினி பயிற்றுனர்களை நியமிக்க வேண்டும்.பிஎட் முடித்த கணினி பட்டதாரிகளாகிய நாங்கள் 39 ஆயிரத்துக்கு மேல் இருக்கி றோம். எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களும் கணினி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காககவும் இதை வலியுறுத்துகிறோம்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-டாப்களை சரியாக கையாளவும், பயன் பாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் கணினி ஆசிரியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். பிஎட் முடித்த கணினி பட்டதாரிகள், ஆசிரியர் தகுதித்தேர்வையோ, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிதேர்வையோ, மாவட்ட கல்வி அதிகாரி தேர்வையோ எழுத முடியாது.எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கணினி ஆசிரியர் பணிதான். எனவே, எங்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன்பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 
இத்தேர்வை 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 21-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன.இந்தநிலையில், அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஆகஸ்டு 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங் கள் இன்று (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப் படுகின்றன. விண்ணப்பப் படிவத் தின் விலை ரூ.100. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பொறியியல் பாட உதவி பேராசிரியர் பணிக்கு எம்இ., எம்டெக் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். இளங்கலை அல்லது முதுகலைஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

தேசிய இளைஞர் விருதுக்கு 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய இளைஞர் விருதுக்கு இளைஞர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜேந்திரகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில், சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்யும் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. 25 இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்படுகின்றன. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும்.1-4-2015 முதல் 31-3-2016 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவுக்கான விருதுக்கு வயது 15 முதல் 29-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டாற்றியிருக்க வேண்டும்.ஏற்கெனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. தொண்டு நிறுவன பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதுக்கு, தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு ஆற்றியிருக்கக் கூடாது.

குறிப்பிட்ட சாதி, மதம் அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க இயலாது.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்திசெய்து வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 27 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாடவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி ஆகஸ்டு 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்துக்கு தலா 3 பேர் வீதமும், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 2 பாடங்களுக்கும் சேர்த்து 3 பேர் என்ற வீதமும் கலந்துகொள்வர். முதன்மை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பின்னர் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு 27 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open- Last date -30.09.2016


CLICK HERE-TO APPLY-INSPIRE AWARD...

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவப் பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமேஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை படிக்க முடியும்.2016 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 1, ஜூலை 24ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் 11 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள்வெ ளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் படி 4,09,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.cbseresults.nic.in, www.results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3 முதல், கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. 
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை என, தனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், எட்டாம்வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது.அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும். மாறாக, புதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

கணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன.இதுகுறித்து, கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது; தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைப்படி, வினாத்தாள் மாற்றப்பட்டு உள்ளது.அதன்படி வரும், 2017ல், பிளஸ் 2 கணித தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. எளிமையான வினாக்கள், 20 சதவீதம்; சராசரி வினாக்கள், 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு, கடின வினாக்கள், 20 சதவீதம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு


ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு
        உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

           கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள் ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங் மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:
அரசாணைப்படி முதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். ஆனால் சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமே சமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு !

கரூர்மாவட்டத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள்!

*_Karur DT DEE- SGT Asst Vacant for Dis to Dis Tfr_*

*K.R.Puram:*
1.Alamarathupatti
2.Veppankudi
3.Ayyanur
4.kuppakkipalayam
5.Ottapatti
6.Varakur

7.Tharapurathanur
8.Kanakupillaiyur
9.Pothuravuthanpati

👉 *Kadavur:*
1.D.Idaiyapati
2.Alathur
3.Pusaripati
4.Poonsolaipati
5.Chinnadevanpati
6.Thalumakoundanur
7.K.Ayyampalayam

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம் இ.நி.ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்.*

1.தாண்டம் பாளையம்,
2.ஆலத்துக்கோம்பை.3.சிக்கரசம்பாளையம் (4பணியிடங்கள்)
4.தாசரிபாளையம்.
5.கணபதி நகர்.
6.வேடர்நகர்.
7.இக்கரைநெகமம்புதூர்.

8.கெம்ப நாயக்கன்பாளையம்.
9.ராமபையலூர்.
10.கஸ்தூரி நகர்.
11.கக்கராக்குட்டை.
12.காட்டூர்.
13.காமராஜபுரம்.
14.நடுப்பாளையம்.
15.பண்ணாரி.
16.கேத்தம்பாளையம்.
17.நஞ்சப்ப கவுண்டன்புதூர்.

அனைத்து பணியிடங்களும் சமவெளி பள்ளியில் மட்டுமே. ஆனால் அடுத்த ஆண்டில் மலைசுழற்சி மாறுதலில் மலைப்பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றிய இ.நி.ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் .*

தேவர்நத்தம்,
செலுமித்தொட்டி,
வைத்தியநாத புரம்
கோட்டமாளம்..2
காடு பசுவன்மாளம்...2
சுஜில்கரை...2
கேர்மாளம்
JRS புரம்
பாரதிபுரம்
பாலப்படுகை
குன்னன்புரம் &
கன்னட மீடியத்தில் உள்ள தமிழ் SG பணியிடங்கள் சேர்த்து 40 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. ...