Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 18 August 2016

அகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29.08.2016 & 30.08.2016 அன்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 06.09.2016, 07.09.2016 & 08.09.216 ஆகிய நாட்களில் BRC அளவில் பயிற்சி வகுப்பு - இயக்குனர் செயல்முறைகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

தேசிய திறனறி தேர்வு: NTSE EXAM NOV 2016- SCHOLARSHIP AMOUNT RS.1250 PER MONTH

CLICK HERE - NTSE APPLICATION DOWNLOAD

அஞ்சல் துறையில் பணி: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Postal Assistant - 16பணி: Sorting Assistant - 07சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.கல்வித்தகுதி: தொழிற்பிரிவு அல்லாத இதர பாடப்பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Postman - 28

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

வயதுவரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

தேர்வு செய்யப்படும் முறை:கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத்தகுதி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில்/ சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதை Chief Postmaster General, Delhi என்ற பெயரில், புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து தேவையான விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது விரைவு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (R&E),O/o The Chief Post Master General,Delhi Circle,Meghdoot Bhawan,NEWDELHI- 110001.

விளையாட்டுத்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறையில் மாநில அளவில், தேசிய அளவில், பல்கலைக்கழக அளவில், சர்வதேச அளவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2016.

மேலும், வயதுவரம்பு சலுகை, விளையாட்டுத் தகுதிகள் தொடர்பான தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.

மாணவிகள் சாதனை

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கைகள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 3,21,746 பேர் தகுதி பெறவில்லை.அடுத்த வாரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு 11,058 மாணவர்கள், 8,266 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 19,325 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட கூடுதலாக 4,265 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். தேர்வின்போது விதிமுறைகளை மீறிய 26 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3.5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “இந்ததேர்வில் 4,09,477 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களில் 35 ஆயிரம் இடங்கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்களில் 16 ஆயிரம் இடங்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மீதமுள்ள 3.5 லட்சம் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவ நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் நுழைவுத் தேர்வில் தகுதி பெறவில்லை” என்றார்.

விழிப்புணர்வு வேண்டும்:

மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றி சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் நிறுவனர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டுவர வேண்டும். தற்போது நடந்த நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வை எழுதமுடியவில்லை. நம்முடைய மாநில பாடத் திட்டத்தில் இருந்து3 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒட்டியே உள்ளன. அதனால் அந்த மாணவர்கள் எளிதாக நுழைவுத் தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்குமுதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் நுழைவுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் வெற்றி பெற முடியும். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி & திருவாரூர் - நன்னிலம், காஞ்சிபுரம் மாவட்டமாறுதலுக்கு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டமாறுதலுக்கு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.7 விவரம்.

புதூர் ஒன்றியம்.
1.முத்துச்சாமிபுரம்.
2.சிங்கிலிப்பட்டி.
3.பூதலாபுரம்.
4 நடுக்காட்டூர்
5.ம.துரைச்சாமிபுரம்
6.கழுகாசலபுரம்
7.வி.சுப்பையாபுரம்

திருவாரூர் மாவட்டம்

நன்னிலம் ஓன்றியம் 15 8 2016 படி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் :
ஆலங்குடி,செருவளூர்,வாளூர்,திருமெய்ச்சூர்-2

காஞ்சி மாவட்டம்
*_காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காலிபணியிடங்கள்_*
*சித்தாமூர் ஒன்றியம்*
1.வயலூர்
2.கயநல்லூர்
3.வெள்ள கொண்டக்கரம்
4.வெடால்
5.சூனாம்பேடு(M)
6.சூனாம்பேடு(W)
7.அகரம்
8.கரும்பாக்கம்
*இலத்தூர் ஒன்றியம்*
9.நரியூர்
10.மேற்கு செய்யூர்
11.தண்டரை 
12.கொடூர்
*அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்*
13.தின்னலூர்
14.தின்னலூர்
15.செனையனேரி
*மதுராந்தகம் ஒன்றியம்*
16.மேல் வசலை
17. 189 சித்தாமூர்
மொத்தம் 
17 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள்
1.மணப்பறவை
2.திருவிடைச்சேரி
3.குச்சிபாளையம்
4.சீதக்கமங்கலம்
5.அபிஷேகமங்கலம்
6.சரபோஜிராஜபுரம்
7.மருதவாஞ்சேரி
8.எண்ணக்குடி
9.குப்பம்
10.புளியஞ்சேரி

திருநெல்வேலி மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லை

தேசிய திறனறி தேர்வு: NTSE EXAM NOV 2016- SCHOLARSHIP AMOUNT RS.1250 PER MONTH

CLICK HERE - NTSE APPLICATION DOWNLOAD

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.

ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Army Public School (AWES APS)

பணியிடம்: இந்தியா முழுவதும்.

மொத்த காலியிடங்கள்: 8,000

பணி: PGT TGT PRT 

ஆசிரியர்தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதயின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2016

தேர்வு நடைறும் தேதி 2016 நவம்பர் 26 மற்றும் 26 தேதிகளில்தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 15.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines_for_candidates.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சரித்திர சாதனையையும் படைத்தார் ஹரியாணாவைச் சேர்ந்த சாக்‌ஷி.

காலிறுதியில் சாக்‌ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தினார்.

இந்தச் சிலிர்ப்பூட்டும் ஆட்டத்தில், முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்தார். மீண்டு எழுந்த அவர் பின்னர் தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்

ஆட்டநேரம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் எடுத்த மூன்று புள்ளிகளே 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்தது.

முன்னதாக, மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் என்பவரை 12-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தியதன் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் அவர் விளையாடிய விதமே எதிர்பார்ப்புகளை எகிறவைத்தது.

ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி, காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வெலேரியா கோப்லோவாவிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில் அசத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்‌ஷி தீர்த்து வைத்துள்ளது மகிழ்வுக்குரியது.

சாக்‌ஷி மாலிக்: ஹரியாணாவில் இருந்து ரியோ வரை:

ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.

2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்‌ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

காதி வாரியம் தயாரித்த, 30 லட்சம் காகித கோப்புகளை, பிரதமர் அலுவலகம் வாங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்கள், கதர் ஆடைகள் வாங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; இதற்காக, அத்துறையுடன் பேச்சு நடக்கிறது. தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவர்கள், கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் செயல்படுத்த கோரி, பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

மேலும், அனைத்து அரசு ஊழியர்களும், வெள்ளிக்கிழமை மட்டும், கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும் என, முதல்வர், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.

'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது.

முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர்

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.

இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர். பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர்.

வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில்,

வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'பாரா மெடிக்கல்' தரவரிசை பட்டியல்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.

சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., - பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் உள்ளன. இதற்கு, விண்ணப்பித்தோருக்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ க் கல்வி இயக்ககம், நேற்று வெளியிட்டுள்ளது. இதில், 18 ஆயிரத்து, 495 பேர் இடம் பெற்றுள்ளனர்.

'மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.