Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 21 August 2016

ஸ்மார்ட் ரேஷன் கார்டு' பணி...மும்முரம்! 'பில்லிங்' மிஷினில் பதிவு

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை களையவும், முறைகேடுகளை தவிர்க்கவும், கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் 'எலக்ட்ரானிக் பில்லிங்' மிஷின் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்

உள்ளனர். 1,400 ரேஷன் கடைகள் உள்ளன. எலக்ட்ரானிக் மிஷினில் குடும்ப அட்டை எண், பெரியவர்கள் எண்ணிக்கை, சிறியவர்கள் எண்ணிக்கை, ஆதார் அட்டை எண், மொபைல் போன் எண், சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் பதியப்படுகின்றன.

ஆதார் அட்டை நகல் கொடுக்காதவர்கள், செப்., 30க்குள் அந்தந்த கடைகளில் வழங்க வேண்டும். மொபைல் எண் மாறியிருந்தால், திருத்தம் செய்யலாம். மிஷினில் பதிந்த விவரம், குடும்ப அட்டைதாரர் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. பதிவு முடிந்ததும், ஒவ்வொரு கடையிலும் பயன்பாட்டில் உள்ள, உண்மையான ரேஷன் கார்டு விவரம் தெரியவரும். அதன்பின், 'ஸ்மார்ட் கார்டு' அச்சிட்டு வழங்கப்படும்.

இனி, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கினால், அட்டைதாரர் மொபைல் எண்ணுக்கு, என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற எஸ்.எம்.எஸ்., வரும். கடைகளில் இருப்பு இருக்கிறதா என்பதை, கடை குறியீட்டு எண் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; பதில் எஸ்.எம்.எஸ்., வரும்; 'ஸ்டாக்' விவரம் தெரிந்தபின், கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தட்டுப்பாடு இருக்காது!

குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' திட்டம், தமிழகத்தில், 18 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. கோவையில் உள்ள, 1,400 கடைகளுக்கும் 'பில்லிங் மிஷின்' வழங்கப்பட்டு, பதிவு பணி மும்முரமாக நடக்கிறது. 'புழக்கத்தில் உள்ள கார்டுதாரர் விவரம்,கடை வாரியாக கண்டறியப்பட்டதும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பொருட்கள் இருப்பு நிலவரம்; வாங்குவது தொடர்பாக, கார்டுதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப் படும். இதன் மூலம் முறைகேடு தவிர்க்கப்படும்; ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு எழாது. கார்டுதாரர்களுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்' என்றனர்

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 
நேற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 3,882 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடந்த இணையதள கலந்தாய்வில் 1,277 முதுகலை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்துக்குள் மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடந்தது.

இப்பணிகளை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குனர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கலந்தாய்வின் மூலம் மாறுதல் நடைபெறுவதை மேற்பார்வை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சுமார் 3,500 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து மட்டும் கோயம்புத்தூர் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 427 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங் களை நிரப்புவதற்கான கலந்தாய்வு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன. 
ஒவ்வொரு கல்லூரி யிலும் 15 சதவீத இடங்கள் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழை வுத் தேர்வு என்ற புதிய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப் படையில் மருத்துவ, பல் மருத் துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.இதில் தமிழகம் உட்பட ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் இந்த ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்பட் டிருக்கிறது. எனவே, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் மாணவர் சேர்க்கை முறை மூலம் (பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில்) மாணவர்கள் சேர்க்கப் பட்டார்கள். மத்திய அரசின் உத்தரவுகாரண மாக, அடுத்த ஆண்டிலிருந்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு மாண வர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நீட் நுழைவுத் தேர்வுக்கு இப்போ திருந்தே மாணவர்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன. நீட் நுழைவுத் தேர்வானது மாணவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் இல்லாமல் பாடங்களில் அவர்களின் ஆராயும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறனையும் அறியும் வகையில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாண வர்கள் சேர்க்கப்படுவதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அரசு கல்லூரியில் சேருகிறார்கள்.

அடுத்த ஆண்டு நீட் நுழைவுத் தேர் வின் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை தயார்படுத்தும் வகையில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை நீட் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் மாணவ, மாணவி களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் விசேஷ வகுப்பு கள் எடுப்பார்கள். மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வண்ணம் இந்த சிறப்புப் பயிற்சி அமைந்திருக்கும். அரசுப் பள்ளி களில் இத்தகைய சிறப்புப்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்ணப்பன் கூறினார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில் ‘டேன்எக்ஸெல்’ (TANEXCEL) என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை படிப்படியாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மாநில திட்ட இயக்ககம் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 100 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. அது இந்த ஆண்டு மேலும் 122 அரசுப் பள்ளி களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச 4ஜி சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்


ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மாக 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்தும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவச மாக அளிக்க இருக்கிறது. இந்த முன்னோட்ட சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கை யாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். தொலைத்தொடர்பு செயலருடன் சந்திப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று முன்தினம் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஜேஎஸ் தீபக்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் ரிலையன்ஸ் ஜியோ செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. மேலும் சோதனை சேவையைதொடங்குவதற்கு தற்போது களத்தில் உள்ளவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சந்திப்பில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை குறித்த அனைத்து செயல் திட்டங்களையும் தொலைத்தொடர்பு துறை செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் முகேஷ் அம்பானியோடு அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் உடன் இருந்துள்ளார். முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது.

ஒரே மாதிரி இருக்கும் விலையில்லா காலணிகள் மாணவர்களிடையே மாறும் குழப்பத்தை தடுக்க 5 ம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த வழி - வீடியோ

CLICK HERE TO SEE VIDEO

தனியார் பள்ளியிலிருந்து 23 மாணவர்கள் நீக்கம் !

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கு வாய்ப்பு





உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட்  05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில்,  வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில்  சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம். மேலும் வழக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் வர வாய்ப்பு உள்ளது. .

தகவல் 
பி. இராஜலிங்கம் புளியங்குடி 

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

2010-11 English BT's Regulation Order - Click Here

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை

மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர் ரா.செல்வக்குமார் பேசினர். 

          நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். 

 ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார். 

 இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.

 பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000 உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 

 வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின் கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின் பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும் பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

தட்டச்சு தேர்வு நுழைவு சீட்டு : 1.50 லட்சம் பேர் பரிதவிப்பு

சென்னை: தட்டச்சு தேர்வுக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், நுழைவுச்சீட்டு இன்னும் வராததால், தேர்வு எழுத உள்ள, 1.50 லட்சம் மாணவ, மாணவியர் பதைபதைப்புடன் உள்ளனர்.

வரும், 27, 28ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், தட்டச்சு தேர்வு நடைபெறும் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, நேற்று வரை, தேர்வு நுழைவுச்சீட்டு வரவில்லை. தேர்வு எழுத உள்ள, 1.50 லட்சம் மாணவ, மாணவியர், எப்போது நுழைவுச்சீட்டு வரும் என, காத்திருக்கின்றனர். இதுகுறித்து, காஞ்சி மாவட்ட அனைத்து சமுதாய நல பாதுகாப்பு சங்கத் தலைவர் எம்.எஸ்.குமார் கூறுகையில், ''ஆள் பற்றாக்குறை காரணம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நுழைவுச்சீட்டை விரைவாக அனுப்பவும், தேர்வுகள் தரத்துடன், முறையாக நடக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.

மழைக்கால மின் விபத்து : பள்ளிகளில் விழிப்புணர்வு

மழை காலம் துவங்குவதால், மின் விபத்தை தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. 

 சென்னையில் குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, மற்ற அனைத்து பகுதிகளுக்கும், மின் கம்பம் மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், மழை காலங்களில், காற்று பலமாக வீசும் போது, மின் கம்பம் சாய்வதால், மின் கம்பி கீழே அறுந்து விழுகிறது; கம்பியை மிதிப்பவர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் முதல், வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதனால், மின் விபத்தை தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், கடந்த ஆண்டு பெய்த கன மழையால், பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்தன; சில இடங்களில், மின் விபத்துகளும் ஏற்பட்டன. எனவே, மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பள்ளிகளில், மின் விபத்தை தடுப்பது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்காக, பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது; அவர்கள் ஒப்புதல் கிடைத்ததும், பள்ளிகளில் விழிப்புணர்வு பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைப்பு: கு.பாலசுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார்.

 கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் (மு.செ.கணேசன் பிரிவு) ஆகிய 2 சங்கங்களும் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான இணைப்பு விழா வரும் 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.

பொதுச் சங்கங்கள் ஒன்றிணைவதால் சங்கங்களின் கோரிக்கைகள் வலுப்பெறும் என்பதால், கொள்கை அடிப்படையில் இந்த இணைப்பு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பு சங்கமான டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தாற்காலிமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் அதன் இணைப்புச் சங்கங்களும் பங்கேற்கும் என்றார்.

'டிஜிட்டல்' நூலகத்தில் 30 லட்சம் கட்டுரைகள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய, 'டிஜிட்டல்' நுாலகத்தில், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளதாக, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. 

 

          கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தக ஆவணங்களை சேகரித்து, அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில், மத்திய அரசு சார்பில் டிஜிட்டல் நுாலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நுாலகத்தை, கான்பூரில் உள்ள இந்திய

உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., நிர்வகித்து வருகிறது. தற்போது, இந்த டிஜிட்டல் நுாலகத்தில், ஒரு லட்சம் ஆய்வாளர்களின், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. இதுபோல், அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து மற்றவர்கள் பயன்பெறச் செய்யுமாறு, பல்கலை மற்றும் கல்லுாரிகளை, யு.ஜி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும். தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும். திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.