Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 24 August 2016

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

        இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. 
ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.

இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஜூனியர்கள் எதிர்ப்பு : 'சீனியர்' ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளனர். பணி நிரவல் என்றால் முதலில் பாதிப்பது, 'ஜூனியர்'கள் தான். 'பல ஆண்டுகளாக பணியாற்றும் சீனியர்கள், ஏன் மாணவர் சேர்க்கையில் அக்கறை செலுத்த வில்லை,' என ஜூனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'வெளி மாவட்டங்களில் பணியாற்றிய நாங்கள், பல லட்சம் ரூபாய் 'இழந்து' தான் சொந்த மாவட்டங்களுக்கு மாற்றலாகினோம். மாணவர் எண்ணிக்கை குறைவால், 'சர்பிளஸ்' கணக்கில் வரும் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப் படுகிறோம். எங்களுக்கும்

குடும்ப சூழ்நிலை உள்ளது' என்றனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அதிகாரிகள் சிலர் தங்கள் 'தேவை' கருதி, குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு போதிய கவனம் செலுத்தாமல், 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' கதையாக தற்போது ஆசிரியர்களை அலைக்கழிக்க முடிவு செய்துள்ளது. 'சர்பிளஸ்' ஆசிரியர்களை மாறுதல் செய்வதற்கு பதில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும், மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த லில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங் களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

* மிக பழமையான கட்டடங்களாக அல்லாமல், இயற்கை சேதங்களை தாங்க கூடியதாகவும், பாதுகாப்பாக தேர்தலை நடத்த ஏதுவானதாக வும் இருக்க வேண்டும்.
* காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தி னர் விடுதி, வழிபாட்டு தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங் களில் வாக்குச்சாவடிகள் அமைக்கக்கூடாது
* கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி; நகர்ப்புறங்களில், 1,200 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடி; மாநகராட்சிகளில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும்
* அக்., மாதம் மழைக்காலம் என்பதால், வாக்குப் பதிவு மையத்தின் கூரைகள், ஒழுகாமல் பழுது நீக்க வேண்டும். மின்கசிவு ஏற்படாத வகையிலும், மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்படாத வகையிலும் பராமரிக்க வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள் அமைத்து, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டு உள்ளன.

பெண்களுக்கான வார்டு ஒரு வாரம் 'கெடு': 
-தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர்,

துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதமாக நடக்கும் இப்பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை. 
தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறை வாக உள்ள நிலையில், இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித் துள்ளது.

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற முடியும்' என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். 

கம்மாபுரம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில், மக்கள் பாதை இயக்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள் பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தலைமை தாங்கி, பேசியதாவது:

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வேலை செய்தாலும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதா என ஆய்வு செய்து, அங்குள்ள பிரச்னைகளை தீர்ப்பதையே கடமையாக கொண்டுள்ளேன். அரசு மூலம் கட்டப்படும் பள்ளி கட்டடங்கள் தரமாக கட்டப்படுகின்றனவா, சாலைகள் தரமாக போடப்படுகின்றனவா என ஆய்வு செய்து, அவற்றை தரமாக அமைப்பதில் முழு வீச்சில் செயல்படுகிறேன்.

தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களை டாடி, மம்மி என கூப்பிடும் போது மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தமிழ் மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2011ல் மதுரையில் பணியாற்றிய போது, தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி தேர்ச்சியும், மதிப்பெண் இருக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டேன். அதன்படி, மாலை வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது.

அப்துல்காலம் 'எனது உள்ளம் கவர் நாயகர் என்றால் எனக்கு ஆரம்ப கால படிப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் தான்' என்றார். எனவே, மாணவர்களாகிய நீங்கள் அதிகப்பற்றுடன் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விஞ்ஞானிகளாக மாறும் சக்தியும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நானும் உங்களை போல் அரசு பள்ளியில் படித்து தான் கலெக்டராக உள்ளேன்.

கடந்த 2009ல் பொது தேர்வு முடிவுகள் வெளி வந்தபோது, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கதிர்வேல், ராஜ்கமல் இருவரும் 500க்கு 499 மதிப்பெண் எடுத்தனர். இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 27 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் அந்த தொகையை வாங்க மறுத்துவிட்டனர். ஏன் என கேட்டதற்கு நாங்கள் இருவரும் அரசு பள்ளியிலேயே படிக்க விரும்புகின்றோம் என்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

அவர்கள் அரசு பள்ளியில் மேல் படிப்பு படித்து, 2011ல் பிளஸ் 2 பொது தேர்வில் ராஜ்கமல் 1,171, கதிர்வேல் 1,167 மதிப்பெண் எடுத்தனர். நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற முடியும். அதே போல் மதிப்பெண் எடுக்க முடியும்.

மக்கள் பாதை என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், தமிழ் வழியில் படிப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்க உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கணினி, டேபிள், சேர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார்

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது!

பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு நேரம் வெகுவாக குறைந்துவிட்டதால் போட்டிகளில் ஜொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படி இன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாக வேண்டும். காலை, மாலை என எந்த நேரமும் படிப்பு, மார்க் என மாணவ மாணவியர்களை கசக்கி பிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால் விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும் நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.

இதனால் மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம் ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் என உடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பி.இ.டி., பீரியடில் மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டை பற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணே பிரதானமாக கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணா விளையாட்டு மைதானம் இருந்தும் மாநில அளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது.

அண்மையில் கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒரு சிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலைதான் பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவ மாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.  அப்போதுதான் நாம் உலக அளவில் ஜொலிக்க முடியும்.

தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில், மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில் பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்த மாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர் ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி

களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறினார்.

சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளிஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2011-ம்ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதிதேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் கூறியிருந்தனர். தகுதி தேர்வு தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!

சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவையை விட அதிக ஆசிரியர்கள்கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்

தென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.
அதனால், இடமாற்றத் திற்கான கவுன்சிலிங்கில், தென் மாவட்ட காலியிடத் திற்கு, 100 ஆசிரியர் கள் போட்டி போடுவது வழக்கம். இதனால், காலியிடங்களின் விபரம் மறைக்கப்படுவதும் உண்டு. சிபாரிசு, பரிந்துரைஅடிப்படையில், இந்த மாவட்டங்களுக்கு மட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ஆசிரியர் கவுன்சிலிங்கில், எந்த காலிடமும் மறைக்கப்படாது என, அறிவிக்கப்பட் டது. அதனால், தென் மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர்கள் நினைத்தனர்.அதற்கு மாறாக, 'தென் மாவட்டங்களில் காலியிடங் களே இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் நடந்த, இடைநிலை ஆசிரியர் களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கவுன்சிலிங்கில், 4,745 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், 11 உடற்கல்வி ஆசிரியர்கள்மாறுதல் கேட்டனர்.அவர்களில், 641 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே, விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைத்தது; மீத முள்ள, 4,000க்கும்மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் பெரும் பாலானோர், தென் மாவட்டங்களுக்கு மாறுதல்கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தென் மாவட்டங்களில், ஒவ்வொரு அரசு பள்ளி களிலும், மாணவர் எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிகமாக ஆசிரியர்கள் உள்ளதால், அங்குள்ள ஆசிரியர்களையே, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஐகோர்டு தடை !

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த குஜராத் அரசின் உத்தரவுக்குஐகோர்ட் விதித்த தடைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அதேநேரத்தில், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் எந்த மாணவர்களையும் சேர்க்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து கடந்த மே1ம் தேதி குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி குஜராத் ஐகோர்ட் தடை விதித்தது. இந்த உத்தரவு முறையற்றது எனவும், அரசியல்சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை: செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு.

Directorate of Government Examinations - HSE September 2016 - Private Candidate Instruction for Online Registration




அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சி: ஜெயலலிதா !

ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சிஅளிக்கப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மதுரையில் ரூ.4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைதொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தமருத்துவமனை காமராஜர் பல்கலை கழக வளாகத்திற்குள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப்பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

 இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும்.இம்மையம் தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

KARUR DEEO LEAVE LIST 2016-17

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள், பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் எளிமையாகப் பாடங்கள் பயிற்றுவிக்க வசதியாக செயல்வழிக் கற்றல் அட்டைகள் அளிக்கப்படும்.

அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபட பயிற்சித் தாள் அளிக்கப்படும். இதன்மூலம், வாழும் இடம், திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை அறிய முடியும்.

கணித-அறிவியல் பெட்டிகள்: அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கணித உபகரணப் பெட்டிகளும், 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகளும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகங்களும் அளிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 கணினிகள் கொண்ட கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். அறிவியல்-கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்பங்களான தொடு திரை, காணொலிக் காட்சி, பல்லூடகம் (மல்டி மீடியா) போன்றவைகளால் கற்றல்-கற்பித்தல் முறைகள் மேம்படுத்தப்படும். பின்னணி குரலுடன் கூடிய அசைவூட்டும் காணொலி தொகுப்புகளும் அளிக்கப்படும். அவை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

வருகைப் பதிவு: மாணவர்-ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு முறை இனி பயோ-மெட்ரிக் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில் கல்வி கற்பதற்கு வசதியாக, வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச் சுவர் சித்திரங்கள் வரையப்படும்.

தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல்-கற்பித்தலைக் கொண்டு சேர்க்க மெய்நிகர் வகுப்பறைகள் (யஐதபமஅக இகஅநந தஞஞஙந) ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் உருவாக்கப்படும்.

மேலும் 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் இருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகள், கிராமப்புறப் பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் காண வழி செய்யப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த கோவை, பெரம்பலூர், தருமபுரி மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 11 அறிவிப்புகளின் மூலம் ரூ.230.74 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நல்லாசிரியர் விருதுக்கு ரூ.10 ஆயிரம் நல்லாசிரியர் விருதுக்கான ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், பதக்கம், சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், இனி ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ்...: மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழைக் காலங்களில் பாதிப்பின்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு-அரசு உதவி பெறும் மாணவ-மாணவியருக்கு அவை அளிக்கப்படும் என்றார்.