Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 26 August 2016

உபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்ய தர்மபுரி CEO உத்தரவு - பணிநிரவல் - இல் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்க கூடாது செயல்முறைகள் - செயல்முறைகள்


அகஇ - BRTE SELECTION GRADE - தேர்வுநிலை வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக ஆனை மற்றும் பணபலன்களை வழங்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு காலாண்டுத்தேர்வு அட்டவணை -2016


Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

NMMS - தேர்வு ஏன் எதற்கு என்பது குறித்த சின்ன விளக்கம்

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது.

_*தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகைகிடைக்கும்.

_இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்.

__முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

__இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்

புதிய பள்ளி துவக்கம், தரம் உயர்வு : தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு.

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேசமயம், பயோ மெட்ரிக் வருகை முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்றுஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.  தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.நடப்பாண்டில் ரூ.60 கோடியே 79 லட்சம் செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது: முதல்வர் அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் வருகை பயோ மெட்ரிக் முறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஆசிரியர்களை குறிவைத்து செய்வதுபோல உள்ளது. இந்த முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியல்லாமல் பல பணிகள் கொடுக்கப்படுவதால், பயோ மெட்ரிக் முறை பொருத்தமாக இருக்காது.மேலும், தமிழகத்தில் 355 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும்உதவியாளர்கள் இல்லை. 1000 எழுத்தர் பணிகள் காலியாக உள்ளன.

இதனால் ஆசிரியர்கள் இலவச பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர். ஆதார் அட்டை தொடர்பான பணிகளையும், தேர்தல் ப ணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட அரசு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழுவில் கூறப்பட்டதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கொளத்தூர் அருகே அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் திங்கள்கிழமை முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை இரண்டு ஆசிரியர்களை நியமிக்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்தார். மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியரை கிராம மக்களே நியமித்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செம்மைப்படுத்துவதற் கான 2 நாள் கருத்தரங்கம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.இம்மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
 751 மருத்துவமனைகள்:

தமிழகத்தில் முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மருத்துவத் துறையில் ஒரு சிறந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் 159 அரசு மருத்துவமனைகள் உட்பட 751 மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.35 கோடியும், அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை செம்மைப் படுத்தும் நோக்கில் மருத்துவர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் கள் மற்றும் பலர் பங்கேற்கும் இந்த 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசும்போது, “மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் ஆணையர் மோகன் பயாரி பேசும்போது, தமிழக அரசு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்தவர்களை தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் தார்ஸ் அஹமது வரவேற்றார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஹோடா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.நடராஜன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அபூர்வா, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலர் ராஜேஸ்வரராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்

ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது.

ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்கும். இது ஒவ்வொரு விபத்தை பொறுத்து இழப்பீடு மாறுபடும்.

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள்.
பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு பி.எட் படிப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங் களுக்கு 154 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்தது. தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) பணி நெருக்கடியின் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலை போன்ற காரணங்களால் ஆசிரியர் பணியை விரும்புவதாகவும் அதற்காக பி.எட் படிப்பில் சேருவதாகவும் கலந்தாய் வுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண் பொறியியல் பட்டதாரிகள் தெரிவித்தனர். பி.எட் படிப்புக்காக நிறைய பேர் முன்னணி ஐடி நிறுவனங்களில் பார்க்கும் வேலையை உதறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஆசிரியர் பணிதான் பெண்களுக்கு ஏற்ற பணி என்று அவர்கள் கருதுகின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரி மொழியரசி கூறும்போது, “ஐடி வேலையில் இரவுப் பணி இருக்கும். திருமணம் ஆவதற்கு முன்பு ஷிப்டு முறையில் வேலை செய்வதில் சிரமம் இருக்காது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு இத்தகைய பணிச்சூழல் சரிப்பட்டு வராது. ஆசிரியர் வேலை, நிம்மதியான பணி” என்றார். முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பி.எட் படிப்பதற்காக வந்துள்ள சென்னை யைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் கூறும்போது, “ஐடி துறையில் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். வேலையும் பார்க்க வேண்டும். குடும் பத்தையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டு்ம என்று நினைக்கும் பெண் களுக்கு அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். சென்னை குரோம் பேட்டையைச் சேர்ந்த பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான சிவகாமி சுந்தரியும் இதே கருத்தை சொன்னார். நாகப்பட்டினம் மயிலாடுதுறையைச் சேர்ந்த பி.டெக் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) பட்டதாரியான சுருதியின் தந்தை எஸ்.நாராயண பிரசாத் கூறும்போது, “முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய எனது மகள் பணியில் திருப்தி இல்லாத காரணத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஐடி பணியுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் பணி பாதுகாப்பானது, எந்தவிதமான நெருக்கடியும் இன்றி பணியாற்றலாம்” என்றார். திருநின்றவூரைச் சேர்ந்த வி.யாமினி என்ற பிடெக் பட்டதாரி கூறும்போது, “நான் பிளஸ்2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேரப்போகிறேன் என்றபோது ஆசிரியர் பயிற்சியில் சேருமாறு பெற்றோர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், நான் அதையெல்லாம் கேட்காமல் பொறியியல் படிப்பை தேர்வுசெய்தேன். எனக்கு குழந்தை பிறந்த பின்னர்தான் பெற்றோர் சொன்ன அறிவுரை புரிகிறது. எனவே, ஆசிரியர் வேலைக்காக பி.எட் படிப்பில் சேரப்போகிறேன்” என்றார். அம்பத்தூரைச் சேர்ந்த அனுப்பிரியா, பி.எட் படிப்புக்காக ஐடி வேலையை உதறிவிட்டார்.

டெல்லி கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர், “திருமணம் முடிந்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். பூந்தமல்லி அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பிஇ பட்டதாரி ரேவதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரி திவ்யா பிரேம்குமார் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

ஜெ.கு.லிஸ்பன் குமார் சென்னை

'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்'என்ற, தேசிய நுழைவுத் தேர்வின் முடிவுகள், கடந்த, 16ம்தேதி வெளியிடப்பட்டன. எட்டு லட்சம் பேர் எழுதிய தேர்வில், 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இருப்பினும், எந்த அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர முடியும்; தேர்ச்சி பெறாதவர்கள் சேர முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'நீட் தேர்வு தேர்ச்சி என்பது, படிப்பில் சேர்வதற்கான தகுதி மட்டுமே.அதுவே, கல்லுாரியில் சேர்வதற்கான, 'மெரிட்' பட்டியல் இல்லை. நீட் தேர்ச்சி இருந்தாலும், தனியார் கல்லுாரிகளின் விதிகளை ஏற்றால் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.

6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்

நடப்பாண்டு, 6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 2014 - 15ம் ஆண்டு, 4.23 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, 148.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 1.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஆதிதிராவிட மாணவ,மாணவியரையும் சேர்த்து, 3.49 லட்சம் மாணவியர்; 2.71 லட்சம் மாணவர்கள் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

ஒரே நாளில் குறுக்கிடும் அரசுத் துறைத் தேர்வுகள் தேதியை மாற்றி அறிவிக்க வலியுறுத்தல்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அர சின் 2 துறைகள் சார்பில் போட்டித் தேர்வுகளும், 28-ம் தேதி தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சர் தேர்வும் நடைபெற வுள்ளன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப் பித்தவர்கள், தேர்வு தேதிகள் குறுக்கிடுவதால் ஏதாவது ஒரு தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன்,  கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இளநிலை உதவியாளர் (கணக்கு), டெஸ்டர் கெமிக்கல், கள உதவியாளர் (பயிற்சி), சுருக்கெழுத்தர்- தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு 27-ம் தேதி யும், இளநிலை உதவியாளர் (நிர் வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/ இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு 28-ம் தேதியும் போட்டித் தேர்வு நடை பெற உள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நீதிபதிகள், நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரின் நேர்முக உதவியாளர் மற்றும் நீதிமன்ற துணைப் பதிவாளரின் நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு வரும் 27-ம் தேதியும், இதே துறையில் கணினி இயக்குவோர், தட்டச்சர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 28-ம் தேதியும் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இவை தவிர, தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் 27, 28 ஆகிய தேதிகளில் தட்டச்சர் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தட்டச்சர், மின் வாரியத்தின் இளநிலை உதவியாளர் தேர்வு களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2 தேர்வுத் தேதிகளும் ஒரே நாளில் வருவதால் எந்தத் தேர்வில் பங்கேற் பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதிகளை அரசு மாற்றி அறிவித்தால் உதவியாக இருக்கும் என்றார்.

சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் உடனடியாக சேரலாம் என்றும், அடுத்த ஆண்டுதான் அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன. சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2 வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.மாணவர்கள் கலை, அறிவியல் படிப்பில் பட்டம் பெற 3 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அவர்கள் பி.எட். படிக்க 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 5 ஆண்டுகள் ஆவதை ஒருவருடம் குறைத்து ஒருங்கிணைந்த 4 வருட கால பி.எட். படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவிப்பு அதாவது பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம் என்று கடந்த 23-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட். படிப்புகள் இந்த ஆண்டு முதல் கல்வியல்கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.

அதன்படி இந்த வருடம் 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 13 கல்லூரிகள் 4 வருட பி.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அனுமதி பெறவேண்டும். பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவேண்டும். இந்த ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர 13 சுயநிதி பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் அனுமதி பெற்று விட்டன. அந்த கல்லூரிகள்தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. உடனடியாக அந்த அனுமதி கொடுக்கப்படுகிறது. அரசு பி.எட். கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை ஆனால் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர அரசு பி.எட். கல்லூரிகள் மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் விண்ணப்பிக்கவில்லை. தேசிய ஆசிரியர் கல்விக்குழு வருகிற கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிக்க அனுமதி வழங்கும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக கலந்தாய்வு நடத்தப்படும். அதனால் அரசு பி.எட். கல்லூரிகள் இந்த வருடம் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளை தொடங்குவது சிரமம். சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எனவே அனுமதி பெற்றுள்ள 13 சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. சுயநிதி பி.எட். கல்லூரிகள் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்வார்கள். அதன்பிறகு அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். ஒரு கல்லூரிக்கு தலா 100 இடங்கள் வீதம் 13 கல்லூரிகளிலும் 1,300 இடங்கள் உள்ளன. 4 வருடங்கள் கழித்து ஒவ்வொரு கல்லூரியிலும் 400 பேர் இருப்பார்கள்.முதல் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளும் ஆசிரியர் பயிற்சி குறித்து பாடம் நடத்தப்படும்.

ஆனால் கடைசி வருடம்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடத்திட்டம் தயார் இந்த படிப்புக்கு பாடத்திட்டம் பல்கலைக்கழக நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியராக வேண்டும் என்று உயரிய நோக்கம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பது நல்லது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.