Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 August 2016

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் மேலும் 5 குறைப்பு: சீட் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் ஏமாற்றம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருக்கிற இடங்களில் மேலும் 5 இடங்கள் குறைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆரம்ப காலத்தில் 183 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. பேராசிரியர்கள் பற்றா க்குறை, வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமை ப்பு வசதிகள் குறைவால், ஆண்டுதோறும் ஒரு சில இடங்கள் குறைக்கப்பட்டு வந்து, கடந்த ஆண்டு 155 எம்பிபிஎஸ் இடங் களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனிடையே, கடந்த ஆண்டு, எம்பிபிஎஸ் இடங் களின் எண்ணி க்கையை 250 ஆக உயர்த்த, தமிழக அரசு மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. இந்திய மருத் துவ கவுன்சில் குழு ஆய் வுக்கு வந்தால் அவர்களின் ஒப்புதலை பெறும் விதமாக, தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால், தற்போது வரை இந்திய மருத்துவ கவுன்சில் குழு கல்லூரியில் ஆய்வுக்கு வரவில்லை.

சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 387 எம்பிபிஎஸ் இடங்களை வழங்க ஒப்புதல் அளிப்பதாகவும், அதற்காக ஒரு இடத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். இதில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் இருக்கிற எம்பிபிஎஸ் இடங்களில் 5 இடங்களை அகில இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்தது. அதனால், இந்த ஆண்டு 150 இடங்களுக்கே சேர்க்கை நடைபெற்றது. கூடுதல் சீட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த இருக்கிற இடங்களும் குறைக்கப்பட்டது மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களும், கோவை மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்களும், மீதி 87 இடங்கள் மற்ற கல்லூரிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் 250 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை உறுதியாக நடக்கும் என்றார்.

இடங்கள் குறைக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதாக முன்பு ஆய்வுக்கு வந்திருந்த இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டியது. ஆனால், தற்போது வரை அந்த குறைபாடுகளை நீக்காமல் கூடுதல் இடங்களை பெறுவதிலேயே கல்லூரி நிர்வாகம் முனைப்பாக இருக்கிறது. ஆனால், தற்போது 5 சீட்டுகள் குறைக்கப்பட்டது, குறைபாடுகளுக்காக அல்ல. தற்போது இந்தியா முழுவதுமே மருத்துவக் கல்லூரிகளில் 50, 75, 100, 150, 250 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அளவிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்

கடந்த சனவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட  ஆசிரியர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இப்பணிக்கான மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற  தேர்தலுக்கு பின் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்.. 

ஆனாலும் வழங்கப்படவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் வர இருப்பதால் அதற்குள் தக்க நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும் !

இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை கணினி மயமாக்கும் திட்டத்தின் 
(பி.ஓ.எஸ்) செயல்பாடுகள் குறித்து முதன்மை செயலர் கோபாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் 20ஆயிரம் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' (பி.ஓ.எஸ்) எனப்படும் கணினி மயமாக்கும் பணிகள்

நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் அவரவர் கடைகளின் செயல்பாடு குறித்து நேரடியாக அறிய முடியும். ஆதார் எண் பதியப்பட்டு, குடும்ப அட்டைதாரரின் அலைபேசி

எண் பதியப்படுகிறது. அவர்கள் வாங்கிய பொருட்கள் குறித்து உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ரேஷன் பொருள் இருப்பு விபரம், தேவை குறித்த அனைத்து விபரங்களையும் பெற முடியும். மீதமுள்ள 15 ஆயிரம் கடைகளில் செப்., மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்' வழங்கப்படும்.கடந்த ஐந்தாண்டுகளில் 4.50 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. அதே நேரம் தகுதியானவர்களுக்கு புதிதாக 11 லட்சம் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் ரேஷன்கடைகளை கணினி மயமாக்கும் பணிகளுக்காக ரூ.400 கோடி செலவிடப்பட உள்ளது.மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் பொது வினியோக திட்டத்தில் மானியமாக தமிழக அரசு ரூ.5,300 கோடி ஒதுக்கி உள்ளது.

மாதந்தோறும் ரேஷனில் 3.50 லட்சம் டன் அரிசி, 36,500 டன் சர்க்கரை, 16,300 டன் கோதுமை, 13,500 டன் துவரம் பருப்பு, 7,000 டன் உளுந்தம் பருப்பு, 25 ஆயிரம் கி.லி., மண்ணெண்ணெய், 1.50 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார். கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர் உடன் இருந்தனர்.

CPS - தன் பங்கேற்பு ஓய்வூதியத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்கலாம் !

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்ச் சமூகத்தின் பிரமுகருமான மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

 நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்க ரயில் பாதைப் போக்குவரத்தில் தேர்ச்சி மிக்கவரும்,  தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளாரும், ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் ஆலோசகரும், எழுத்தாளருமான மு. இராமனாதன் ஹாங்காங் நாடு தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது;
தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும் .ஹாங்காங் நாட்டில்  தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி .சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் .அடிப்படை கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத்தரப்படும.
அடிப்படைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும் .சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும்  தாய் மொழி வழிக் கல்வியே தர முடியும்.அரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது.

உலக அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 25 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மூன்று  ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன. அதற்குக் காரணம் தாய் மொழி கல்வியில் இவர்கள் படிப்பதே ஆகும். தாய் மொழி கல்வியில் படிப்பதற்கு நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பேசினார். 

மாணவர்கள் ரஞ்சித்,ஜீவா,பரத் குமார்,தனலெட்சுமி,ஜெனிபர் ,ராஜி,ஐயப்பன்,கோட்டை ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார்.நிறைவாக  மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

மாணவர்களின் கேள்விகளும் , ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகர் மு.இராமனாதன் பதில்களும் ; 

ரஞ்சித் : ஹாங்காங் நாட்டில் அரசாங்கப் பள்ளிகள் உள்ளனவா ?

பதில் : பெரும்பாலான பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகளே.

பரமேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உணவு முறை என்ன ?

பதில் ; அங்கு அதிகமானவர்கள் சைவ உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. மசாலா அதிகம் இருக்காது. அவர்களும் நம்மைப் போல அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள்தான்.  ஆனால் சோறு குறைவாகவும் காய்கறி,மாமிசம்  அதிகமாகவும் சேர்த்துக் கொள்வார்கள். மசாலா அதிகம் போடுவது  அந்த உணவின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்பார்கள்.எனவே மசாலா சேர்த்து கொள்வதை தவிர்ப்பார்கள்.  இயல்பான சுவையை அதிகம் விரும்புவார்கள். ஆரோக்கியமான உணவு வகைகளே அதிகமாக உட்கொள்வார்கள்.

தனலெட்சுமி : ஹாங்காங் நாட்டிற்கும்,இந்திய நாட்டிற்கும் நேர வித்தியாசம் எப்படி இருக்கும்?

பதில்: இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படும். இந்தியாவில் ஆறு மணி என்றால் ஹாங்காங்கில் எட்டரை மணியாக இருக்கும்.

ஜெகதீஸ்வரன் : நாணயம் எப்படி இருக்கும்?

பதில் : ஹாங்காங் நாட்டிற்கு என்று தனி நாணயம் உண்டு.   ஹாங்காங் டாலர் என்று பெயர்.

பரமேஸ்வரி : விவசாயம் எப்படி இருக்கும்?

பதில் :  ஹாங்காங் சிறிய நாடு. நமது சென்னை நகரத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும்தான் இருக்கும். விவசாயம் இராது. தொழிற்சாலைகள் இருக்கும். பெரும்பாலான பகுதி மலையும் ,மலையை சார்ந்த இடமுமாக இருக்கும்.

ஜீவா : சீனா தொழிலில் சிறந்து விளங்க்குவதற்கு என்ன காரணம் ?

பதில் : சீனாவின் வெற்றிக்கு காரணம் தொழிற்சாலை சார்ந்த அறிவுதான். தொழிற்சாலை சார்ந்த அறிவு அடிப்படை கல்வியில் வழங்கப்படும். அடிப்படை கல்வி தாய் மொழி கல்வியில் இருப்பதால் அவர்கள் அனைத்து விதமான தகவல்களையும் நல்ல முறையில் கற்று கொள்கின்றனர். அதுவே அவர்களின் வெற்றிக்கு அடைப்படையாக அமைகிறது.

ரஞ்சித் : ஹாங்காங்கில் சாலை விதிகள் எப்படி இருக்கும் ?

பதில் : கட்டாயம் விதிகளை நன்றாக பின்பற்றுவார்கள். பள்ளிகளில் விதிகள் கண்டிப்பாக சொல்லி தரப்படும் . அடிப்படைக் கல்வியில் விதிகள் கடைபிடிக்கக் கற்று தரப்படுவதால் விதிகளை யாரும் மீறுவதில்லை. வரிசையில் வரவேண்டும் என்றால் வரிசையில் மட்டுமே வருவார்கள். அதனை கண்டிப்பாக மீறமாட்டாரகள். சாலையில் வாகனங்கள் தேவையில்லாத ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுஉள்ளது .அதனை பின்பற்றுவார்கள்.

ஐயப்பன் : வாகனங்கள் எப்படி இருக்கும்?

பதில் : பொது வாகனங்களில் செல்வதை அதிகம் ஊக்குவிப்பார்கள். தனி நபர் போக்குவரத்து வாகனங்களை அதிகம் ஊக்குவிப்பது கிடையாது.நேரத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்.23 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சரியாக 23 நிமிடத்தில் வந்து நிற்பார்கள்.எனக்கு ஆரம்ப காலங்களில் இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் நடக்கிறது.

சபரி : என்ன மொழி பயன்படுத்துவார்கள் ?

பதில் : கேண்டனிஸ் என்கிற சீன மொழியின் ஒரு வகை பயன்பாட்டில் உள்ளது.

ராஜேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உடை எது ?

பதில் ; ஹாங்காங் சீனர்கள் மேலை நாட்டு உடைகளையே அணிவார்கள். பண்டிகைகளிலும் விசேடங்களிலும் பாரம்பரிய உடையை அவர்கள் விரும்பி அணிவார்கள் 

சஞ்சீவ் : விழா எது பெரிய விழாவாக இருக்கும்?

பதில் : பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சீனப் புத்தாண்டு விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் . அக்டோபரில் வசந்த விழா கொண்டாடப்படும். ஏப்ரல் மாதத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா பெரிய விழாவாக கொண்டாடப்படும்.

ராஜி : ஹாங்காங் நாட்டின் தேசியப் பூ எது ?

பதில் : போக்கினியா. வயலட் நிறத்தில் இருக்கும் 

பார்கவி லலிதா : இயற்கை அமைப்பு எப்படி இருக்கும் ?

பதில் : மலையும் ,மலையை சார்ந்த பகுதியும் இருக்கும். கட்டிடங்கள் உயரமாக இருக்கும். தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டு இருக்கும். குளிர் காலம், கோடை காலம், வசந்த காலம் எல்லாம் இருக்கும்.

உமா மஹேஸ்வரி : விலங்குகள் இருக்குமா ?

பதில் : விலங்குகள் அதிகமாக இருக்காது.செல்லப் பிராணிகள் மட்டுமே இருக்கும் .

நந்தகுமார் : மதங்கள் இருக்குமா ?

பதில் : ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் ஆகும். மதம் என்பது அவரவர் விருப்பம் .அவர்களுக்கு என்ன மதத்தை பின்பற்றவேண்டுமோ அதனை பின்பற்றலாம்.அதற்கு எந்தத் தடையும் கிடையாது.

காவியா : கல்வி முறை எப்படி இருக்கும் ?

பதில் : அடிப்படைக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முழுவதும் தாய் மொழியில் இருக்கும். 12ம் வகுப்பு வரை உண்டு.பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே.12ம் வகுப்புக்கு பிறகு நாம் விரும்பும் படிப்பைப் படிக்கலாம்.

இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் தெரிவித்தார். 

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும் 

ஹாங்காங் நாட்டில்  தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி 

 சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் 

 அடிப்படை கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத்தரப்படும் 

 அடிப்படைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும் 

 சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும்  தாய் மொழி வழிக் கல்வியாலேயே தர முடியும்.

 அரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. 

ஹாங்காங் நாட்டில் பொதுப் போக்குவரத்தே அதிகம் பயன்படுத்தப்படுகிறது 

 விலங்குகள் அதிகம் இல்லாத நாடு ஹாங்காங் 

 ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் 

சனிக்கிழமை பள்ளி செயல்படும்போது முழுநேரம் செயல்பட வேண்டுமா? - RTI


விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் - உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்

விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளியில் ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும் மாணவ–மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

விபத்தில் மூளைச்சாவு

நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மனைவி லதா. இவர்களது மகன் அவினாஷ் (வயது 12).

நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவினாஷ் 7–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் சுயநினைவிழந்த அவினாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ஆனால் மாணவன் மூளைச்சாவு அடைந்ததால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் மாணவனை உயிர் பிழைக்க வைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களால் கைவிரிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவினாஷ் இதயம், சிறுநீரகங்கள் போன்றவை தொடர்ந்து இயங்கி வந்ததால், மகனை இழந்தாலும் அவனது உடல் உறுப்புகளாவது வேறு சிலர் மூலம் உயிர் வாழட்டும் என்று எண்ணிய அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

தகனம்

இதனைத்தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டு அதே மருத்துவமனையில் மாணவனின் இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அவினாஷ் உடலில் இருந்து அகற்றப்பட்டன. இதில் இதயம் சிறப்பு ஆம்புலன்சு மூலம் போலீஸ் பாதுகாப்போடு நெல்லையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது.

இதேபோல் சிறுநீரகம் ஒன்று மதுரைக்கும், கல்லீரல் திருச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

மற்றொரு சிறுநீரகம், உறுப்புகள் தானம் பெறப்பட்ட ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டது. 2 கண்கள் நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவன் அவினாஷின் உடல் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட அவினாஷின் உடலுக்கு அந்த பகுதி மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அஞ்சலி

இந்தநிலையில் அவினாஷ் படித்த அரசு பள்ளியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதையொட்டி பள்ளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கலாதேவி, ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவினாஷின் ஆத்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அஞ்சலி செலுத்திய ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆசிரியர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். சில மாணவ–மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆறுதல்

இந்தநிலையில் நேற்று காலை மாணவன் அவினாஷ் வீட்டுக்கு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் சென்றார். அங்கு அவினாஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு மற்றும் பலர் உடன் சென்றனர்.

2 பேரிடம் விசாரணை

இதற்கிடையே மாணவன் அவினாஷ் விபத்திற்கு காரணமான வாகனத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஒரு மோட்டார் சைக்கிள் தான் மாணவன் மீது மோதியது தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திறமையான மாணவனை இழந்து விட்டோம்‘ பள்ளி தலைமை ஆசிரியை உருக்கம்

மாணவன் அவினாஷ் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாதேவி உருக்கமாக கூறியதாவது:–

எங்களது பள்ளியில் படித்து விபத்தினால் இறந்த அவினாஷ் திறமையான மாணவன். பல்வேறு திறமைகள் அவனிடம் இருந்தது. கடந்த பள்ளி ஆண்டு விழாவில் கூட அவினாஷ் நடன போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றான். அவனுக்கு மரக்கன்றுகள் நடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

ஓவியம் வரைவதிலும் கைதேர்ந்த மாணவன். பாரதிதாசன், பாரதியார் போன்றோரின் ஓவியங்களை சிறப்பாக வரைவான். ஒரு புகைப்படத்தை பார்த்த ஒரு சில மணித்துளிகளில் அது போலவே வரையும் வல்லமை உடையவன். நல்ல திறமையான மாணவனை எங்களது பள்ளி இழந்து விட்டது. பள்ளி மாணவ–மாணவிகள் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை சாலைகளில் அழைத்து செல்லும்போது கவனமாக அழைத்துச்செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்த்தை விளையாட்டில்... அரையிறுதியில் அடியெடுத்து வைக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றானது வரும் ஞாயிறு (28/08/2016) மாலை  6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டம்.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தி தேசிய வேலையுறுதி திட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய வேலையுறுதி திட்டம் துவங்கிய போது, ஊரக வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தொடக்கக்கல்வி -பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் எவ்வாறு எழுத வேண்டும் என-காஞ்சிபுர மாவட்ட தொடக்கக் அலுவலரின் செயல்முறைகள்


5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு

 வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.

'பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்' : விடியல் கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்வு முறையை மாற்றவும், தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், தமிழ் மாணவர்கள்சேர்வது நிஜமாகாத கனவா' என்ற தலைப்பில், விடியல் அறக்கட்டளை மற்றும், 'தி டான் கல்ச்சுரல் அண்ட் சோஷியல் அசோசியேஷன்' சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.

இதில், கல்வியாளர்கள் பேசியதாவது:

தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29) வெளியிடப்பட உள்ளன.

இவ்வருடத்தின் புதிய தலைமுறை சிறந்த ஆசிரியர் விருது பெறவிருக்கும் தோழர் தோழிகளுக்கு கல்விச்சிறகுகளின் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்..

ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப் பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண வேண்டி வரும்.

உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமானப் பரிமளித்திருக்கும் வாட்ஸ் அப், தனது பயனர்களின் ப்ரைவஸியை முழுமையாகப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பைக் கையகப்படுத்திய பிறகு இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இரு வருடங்களுக்கு முன்னால் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதே நேரத்தில் வாட்ஸ் அப்பிடம் அதன் பயனர்களின் ப்ரைவஸியை மதிப்போம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் வாட்ஸ் அப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது ஃபேஸ்புக்.

இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், சலுகைகள், செய்திகளை தனிநபர் பயனாளிக்கு அனுப்ப முடியும். அதே நேரம் பயனாளிகள் அவற்றை பிளாக் செய்து கட்டுப்படுத்தவும் முடியும். வாட்ஸ் அப், வழக்கமான விளம்பரங்களைத் தடை செய்யும் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

அதே நேரம் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் செல்பேசி எண்களை ஆன்லைனில் பதிவிடாது எனவும், விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் எண்கள் பகிரப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக் கிழமை) தனது நிறுவனத்தின் ப்ரைவஸி கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ள வாட்ஸ் அப், பயனர்கள் அதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் முன்னதாக 2012-ல் (ஃபேஸ்புக்குடன் இணைவதற்கு முன்பாக) சேவை விதிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குடன் இணைந்து இரண்டு கணக்குகளையும் ஒருங்கிணைக்க உள்ளது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்களின் தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள் (OS) வகைப்பாடு, ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

ஃபேஸ்புக்கின் யுக்தி

ஃபேஸ்புக் பயனர்களில் பலரே, தங்களின் செல்பேசி எண்ணைக்கொண்டுதானே கணக்கைத் தொடங்கியிருப்பர். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். செல்பேசி மூலம் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த தற்போதைய எண்ணையே அவர்கள் கொடுக்க வேண்டும். இதனால் வாட்ஸ் அப்பின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு முக்கியமானவை.

வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை இதிலும் தொடரும் என்று வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.

இந்த கணக்குகள் ஒருங்கிணைப்பு, தனிநபர் உரிமையைப் பாதிப்பதாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வாட்ஸ் அப், தற்போதைய பயனாளிக்கு புதிய கொள்கையை ஒத்துக்கொள்ளவோ அல்லது சேவைப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவோ ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு, உங்களது வாட்ஸ் அப் மெசஞ்சருக்கு சென்று 'செட்டிங்ஸ்' கிளிக் செய்து 'அக்கவுன்ட்'-ல் உள்ள 'பிரைவஸி' ஆப்ஷனுக்குள் நுழைந்தால் கடைசியாக ஃபேஸ்புக் இணைப்பு குறித்த பகுதி இருக்கும். அதில், டிக் ஆப்ஷனை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.