Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 3 September 2016

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி


நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.

இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.

அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER -2016 Tamil Version & English Version & TIME TABLE

Tamil Version
English Version
Time Table

தமிழக அரசு - விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அறிந்து கொள்ள

பயனாளி விவரம் அறிய:-
http://www.svnimaging.org/cooperative

தள்ளுபடி தொடர்பான அரசு ஆணைகள் :-

http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_59_2016.pdf

http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_50_2016.pdf

மத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது?

2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-
https://canarabankcsis.in/SubsidyEnquiry/SubsidyEnquiry.aspx

2009 முன் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள :-
https://canarabankcsis.in/CSIS_Old_Data…/SubsidyEnquiry.aspx

கல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-
http://www.iba.org.in/HRD.asp
http://www.iba.org.in/circularnew.asp

கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு

 கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

"மாணவர்கள் அறிவு தேடலில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும்

மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நல் ஆசிரியர் விருது பெறும் நபர்கள் விவரம்!!


1 ஜிபி பிராட்பேண்ட் 1 ரூபாய்... பி.எஸ்.என்.எல். அதிரடி!

இது இணையவாசிகளுக்கான தீபாவளி சீசன். ரிலையன்ஸ் நிறுவனம், அதன் ஜியோ சேவையின் மூலம் இந்தியாவின் மொபைல் கட்டணங்களை டரியல் செய்யப் இருக்கிறது. ஜியோவின் அறிவிப்புப்படி, ஒரு ஜிபியின் விலை 50 ரூபாய்க்கும் குறைவாக மாறப் போகிறது. ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே 70% வரை அவர்களது டேட்டா பேக் ரேட்டுகளை குறைத்து இருக்கிறார்கள்.

4ஜியில் இப்படி, தனியார் நிறுவனங்கள் கலக்கிக்கொண்டு இருக்க, பி.எஸ்.என்.எல்லும் அதிரடியில் இறங்க இருக்கிறது. வரும் செப்டெம்பர் 9-ம் தேதி, பி.எஸ்.என்.எல் அன்லிமிடெட் BB 249 என்ற   திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் மூலம் 2MBps வேகத்தில் 300 ஜிபி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்க இருக்கிறார்களாம்.

இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் 300 ஜிபி டவுன்லோட் செய்தாலும், 1 ஜிபிக்காக அவர் செலவு செய்ய இருக்கும் 1 ரூபாய்க்கு குறைவாக இருக்கப் போகிறது. ஆறு மாதங்களுக்குப் பின், இந்தத் திட்டத்தில், அவர்கள் விரும்பும் வேறு திட்டத்திற்கும் மாறிக் கொள்ளலாமாம்


ரிலையன்ஸின் ஜியோ மொபைல் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பி.எஸ்.என்.எல்லின் இந்தத் திட்டம் வர்த்தக மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்க இருக்கிறது. ஆக, தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை, தங்கள் வசம் வைத்துக்கொள்ள பெரிய அளவில் போராட வேண்டியது இருக்கும்.




எது எப்படியோ, இததனை நாட்களாக டேட்டாவுக்கு அதிகப் பணம் வசூலித்துக்கொண்டு இருந்த நிறுவனங்கள், இனி குறைவான விலைக்கு மாறுவார்கள். வாடிக்கையாளர்கள் இது மகிழ்ச்சி சீசன்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.


இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'

பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கால்நடை பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 15ல் நடைபெறும். மேலும், புதிய சான்றிதழ் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது,'' என, துணைவேந்தர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:

புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் தின சிறப்பிதழில் விருது பெற்ற ஆசிரியர்கள்


அழிந்துவருகின்ற தமிழ்நாட்டு பாரம்பரிய கிராமியக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் , விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அரசுப்பள்ளி




அழிந்துவருகின்ற
தமிழ்நாட்டு பாரம்பரிய கிராமியக் கலைகளை
மீட்டெடுக்கும் முயற்ச்சியில், விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அரசுப்பள்ளி பற்றிய,
சிறப்புபார்வை
நமது தந்தி தொலைக்காட்சியில்.
* சனி 03.09.16 மதியம்
2 .00 - 3 .00 வரை.
* மறுஒளிபரப்பு :
ஞாயிறு 04.09.16.
இரவு: 10.30 - 11.30.
நன்றிகள் :
தந்தி -தொலைக்காட்சி
நம்நாடு நிகழ்ச்சியின்
DIRECTOR - Mr. RANJITH.

முதல் வகுப்பு "வண்ண வண்ணப் பூக்கள்'பாடல் வீடியோ

இயற்கையை ஆராதிக்கும் ‘பாடல்' ஆசிரியர்கள்!



‘மண்ணே... மரமே... வணக்கம்!' இது இயற்கையை நேசிக்கும் இளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பத்துப் பேர் கைகோர்த்து சமைத்திருக்கும் குறுந்தகடு. இதிலுள்ள பதினோரு பாடல்களும் இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

21ஆம் நூற்றாண்டிலும் தொடரும் குழந்தைத் திருமணம்!

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியில், சில்ட்ரன் ரைட்ஸ் அண்ட் யூ என்னும் தொண்டு நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தது. அதில், கல்வி அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் 18 வயதுக்குக்கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும். இதன்மூலமாக, குழந்தைகள் சிறந்த கல்வியறிவைப்
பெற முடியும். மேலும் நாட்டில் அதிகளவு நடைபெறும் குழந்தைத் திருமணத்தையும் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 45 லட்சம் சிறுமிகளுக்கு 18 வயதை அடையும் முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இங்குதான் குழந்தைத் திருமணம் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது என்கிறது அந்த ஆய்வு. மேலும் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமே 13.5 லட்சம் குழந்தைத் திருமணம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 1.6 கோடி மக்கள் இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்று கூறி, சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர். மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவன், மனைவி இருவருக்குமிடையே நடக்கும் உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளது. மேலும் 15வயதுக்குட்பட்ட தம்பதியரில், மனைவியின் விருப்பம் இல்லாமல்கூட உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்று மத்திய அரசு விளக்கமளித்தது. ஆனால் குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம். ஆனால் இது, நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்றும் அந்த தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 375, பிரிவு 2ன் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவிக்கும் கணவனுக்கும் இடையே உள்ள உடலுறவு பாலியல் பலாத்காரம் ஆகாது. இது, அவர்களுக்கிடையே பாதுகாப்பை உருவாக்கும் எண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது என்றது மத்திய அரசு.

இருப்பினும், 18 வயதுக்கு குறைந்து திருமணம் செய்தாலே அது குழந்தைத் திருமணம் ஆகும். க்ரை தொண்டு நிறுவனத்தின் மண்டல இயக்குநர் சோஹா மொய்த்ரா இதுகுறித்து கூறுகையில், குழந்தைத் திருமணம் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார். மேலும் வறுமை, கல்வியின்மை, கலாச்சாரம், பாதுகாப்பு போன்ற காரணங்களைக் காட்டி சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். குழந்தைத் திருமணம் அவர்களுடைய கல்வியுரிமையை மட்டும் பாதிக்கவில்லை, வன்முறையைத் தூண்டுகிறது. இந்தியச் சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை அழிக்கவல்ல ஒரே ஆயுதம் கல்வி மட்டும்தான்.

ஃபேஸ்புக்கின் முதல் முயற்சியே தடங்கல்!

ஃபேஸ்புக் அழிவில்லா ஒரு ராட்சதனாக உயர வளர்ந்து நிற்கிறது. அனைத்து நாடுகளும் சில தேவைகளுக்காக, மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் நட்புக்கரம் நீட்டி ரிக்வஸ்ட் கொடுத்து காத்திருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை அடைய முடிவெடுத்து தொடங்கப்பட்டது, ஃபேஸ்புக் சர்வருக்கான தனி
சேட்டிலைட் திட்டம். செப்டம்பர் 3ஆம் தேதி, பூமியின் சுற்றுவட்டப்பாதையில், ஃபேஸ்புக்கின் சேட்டிலைட்டான Falcon 9 ஏவப்பட இருந்தது. பலகட்ட சோதனைகளையும் தேறிவந்த இந்த ராக்கெட், திடீரென நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சோதனையில் வெடித்துச் சிதறியது. 95 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ராக்கெட்டை பிரான்ஸைச் சேர்ந்த யூடெல்சட், 5 வருட ஒப்பந்தத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விற்றார். இவ்வளவு பெரிய நஷ்டத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் நிறுவனம் இந்த திட்டம் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். “இந்த நஷ்டத்தால் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறோம். ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் இண்டர்நெட் கிடைக்கவேண்டும் என்ற எங்களது குறிக்கோளிலிருந்து பின்வாங்கமாட்டோம்” என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும், அதிக ஸ்பான்சர் விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் கொடுத்து நம்மை வைத்துத்தான் காசு பார்க்கப்போகிறார்கள்.

வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்
வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 13 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 954 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 4,720 பேர் உள்ளனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பங்களை பொதுமக்கள் தொடர்ந்து அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார். இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 11 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

25 ஆயிரம் கோடி இழப்பு'- போராட்டம் எதிரொலி!

எங்கெங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கெதிரான போராட்டங்களும் இருக்கும். அந்தவகையில் தனியார்மயம், தாராளமயம், பாதுகாப்புத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15,000 தருவதற்குக்கூட ஒப்புதல்
அளிக்காத மத்திய அரசு என, மத்திய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிமிகு எதிர்வினையே நாடு தழுவிய இந்தப் பொது வேலைநிறுத்தம்’ என்கிறார் சென்னை கிண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சட்டை தொழிலாளர் ஒருவர்.

நாடு முழுக்க காத்திரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்தியத் தலைநகரம் தில்லியின் வீதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன. சம்பள உயர்வை வலியுறுத்தி தில்லியில் செவிலியர்களும் (நர்ஸ்) பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஏஎன்ஐ செய்தி. மும்பையில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்வண்டிகள் (ரெயில்) வழக்கம்போல் இயங்கின. கர்நாடகாவில் ஒருசில பேருந்துகளும், ஆட்டோ ரிக்ஷாக்களும் வழக்கம்போல் இயங்கின. ஆனால் கேரளாவில் முழுமையாக இயங்கவில்லை. அங்கே மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி புரிவதால் முழு அடைப்புப் போராட்டம் அங்கே முழுமையான வெற்றியை வெளிக்காட்டியது. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைகள் வெளிப்பட்டன. மேற்குவங்க வடக்கு பார்கனாஸ் பகுதியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட சிலிகிரி கார்ப்பரேசன் மேயர் அசோக் பட்டாச்சாரியா 15 பேருடன் கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வாரணாசியில் சாலைப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் பல்வேறு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழ்நாடு அராசங்கம் அறிவித்திருந்ததால் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. இருந்தாலும் 50 விழுக்காட்டுக்கு மேலானோர் பணிக்கு வரவில்லை. மத்திய அரசு அலுவலகங்கள் பெரும்பாலான அளவில் வெறிச்சோடிக் கிடந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 600 வங்கிக் கிளைகள் முழுவதுமாக முடங்கின. ‘ஏழாவது நிதிக் குழுவிடம் வலியுறுத்திய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 வழங்கக்கூட ஒப்புக்கொள்ளவில்லை’ என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் தொழிலாளர்கள். அது என்ன மாத ஊதியக் கணக்கு ரூபாய் 26,000?

‘1957இல் நடந்த 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமானது குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட ஐந்து முக்கிய அம்சங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டது. முதலாவதாக, ஊதியமானது மூன்று நபர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2,700 கலோரி அளவுக்கு உணவு வாங்கக்கூடிய திறன் வேண்டும். ஒரு தொழிலாளியின் குடும்பம் 72 கஜம் துணி வாங்குவதற்கு முடிய வேண்டும். அரசு வழங்கும் மானிய வீடுகளின் பரப்பளவுள்ள இடத்தில் வாடகைக்குக் குடியேறும்வகையில் பணம் கிடைக்க வேண்டும். சமையல் செய்வதற்கான எரிபொருள், விளக்கெரிப்பதற்கான செலவு போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 20% கூடுதலாகக் கிடைக்க வேண்டும். இந்த ஐந்து அம்சங்களை பூர்த்திசெய்வதாக குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்று முதலில் வரையறுக்கப்பட்டது. 1991இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு ஆகியவற்றையும் இதில் சேர்த்துக்கொண்டு மேலும் 25% ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்த வரையறைகளையெல்லாம் ஒருசேரப் பார்த்தால், குறைந்தபட்ச மாத ஊதியம் என்பது ரூ.26,000 ஆக இருக்க வேண்டும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன’ என எளிமைப்படுத்தி ஹிந்து நாளிதழில் விளக்குகிறார் ஜி.சம்பத். அதேநேரம், பொது வேலைநிறுத்தத்தை தடுக்க குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்து மத்திய அரசு மீண்டும் ஒரு அறிவிப்பைச் செய்தது. இந்த அறிவிப்பு, வேளாண்மை அல்லாத பிற துறைகளில் வேலைசெய்யும் முறையான தொழில்திறன் பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டது. அன்றாட குறைந்தபட்ச ஊதியம் ரூ.246-லிருந்து ரூ.350 அல்லது மாத ஊதியம் ரூ.9,100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை ஆர்.எஸ்.எஸ். சார்புள்ள பாரதிய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்.) தவிர்த்த ஏனைய மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்று நிராகரித்துவிட்டன.

‘அடிப்படையான எந்தவித தொழிலாளர் நலன்களையும் குறிப்பாக, அமைப்பாக்கப்படாத ஊழியர்கள்மீது எந்தவிதப் பார்வையும் இல்லாமல் மத்திய அரசு நடந்துகொள்கிறது. யானைப் பசிக்கு சோளப்பொரியா? அவர்களுக்கு உண்மையை, ஒற்றுமையை வலியுறுத்தும் எங்கள் போராட்டம்’ என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர். தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை மூர்க்கமாக ஒடுக்கினர். தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டன.

வட மாநிலங்களில், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இன்று முற்றிலும் இயங்கவில்லை. இமாசலப்பிரதேசத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய சேவை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன . நாடுமுழுக்க காத்திரமாக நடந்த பொதுவேலை நிறுத்தப் போராட்டங்களால் பொருளாதார இழப்புகள் கடுமையாக ஏற்பட்டதாக பொருளாதார பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கோல் இந்தியா நிலக்கரி நிறுவனம், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஆயில், ஏச்ஏஎல் மற்றும் பெல் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளிலும் இன்று உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன.

வங்கிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் அனைத்தும் முடங்கின. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் யாரும் இன்று வேலைக்கு வராததால் நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின. சில நகரங்களில் ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 2 இன்றைய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 25,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன அதே வணிக பத்திரிகை செய்திகள்.

வெறிச்சோடிய இந்தியத் தெருக்களும் பூட்டிய அலுவலகக் கதவுகளும் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட வீரியத்தின் தொடக்க வெற்றியாக வெளிப்படுத்துகின்றன.

தொகுப்பு:சே.த.

தமிழகத்தின் ஆளுனர் ஆனார் வித்யாசாகர் ராவ்!

தமிழக கவரனராக இருக்கும் கே.ரோசய்யாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு முடிந்து விட தமிழகத்துக்கு புதிய ஆளுனர் நியமிக்கப் படாத நிலையில் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ்
தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதை அடுத்து ஆளுனராக பொறுப்பேற்றுக் கொள்ள இன்றுகாலை 11 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர் ஜெயலலிதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

பாராளுமன்ற சபாநாயகர் தம்பித்துரை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோ ரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலைய வாயிலில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் காவல்துறையின் மோட்டார் சைக்கிள் வீரர்களின் அணிவகுப்போடு கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார் வித்யாசாகர் ராவ் பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வித்யாசாகர் ராவுக்கு ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

போலிசுக்கு உதவும் வாட்ஸ் அப் குழு !

*ரயில்* *கொள்ளையில்* *துப்பு* *துலக்க* '*வாட்ஸ்* - *ஆப்* *குரூப்*
ரயில் கொள்ளை வழக்கில், உடனுக்குடன் தகவல் பரிமாற, 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆக., 28ல், சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு,ஆறு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவான, சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவியாக, ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் போலீசாரும்
துப்பு துலக்கி வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி.,மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், டி.எஸ். பி., இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர்கள் மிறக்கப்பட்டுள்ளனர்.அவர்கள்,சென்னை,
விருத்தாச்சலம்,சேலம், ஈரோடு மற்றும் வட மாநிலங்கள் என, பல்வேறு இடங் களில் முகா மிட்டுள்ளனர்.

விசாரணையில் கிடைக்கும் தகவல்களை, உடனுக் குடன் உயர் அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நீடித்து வந்தது. அதை எளிமைப்படுத்த, போலீஸ் அதிகாரிகள், 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ்அதிகாரி ஒருவர் கூறுகை யில், 'ரயில் கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசாரை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக, வாட்ஸ் - ஆப் குரூப் துவங்கி, விசாரணையை தீவிரப்படுத்த உள்ளோம்' என்றார்.

1,000 பக்க அறிக்கை! ரயில் கொள்ளை வழக்கில்,
இதுவரை நடந்த விசாரணை குறித்து, தனிப் படை போலீசார், நேற்று, 1,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் ஒப்படைத்துள்ள னர்.

அதன் அடிப்படையில் சேலம், ஈரோடு பகுதியில் கொள்ளையர்களை தேடும் பணி நடந்து வருகிறது.