Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 4 September 2016

ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து!

சென்னை:ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி,இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது; ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டது; மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்; ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப்பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

இராமநாதபுர மாவட்டம் தமிழ்,சமூக அறிவியல் காலிப் பணியிடங்கள் !

1.MANDAPAM(G)
2.NAMBUTHALAI
3.KURUVADI
4.KULATHUR
5.VATTANAM
6.ATANGUDI

*8.9.2016 நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகள் !


திறமையான ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும்: காந்திகிராம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் கருத்து


திறமையான அர்ப்பணிப்பு உணர் வுடன் கூடிய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும் என்று காந்திகிராம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜஹிதா பேகம் தெரிவித்தார்.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?


Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016


சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம்!!


EMIS- குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்


Annamalai University Results DDE 2016 published

‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.

ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் என கருணாநிதி தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

            ஆசிரியர்களுக்கு விருது ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர்! அவர் பிறந்த நாளான செப்டம்பர் 5–ம் நாள், ‘‘ஆசிரியர் தினம்’’ என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுவதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. எண்ணற்ற சலுகைகள் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், ‘‘நல்லாசிரியர் விருது’’ என வழங்கப்பட்ட அந்த விருதின் பெயரை, 1997–ல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர் மாற்றம் செய்து வழங்கிட வகை செய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்க ஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின் ‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாக மாற்றம்; தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர்–அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என எண்ணற்ற சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.  ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகள் இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக் குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்த ஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்–அரசு ஊழியர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகை செய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திட விரும்புகிறேன். ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமை விரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில் ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது. இவ்வாறு ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின் சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும் எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

56 அரசு பள்ளிகளுக்கு மரத்தடி வகுப்பறைகள்.

தமிழக அரசின் பொது மற்றும் சமூகப்பிரிவு தொடர்பான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் (2015 மார்ச் முடிய) கூறப்பட்டு இருப்பதாவது:

        சேலம், விழுப்புரம், திருவண்ணா மலை, தஞ்சாவூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் 2010-12-ல் தரம் உயர்த்தப்பட்ட 83 அரசு பள்ளிகளில் 58 பள்ளிகள் கட்டிடம் கட்டுவதற்கு சொந்த இடம் இல்லாமலேயே தரம் உயர்த்தப்பட்டிருப்பது ஆய்வின் போது தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்த பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும், உயர்நிலைப் பள்ளி கட்டிடங் கள் கட்டப்படாத காரணத்தினால் 56 பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. வகுப்புகள் திறந்தவெளியிலும் அதாவது தாழ்வாரங்கள், மரத்தடி, சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற இடங்களிலும் தடுப்பு போட்டு பிரித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

இலவச 'லேப்டாப்' வினியோகத்தில் ரூ.242 கோடி முறையற்ற செலவு.

தகுதியற்ற மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கிய வகையில், தமிழக அரசு, 242 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்துள்ளது' என, மத்திய தணிக்கை துறை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          தமிழகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. 2013 - 14ல், மத்திய தணிக்கை அறிக்கையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதை தவிர்த்திருக்கலாம்' என, சுட்டிக்காட்டப்பட்டது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறை முதன்மை செயலரும், 'சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தவறுதலாக வழங்கப்பட்டது' என, பதில் அளித்திருந்தார்.இதன்படி, 2011 - 12 மற்றும், 2012 - 13ல், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகளில், சுயநிதிப் பிரிவில் தகுதியற்ற மாணவர்களுக்கு, 242 கோடி ரூபாய் மதிப்பில், 1.61 லட்சம், லேப்டாப் வழங்கப் பட்டுள்ளது என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோட்டை விட்ட 'எல்காட்':
அதேபோல, 'எல்காட்' எனப்படும், தமிழ்நாடு மின் னணு நிறுவனம், தனக்கு சொந்தமான பொருளா தார மண்டலங்களில், குத்தகை வாடகை கட்ட ணங்களை முறையாக வசூலிக்காததால், 12.41 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள் ளது என்றும், தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ள தாவது: சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக் கான சிறப்பு பொருளாதார மண்டலங்களை, 1,588 ஏக்கரில் எல்காட் அமைத்துள்ளது. அவற்றை, 99 ஆண்டு குத்தகை அடிப்படையில், ஐ.டி., நிறுவனங் களுக்கு,வாடகைக்கு விட்டுள்ளது. டிட்கோ' எனப் படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தை பின்பற்றி, வாடகை வசூலிக்கப்படுகிறது. டிட்கோ நிறுவனம் குத்தகை வாடகை வசூலிக்க, 90 நாட்கள் அனுமதி அளித்து, அதன்பின், ஆண்டிற்கு, 15.5 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. எல்காட், 60 நாட்களுக்கு மட்டும் வாடகை தாரருக்கு அனுமதி அளித்தது. தாமத மாக செலுத்தப்பட்ட தொகைக்கு, வட்டியை வசூலிக்க வில்லை. இவ்வாறாக, 2010 மே முதல், 2014 செப்டம் பருக்கு இடைப்பட்ட காலத்தில், எட்டு குத்தகைதாரர் களிடம், 27.95 கோடி ரூபாய் குத்தகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து பேர், 502 நாட்கள் தாமதமாக குத்தகை செலுத்தினர்; அதற்கான, 1.59 கோடி ரூபாய் வட்டி வசூலிக்கப்படவில்லை. எட்டு குத்தகைதாரர்களிடம் இருந்து, 10.82 கோடி ரூபாய் நில மேம்பாட்டுக் கட்டணத் தையும், எல்காட் வசூலிக்காததால், 12.41 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!

ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அந்த வேண்டுகோளை ஏற்று, அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு "இந்திய அரசியலின் பரணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் அவர் பாடம் நடத்த உள்ளார் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்த ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், 
770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.

அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா,புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இணையதள வசதியை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறியதாவது: தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதள பயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாணவர்கள் பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில் பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

32 மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை

தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், பள்ளிக்கல்வி சார்ந்த, விளையாட்டு துறையில், உடற்கல்வி அதிகாரி பணி இடங்கள் காலியாக உள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள், போட்டிகளில் பின்தங்கி உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில், 32 மாவட்டங்களிலும், உடற்கல்வி இயக்குனர் என்ற, மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள் உள்ளனர். 
இவர்களின் கட்டுப்பாட்டில், அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் விளையாட்டு பிரிவுகள் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்கும் நிதியை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு தயாராக, அரசு, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்த நிதி, மாவட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். பள்ளிக்கல்வி, விளையாட்டு பிரிவில் அடுத்தடுத்து காலியான, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணி இடங்கள், நிரப்பப்படாததால், 32 மாவட்டங்களிலும்,இந்த இடங்கள் காலியாக உள்ளன.அரசின் விளையாட்டு நிதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தரப்படுகிறது. இந்த நிதி, அந்த அதிகாரிகளால், முறையாக பயன்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து, விசாரிப்பதோடு, காலியாக மாவட்ட விளையாட்டு அதிகாரி இடங்களையும் நிரப்ப வேண்டும் என, விளையாட்டு பிரிவு மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க பொதுச்செயலர் தேவிசெல்வம் கூறுகையில், ''மாவட்ட அளவில், விளையாட்டு பிரிவுக்கு, தனி அதிகாரி பணியிடங்களை நிரப்பினால், முறைகேடுகள் நடக்காது. நீண்ட நாட்களாக, இந்த இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் புகாரில், உண்மை உள்ளதா என, விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நல்லது!


ஒரு மாணவனின் வளர்ச்சியில் பெற்றோரும் வகுப்பு ஆசிரியர்களும் முக்கியமான பங்காளிகள்

அமெரிக்காவின் டென்வர் நகரில் டவுல் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் கைல் ஸ்வார்ட்ஸ். மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துமாறு தலைமை ஆசிரியை கூறினார். வகுப்பறைக்குச் சென்ற ஸ்வார்ட்ஸ், இந்தக் குழந்தைகளைப் பற்றி தகவல் தெரிந்தால் அவர்களுடன் நட்பை வலுப்படுத்திக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். எனவே, “என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நல்லது என்று உங்கள் மனதில் எதை நினைக்கிறீர்களோ அதை எழுதுங்கள்’’ என்று எல்லாக் குழந்தைகளிடமும் கூறினார். வகுப்பறைக்கு வந்தாலே ஏதாவது பாடத்தை எழுது, கணக்கைப் போடு என்று சொல்லும் ஆசிரியர்களைவிட, இவர் வித்தியாசமாக இருக்கிறாரே என்று குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. அத்துடன் தங்களுடைய பிஞ்சு மனங்களில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டார்கள். அதைப் படித்த கைலுக்கு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி! ஆம், அவர்கள் அளித்த தகவல்கள் அப்படிப்பட்டவை.

“வீட்டுப் பாடம் எழுத என்னிடம் பென்சில்கள் இல்லை என்பதை ஆசிரியர் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி” என்று ஒருவன் தன் குடும்ப வறுமையை நாசூக்காகச் சுட்டிக்காட்டியிருந்தான்.

“வீட்டில் பாடம் படித்தேனா என்று சரிபார்த்துக் கையெழுத்துப் போட வீட்டில் என் அம்மா, நான் கண் விழிக்கும் நேரம் இருப்பதில்லை” என்று தன்னுடைய தாய் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவதை ஏக்கத்தோடு பதிவுசெய்திருந்தான் இன்னொருவன்.

அப்பாவைப் பார்க்காத குழந்தை

“எனக்கு 3 வயதாக இருக்கும்போதே அப்பாவைக் குடியேற்றத் துறை அதிகாரிகள் மெக்சிகோவுக்கு நாடு கடத்திவிட்டார்கள். கடந்த 6 ஆண்டுகளாக நான் அப்பாவை நேரில் பார்த்ததே இல்லை” என்று ஒரு மாணவன் தன்னுடைய குழந்தைப் பருவமே நொறுங்கிக் கிடப்பதை அழகாக வெளிப்படுத்தியிருந்தான்.

கைல் ஸ்வார்ட்ஸ் இப்போது ஆசிரியையாகி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. குழந்தைகளின் நிலைமை என்ன, எப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து வருகிறார்கள், அவர்களுடைய கவலை என்ன, ஆசை என்ன என்பதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால்தான், அவர்கள் ஏன் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள், சிலவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள், சிலவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். வகுப்பறைக்கு வெளியே அவர்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சரிசெய்தால்தான், வகுப்பில் அவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறார். தனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தைத் தன்னைப் போன்ற சக ஆசிரியர்களிடம் கடந்த ஆண்டு பகிர்ந்துகொண்டார். இதற்காக ட்விட்டரில் ‘ஐ விஷ் மை டீச்சர் நியூ’ (#iwishmyteacherknew) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். அது அப்படியே வைரலானது. பிற ஆசிரியைகளும் அதையே பின்பற்றித் தங்களுடைய மாணவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து வியப்படைந்தார்கள். பலர் அதில் முக்கியமானவற்றை கைல் ஸ்வார்ட்ஸுக்கே அனுப்பி வைத்தார்கள்.

இதையே அடிப்படையாக வைத்து, ‘ஐ விஷ் மை டீச்சர் நியூ: ஹவ் ஒன் கொஸ்டின் கேன் சேஞ்ச் ஃபார் அவர் கிட்ஸ்’ (I Wish My Teacher Knew: How One Question Can Change For Our Kids) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையே எழுதிவிட்டார் ஸ்வார்ட்ஸ். ஒரு மாணவனின் வளர்ச்சியில் பெற்றோர்களும் வகுப்பு ஆசிரியர்களும் முக்கியமான பங்காளிகள் என்று கருதுகிறார் ஸ்வார்ட்ஸ்.

அவருடைய கருத்தை வாஷிங்டன் நகரைச் சேர்ந்த மெலோடி மோலினாஃப் என்ற தாய் ஆமோதிக்கிறார். அவருக்கு 9, 11 வயதுகளில் 2 மகன்கள். “எங்களுடைய குழந்தைகளை நன்றாக வளர்ப்பதில் ஆசிரியர்கள் எங்களுக்குப் பங்காளிகள்; இந்தப் பெரும் பொறுப்பை நாங்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் தோள்களில் ஏற்றியிருக்கிறோம். என்னுடைய மகன்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள சவால்கள் என்ன என்பதை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எதைச் சொல்லித் தருகிறோம் என்பதுடன் யாருக்குச் சொல்லித் தருகிறோம் என்பதும் முக்கியம்” என்கிறார் மெலோடி மோலினாஃப்.

பெற்றோர்களின் ஆர்வம்

இதே நிலையை நான் எதிர்த்தரப்பிலிருந்து பதிவுசெய்ய விரும்புகிறேன் என்கிறார் 4-வது வகுப்புக்குப் பாடம் நடத்தும் மேரி கிளேமேன். “இதுவரை நான் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறேன். அவர்கள் பெருக்கல், வகுத்தல் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே, அவர்கள் எப்படி வகுப்பில் நடந்துகொள்கிறார்கள், எப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று அறிந்துகொள்ள அவர்களுடைய பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று வியக்கிறார் மேரி கிளேமேன்.

என்னுடைய மாணவர்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால், நான் இந்தத் தவறுகளைச் செய்திருக்கவே மாட்டேன் என்று தன்னுடைய புத்தகத்தில் சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்வார்ட்ஸ். ஸ்வார்ட்ஸின் வகுப்பில் கிறிஸ் என்ற மாணவன் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அறிவியலை மேலும் அறிவதற்கான ஒரு கோடைக்காலப் பயிற்சி முகாமுக்கு அவனுடைய பெயரைப் பரிந்துரை செய்துவிட்டு, அந்த மாணவனுக்குத் தான் பெரிய சலுகையைச் செய்துவிட்டதாக அகமகிழ்ந்திருந்தார் ஸ்வார்ட்ஸ். மிகுந்த வறுமையில் வாடிய அவனுடைய பெற்றோரால் பணம் செலவழித்து அவனை அந்த முகாமுக்கு அனுப்பிவைக்க முடியவில்லை என்று சில நாட்களுக்குப் பிறகுதான் ஸ்வார்ட்ஸுக்குத் தெரிந்தது.

பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்

தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தாலும் சோகத்தில் ஆழ்ந்துவிடும் மாணவர்களின் வாட்டத்தைப் போக்க வகுப்பறைகளால் முடியும் என்று நம்புகிறார் ஸ்வார்ட்ஸ். வகுப்பறைச் சூழல் மூலம் குழந்தைகளின் துயரங்களைக் குறைத்துவிட முடியும் என்கிறார். இதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்களின் துயரங்கள், இழப்புகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவது அவசியம் என்கிறார். குடும்பத்தார் இவற்றையெல்லாம் வகுப்பாசிரியர்களிடம் மனம்விட்டுக் கூறினால், அவர்கள் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதுடன், நல்ல ஆறுதலையும் வழங்கித் தேற்ற முடியும் என்கிறார். “குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்தான் சிறந்த முதலாசிரியர்களாக இருக்க முடியும். நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு கல்வியைப் புகட்ட முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

வகுப்புக்குள் நுழைந்ததுமே அட்டென்டன்ஸ் எடுத்துவிட்டு, பாடத்தைச் சொல்லிக்கொடுத்தால் போதும், அதற்கே நேரம் போதவில்லை என்று ஆசிரியர்கள் முணுமுணுக்கக்கூடும். ஆனால், “மாணவர்களின் நிலைமை அறியாமல் நீங்கள் மணிக்கணக்கில் பாடம் நடத்தினால்கூடப் பலன் இல்லை. சில நிமிஷங்களைக் கூடுதலாகச் செலவிட்டு உங்களுடைய மாணவர்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ளுங்கள்” என்கிறார் ஸ்வார்ட்ஸ்