Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 5 September 2016

புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை

நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதுநூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது.

அமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை.

சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.

அமெரிக்காவை பொறுத்தவரை நாடு முழுவதும் பொது சட்டம் இருந்தாலும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் மற்றும் ஒவ்வொரு நகருக்கும் தனித்தனி சட்டம் என அங்கு உண்டு.

அதன்படி அலபாமா நகரில் நூலக புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு தண்டனை வழங்க புதிய அவசர சட்டத்தை உருவாக்கி உள்ளனர். அதன்படி, புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கப்படும். மேலும் அவர்கள் குற்றத்தை பொறுத்து அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக நூலக இயக்குனர் பால் லாரிட்டா கூறும்போது, நூலகத்தில் இருந்து புத்தகத்தை திருப்பி தராதவர்கள் நூலக புத்தகத்தை மட்டும் திருடவில்லை. அவர்கள் மக்களின் வரிப்பணத்தை திருடுகிறார்கள். எனவே தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். டில்லியில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மொத்தம் 339 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர்களில் 23 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நல்லாசிரியர் விருது, ரூ.50 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.

ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank"வங்கியில் நிரப்பப்பட உள்ள191மேலாளர்,அதிகாரிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆன்லைன் எழுத்துத் தேர்வுதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்ந்தப்பட்ட துறைகளில் இளங்கலை,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைனி எழுத்துத் தேர்வு அக்டோபர்10-ஆம் தேதி நடைபெறும். பொது,ஓபிசி,முன்னாள் ராணுவத்தினர் ரூ.400-ஐயும்,எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும்9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

தேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பதிவு: கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை தயாரிக்க, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கை கலெக்டர்களுக்கு கமிஷன் கெடு

புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடுவது குறித்து, ஆகஸ்ட், 8ல், மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, தேர்தல் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்கள் மூலம் முடுக்கி விடப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.

இதுகுறித்த அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

 வாக்காளர் பட்டியல் வரைவு பிரதிகளை, 12ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும்; பட்டியல் அச்சுப்பணிகளை, 16க்குள் முடிக்க வேண்டும்

 வாக்காளர் பட்டியலை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; முடிவு அறிக்கையை, வரும், 19க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது*

இந்­தி­யாவின் மொத்த சேமிப்பு விகிதம் குறைந்து வரு­வ­தா­கவும், இதை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் டி.பி.எஸ்., அறிக்கை தெரி­விக்­கி­றது. முத­லீட்­டிற்கு உள்­நாட்டு சேமிப்பு அவ­சியம் என கரு­தப்­ப­டு­கி­றது. இல்லை என்றால் இதற்­காக வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதிகம் சார்ந்­தி­ருக்க வேண்டும். இந்­நி­லையில்

சர்­வ­தேச நிதியம் தக­வலின் படி, இந்­தி­யாவின் மொத்த சேமிப்பு உள்­நாட்டு உற்­பத்­தியில், 31 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
2007 முதல் 2008ம் ஆண்டு காலத்தில் இது, 37 சத­வீ­த­மாக இருந்­தது. குறைந்த வரு­மானம், சிக்­க­லான பொரு­ளா­தார சூழ்­நிலை, வட்டி குறைவு உள்­ளிட்­டவை இதற்­கான கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ள­தாக டி.பி.எஸ்., அமைப்பின் அறிக்கை தெரி­விக்­கி­றது. இந்த போக்கை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்­நிய முத­லீட்டின் தேவை அதி­க­ரித்து நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை பாதிக்கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மற்ற நாடு­க­ளைப்­போல அல்­லாமல், இந்­தி­யாவில் பணி­பு­ரியும் வயதில் உள்­ள­வர்கள் அதிக எண்­ணிக்­கையில் இருப்­பது சாத­க­மான அம்­ச­மாக அமைந்­துள்­ளது என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

செப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர் !

இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.




இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 49.1 மீட்டர் உயரமும், 415.2 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் 6 அல்லது 7ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் 8-ந் தேதி மாலை 4.10 மணிக்கு முடிவு அடைந்தவுடன், 'இன்சாட்-3டிஆர்' செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.


இந்த செயற்கைகோள் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செசல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா போன்ற நாடுகளின் வானிலை மாற்றங்களையும் அறிவிக்கும். குறிப்பாக கடல்வழி போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். கப்பல்களுக்கு வழிகாட்டுவது, இந்திய ராணுவத்துக்கு தகவல்களை அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும். தரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற 20 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'இன்சாட்-3டிஆர்' செயற்கைகோள் பிரிந்து செல்லும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்*

குதிரையேற்ற பயிற்சி மூலம், மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையை, திருச்சியில் உள்ள தனியார் சிறப்பு பள்ளி செயல்படுத்தி வருகிறது.

திருச்சி, கே.கே., நகர் உடையான்பட்டியில், மனவளர்ச்சி குன்றியவர்கள் மேம்பாட்டுக்காக,
'இன்டேக்ட்' தனியார் சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் தங்கி படித்து, பல்வேறு தொழிற்பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

'ஹைப்பர் ஆக்டிவிட்டி'

இவர்களை குணமாக்க, குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக, 'பிசியோதெரபி' டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். மனவளர்ச்சி குன்றியவர்களில், 'ஆட்டிசம்' எனப்படும் புற உலக சிந்தனை அற்றவர்கள், சி.பி., எனப்படும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 'ஹைப்பர் ஆக்டிவிட்டி' எனப்படும் அதீத சுறுசுறுப்பு உடையவர்களுக்கு, இந்த குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பள்ளியின், 'பிசியோதெரபிஸ்ட்' பாரதிதாசன் கூறியதாவது: மனவளர்ச்சி குன்றியவர்களில் நடக்க முடியாதவர்கள், கை, கால்களை துாக்க முடியாதவர்கள், வாயில் எச்சில் ஒழுகுபவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என, குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கிறோம்; இது ஒரு சிகிச்சை முறை தான்.

நடக்க முடியாத குழந்தைகள், குதிரையில் சவாரி செய்யும் போது, அவர்களின் கால்கள் விரிவடைந்து, இடுப்பு பகுதியில், நடை பயிற்சிக்கான ஆற்றல் உண்டாகிறது. குதிரையின் நடை, அதில் அமர்பவருக்கு இயற்கையாக சில பயன்களை அளிக்கிறது.

அதன்படி, வாய் தாடைகள் வலுப்பெறும், சுவாசம் சீராகும். இதனால், எச்சில் ஒழுகுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்; அவர்களின் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். பயிற்சி அளிக்கும்போது, பிசியோதெரபிஸ்ட், குதிரையேற்ற பயிற்சியாளர், உதவியாளர் என மூன்று பேர் இருப்போம்.

31 குழந்தைகளுக்கு

பொதுவாக, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு விலங்குகள் என்றால் பிரியம். ஆகையால், அடம் பிடிப்பவர்கள் கூட, குதிரையில் உட்கார வைத்து பயிற்சிகள், பாடங்கள் சொல்லிக் கொடுத்தால், அவற்றை நன்றாக கேட்டுக் கொள்கின்றனர்.சிலர், தங்களை தாங்களே வருத்திக் கொள்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த குதிரையேற்ற பயிற்சி அளித்த பின், அவர்களின் பழக்க
வழக்கங்களில் வியக்கத்தக்க மாற்றம் உண்டாகியுள்ளது.

ஒரு குழந்தைக்கு, ஒரு நாளைக்கு, அரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, 31 குழந்தைகளுக்கு, இரண்டு குதிரைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு பள்ளி தாளாளர் காருண்யா எபினேசர்
கூறுகையில், ''2010 முதல் இங்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டின் கால்நடை மருத்துவ மாணவர்கள், இந்த முறையை இங்கு வந்து சொல்லி கொடுத்தனர்.
''குதிரைகள் பராமரிப்புக்கு செலவு அதிகம் என்றாலும், குழந்தைகளின் ஆர்வத்தையும், அவர்கள் குணமாவதையும் பார்க்கும்போது, அது பெரிய விஷயமாக தெரிவதில்லை,'' என்றார்.

முன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி நன்றிக் கடன்: நாகர்கோவிலில் நெகிழ்ச்சியூட்டிய ஆசிரியர் தின விழா


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெற்ற இந்நாள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு சாமானிய மனிதனின் வாழ்வியல் நகர்தலிலும், அவர் தம் சாதனை பயணத்திலும், நிச்சயம் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி, ஆசி பெற்று, முன்னோரை குளிர வைத்துள்ளனர் நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் இந்நாள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் இதய சங்கமம் என்னும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளியில் பணி புரிந்து, பணி நிறைவு பெற்றுள்ள 69 ஆசிரியர்களை அழைத்து வந்து உரிய மரியாதை செய்தனர்.

பள்ளியின் ஆட்சிக் குழுத் தலைவர் முனைவர் மாணிக்க வாசகம், செயலாளர் நாகராஜன் ஆகியோர் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், டி.வி.டி. பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பர தாணு மற்றும் பள்ளியின் அனைத்து பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், ``இது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. அன்று இவர்கள் காலத்தில் எல்லாம் ஆசிரியப் பணிக்கு மிக பெரிய மரியாதை இருந்தது. இப்போது முகநூல், வாட்ஸ் அப் என இணைய தள பயன்பாட்டின் பெருக்கத்தினால் பலவகை சமூக வளைதளங்களும் வந்து விட்டன. அவை மாணவர்களை, அவர்களது ஒழுக்கக் கூறுகளை பெருமளவில் சிதைக்கவே செய்கின்றன. அவர்களது கவனத்தையும் திசை திருப்புகின்றன.

அந்த சூழலிலும் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியை, மாணவனை மாண்பு உள்ளவனாய் தக்கவைக்கும் பணியை ஆசிரியர்கள் செய்வது பாராட்டுக்குரியது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களின் சங்கமம் நடத்தி, மரியாதை செய்வதே அன்றைய ஆசிரியர்களின் புலமைக்கு சான்றாக உள்ளது” என்றார்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் ஆசிரியர் பணியின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்திய அளவில் தனி சிறப்பு பெற்று விளங்கிய, பிரமோஸ் ஏவுகணையை தயாரித்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நம்பிநாராயணன் போன்றோருக்கு பாடம் எடுத்த அனுபவங்களையும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் அவர்களைக் கவர்ந்த மாணவர்களையும் பற்றிப் பேசினர். ஆசிரியப் பணியில் அவர்கள் பின்பற்றிய அறக்கூறுகளையும் பகிர்ந்தனர்.

3 தலைமுறை

இந்நிகழ்வு குறித்து டி.வி.டி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரதாணுவிடம் பேசினோம்.’’நானும் இதே பள்ளியில் படித்தவன் தான். எனக்கு ஒன்றாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர், நான் பணிக்கு சேர்த்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர், நான் தலைமையாசிரியர் ஆகும் போது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என மூன்று தலைமுறைகளை என்னளவிலேயே இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் அவர்களது அனுபவங்கள் தான் எங்களை செதுக்க உள்ளது. சங்கமம் என நிகழ்வுக்கு பெயர் வைத்தாலும் ஒரு குடும்ப விழாவாகவே இது நிகழ்ந்துள்ளது” என்றார்.

பாதம் கழுவினர்

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வயதான ஆசிரியர்களை அமர வைத்து, அவர்களை இந்நாள் ஆசிரியர்கள் பாதம் கழுவி, அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றனர். நிகழ்வின் முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர் அலையில் திளைத்துச் சென்றனர்

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!

பூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி!

கதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.

சற்று நேரத்தில் வேடர்கள் வருகிறார்கள். அவர்க ளுடன் வேட்டை நாய்கள் வருகின்றன. தப்பிக்கப் பல உபாயங்கள் செய்தும் நரியால் முடியவில்லை. நாய்களிடம் மாட்டிக்கொள்கிறது. பூனைக்கு மரம் ஏறத் தெரியும். சரசர என்று மரத்தில் ஏறித் தப்பிக்கிறது. ‘எனக்குத் தெரிந்த ஒரே உபாயத்தால் தப்பித்துவிட்டேன் பார்’ என்று மாட்டிக்கொண்ட நரியைப் பார்த்துச் சொல்கிறது பூனை.

பல வேண்டாம்; ஒன்று போதும்

பல வேண்டாம்; ஒன்று போதும் என்பது கதையின் நீதி. பிரச்சினையைச் சுலபமாக்கி வழங்கப்பட்ட நீதி. இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அதே நீதி!

காலம் மாற மாற, மாற்றத்துக்கேற்ற திறன்கள் தேவைப்படுகின்றன. இப்போது ஒன்று போதாது; பல வேண்டும் - இது பன்மையைப் போற்றும் காலம்!

மரத்தில் ஏறித் தப்பிக்கையில், மரத்தில் மலைப் பாம்பு இருந்தால் பூனை என்ன செய்யும்? - எனப் புதுக் கேள்விகள் எழுந்தபோது பழைய நீதி தடுமாறியது.

2008 பொருளாதார வீழ்ச்சியின்போது, ஒற்றை நோக்குப் பெருநிறுவனங்கள் தோல்வியைத் தழுவ, பல சிறு திறன் கொண்ட நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றதை நாம் அறிவோம்.

இன்று வரை, ‘ஒன்றுதான் சிறந்தது’ என்ற பிடிவாதம் ஊன்றிக் கிடக்கும் இடம் - பள்ளிக்கூடம். அது முன்வைக்கும் ஒன்று - தேர்வு!

விளையாட்டு, கலை, தொழில்திறன் - எல்லாம் இருக்கட்டும் ஒரு ஆறுதலுக்கு. நாய்கள் துரத்தும்போது இதிலொன்றும் சரிப்படாது. தேர்வுதான் காப்பாற்றும் சக்தி! அது அளந்து சொல்வதுதான் உன் அறிவு. ‘வனத்துல திரிஞ்சாலும் இனத்துல வந்து அடை’ என்று சொலவடை சொல்வதுபோல, அங்கே, இங்கே போய் லேசாக எட்டிப் பார்த்தாலும், கடைசியில் பரீட்சை ஹாலுக்கு வந்து சேர்!

வகுப்பறைகள் விதிவிலக்கா?

சில நீதிகளை, நம்பிக்கைகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துத்தான் புதிய சிந்தனை பிறந்திருக்கிறது. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்து கவிழவில்லையா? கடவுளே கலை இலக்கியப் படைப்புகளின் மையம் என்ற நிலை மாறி, மனிதனே மையம் என்ற மறுமலர்ச்சி தோன்றவில்லையா? வகுப்பறைகள் விதிவிலக்கா?

விழிப்புணர்வு காணாத இடமல்ல வகுப்பறை. ‘ஆசிரியரே மையம்’, ‘விவரித்தலே கற்பித்தல்’ என்ற போக்குகள் ஆட்டங்கண்டு வருகின்றன. பள்ளிக்கு வருமுன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அல்லது ஒவ்வொன்றையும் தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள்’ என்று குழந்தைகள் குறித்த பள்ளி மதிப்பீடுகள் தகர்ந்துவருவதும் உண்மை.

மனதுக்கு இதமான சிறு சிறு முயற்சிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் ஓராயிரம் ஆற்றல்களை மலர வைக்கும் பெருமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. உலகெங்கும் பள்ளித் தேர்வுமுறை இளக்கம் பெற்று வரும்போது, இந்தியாவில் அது மேலும் மேலும் இறுகிவருகிறது. தேர்வு என்ற ஒன்றை நோக்கிப் பிள்ளைகளைத் துரத்துவதும், குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும், வீர வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய்த் தொடர்கிறது.

இயல்புப்படுத்துவது (normalisation) என்ற பெயரில் நடக்கும் சமூக அதிகாரம் குறித்து பூக்கோ (Foucault) நிறையப் பேசுவார். சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மீதும், சம்பளம் வாங்கத் தயாராகிறார்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் மீதும் இயல்புப்படுத்துவது என்ற அதிகாரம் பள்ளியில் பாய்கிறது. தேர்வுதான் பள்ளியின் இயல்பு. விலகினால்? ‘‘நாளைக்குப் பரீட்சை. இன்னைக்கு மேட்ச் ஆடப் போறேங் கிறான்… சுத்தக் கிறுக்கன்!”ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கும் கணக்கில்லை. கலைத்திறன்கொண்ட ஆசிரிய நண்பரைப் பாராட்டிச் சொன்னபோது, நிர்வாகி என்னிடம் சலித்துச் சொன்னார், ‘‘பாட்டெல்லாம் நல்லாத்தான் பாடுவாரு.. ஆனா, ரிசல்டைத்தான் காணோம்!”

ஆசிரியரைப் பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்.

ஆனால் இளங்கண்கள்... எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை - இந்தக் கண்களும் கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்!

போக வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் ஏராளம் இருக்கின்றன. தேர்வு தாண்டிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதும், கொண்டாடு வதும்தான் எடுத்துவைக்க வேண்டிய முதல் எட்டு.

- ச.மாடசாமி, 
ஓய்வுபெற்ற ஆசிரியர். ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com