Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 7 September 2016

ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

 காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.

 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.
 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம் பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.
  இந்த நிலையில், காவல் துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.
 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார் 15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிரு நாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது

தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் - 1/11/2016 to5/11/2016 & 7/11/2016 to 11/11/2016 வரை)நாள்:26/8/16,இயக்குநர் செயல்முறைகள்.

நாகை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரலாய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நாளை வியாழக்கிழமை (செப். 8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி இன்று புதன்கிழமை இரவு நடைபெறுகிறது. மாதா பிறந்த நாள் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செப். 17-ஆம் தேதி சனிக்கிழமையைப் பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் (www.tncu.tn.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், சிறு-குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு-உணவுத் துறை சார்பில் அரசு உத்தரவும், வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இணையதளத்தில் தகவல்: கடன் தள்ளுபடி பெறுவதற்கு 16 லட்சம் பேர் தகுதி படைத்தவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தின் பெயர், கடன் பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதை உள்ளீடு செய்தால், கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.

 பட்டியலில், வரிசை எண், கடனின் வகை, கடன் பெற்றவரின் பெயர், சங்க உறுப்பினரின் எண், கடனின் எண், எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கப்பட்டது, நிலத்தின் அளவு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோருக்கு  கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் சட்ட விரோதமாக பயன் பெற்றாலோ அது குறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியது:-
கடன்கள் தொடர்பாக, வட்ட அளவில் முறையீடு செய்யும் காலம் முடிவடைந்துள்ளது. இதில் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படாவிட்டால், மாவட்ட பதிவாளர் அளவில் அடுத்த 2 வாரங்களுக்குள் முறையீடு செய்யலாம். அதிலும் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் இணைப் பதிவாளரிடம் மறு மேல்முறையீடு செய்யலாம். அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்தும் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டு அவை தீர்க்கப்படும்.
 கடன் வழங்கப்பட்ட தேதியில் 5 ஏக்கருக்குள் நிலம் இருந்திருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  மார்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் பொருந்தும். அதற்குப் பிறகு யாரேனும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்தப் பணம் உரிய முறையில் விவசாயிக்கு கூட்டுறவுத் துறை அளிக்கும் என்றனர்.
புதிதாக வழங்கப்படும்: கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு புதிதாக கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உறுப்புதான பதிவில் பிலிப்பைன்சை முந்தியது திண்டுக்கல் : ஒரு மணி நேரத்தில் 6,697 பேர் பதிவு

திண்டுக்கல்லில், ஒரு மணி நேரத்தில், 6, 697 பேர் உறுப்பு தான ஒப்புதல் கையெழுத்திட்டதன் மூலம், கின்னஸ் சாதனை பதிவில், பிலிப்பைன்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளினர்.

திண்டுக்கல்லில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி - ரோட்டரி சங்கம் இணைந்து உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் கின்னஸ் சாதனையாக மாணவ, மாணவியர், பொதுமக்கள், அலுவலர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் தங்கள் பெயரை உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு
துவங்கிய பதிவு, 19 நிமிடங்களில் பிலிப்பைன்ஸ் கின்னஸ் சாதனையை சமன் செய்தது. அதற்கு மேல், 12:00 மணிவரை பதிவு நடந்தது. ஒரு மணி நேரத்தில், 6,697 பேர் உறுப்புத்தான படிவங்களில் கையெழுத்திட்டு தங்களை பதிவு செய்தனர்.

பின்தங்கிய பிலிப்பைன்ஸ் : இதற்கு முன், பிலிப்பைன்ஸ் நாட்டில், ஒரு மணி நேரத்தில், 3,548 பேர் பதிவு செய்ததே சாதனையாக கின்னசில் இடம் பெற்றிருந்தது. தற்போது

திண்டுக்கல் அந்த சாதனையை முறியடித்துள்ளது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி., சரவணன், ரோட்டரி சங்க சிறப்பு திட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, கல்லுாரி நிர்வாகி ரகுராம் உள்பட பலர் பங்கேற்றனர். அரசின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்புதான பதிவு மையத்தின் சார்பில், 500 பேர் அடங்கிய குழுவினர் உறுப்புதான பதிவு பணியில் ஈடுபட்டனர். பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, 30 நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2017 ஜன., முதல் 'ஸ்மார்ட் கார்டு

''தமிழகத்தில், 2017 ஜனவரி முதல், 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்,'' என, அரசு முதன்மை செயலர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.

சேலத்தில், ரேஷன் கடைகளில், மொபைல் போன் மூலம் தகவல் பரிமாற்றம் குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மை செயலரும், உணவுப் பொருள் வழங்கல் துறை கமிஷனருமான கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர் முதல் ஆன்லைன் பில்லிங்

மிஷின் மூலம், பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் பில்லிங் மிஷின் பயன்பாட்டினை, சிறப்பாக மேற்கொள்வதற்கு வசதியாக, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள், அனைத்து வட்ட வழங்கல் அலுவர்களின் பணி குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் பில்லிங் மிஷின் பயன்பாட்டுக்கு வருவதால், ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களின் விபரம், விலைப்பட்டியல் ஆகியவை உடனடியாக, ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிற்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் வந்து சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மென்பொருளை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை எப்போது திறந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதுடன், என்னென்ன பொருட்கள் கையிருப்பில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதில், 2017 ஜனவரி முதல், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அலுவலர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு !

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற வக்கீல் கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.உள்ளாட்சி தேர்தல்தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க., பா.ம.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த மனுவுக்கு கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய காலஅவகாசம் இல்லை. அதனால், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதே நேரம், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.தடை மறுப்புஇதையடுத்து, இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வாதம் செய்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வர இருந்தது.ஆனால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும், வாதம் செய்யவும் காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 8-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர். அப்போது, தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் நீலகண்டன், ‘8-ந் தேதி வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும்’ என்று கேட்டார்.அதற்கு நீதிபதிகள், இந்த நிலையில் இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு, போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு அரசு நிறுவனமும், போனஸ் தொகையை நிர்ணயம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தும். தொழிற்சங்கங்களின் கோரிக்கை, அரசின் நிதித்துறை வரை செல்லும். பரிசீலனைகள் முடிந்ததும், போனஸ் குறித்து, முதல்வர் அறிவிப்பார். இந்த ஆண்டு தீபாவளி, அக்., 29ல் வருகிறது. உள்ளாட்சி தேர்தலும், அதே மாதம் நடக்க உள்ளதால், முன்கூட்டியே, போனஸ் பேச்சு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அரசு நிறுவன ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ்; 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதன்படி, 3.76 லட்சம் பேருக்கு, 242 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, போனஸ் தொகை உயர வாய்ப்பு உள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், போனஸ் பேச்சு நடக்கும்; உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இம்மாத இறுதியிலே பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளில் சம்பளத்தை சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை

வங்கிகளில் சம்பளத்தை சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை

நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?

உஷார்...

உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....

நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...

ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....

அடுத்து....

உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....

எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல

மிகவும் பணிவான குரலில் பேசுவான்....

உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....

உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....

அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....

அல்லது....

உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....

அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...

அது என்னவென்றால்....

அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,

அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...

அல்லது கடைசி நான்கு எண்கள்...

அல்லது உங்கள் பிறந்த தேதி...

இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....

கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்....

உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.

பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...

ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது கடினம்...

சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...

நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்

மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்...

எனக்குத் தெரிந்தவரை என்னுடன் வேலை செய்யும் மூன்று பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது

உங்களால் முடிந்தது ஒன்று தான்.....

இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...

எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும்

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரின் தகுதியின் அடிப்படையில்
வேலை வழங்குவது நடைமுறை. ஆனால் திருமணமான மகனுக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பணிக் காலத்தில் உயிரிழக்கும் ஊழியரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும். இதற்கு மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும். வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதுக்கு முன், மருத்துவக் காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., செப்., 21ல் 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 20 முதல், 25 வரை நடந்தது.

ஒதுக்கீடு : அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

அரசு கல்லுாரி : இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்களில், அரசு கல்லுாரிகளில், 21 பேர் உட்பட, 143 பேர் படிப்பில் சேராததால், அந்த இடங்கள் காலியாக உள்ளன. இத்துடன், சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ல் நடத்தப்படுகிறது.

மீதமுள்ள இடங்கள் : இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறிய
தாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, 20ம் தேதி முடிந்து விடும்; அன்று மாலைக்குள் நிரம்பாத இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படும். ஏற்கனவே மீதமுள்ள இடங்களுடன், அந்த இடங்களையும் சேர்த்து, செப்., 21ல், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.

பணியிடங்கள் காலி

ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.

சங்கங்கள் எதிர்ப்பு

இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2014-15 கலந்தாய்வு காரணமா?

இப்பிரச்னை குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம் இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒரு மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கி குழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள் சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில் கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.