Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 8 September 2016

செய்தி அறிக்கை-வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் அறிவுரைகள்...

தினமலர் - லட்சிய ஆசிரியர் விருது 2016 - ஆசிரியர்ளுக்கு அழைப்பு

நபார்டு வங்கியில் 85 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பையில் உள்ள நபார்டு வங்கியில் 85 Development Assistant, Development Assistant (Hindi) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/DA/2016-17
பணி: Development Assistant, Development Assistant (Hindi)
காலியிடங்கள்: 85
சம்பளம்: மாதம் ரூ.8,040 - 201,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர்கள் இளநிலை பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

மேலும் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/final%20advt%2030%20Aug%2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TEACHERS' CARNIVAL - 2016

TEACHERS' CARNIVAL 2016

Date : 25.09.2016 Time : 10 am
Venue: Vivekananda Hr. Sec. School, ECR Road, Puducherry
Those who want Entry form Contact this number:-9894631655

போனஸ் ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் குறித்து அடிப்படை விதிகள்..

பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படை விதிகள்...

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர் பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்ப மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி வருகிறேன்.அத்துடன் அனைத்து மாநிலங் களையும் சேர்ந்த கல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டை விரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்து முக்கியமாக விவா தித்து முடிவெடுக்க திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதுகுறி்த்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவா கவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத் தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில் காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம் தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு 13.09.16 (பக்ரீத் விடுமுறை காரணமாக) பதிலாக 14.09.2016 அன்று விசாரணைக்கு வருகிறது

TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு 13.09.16 (பக்ரீத் விடுமுறை காரணமாக) பதிலாக 14.09.2016 அன்று விசாரணைக்கு வருகிறது

தற்காலிக பதவி உயர்வு உரிமை விடல் அடிப்படை விதிகள்!!

அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் மனு

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர்.புதிய கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தக் கோரி ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதியக்குழு முரண்பாடு களைதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் குறித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் செப்.14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி கூறியுள்ளது:

திருப்பூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஓணம் பண்டிகை முன்னிட்டு,  மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.

மேற்கூறப்பட்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம்  மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவித்துள்ளார்.

அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

 இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கட்டண உயர்வு விமான கட்டண முறைகளை போன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு 10 சதவித டிக்கெட்கள் விற்பனையானதும் மீதமுள்ள டிக்கெட்களின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில் புதிய கட்டண முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம், முதலில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்த கட்டணமும் அடுத்தடுத்து முன்பதிவு செய்யும் பயணிகள் அதிக கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும். 

இந்த முறை முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு பொறுந்தாது. இந்த திட்டம் வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் . இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு

'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. 

 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின்போது கடைபிடிக்கப்படும், 'கிராஸ் மேஜர்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதி போதனை வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.கடந்த, 1977 முதல், இடைநிலை ஆசிரியர்களாக இருப்போரை, பட்டதாரி ஆசிரியர்

களாக, பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில், மாணவர் நலன் பாதிக்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்; தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்மாதிரி பள்ளியை உருவாக்கும் சிங்காணிகுப்பம் கிராம மக்கள்

திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காணிகுப்பம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

சுமார் 250 வீடுகளே கொண்ட இக்கிராமத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் வயதுள்ள 45 குழந்தைகளும் இப்பள்ளியில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளை புறந்தள்ளிவிட்டு முன் மாதிரி பள்ளியாக இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அந்த கிராமத்து மக்கள் உருவாக்கி வருகிறார்கள் என்பதை அறிந்து அப்பள்ளிக்கு நேரில் சென்றோம்.

சிங்காணிகுப்பம் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் எளிய விவசாயிகள். வெள்ளந்தியான பேச்சோடு நம்மை வரவேற்றார்கள்.

'நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி அரசு மூலம் கிடைக்க வேண்டும்; அப்படி பெற வேண்டியது நமது உரிமை. அதே நேரம் நம்மால் ஆன உதவிகளையும் நமது ஊர் பள்ளிக்குச் செய்ய வேண்டும்' என்கிற எண்ணம் அந்த எளிய மனிதர்களிடத்தில் ஆழமாய் இருப்பதை அவர்களோடு பேசிய போது தெரிந்து கொள்ள முடிந்தது.

பள்ளியின் நுழைவாயிலில் காந்தி சிலை; அதன் அருகே அழகாய் ஒரு கொடிக் கம்பம். பள்ளிச் சுவற்றில் அப்துல்கலாமின் பொன்மொழிகள், மாணவ, மாணவியருக்கு தனித்தனி சுகாதாரமான கழிவறைகள், அதன் அருகில் 'வாஷ் பேசின்', குடிநீர் குழாய்கள் என்று பள்ளி வளாகம் தூய்மையாக காட்சியளிக்கிறது.

கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுடன் ஒரு தொடக்கப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அந்தப் பள்ளி இருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருந்தது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆர். மீனாட்சிசுந்தரம், ஆசிரியராக பி. கதிரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழரசி முருகன் ஆகியோர் கூறியது:

தனியார் பள்ளிக்கு கொட்டி கொடுக்கும் பணத்தில் சிறிதளவு தொகையை இந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் செலவழிக்கிறோம். இதற்கான தொகையை பெற ஊர்கூட்டம் போட்டு ஒரு வீட்டுக்கு இவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து அந்தப் பணத்தை கொண்டு பள்ளிக்கு செலவழிக்கிறோம்.

தற்போது 5 ம் வகுப்பு வரை இப்பள்ளி உள்ளது. எங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் படிக்க வைப்பதை பெருமையாக எண்ணுகிறோம். எங்களின் ஊக்கத்தினால் பணியாற்றும் ஆசிரியர்கள் முழுமையாக கற்றுத் தருகின்றனர். ஒருநாள் எங்கள் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றாலும் எங்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிகிறார்கள்.

பள்ளியைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்கிறோம். தற்போது எங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் மட்டுமே வழங்கப்படாமல் உள்ளது. அதற்காக ஊர் கூட்டம் போட்டு பேசியுள்ளோம். வீட்டுக்கு வீடு வசூல் செய்து அதையும் விரைவில் அமைத்து விடுவோம். நாங்கள் அரசை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த தொடக்கப் பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியரே உள்ளனர். சமயத்தில் ஒருவர் விடுமுறையில் சென்றால் இன்னொருவர் மொத்தம் உள்ள 5 வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க வேண்டிய நிலையே இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சில கிராமங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதும், அந்தப் பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதும் வழக்கம். அதே வழக்கம் சிங்காணிகுப்பம் கிராம தொடக்கப் பள்ளியிலும் இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையைப் போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூடுதலாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்து ஊதியம் வழங்கி வருகிறார்கள் இக்கிராம மக்கள்.

இந்த கிராமத்தில் இயங்கி வரும் 'அப்துல்கலாம் சேவை மையம்' மூலம் 'ப்ளஸ் டூ படித்த பின்பு என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டும் கூட்டம் நடத்த இருப்பதாக இங்குள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காக ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள் இந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள். கிரா மத்தை சுற்றி படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து விரைவில் அகற்ற உள்ளோம் என்கின்றனர் பெரியவர்கள்.

இந்த தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்டதற்கு, “30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி கடந்த கல்வி ஆண்டு முதல் சிங்காணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் கூடுதல் சேர்க்கையின்போது நிச்சயம் அதற்கேற்ப கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள்'' என்கின்றனர்.

விதிமுறைப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சொல்லும் கருத்து நியாயமானதுதான். ஆனால் இத்தனை ஆர்வமாய் ஒரு கிராம மக்களால் ஒரு தொடக்கப் பள்ளி நல்லவிதமாய் எடுத்துச் செல்லப்படும் போது விதிகளைத் தளர்த்தி கூடுதலாய் ஒரு ஆசிரியர்களை நியமிக்கலாமே!

காஞ்சிப்புரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள. கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

New health insurance contact numbers.

click Here

மோகனூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தபால் நிலையம், வங்கி, ரேஷன் கடை நிர்வகிக்கும் மாணவ, மாணவிகள்

மோகனூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, மாணவர்களே நடத்தும் தபால் நிலையம், வங்கி, ரேஷன் கடை, கையெழுத்துப் பிரதி உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப் படும் பள்ளியில் மேட்டுப்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமப் புற மாணவர்கள் பயின்று வருகின்ற னர். பள்ளி தலைமையாசிரிய ராக வே.அண்ணாதுரை, உதவி ஆசிரியராக கா.இளங்கோ ஆகி யோர் உள்ளனர். மற்ற பள்ளிகளைக் காட்டிலும், தங்களது பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்ற இரு ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் முதல்படியாக பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகப் படிப்பு மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த பல்வேறு விஷயங்களை கற்றுத் தந்து, அவற்றை பள்ளியில் செயல் படுத்தவும் ஊக்கப்படுத்துகின்றனர். ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். பள்ளியில் தபால் நிலையம், சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கி, சுய தேவை ரேஷன்கடை போன்றவை தொடங்கப்பட்டு மாணவர்களே அதை நிர்வகிக்கின்றனர்.

தபால் நிலையம் மூலம் மாணவர்கள் தங்களது கருத்துக் களை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அதுபோல், மாணவர்கள் தங்களிடம் உள்ள சிறு தொகையை பள்ளி உண்டியலில் சேமிக்கின்றனர். அத்தொகையை பள்ளி ஆசிரியர் களிடம் வழங்கி, அதன்மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகம், பென்சில் போன்றவற்றை வாங்கி, ரேஷன்கடை மூலம் மாணவர்களுக்கிடையே விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் பள்ளியளவில் சட்டப் பேரவை ஒன்றை நடத்துகின்றனர். அதற்கு முதல்வர், கல்வி அமைச்சர், நிதியமைச்சர் என மாணவர்கள் தங்களுக்கு உள்ளாகவே பிரதிநிதிகளை தேர்வு செய்து கூட்டமும் நடத்துகின்றனர். கூட்டத்தில், பள்ளி யில் மாணவர்களுக்கு தேவைப் படும் விஷயங்களை தெரிவிக்கின் றனர். அவற்றை கவனிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நடத்தும் சட்டப்பேரவை கூட்டத்தில் எடுக்கும் முடிவை அறிந்து, அவற்றை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிறைவேற்றுகின்றனர்.

மாணவர் சேர்க்கை 3 மடங்கானது

இதுபோன்ற நடவடிக்கையால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டு 30 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2015-16-ம் ஆண்டு 60 எனவும், 2016-17-ம் ஆண்டு 93 ஆக வும் உயர்ந்துள்ளது. 60 மாணவர்கள் வரை இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதற்கு மேல் 90 மாணவர் வரை இருந்தால், 3 ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இந்நிலையில் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ள தால் இந்தாண்டு கூடுதலாக ஒரு ஆசிரியர் பள்ளியில் நியமிக்கப் பட்டுள்ளார்.

எனினும், மாணவர் எண்ணிக் கைக்கு தகுந்தாற் போல் பள்ளியில் வகுப்பறை வசதியில்லை. அதனால், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தும் நிலை உள்ளது. புதிய வகுப்பறை கட்டும் வரை மாணவர் கள் அமர்ந்து படிக்க ஏதுவாக கூடாரம் அமைக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கூடாரம் அமைக்க நிதியுதவி

இதற்கு அரசிடம் இருந்து நிதியை எதிர்பாராமல் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் தலா ரூ.5 ஆயிரம் நன்கொடையாக வழங்கி கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசிரியர்களின் நட வடிக்கையை அறிந்த கிராம மக்க ளும் தங்களால் ஆன உதவியை பள் ளிக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை யாசிரியர் வே.அண்ணாதுரை ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

பள்ளியின் செயல்பாட்டை பாராட்டி தொடக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி என்ற கேடயம் வழங்கப்பட்டது. அதுபோல், கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தொடக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கி ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.3 லட்சம் வரை செலவு பிடிக்கும். புதிய வகுப்பறை கட்டும் வரை மாணவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து படிக்க கூடாரம் அமைக்க நானும், உதவியாசிரியரும் முடிவு செய்தோம். அதற்காக பள்ளிக்கு நன்கொடையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கினோம். இதையறிந்த கிராம மக்கள் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.கிராம மக்களின் ஒத்துழைப்பும் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்தாண்டு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மூலம் பால், பிஸ்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் விளங்குவதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாணவர்கள் நடத்தும் இதழ்

மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் குதூகலம் என்ற கையெழுத்துப் பிரதி மாதஇதழை நடத்தி வருகின்றனர். அதில் பொது அறிவு சம்பந்தப்பட்ட செய்தி, துணுக்கு, கட்டுரைகளை மாணவர்களே எழுதுகின்றனர். அதற்கான அட்டைப்படமும் பள்ளி மாணவ, மாணவியரே தயார் செய்கின்றனர். கையெழுத்துப் பிரதிகளை பிற பள்ளியினரும் நகல் எடுத்துச் சென்று, அவர்களது பள்ளி மாணவ,மாணவியரை ஊக்கப்படுத்துகின்றனர்.