Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 9 September 2016

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்

RTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான அரசுச் சார்பு செயலரின் கடிதம்..

மத்திய பல்கலைகளில் சேர பொது நுழைவுத்தேர்வுஅதிரடி!: விரைவில் அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை

புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அடுத்த ஆண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைகளில் மாணவர்களை சேர்ப் பதற்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

100 சதவீத 'கட் - ஆப்':

தற்போது, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ஜார்க் கண்ட், கேரளா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத் தில் உள்ள மத்தியப் பல்கலைகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடக்கிறது. இதைத் தவிர, பல்வேறு மத்தியப் பல்கலைகள் தனித் தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.

அதே நேரத்தில், டில்லி பல்கலையில், பிளஸ் 2 
தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கான 'கட் - ஆப்' மதிப்பெண், 100 சதவீதம் வரை உள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வில், 95 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர் கள் கூட, பல்கலையில் சேர முடிவதில்லை.

இதை தவிர்க்க, பொது நுழைவுத்தேர்வு முறையை விரைவில் அமல்படுத்துவது குறித்து ஆராயப் படுகிறது. இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

துணைவேந்தர்கள் கூட்டம்

''அடுத்த மாதம், 6ம் தேதி நடக்க உள்ள மத்தியப் பல்கலை துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சிக்கல்

'பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்து, மத்தியப் பல் கலை நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயா ராக வேண்டும் என்ற சிக்கல் உள்ளது. இதனால், 'டியூஷன் சென்டர்'கள் கொள்ளை யடிக்கும் வாய்ப்பு உள்ளது' என, கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், 'சிலமத்தியப் பல்கலை மற்றும் வேறு சில பல்கலைகளில், ஏற்கனவே நுழைவுத் தேர்வு உள்ளது. இதற்காக தனித்தனியாக விண் ணப்பிக்க வேண்டிய நிலையில் இருந்து மாணவர் கள் தப்பிப்பர். மேலும் தகுதி உள்ள மாணவர்களு க்கு, மத்தியப் பல்கலைகளில் இடம் 
கிடைக்கும்' என, சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாற்றம் ஏற்படுத்திய தமிழகம்

டில்லி பல்கலை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படை யிலேயே மாணவர்களை சேர்க் கிறது. டில்லியில் மிகப் பிரபலமான, டில்லி பல்கலைக்கு உட்பட்ட ஸ்ரீ ராம் கல்லுாரியில், இந்த ஆண்டு, 188 பேர் சேர்க்கப்பட்டனர். இதில், 129 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; அதில், 33 பேர், ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். அதிக மதிப்பெண்கள் அடிப்படை யில் இவர்கள் சேர்ந்தாலும், இது கல்வியாளர் கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும் என்று, தேர்வு தாள்களை திருத்தும் போது மிகவும் தாராளமாக நடந்து கொள்வ தாகவும் கூறப்படுகிறது. இதனால், தகுதி உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்பதால் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து தற்போது ஆராயப்படுகிறது.

சி.பி.எஸ்.இ க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம் !

CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்...

குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர் பங்கு முக்கியம் !

SCERT - தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு..

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த பிரதான வழக்குடன் சுரேஷின் மனு சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், பொது நுழைவுத்தேர்வு வரும்போது மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் குறைந்த அளவில்தான் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

SCERT - தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு..

தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்

நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார்.

இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், நாகலாந்து, ஹரியாணா, பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் முறையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பட்டியலில் 14-வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

பின்தங்கிய தமிழகம்:

சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன.

இவற்றில் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. தமிழகம் 100-க்கு 39.2 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளது.

எப்படி கணக்கிடப்படுகிறது?

கடந்த 2015-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,788 கிராமங்களில் 73,176 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை வீடுகளில் கழிப்பறை வசதி இருக்கிறது என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் சிக்கிம் 100-க்கு 98.2%, கேரளா 96.4%, தமிழகம் 39.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளன

TNOU-B.ED ADMISSION- APPLICATION & PROSPECTUS 2017- LAST DATE FOR APPLY 14/10/2016

B.ED PROSPECTUS 2017-Click Here  

B.ED APPLICATION 2017 -Click Here 

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

புதுச்சேரியில் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றார். 

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த பிரதான வழக்குடன் சுரேஷின் மனு சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், பொது நுழைவுத்தேர்வு வரும்போது மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் குறைந்த அளவில்தான் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

Revised +2 Quarterly comon Examination Time table

Revised X standard Quarterly comon Examination Time table

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம்கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது.

92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!

ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகள்: 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!! 

ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் அமோக வரவேற்பு அளித்து உள்ளனர். 
‘விருப்ப பயண காப்பீட்டு திட்டம்’ 
ரெயில் பயணிகளுக்கு என புதிய இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் பல கட்ட ஆலோசனை நடத்தியது. 
இதைதொடர்ந்து ரெயில் பயணிகளுக்கான ‘விருப்ப பயண காப்பீட்டு திட்டம்’ (ஆப்ஷனல் டிராவல் இன்சூரன்சு) என்ற புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். 
அதன்படி கடந்த 1-ந்தேதி முதல், இந்திய ரெயில்வே, உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 
இதற்காக பரிசீலிக்கப்பட்ட 17 காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் எனும் 3 காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்த புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. செயல்படுத்தி வருகிறது. புறநகர் ரெயில் பயணிகளை தவிர, அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த காப்பீட்டு வசதி அளிக்கப்படுகிறது. 
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
92 காசு பிரீமியம் 
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ‘ஆன்-லைனில்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘இந்த புதிய இன்சூரன்சு திட்டத்தை தொடர விரும்பிகிறீர்களா? இல்லையா? என்று ஒரு கேள்வி இருக்கும். இந்த இன்சூரன்சு திட்டத்தில் சேர விரும்பினால், ‘ஆம்’ என கிளிக் செய்து பெயர், வயது, செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவேண்டும். இதையடுத்து பயணியின் டிக்கெட் கட்டணத்துடன் பிரீமியம் தொகையான 92 காசுகளும் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். 
இந்த இன்சூரன்சு திட்டமானது உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. டிக்கெட், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் என எல்லா டிக்கெட் வைத்திருப்போருக்கும் பொருந்தும். ஆனால், டிக்கெட்டை ரத்து செய்தாலோ, அல்லது இறுதி வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலோ இந்த இன்சூரன்சு ரத்து செய்யப்படும். பிரீமியம் தொகையான 92 காசு, திருப்பித் தரப்படமாட்டாது. 
ரூ.10 லட்சம் காப்பீடு தொகை 
வங்கி கணக்கில் இருந்து பிரீமியம் தொகை எடுத்த சில வினாடிகளில், பயணியின் செல்போனுக்கும் குறிப்பிட்ட 3 காப்பீட்டு நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். தகவல் கிடைக்கும். பயணியின் மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு தகவல் பட்டியல் வரும். அதை பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பிவிட வேண்டும். அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் காப்பீட்டுதாரராக பயணி ஆகிவிடுகிறார். 
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வெளிநாட்டு குடிமகன்களுக்கும் இந்த காப்பீட்டு வசதி பொருந்தாது. குறிப்பிட்ட ரெயில் பயணத்தின்போது, முழுமையான ஊனம் ஏற்பட்டால் காப்பீடு செய்த பயணிக்கும், மரணம் ஏற்பட்டால் பயணியின் நியமனதாரருக்கோ, வாரிசுதாரருக்கோ ரூ.10 லட்சம் வழங்கப்படும். 
15 நாட்களுக்குள் கிடைக்கும் 
பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், ரூ.7½ லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தால் மருத்துவச்செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும். சில அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும்போது, உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 
இந்த எதிர்பாராத சம்பவங்கள் நேரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களை தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் உரிய காப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயணி அல்லது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சம்பவம் நடந்து 4 மாதத்துக்குள் காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். 4 மாதத்துக்கு பிறகு எந்த காப்பீட்டு தொகையும் பெறமுடியாது. 
78 சதவீத பயணிகள் 
இந்த திட்டம் தற்போது ‘ஆன்-லைன்’ மூலம் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த காப்பீட்டு திட்டத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. அமல்படுத்தப்பட்ட முதல்நாளிலேயே 4 லட்சத்துக்கும் அதிகமானோர் 92 காசு பிரீமியம் தொகை செலுத்தி, இன்சூரன்சு எடுத்து உள்ளனர். திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று (நேற்று) வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் எடுத்தவர்களில் 78 சதவீத பயணிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். 
ஒருவர் எத்தனை முறை பிரீமியம் வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். அதில் விதிவிலக்கு கிடையாது. ஆனால் காப்பீட்டு தொகை குறிப்பிட்ட ரெயில் பயண நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விவரங்களுக்கு www.ir-ctc.co.in என்ற இணையதளத்தில் சென்று பயணிகள் தெரிந்து கொள்ளலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

அங்கன்வாடிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு !

முறைசாரா, பாலர் பருவக் கல்வி திட்டத்தில், சமூக, அறிவு, மனம், உடல், கற்பனைத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ற, கற்றல் சூழலை வழங்க, ஒவ்வொரு முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், 3,000 ரூபாய்; 

குறு அங்கன்வாடி மையத்திற்கு, 1,500 ரூபாய் மதிப்பில், கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, 49 ஆயிரத்து, 499 முதன்மை அங்கன்வாடி மையங்களிலும், 4,940 குறு அங்கன்வாடி மையங்களிலும், கல்வி உபகரணம் வழங்கப்பட உள்ளது; இதற்காக, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !

மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை, 
மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வருமான வரித்துறை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மோசடி வழக்கு 
சென்னை திருவான்மியூரை சேர்ந்த எஸ்.கே.துரைராஜ் என்பவர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக, என் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார். 
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
முன்ஜாமீன் மறுப்பு 
மனுதாரர் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரம், மருத்துவ கல்லூரியில் ஒரு இடத்தை பெறுவதற்காக இவ்வளவு பெரிய தொகை புகார்தாரருக்கு எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும். 
லஞ்சம் வாங்கியவரை மட்டும் குற்றம் சொல்லி தண்டிக்க கூடாது. லஞ்சம் வாங்கியவருக்கு இணையான குற்றத்தை லஞ்சம் கொடுத்தவர்கள் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீதும் தவறு உள்ளது. 
அதேபோல, மருத்துவ படிப்பில் சேருவதற்கு மதிப்பெண் தேவையில்லை. பணம் மட்டும் தான் தேவை, தகுதி என்ற சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு பணம் கொடுத்து படித்த டாக்டர்களிடம், சிகிச்சை பெறும் அப்பாவி நோயாளிகளின் நிலை என்னவாகும்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
சட்டப்படி நடவடிக்கை 
இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். மருத்துவ கல்வியில் சேர பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்த நபர்களின் விவரங்களை சேகரித்து, அவர்கள் எந்த வழியில் இந்த தொகையை பெற்றனர்? என்பதை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பின் நகலை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும். 
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

 தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார். 

இந்த படிப்புக்கு, முதற் கட்டமாக, நான்கு கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியில் உள்ள, டி.என்.சி.மணிவண்ணன் கல்லுாரி; ராசிபுரத்தில், ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லுாரி; திண்டுக்கல் ஸ்ரீசாய் பாரத் கல்லுாரி மற்றும் செஞ்சியில் உள்ள, ஸ்ரீ ரங்கபூபதி கலை, அறிவியல் கல்லுாரி என, நான்கு கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது.

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு

'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் - செலவினம் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சுகாதாரத்துறை செயலர், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், அனுமதி பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கும், அனுமதி அளிக்கப்படாத சிகிச்சைக்கும், பரிந்துரை செய்கின்றனர்; அதை, காப்பீட்டு நிறுவனம் ஏற்பதில்லை. இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கோர்ட்டுக்கு செல்கின்றனர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சேர்க்கப்படாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு உதவி செய்ய, அரசிடம் திட்டம் இல்லை.மாவட்ட, மாநில அளவிலான குழுவினர், அரசு ஆணைக்கு புறம்பாக, மருத்துவ செலவினம் வழங்க, பரிந்துரைக்க வேண்டாம்; அரசுக்கு எதிராக, வழக்கு வருவதை தவிர்க்கலாம் என, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்த

அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்

ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. 

 இது குறித்து, தமிழ்நாடு வட்ட மற்றும் சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே, திட்டத்தின் நோக்கம். அதனால் தான், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் - 249' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, தரைவழி கேபிள் மூலம் தரப்படும், 'பிராட்பேண்ட், இன்டர்நெட்' இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்கள், 300 ஜி.பி., வரை, இலவச டேட்டா பயன்படுத்தலாம்.இதை கணக்கிட்டால், வாடிக்கையாளர்களுக்கு, ஒரு, ஜி.பி., ஒரு ரூபாய்க்கு கிடைக்கும்.

மேலும் விபரங்களை, 1800 345 1500 என்ற, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் www.bsnl.co.in இணையதள முகவரி மூலம் அறியலாம். சென்னை வட்டத்தில், 6.5 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்; அதில், மூன்று லட்சம் பேர் மட்டுமே, பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர். புதிய சலுகை திட்டத்தை பயன்படுத்தி, மீதம் உள்ளவர்களையும், 'பிராட்பேண்ட்' வாடிக்கையாளராக மாற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

மாற்றுத்திறனாளி கல்வி உதவி உயர்வு

சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'பிட்டர்' பயிற்சி பெறும் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை, 300 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை கமிஷனர் அளித்த பரிந்துரையை ஏற்று, கல்வி உதவித்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியும், இரண்டு சீருடைகள் தைக்க, தையல் கூலியாக, 300 ரூபாய் வழங்கவும், அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கான கமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களை சேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர் விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும்,'' என்றார். 

TRB:Senior Lecturer / Lecturer / Junior Lecturer - Hall Ticket & Rejection List

Click Here

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள்இடம்மாற தடை

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள்இடம்மாற தடை
பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற, தமிழ் ஆசிரியர்கள், இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த வாரம் முடிந்தது. இதில், இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடம்மாறி வருகின்றனர். ஆசிரியர்கள், புதிய இடங்களுக்கு மாற, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் , அனுப்பிய சுற்றறிக்கை:

ஒரே பள்ளியில் இருந்து, அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், அவர்களை உடனே, மொத்தமாக இடம்மாற அனுமதிக்கக் கூடாது. மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத் தரப்படும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை, அவரை விடுவிக்கக் கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே, ஆசிரியர்கள் இடம்மாற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.