Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 10 September 2016

மாணவர்கள் மறந்த நாடகமேடை!!

பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடை உடை, கதாபாத்திரத்திற்கேற்ப முக பாவனைகள், என அனைத்தையும் ஒருசேர கொண்டு வருவது மேடை நாடகங்கள்தான்.

அத்தகைய நாடகங்களை, பள்ளி குழந்தைகளிடம் இன்று பெரிதும் காணமுடிவதில்லை. கலை இலக்கிய போட்டிகள் என்றாலே, பாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம் என அதோடு முடித்துக்கொள்கின்றனர்.

இதை தவிர்க்க, கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில், பள்ளியிலுள்ள ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவு கலை ஆசிரியர்களை இதன் பொறுப்பாளராக நியமித்து மாணவர்களுக்கு நாடகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

மேடை நாடகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியறிவின் முக்கியத்துவம், நாட்டுபற்று, சுகாதாரம் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது அறிவையும், சமூக பிரச்னைகளை விளக்கும் வகையிலும் நாடகங்கள் இருத்தல் அவசியம்.

ஓரங்க நாடகங்கள், காப்பியங்களிலிருந்து ஒரு பகுதியை மையமாகக் கொண்டும் இருக்கலாம். நாடகங்களில், முகபாவனைகளுடனும், தெளிவான உச்சரிப்புகளுடன் நடிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.

இவ்வாறு, கல்வித்துறையினர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நடப்பாண்டிலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஓரு சில பள்ளிகள் மட்டுமே, நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு விழாக்களிலும், பல்வேறு நிகழ்வுகளின் போதும் பின்பற்றி வருகின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில் நாடகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வந்தவுடன் அப்படியே முடங்குகிறது. இதனால், அந்த மாணவர்களின் கலைத்திறனும் மேம்படுவதில்லை. ஈடுபாடில்லாமை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், ஆசிரியர்களுக்கு நாடகங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும் வெளிப்படுகிறது.

இதனால், மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், நாடகக் கதாபாத்திரங்களாக மாறி, நடித்து பயிற்சியளிக்கின்றனர்.

ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தகைய செயல்பாடு பின்பற்றப் படுவதில்லை. அப்படியே நாடகங்கள் நடத்தினாலும், வெறும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். நாடகங்களின் மூலம், மாணவர்களின் ஆளுமைத்திறன், கலைத்திறன், கற்பனைத்திறன் என அனைத்துமே மேம்படுகிறது.

தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, தமிழ் உச்சரிப்புகளை நேர்த்தியாக பேசவும் நாடங்கள் மட்டுமே முழுமையாக உதவுகிறது. எனவே, முழு ஈடுபாட்டுடன், நாடகங்களை நடத்தி, மாணவர்களின் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:

காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.

மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.

மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று!!!

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.

தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

குடிசையில் நூலகம் நடத்தும் 9 வயது சிறுமி!!!

போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பு படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான
புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார். அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் படிப்பறிவில்லாத அப்பகுதி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர். வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர். நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் தனது எதிர்கால லட்சியம் என்று கூறும் மஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் விரைவில் 'சிந்தனை தலைவர்' பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் மாயா கூறுகிறார்

DEE PROCEEDINGS-மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு.நாள்:8/9/16

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!

கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. இதை பல்வேறு வகையில் பயன்படுத்தும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள

சுற்றுலாத்தலங்கள், நினைவுச்சின்னங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. குறிப்பிட்ட மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பாலித்தீன் பொருள்களுக்கு மக்கும் தன்மை இல்லை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் பாதிக்கிறது. மேலும், கால்நடைகள் அவற்றை உண்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த சூழலியலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தேசிய நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தியன்று அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக இப்போதே சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அது விரிவுபடுத்தப்படும். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாவலர்கள், பார்வையாளர்களைச் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிப்பர். பாலித்தீன் பொருள்களை எடுத்துச் செல்ல முயலுபவர்களுக்கு சுற்றுலாத்தலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். அதே வேளையில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு செல்வதற்கு தடையில்லை” என்றார் அவர்.

பெரிய பெரிய திரையரங்குகளுக்குள்ளே எந்த பொருளையும் தற்போது அனுமதிப்பதில்லை. அதற்கு நாமும் கட்டுப்பட்டுதான் இயங்குகிறோம். அதேபோல் பிளாஸ்டிக் பைகளின் கட்டுப்பாட்டையும் செயல்படுத்தினால் என்ன? ‘தூய்மை இந்தியா'வுக்குத் தோள் கொடுப்போம்.

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் 
துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,

“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்ற இந்திய வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார். 

மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' !

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன்கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' 
விபரம் பெறப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாகவழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்ற இந்திய வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார். 

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை

''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.