Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 11 September 2016

பள்ளித் தலைமை ஆசிரியர் தாற்காலிக பணி நீக்கம்

மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது கரடிக்கல். இங்குள்ள கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் மாடசாமி (45). இவர் அப்பள்ளியில் உள்ள மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மாடசாமியை விசாரணைக்கு அழைத்தபோது, அவர் மதுரையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குச் செல்வதாக போலீஸாரிடம் கூறிவிட்டு செல்லிடப் பேசியை அணைத்துவிட்டார். இதையடுத்து போலீஸார் மதுரையில் வந்து அவரைத் தேடினர். புகாரின் அடிப்படையில் மாடசாமி மீது போலீஸார் வழக்குப் பதிந்ததை அடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதன்படி தற்போது அவர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம்: சதாப்தி எக்ஸ்பிரஸ் நிற்கும்!

கோவை: சென்னை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு மாதங்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோயமுத்துார் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 17ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 16ம் தேதி வரை, ஆறு மாதங்களுக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிகமாக நின்று செல்லவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை, 9:56 - 9:57 மணி வரையும், கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரவு, 7:09 - 7:10 மணி வரையும் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED(HOD CODE FOR FILLING NHIS FORM 2016. Directorate of Elementary Edn. 4302 And Directorate of School Edn. 4303 )

ரயில் பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டத்தில் 28 லட்சம் பேர் பதிவு: திட்டத்தை விளக்கி 4 கோடி பேருக்கு இ-மெயில்

ரயில் பயணிகளுக்கான 92 பைசா காப்பீடு திட்டத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் குறித்து விளக்கும் வகையில் ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ரயில்கள் இயக்கப்படுகின் றன. இவற்றில் நாளொன்றுக்கு சுமார் 2.30 கோடி பேர் பயணம் செய்கின்றனர். கடந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 92 காசு பிரீ மியம் செலுத்த வேண்டும். பின்னர் ரயிலில் பயணம் செய்யும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டு பயணி கள் மரணம் அடைந்தால் அவர் களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உடல் உறுப்புகளை இழந்தால் ரூ.7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்ட வர்களுக்கு மருத்துவச் செலவாக ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப் படும். ஐசிஐசிஐ லோம்பார்ட், ராயல் சுந்தரம், ஸ்ரீராம் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி-யும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த புதிய காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கியது. இத்திட்டத் தில் இதுவரை 28 லட்சம் பேர் ஆத ரவு தெரிவித்து பதிவு செய்துள்ள னர். இத்திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. அதற்காக தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு அவர்களின் இ-மெயில் முகவரிக்கு இத்திட்டம் குறித்த முழு தகவல்களும் அனுப்பப் பட்டுள்ளன.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் ஐஆர்சிடிசி உயர் அதிகாரி கள் கூறியதாவது:

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வெளிநாட்டவர் தவிர மற்ற அனைவரும் பயனடைய முடியும். புறநகர் ரயில்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.

இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாக 92 பைசா செலுத்தி இந்தக் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இது வரை 28 லட்சம் பேர் பதிவு செய் துள்ளனர். ஐஆர்சிடிசியில் மொத் தம் 4 கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவற்றில் சராசரியாக தினமும் 5 லட்சம் முதல் 5.7 லட்சம் பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

ஏசி முன்பதிவு டிக்கெட்டுக்கு ரூ.40, ஏசி அல்லாத முன்பதிவு டிக் கெட்டுக்கு ரூ.20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே ஐஆர்சிடிசி-க்கு சுமார் ரூ.1.30 கோடி வருவாய் கிடைக்கிறது. ஒரு நிமிடத்தில் 7 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வர் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் வழியாக 60 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது, வருவாயும் அதிகரிக்கும்.

பயணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டம் குறித்த முழுமையான விளக்க குறிப் பேட்டை எங்களது இணையதளத் தில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கும் அவர்களின் இ-மெயி லுக்கு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tamilnadu Open University B.Ed. Admission Notification

*Tamilnadu Open University*

*B.Ed.*
Admission Notification

B.Ed Application & Prospectus -2017

Important Dates (Tentative)

Starting  date  for  the  issue  of  Application  and Prospectus- 08.09.2016      

Last  date  for  issue  of  Application and Prospectus- 13.10.2016(5.00pm)

Last  date  for  the  submission  of  filled-in  Application  forms  to   TNOU’s  office-14.10.2016  (5.30pm)    

Announcement  of  Admission  Results-27.10.2016

Starting  date  of  B.Ed.  Admission  Counselling-Nov-2016

உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலக அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

 குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம், உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டலவாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிவு எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 
நிகழாண்டின் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக, அமெரிக்காவின் மஸாச்சஸ்டஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.) முதலிடம் பிடித்துள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 2-ஆம் இடமும், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 3-ஆம் இடமும் பிடித்துள்ளன. 
முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் 5 கல்வி நிறுவனங்களும், பிரட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களும், சீனாவின் ஈத் ஸýரிச் கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளன. 
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: கடந்த ஆண்டு 147 ஆவது இடத்திலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 152 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 
கடந்த முறை 179-ஆவது இடத்திலிருந்த தில்லி ஐஐடி இம்முறை 185 இடத்துக்கும், 202-ஆவது இடத்திலிருந்த மும்பை ஐஐடி 219-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. 
இதேபோல் குவாஹாட்டி ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 701 ரேங்குகள் வரையிலான இந்தப் பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
ஆறுதல்: அதேசமயம் 254 -ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி, 5 இடங்கள் முன்னேறி 249 -ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலக அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம், உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டலவாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.
சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிவு எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
நிகழாண்டின் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக, அமெரிக்காவின் மஸாச்சஸ்டஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.) முதலிடம் பிடித்துள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 2-ஆம் இடமும், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 3-ஆம் இடமும் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் 5 கல்வி நிறுவனங்களும், பிரட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களும், சீனாவின் ஈத் ஸýரிச் கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: கடந்த ஆண்டு 147 ஆவது இடத்திலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 152 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த முறை 179-ஆவது இடத்திலிருந்த தில்லி ஐஐடி இம்முறை 185 இடத்துக்கும், 202-ஆவது இடத்திலிருந்த மும்பை ஐஐடி 219-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் குவாஹாட்டி ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 701 ரேங்குகள் வரையிலான இந்தப் பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
ஆறுதல்: அதேசமயம் 254 -ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி, 5 இடங்கள் முன்னேறி 249 -ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 

இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 

ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 

தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 

கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 

ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 

குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

 'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.

பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.