Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 14 September 2016

10-ம் வகுப்பு தனித்தேர்வு : "தட்கல்" முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி இண்டர்நெட் கட்டணம் குறைப்பு !

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனமும், 'இன்டர்நெட்' கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. 'குறைந்த கட்டணத்தில், இன்டர்நெட் சேவை வழங்கப்படும்' என, பிப்ரவரியில் அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் அறிவித்தது. இதற்காக, 2 எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'ஆம்பல், மகிழம், முல்லை, குறிஞ்சி' ஆகிய, நான்கு திட்டங்களும்; 4
எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'வாகை, செங்காந்தள்' ஆகிய, இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.முதற்கட்டமாக, சிறிய மாவட்டங்களில், 10 இணைப்புகள்; பெரிய மாவட்டங்களில், 25 இணைப்புகள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தலால் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்டர்நெட் சேவையை அரசு கேபிள், 'டிவி'

விரிவுபடுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ 4 'ஜி' வருகையால், இன்டர்நெட் சேவையில், 249 ரூபாய்க்கு, 300 ஜி.பி., அளிப்பதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம், இன்டர்நெட் இணைப்பு பெற வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, அந்த நிறுவனமும் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதை கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

நன்மைக்கும் படிக்கலாம்!

நவீனமயமாகிவிட்ட உலகில் சமூகப் பணியும் ஒரு வேலைத் துறையே. நமது சமூகத்துக்குப் பங்களிப்பதையே வேலையாகச் செய்கிறோம் என்பதில் ஆத்ம திருப்தியும் அடங்கியுள்ளது. பிறருக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியை அடைபவர்கள், பிறருடைய துயரைத் தீர்ப்பதில் நிறைவை அடைபவர்கள் நிச்சயமாகச் சமூகப் பணியைத் தங்கள் வாழ்நாள் வேலையாகத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான முறையான கல்வியும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

கல்வி, மருத்துவம், சட்டம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், விலங்குகளின் உரிமைகள் எனச் சமூகப் பணியாளர்கள் பல்வேறு துறைகளில் அவசியத் தேவையாக மாறியுள்ளனர். ஆய்வு, கொள்கை உருவாக்கம், சமூகப் பணிக் கல்வி, சமூக வளர்ச்சிப் பணிகள், சமூகப் பணி மேலாண்மை எனப் பல பிரிவுகள் இதில் உள்ளன.

எது சமூகப் பணி?

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் சூழலில் உள்ள மனிதர்களுக்காகச் சேவை செய்வதும், அவர்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதும்தான் சமூகப் பணியின் பிரதான அம்சமாகும். அத்துடன் சமூகப் பணியாளர்கள் பணியாற்றும் ஒரு சூழலின் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களையும் புரிந்துகொள்வது அவசியம்.

சமூகப் பணியாளராவது எப்படி?

சமூக சேவையில் ஈடுபாடும் விருப்பமும் கொண்ட எவரும் சமூகப் பணிக்குள் நுழையலாம். சமூகப் பணியில் தனிப்பட்ட வகையிலும் தொண்டு நிறுவன அமைப்புகளில் தன்னார்வப் பணியாளராகவும் பணியாற்றுபவர்கள் உள்ளனர். நாடெங்கும் தனிநபராகவே, காலங்காலமாக அசாத்தியம் என்று நாம் கருதிவந்த மாற்றங்களை நடத்திய சமூகப் பணியாளர்களும் நம்மிடையே உள்ளனர். அண்ணா ஹசாரே, மறைந்த இயற்கை விவசாயி ஆர்வலர் நம்மாழ்வார், கைலாஷ் சத்யார்த்தி என எண்ணற்ற சமூகப் பணியாளர்களைச் சொல்லலாம். இவர்கள் யாரும் சமூகப் பணியைப் பட்டப் படிப்பாகப் படித்தவர்கள் அல்ல. தங்கள் பணிக்காக மாதச் சம்பளமும் பெற்றவர்கள் அல்ல.

ஆனால் சமூகப் பணியை உங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிபுரியும் வேலையாகவும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மனதிருப்தியோடு திருப்தியான சம்பளமும் சமூகப் பணித் துறையில் உண்டு. ஒரு பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்வதற்கான திறனும் முடிவெடுக்கும் வலுவும் உள்ளவர்களே சமூகப் பணிக் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனித உளவியலை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான திறனும் சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அசாத்தியப் பொறுமையும் அவசியம்.

பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை சமூகப் பணி சார்ந்த படிப்புகள் உள்ளன.

சமூகப்பணித் துறை என்பது மானுடவியல், பொருளாதாரம், தத்துவம், உளவியல், சமூகவியல் துறைகளுடன் தொடர்பிணைப்பு உடையது. சமூகப் பணியைப் பொறுத்தவரை பட்டப்படிப்பு மூலமாக அத்துறையின் அடிப்படை அம்சங்கள், நெறிகள், தகுதித் திறன்கள், அரசு உரிமம் பெறும் நடைமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

முக்கிய முதுகலை பட்டங்கள்

‘தி மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்’ என்று அழைக்கப்படும் முதுகலைப் படிப்பு இரண்டு வருடங்களையும் நான்கு செமஸ்டர்களையும் கொண்டது. தபால் வழியிலும், தொலைதூரக் கல்வி முறையிலும் இதைப் படிக்கலாம்.

மிக முக்கியமானதும் தரமானதாகவும் கருதப்படும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிலையங்களிலும் எம்எஸ்டபிள்யு (மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்) மற்றும் எம்ஏஎஸ்டபிள்யு (மாஸ்டர் ஆஃப் ஆர்டிஸ் இன் சோஷியல் ஒர்க்) முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் குழு கலந்துரையாடலும் நேர்காணலும் அடங்கும்.

நுழைவுத் தேர்வு நடத்தும் கல்வி நிலையங்கள்

l அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

l ஜாமியா மிலியா இஸ்லாமியா

l சங்கராச்சார்யா யுனிவர்சிட்டி

l டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

வேலைவாய்ப்பு

சர்வதேச அளவில் சமூகப் பணி சார்ந்த புகழ்பெற்ற அமைப்புகளான உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ, யுனிசெப், சைல்ட் ரைட்ஸ் அண்டு யூ (சிஆர்ஒய்) போன்ற அமைப்புகளில் எம்எஸ்டபிள்யு படித்தவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மூன்றாம் உலக நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்துவதற்காகச் சமூகப் பணியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சமூகப் பணியைப் பட்டப் படிப்பாகப் படித்தவர்களுக்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆப் சோஷியல் ஒர்க்கர்ஸ், இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஸ்கூல்ஸ் ஆஃப் சோஷியல் ஒர்க்கர்ஸ், நேஷனல் அசோசியேஷன் ஆப் சோஷியல் ஒர்க்கர்ஸ் ஆகிய அமைப்புகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஹெல்ப் ஏஜ் இந்தியா போன்ற நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறைகள், கூர்நோக்கு இல்லங்கள், பேரிடர் நிர்வாகத் துறை, கல்வித் துறை, மருத்துவமனைகள், மருத்துவத் துறை, ஆதிவாசிகள் மேம்பாடு சார்ந்த பணிகளிலும் வாய்ப்புகள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் வேலை கிடைக்கும்.

பொதுவான பணிகள்

சமூகப் பணி சார்ந்த கல்வியும் திறனும் பெற்ற சமூகப் பணியாளர்களுக்கு அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பேரிடர் நிவாரணப் பணிகள் செய்வதற்காக அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சமூகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. சமூகப் பணியில் எம்.ஃபில் மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ஆய்வுப் பணி, ஆலோசனைப் பணி, கொள்கை உருவாக்கும் உயர்பணி ஆகிவற்றில் வேலை கிடைக்கும்.

சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள்

l சமூகப் பணி சான்றிதழ் படிப்பு

l மறுவாழ்வு ஆலோசனை சான்றிதழ் படிப்பு

l சமூக மேம்பாட்டு மேலாண்மை சான்றிதழ் படிப்பு

l டிப்ளமோ இன் பெர்சனல் மேனேஜ்மெண்ட்

l டிப்ளமோ இன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட்

l போஸ்ட் கிராஜுவேட் சர்டிஃபிகேட் இன் ரிசர்ச் மெத்தடாலஜி

தமிழகத்தில் எங்கே படிக்கலாம்?

சமூகப் பணியைச் சிறப்பான முறையில் பிஎஸ்டிபிள்யு என்கிற இளங்கலை பட்டப் படிப்பாக வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

l மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், சென்னை

l சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை

l ஸ்டெல்லா மேரிக் கல்லூரி, சென்னை

l தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம்

l பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

l டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் காலேஜ் ஆப் சயின்ஸ், கோவை

l மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஒர்க், மதுரை

l மகாராஜா காலேஜ் ஃபார் வுமன், ஈரோடு

l ராஜாஸ் காலேஜ், தஞ்சாவூர்

இந்தியாவின் டாப் 10

1. டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ், மும்பை

2. டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி

3. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், சென்னை

4. ஜாமியா மிலியா இஸ்லாமியா, டெல்லி

5. காலேஜ் ஆஃப் சோஷியல் ஒர்க் நிர்மலா நிகேதன், மும்பை

6. லயோலா காலேஜ் ஆஃப் சோஷியல் சயின்ஸ், திருவனந்தபுரம்

7. கார்வே இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சர்வீஸ், புனே

8. எம்எஸ் யூனிவர்சிடி ஆஃப் பரோடா, வதோதரா

9. மங்களூர் யுனிவர்சிட்டி, மங்களூர்

10. ரோடா மிஸ்ட்ரி காலேஜ் ஆப் சோஷியல் ஒர்க் & ரிசர்ச் சென்டர், ஹைதராபாத்

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. நடிகர் சிவக்குமார் ஆவேசம்!

நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

சிவக்குமாரின் கருத்து:
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.
பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா..?

தமிழகத்தில் செப்.16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது


தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கர்நாடகத்தின் இந்த வன்முறை தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 16-ம் தேதி முழு கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக, தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் சுமார் 4600 பெட்ரோல் பங்குகள் பங்கேற்பதாக கே.பி.முரளி கூறியுள்ளார்.

TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என,

எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. சமீபத்தில், மாநில தேர்தல் ஆணையம், 'அக்., 24ம் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அதன்படி, அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், எவ்வாறு நடைபெறுகின்றன என, மாநில தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்திஉள்ளார். இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் வரும், 16 முதல், விருப்ப மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; அன்று பவுர்ணமி. மேலும், 17ம் தேதி, புரட்டாசி பிறக்கிறது. எனவே, 16ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என,

எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. சமீபத்தில், மாநில தேர்தல் ஆணையம், 'அக்., 24ம் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அதன்படி, அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், எவ்வாறு நடைபெறுகின்றன என, மாநில தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்திஉள்ளார். இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் வரும், 16 முதல், விருப்ப மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; அன்று பவுர்ணமி. மேலும், 17ம் தேதி, புரட்டாசி பிறக்கிறது. எனவே, 16ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி !

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, 
விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன. இவற்றை திருத்தி மதிப்பிட, பத்தாம் வகுப்பிற்கு, 50 ஆயிரம்; பிளஸ் 2 விற்கு, 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. மறுகூட்டலில், பெரிய அளவில் மதிப்பெண் வித்தியாசம், விடைத்தாளின், ஒரு பக்கத்தையே திருத்தாமல் விடுவது போன்ற பிரச்னைகள் ஆண்டுதோறும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க, விடைத்தாள் திருத்தும் பணியை, கணினி

மயமாக்குவது குறித்து தேர்வுத் துறை பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக, பத்தாம் வகுப்பு விடைத்தாளை மட்டும் புதிய நடைமுறையில் திருத்த ஆலோசிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் விடைத்தாள் இம்முறையில் தான் திருத்தப்படுகிறது. இதன்படி, வினாத்தாள் பக்கம் வாரியாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தனி, 'போல்டர்' ஏற்படுத்தப்படும். திருத்தும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக, 'யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்தபடியே மதிப்பீடு செய்யலாம். அதற்கான, 'ஆன்சர் கீ' யும், 'அப்லோடு' செய்யப்படும்.இப்பணிக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் ஆசிரியர் தேவை இருக்கும். வீட்டில் இருந்தே, கணினி மூலம் மதிப்பீடு செய்யலாம். இதற்கு ஏற்ப, வினாத்தாள் மற்றும் வினாக்களில் சில மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மதிப்பீடு துல்லியமாக இருக்கும். மறுகூட்டலில் மதிப்பெண் வித்தியாசம் போன்ற பிரச்னை ஏற்பாடாது. விடைத்தாள் தேவைப்படும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலமே விடைத்தாள் பக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாரியப்பனை வளைக்க பார்க்கும் வங்கிகள் !

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற வீரர், சேலம் மாரியப்பனுக்கு, மத்திய, மாநில அரசுகள், 2.75 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள நிலையில், அதை தங்கள் வங்கியில், 'டிபாசிட்' செய்யும்படி, சில வங்கிகள் வற்புறுத்துகிறது. இதனால், அப்பகுதியினர் அதிருப்தியடைந்து உள்ளனர். பாரா ஒலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு, மத்திய அரசு, 75 
லட்சம் ரூபாயும், தமிழக அரசு, இரண்டு கோடி ரூபாயும் பரிசாக அறிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர், பரிசுகளை அறிவித்து

வருகின்றனர். அவர், இந்தியா திரும்பியவுடன், பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை சந்தித்த பின், சொந்த ஊரான, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த, பெரியவடகம்பட்டிக்கு வரவுள்ளார். இதற்கிடையே, தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் பலர், மாரியப்பன் வீட்டுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். அவர்கள், மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை, தங்களது வங்கியில் டிபாசிட் செய்யும்படி, அவரது குடும்பத்தினரை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தங்கள் வங்கியில் டிபாசிட் செய்தால், கார் இலவசமாக வழங்க உள்ளதாகவும், சில அதிகாரிகள் சலுகை தெரிவித்து வருகின்றனர்.

தங்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வருவதற்குள், அவரது குடும்பத்தினரிடம், 2.75 கோடி ரூபாயை, தங்கள் வங்கியில் டிபாசிட் செய்யக்கோரி வற்புறுத்தி வருவது, பெரியவடகம்பட்டி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை !

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சேலத்தில் நேற்று, சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, தனராஜ் கூறியதாவது:

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, செப்., 5 முதல், கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும், 60க்கும் மேற்பட்ட லாரிகளும், 50க்கும் மேற்பட்ட பஸ்களும், 100க்கும் மேற்பட்ட பிற தமிழக வாகனங்களும், வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் நாசம் : லாரிகளில் இருந்த பொருட்கள் சாம்பலாகி விட்டன. இன்சூரன்ஸ் மூலம், மிக குறைவான தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக உழைத்து சேர்த்த சொத்தை, வன்முறை கும்பல் அழித்து விட்டது. கர்நாடகாவில், வன்முறையை அரசும், போலீசும் வேடிக்கை பார்த்து உள்ளது. கர்நாடகாவில், பஸ்கள், லாரிகள் மட்டுமின்றி, தமிழர்களின் பொருட்கள், உடமைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுஉள்ளன.

நிவாரண தொகை : இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும். வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது, நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

அதேபோல், கர்நாடகா கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, லாரி, பஸ், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு முழு நிவாரண தொகை வழங்க, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கர்நாடகாவில் இதே நிலை தொடரும் பட்சத்தில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், பிற மாநில லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பிற மாநில லாரிகளின் இயக்கத்தையும் நிறுத்துவோம்.கர்நாடகா அரசு, கலவரத்தை தடுத்து நிறுத்தாத பட்சத்தில், அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்று போராட்டம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் முருகன் கூறியதாவது:கர்நாடகாவில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள அத்திப்பள்ளியில், இன்று, காலை, 10:00 மணிக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், மறியல் போராட்டம் நடக்கிறது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.