Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 15 September 2016

Learn Good Manners for kids in Tamil

நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் , பள்ளிகல்வித்துறை அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்: 63 பேருக்கு மீண்டும் பணி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 63 பேருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 63 பேரின்  மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு பணி நியமன

உத்தரவை வழங்கியுள்ளது. 2000-ஆவது ஆண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வில்  முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 63 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது ?

அரசுப் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், தேர்வு நடக்கும்:

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழகம் முழுவதும் 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும், நாளை நடைபெற வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வாகன சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை (16-ம் தேதி) முழு கடையடைப்பு, ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, ஈரோடு தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கட்சிகள் முழு ஆதரவு:

கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோரும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்கள் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்பர் என்றும் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிகவும், ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளன.'தமிழகம் முழுவதும் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் ஒன்றரை லட்சம் முகவர்களும் தங்களது பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டும் அடைத்து போராட்டத்தில் கலந்துகொள்வர்' என்று தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

ரயில், பேருந்துகள் ஓடும்:

அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடையடைப்பு போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக் காது. தமிழகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் அரசு பேருந்துகளையும் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்துள்ளோம். போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளோம்" என்றார்.தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால், ரயில் சேவை பாதிக்காது. பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸாரிடம் கேட்டுள்ளோம்" என்றார்.

அரசுப் பள்ளிகளில் தேர்வு நடக்கும்:

தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்" என்றார்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்:

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழகபெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், "சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

உள்ளாட்சி தேர்தலில் மதிப்பீட்டு ஊதியம் !

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரை

புது தில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக குடிமைப்பணித் தேர்வு முறை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.எஸ்.பாஸ்வான் தலைமையில் ஒரு குழுவை யுபிஎஸ்சி அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த மாதம் அளித்தது. அதில் குடிமைப்பணித் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அக்குழுவின் பரிந்துரைகளை இறுதி முடிவுக்காக மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு யுபிஎஸ்சி அனுப்பிவைத்துள்ளது.
குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32-ஆக உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை பாஸ்வான் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற வரிசையில் தேர்வு நடத்தப்பட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
21 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி., ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடு கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

      இக்கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை வகித்தார். மாவட்ட நிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின் மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் விரிவான அளவில் புதிய கல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியை மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்கு மாற்றிடும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய மொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு மாநில வரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும் 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும் நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் வாக்காளர்கள் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் மூலமே சேர்க்க முடியும்.
அவற்றிற்கு கால அவகாசம் இல்லாததால் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரி மாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும் வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரை நடக்கிறது. இதில் பெயர் சேர்க்க 2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால் போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களை வயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும் இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில் பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்
சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் www.ednnet.inகொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்
அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.

தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்
குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.

மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

முழு அடைப்பு எதிரொலி:நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள்  சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்
நாளை தமிழகம் முழுவதும்  உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார். நாளைக்கு பதில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. வழக்கு தாக்கல் தமிழக அரசின் சார்பில்வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரைகிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இருவேறு தீர்ப்பு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டு தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்குதடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின்கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும்,எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அக்.4–ல் இறுதி விசாரணை இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யா தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவான இறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மேலும் சில மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு சரி என்றும் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை: அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல்இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர, அறிவுறுத்த வேண்டும். வகுப்புகளுக்குதேவையில்லாத புத்தகம், நோட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டுப் பாடங்கள் அதிகம் கொடுத்தால், புத்தக பையின் சுமை ஏறும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தவிர, கூடுதல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது; மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.