Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 1 October 2016

ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!

03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.படிவம் 5-ல் 26.09.2016 முதல் 03.10.2016 முடிய   படிவம் 4-ல் உள்ள  விபரங்களை ஒருங்கிணைத்து ( தொகுத்து)  ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்

04.10.2016:
படிவம் 6-ல்
(செல்லத்தக்க வேட்புமனுக்களின் பட்டியலில்) வேட்பாளர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசைப்படி (ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியே) எழுதவேண்டும்.

06.10.2016:
வாபஸ் முடிந்த பிறகு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை துண்டுச்சீட்டில்  எழுதி குலுக்கலில் எடுக்கப்பட்ட வரிசை முறையிலேயே இணைப்பு 4-ல் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி சின்னங்களின் பட்டியலில் உள்ள வரிசைப்படி சின்னங்களை ஒதுக்க வேண்டும். உதாரணமாக குலுக்கலில் முதலில்வரும் வேட்பாளருக்கு திறவுகோல்,  2-நபருக்கு சீப்பு, 3-வது நபருக்கு கட்டில், 4-வது நபருக்கு கார், 5-வது நபருக்கு சங்கு - இவ்வாறு ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கீடு செய்து இணைப்பு 4-ல் அந்த வேட்பாளருக்கு நேரே அந்தந்த வேட்பாளரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற வேண்டும் .இதே வரிசையில் படிவம்
-9 ஐ (போட்டியிடும்
வேட்பாளர் பட்டியலை)
பூர்த்தி செய்திட வேண்டும்.
இந்நிகழ்வு ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சின்னஙகளின் பெயர்களை எழுதி குலுக்கக் கூடாது. வேட்பாளர்களின் பெயர்களைத்தான் குலுக்க வேண்டும். சின்னங்களின் எப்பொழுதும் மாறாது உதாரணமாக தமிழ்நாடு முழுக்க சிற்றூராட்சி (கிராம) வார்டுக்கான வாக்குச்சீட்டில் சின்னங்கள திறவுகோலில் ( சாவி) இருந்துதான் துவங்கும்.

இனி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்???

ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதால் பார்லி., நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும்படி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து பார்லி., நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி கூடுகிறது. டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான இதர மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2017-ல் ஜனவரி 12-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஒரு மாதம் நடைபெறும் கூட்டத்தொடருக்கு பின் 2-வது கட்டமாக மார்ச் 12-ந்தேதி பார்லி.,யின் இரு அவைகளும் கூடி மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறும். மாற்றி அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு இது அமல்படுத்தப்பட உள்ளது.

7th CPC -Fixation of pay and grant of increment in the revised pay structure —clarifications – regarding.


முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நேரில் கேட்டறிந்த ஆளுநர்

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிய, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார்.

 தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்தது.

     ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்தார்.

           ஆளுநர் வருகை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆளுநர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.

RTI - தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை,அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து RTI - மூலம் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களிடம் பெறப்பட்ட தகவல்...

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. இந்தியாவில் முதல் மிதக்கும் தபால் நிலையம் 1976 ஜூன் 29ல் எங்கு துவங்கப்பட்டது - கேரளத்தில் "குட்ட நாடு" என்ற இடத்தில்.
2. இந்தியாவின் முதல் சைக்கிள் தபால் நிலையம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974-ல் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள "ஸ்ரீகாவுன்"  என்ற கிராமத்தில்
3. "தென்னிந்தியா" என்ற பகுதியின் வட எல்லை - விந்திய சாத்பூராமலை
4. தென்னிந்தியாவின் தென் எல்லை - கன்னியாகுமாரி

5. மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் தென்னிந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் - சாதவாகனர்
6. சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பு - கிருஷ்ணா - கோதாவரி நதிக்கு இடைப்பட்ட பகுதி
7. சாதவாகன மன்றத்தில் புகழ்பெற்ற இருவர் - சிமுகர், கவுதமிபுத்திரசதகர்ணி
8. சாதவாகனர்கள் காலத்தில் ஆதரிக்கப்பட்டவர்கள் - அந்தணர்கள்
9. சாதவாகனர்கள் காலத்தில் புத்தியிர் பெற்றது - வேதபாட சாலைகள்
10. சாதவாகனர்கள் பரிசி வழங்கியது - வேதம் கற்றவர்களுக்கு
11. சாதவாகனர்கள் ஆட்சி செய்த பகுதி தற்போது எங்குள்ளது - ஆந்திரம்
12. பண்டை தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்
13. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள்  - மூன்று
14. சேர நாடு - தற்கால கேரளம்
15. சேரர்களின் தலைநகரம் - வஞ்சி
16. சேர மன்னர்களின் தலை சிறந்தவன் - சேர செங்குட்டுவன்
17. சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்தவர் - இரண்டாம் புலிகேசி
18. சேரன் செங்குட்டுவன் வென்ற வடநாட்டு மன்னர்கள் - கனகர், விசயர்
19. இமயத்தில் கல் எடுத்து கண்ணகிக்கும் சிலை எடுத்தவன் - சேரன் செங்குட்டுவன்
20. சேரர்களின் கொடி - வில் கொடி
21. சோழர்களின் பகுதி - திருச்சிக்கு வடபகுதி
22. சோழர்களின் துறைமுகம் - காவிரி பூம்பட்டினம்
23. பண்டைகால சோழர்கலில் தலைசிறந்தவர் - கரிகாலன்
24. பண்டைகால சோழர்களின் தலைநகர் - உறையூர்
25. பாண்டிய நாட்டின் பகுதிகளாகச் சொல்வது - திருச்சிக்குத் தெற்கில் உள்ள பகுதி
26. பாண்டியர்களின் முத்துக்களுக்குச் செல்வாக்கு - ரோமாபுரி
27. பாண்டிய மன்னர்களில் தலைசிறந்தவர் - நெடுஞ்செழியன்
28. நிலப்பரப்பு பிரிவுகள் - ஐந்து
29. பண்டைத் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் - ரோமாபுரி, கிரேக்கம்
30. பல்லவர்களின் தலைநகரம் - காஞ்சீபுரம்
31. பல்லவர்களின் முதலாமவன் - மகேந்திரவர்மன்
32. பல்லவர்களின் ஆட்சி பரப்பு - கிருஷ்ணா நதி முதல் பாலாறு வரை
33. பல்லவர்கள் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது -  தொண்டை மண்டலம்
34. பாண்டியனின் கொடி - மீன் கொடி
35. பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
36. பாண்டியர்களின் துறைமுகப் பட்டினம் - கொற்கை
37. பாண்டிய நெடுஞ்செழியன் போர் வெற்றியுடன் தொடர்புடையது - தலையாலங்கானம்
38. மகேந்திர வர்மன் தமழுவியிருந்த சமயம் - சமணம்
39. மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்குத் திரும்பினார் - அப்பர் சுவாமிகள்
40. மகேந்திர வர்மனின் சிறப்புப் பெயர் - சித்திரக்காலப் புலி
41. மகேந்திர வாடி, வல்லம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவர் - மகேந்திர வர்மன்
42. சித்தன்னவாசல் ஒவியம், குடுமியான் மலை கல்வெட்டு யார் காலத்தவை - மகேந்திரவர்மன்
43. கலைகளில் ஆர்வம் கொண்டவர் - மகேந்திர வர்மன்
44. ஓவியக்கலை சிற்பக்கலையில் கை தேர்ந்தவன் - மகேந்திரவர்மன்
45. வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்குக் கிடைத்த பட்டப்பெயர் - வாதாபி கொண்டான்
46. அப்பர் சுவாமியை வாட்டிய நோய் - சூலை நோய்
47. அப்பர் சுவாமிகள் சமணத்திலிருந்து சைவத்திற்கு வரக்காரணமாக இருந்தவர் - தமக்கை திலகவதியார்
48. சேரன் செங்குட்டுவன் இமயவரம்பன் என அழைக்கப்பட்ட காரணம் - இமயத்தில் கல் எடுத்து கனக விசயர் தலையில் வைத்துக்கொண்டு வந்தவன்
49. தமிழர்கள் இழுக்காக கருதியது - போரில் புற முதுகிட்டு இறப்பது
50. இரண்டாம் புலிகேசியின் நாடு - மேலைச் சாளுக்கிய நாடு
51. முதலாம் நரசிம்ம வர்மனை எதிர்த்து நின்றவர் - இரண்டாம் புலிகேசி
52. சோழர்களின் காலம் எதற்கு புகழ் பெற்றது - கிராம சுய ஆட்சி
53. மணிமேகலை உணர்தச்தும் சமயம் - பவுத்தம்
54. ஜாதக கதைகள் எந்தவகைப் பிரிவில் அடங்குகின்றன - சமயச்சார்பு இலக்கியம்

தேர்தல் வரை தடையில்லா மின்சாரம் !!!

 பணிகளை முடுக்கிவிட்ட வாரியம்

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடி களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தற்போது, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல்

உள்ளது. இருப்பினும், மின் சாதனங்கள் பழுதால், மின்தடை ஏற்படுகிறது.
 சென்னை, கோவை போன்ற, முக்கிய நகரங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், மின்தடை தொடர்கதை யாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல், இரு கட்டங்களாக நடப்பதால், ஓட்டுச்சாவடிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.



இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


உள்ளாட்சி தேர்தல், மழை காலத்தில் நடக்கிறது. மழை பெய்தால்,மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு,ஓட்டுச்சாவடிகளில் மின்தடை ஏற்படலாம். எனவே, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின் சாரம் வரும் மின்கம்பம், கேபிள், டிரான்ஸ்பார் மர், பில்லர் பாக்ஸ் போன்றவற்றில், பழுதான சாதனங்கள்
மாற்றப்படுகின்றன.

மழை பெய்தாலும்,ஓட்டுச்சவாடிகளில், மின் தடை ஏற்படாத வகையில், சிறப்புக்கவனம் செலுத்த, செயற்பொறியாளர்கள், உதவி பொறி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு ரயில்வே வெளியிட்டது...அட்டவணை! இன்று, முதல் அமலுக்கு வந்தது!!!

நடப்பு ஆண்டுக்கான, ரயில்வே புதிய கால அட்டவணையை, தெற்கு ரயில்வே வெளியிட்டது; அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு, அமலுக்கு வருவது வழக்கம். 2015ல் வெளியிட்ட கால அட்டவணை நேற்றுடன் நிறைவடைந்தது. புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சேவை மாறும் ரயில்கள்

கோவை மும்பை (குர்லா எக்ஸ்பிரஸ்), கோவை மேட்டுப்பாளையம் பாசஞ்சர் (56150, 56151), கோவை சென்னை (சதாப்தி), கோவை மன்னார்குடி (செம்மொழி), பாலக்காடு டவுன் கோவை (66606); பாலக்காடு ஈரோடு (66608); விருதாச்சலம் சேலம் (76849); கண்ணூர் கோவை (56650); ஜோலார்பேட்டை ஈரோடு (56839); நாகர்கோவில் கோவை (56319) ஆகிய ரயில்கள், ஐந்து நிமிடங்கள் முதல், அரைமணி நேரம் வரை, நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறுத்தங்கள்

சென்னை நாகர்கோவில் ரயில் இரண்டு மார்க்கத்திலும், திருப்பத்தூரில் நின்று செல்லும். சென்னை மங்களூரு ரயில், சங்ககிரியிலும்; கொச்சுவேலி ஹைதாராபாத் எக்ஸ்பிரஸ், மொரப்பூரிலும்; ஆலப்புழா தன்பாத் ரயில், பொம்மிடியிலும்; டாடா நகர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சாமல்பட்டியிலும்; குர்லா எக்ஸ்பிரஸ் ஓமலூரிலும்; ஜஷ்வந்பூர் கண்ணூர் மற்றும் கொச்சுவேலி பெங்களூரு ரயில்கள் திருப்பூரிலும் நின்று செல்லும். இவை உட்பட, 53 ரயில்கள், வெவ்வேறு ஸ்டேஷன்களில் நின்று செல்லும் வகையில் கால

அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

ALL ESSENTIAL FORMS FOR TEACHERS.

முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் சுணக்கம் காட்டும் TRB BOARD.

டிசம்பர் முதல் வருகிறது 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு!

தமிழகத்தில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு கள், தற்போது கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன. 

  ரேஷன் முறைகேட்டை தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, 2012ல் உணவு துறை முடிவு செய்தது; ஆனால், 2015ல் தான் பணிகள் வேகம் எடுத்தன. அதன்படி, ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்துக்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது.

அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' அட்டை விபரம், மொபைல் போன், சிலிண்டர் விபரங்கள் பதியப்படுகின்றன. ரேஷன் கடையில் பெறப்படும் மேற்கண்ட விபரங்கள் அனைத்தும், உணவு வழங்கல் துறையின், 'மெயின் சர்வரில்' பதிவாகின்றன. மற்றொரு பக்கம், 'கிரெடிட், டெபிட்' கார்டு வடிவில், ரேஷன் கார்டு தயாரிக்கப்படுகிறது. 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்யும் வகையில், இந்த கார்டு வடிவமைக்கப்பட உள்ளது.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவரின் படம், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறலாம். 'ஸ்கேன்' செய்வதற்கு வசதியாக, சிறிய, 'பார்கோடு' இருக்கும். ரேஷன் கடையில், ஸ்மார்ட் கார்டு கொடுத்தால், தற்போது, ஆதார் ஸ்கேன் செய்வது போல், ரேஷன் கார்டும், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'பில்' போடப்படும். அந்த விபரம், ரேஷன் கார்டுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும். கட்டுப்பாட்டு மையத்தின், 'சர்வரிலும்' பதிவாகும். டிச., முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்

பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
காவல் துறையில் ஆயுதப் படைகள், சிறப்பு காவல் படை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கென தகுதியானவர்களை அறிந்து, பணித் திட்டத்தை மாவட்டங்களில் வகுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கிராமப்புற அளவில் கடலோர பேரிடர் தடுப்புத் திட்டத்தின் கீழ் பேரிடர் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.  

பருவமழை பாதிப்புகளஐ எதிர்கொள்ளும் வகையில், தகுந்த நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு, பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்துவது, நிவாரணப் பணிகளில் உதவுதல் போன்றவற்றுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். 
அனைத்து அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் எந்த நேரமும் பணி செய்திடும் வகையில் தயாராக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பணிகளைத் தெரிவித்தாலும் அதனைச் செய்திட தயாராக இருப்பது அவசியம். ஆகவே, அவர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட அவசர கால மீட்புப் பணிகளுக்கான மையத்துடன் தொடர்பில் இருக்கும்படி செய்ய வேண்டும்.
பருவகால நிலை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்களைப் பராமரித்து, எந்த நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கென வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. 

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், யு.ஜி.சி., வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அனைத்து பல்கலைகளும், ஆன்லைன் வழி படிப்புகளை துவங்கலாம்; அதற்கு முன், படிப்பின் விபரத்தை தாக்கல் செய்து, அனுமதி பெற வேண்டும். பல்கலை இணையதளத்தில், இந்த படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை

எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் உள்ள, பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நடத்தியது.  அதில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுபரிந்துரைகளை, ஜனவரி முதல் வழங்கும் வகையில், உடனடியாக, எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது. 'மேலும், 2003 ஏப்., 1க்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; அதுபற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தன் அறிக்கையை, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

PAY AUTHORIZATION (50 ELE. SCHOOL HM AND 5O HIGH SCHOOL HM)

CLICK HERE ....

இரண்டாம் பருவம் துவங்கும் துதல்நாளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் !!!

தொழிற்சாலையில் ஆக்ட்அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டுவருகிறது ??

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும் +2 முடித்த மாணவமாணவியர் கவணத்திற்கு,சென்னையில் உள்ள இணைப்பு (ரயில் )பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட்அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டுவருகிறது .......விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் , நம் தமிழகமாணவர்களுக்கு இது
சம்பந்தமானவிழிப்புர்ணர்வை ஏற்படுத்தஉதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்தமாணவர்களுக்கு இதனை பற்றியவிழிப்புர்ணர்வு அதிகம், அதன்காரணமாகதான் கடந்த 5வருடங்களுக்கு மேலாக முழுவதும்வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்மட்டுமே நம் மாநிலத்துக்கு உரியஇடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துபலன் பெற்று வருகிறார்கள் .இதனை தங்களால் முடிந்த அளவுக்குநண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும். ரயில்வே வேலைவாய்ப்பு பற்றியவிழிப்புர்ணர்வு தமிழகமாணவர்களிடத்தில் ஏற்படுத்தஉதவுங்கள் .-               தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்1. Thiruvallur Collector 9444132000044 27661600 27662233 276622992. Chennai 9445419966 9444131000044 25381330 25383962 25228025 25234403 42112110 252280253. Kancheepuram Collector 9444134000044 27237433 27238478 272384774. Vellore Collector 94441350000416 2252345 2252501 2222000 2253034 22280295. Krishnagiri Collector 944416200004343 239500 239400 239100 2393006. Dharmapuri Collector 944416100004342 230500 232300 232800/ 2308867. Tiruvannamalai Collector 944413700004175 233333 233366 2322228. Villupuram Collector 944413800004146 222450 222480 2224709. Namakkal Collector 944416300004286 281101 280111 280222 28110610. Salem Collector 94441640000427 2452233 2452244 2400200 2400700 245296011, Erode Collector 94441670000424 2266700 2262444 226144412. .The Nilgiris Collector 94441660000423 2442344 2442233 244397113. Coimbatore Collector 94441680000422 2301320 2213230 230152314. Dindigul Collector 94441690000451 2461199 2432600 2432133/ 246708215. Karur Collector 944417300004324 257555 257112 255444 25780016. Tiruchirapalli Collector 94441740000431 2415358 2420681 2420181 241192917 Perambalur Collector 944417500004328 276300 224200 27787518. Ariyalur Collector04329 223351 22333119. Cuddalore Collector 944413900004142 230999 230651-55 230666/ 230777 23055520 Nagapattinam Collector 944417600004365 252700 247800 247400 25304821. Thiruvarur Collector 944417800004366 223344 225142 224738 22103322. Thanjavur Collector 944417900004362 230121 230201 230857 23062723. Pudukkottai Collector 944418100004322 21663/ 221624 221690 22169024. Sivaganga Collector 944418200004575 241466 241455 241581 24158125, Madurai Collector 94441710000452 2531110 2532290 253092526. Theni Collector 944417200004546 253676 253626 25362627. Virudhunagar Collector 944418400004562 252525 252345 25250028. Ramanathapuram Collector 944418300004567 231220 221349 23055829. Thoothukudi Collector 94441860000461 2340600 2320050 2326747 234060630. Kanniyakumari Collector 944418800004652 279555 260666 260999 260999.நண்பர்களே இதை ஷேர் மட்டும் செய்து விடாமல் ஒரு printout எடுத்து டைரியில் வைத்துக்கொள்வோம் ,

பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல், 
விலையில் மாற்றம் செய்து நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்

விண்ணப்பிப்பதாகக் கூறி, ஆண்டுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு அரசு தொழில்நுட்ப தேர்வு முற்றிலுமாக நடத்தாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கடந்த 2014ஆம் ஆண்டு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன் தேர்வு முடிவுகள் கால தாமதமாகவே வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள் பத்து மாதங்களாக வெளியிடப்படவில்லை. இப்போது பத்து மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி, ‘இந்தத் தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்தத் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும். மேலும், இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது’ என்று தெரிவித்துள்ளார்.