Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 2 October 2016

இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஜன., 8ல் நடக்க உள்ள, இந்த தேர்வுக்கு,

https://upsconline.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலை தேர்வுக்கு பின், பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும். பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்ற, 30 வயதுக்கு குறைவானோர் பங்கேற்கலாம்; மேலும், விபரங்களை, http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

மாநில அறிவியல் கண்காட்சி உள்ளாட்சி தேர்தலால் ஒத்திவைப்பு!!

இன்ஸ்பயர் விருதுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இன்ஸ்பயர் விருதுகள் வழங்கப்படுகிறது. 
இதில், பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை மூலம், அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்வி மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டும்.

இதில, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, அக்டோபர், 15, 16ம் தேதிகளில், திருச்செங்கோடு எலயம்பாளையத்திலுள்ள விவேகானந்தா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அக்டோபர், 17, 19 தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தல் PO, PO1, PO2, PO3, PO4,PO5, PO6 வேலை என்ன?

Duties of Presiding Officer
1.Receive all the Materials from ZO
2.Separate way for Entrance &Exit of voter
3.Check the Materials
4.Check the Electoral Roll
5.Booth & Place of Voters Details
6.Check Serial no of BP with
List& put Rubber Stamp of Booth in BP

7.Compartment Arrangements &pasting Posters
8.Take Safe Custody of All Election Materials
9.Sign of Presiding officer in BP
10 Appointment of Booth Agents
11Place for Booth Agents
12.Preparing Ballot Box
13.paperseal Fixing in Ballot box
14.Show No marking in Marked copy at the time Starting Election to Booth Agents
15.Permit Agents to note First & Last no of NO
16.Declaration
17.Challenged vote
18.Tendered vote
19.Voting Secracy violation
20.வோட்டு போட மறுத்தல்
 21.Slip for Voters at Queue At 5PM
22 .Sealing of Ballot Box
23.Ballot paper Account
24.paper seal Account

Duties of PO1
1.Identification
2.Maintanance of Village Panchayat Ward
Marked copy of Electoral
3 Issueing of Village pt ward
Ballot paper
 4Note  serial no,part no of voter in the Counterfoil
 5 Get  Signature of voter in the Counterfoil

For Two Ward Booth Another polling officer Do the  Same Duties of polling officer 1

Marking in the Marked copy of Electoral
Male -Underline
Female -Underline& Tickmark

Do blo's have to issue boothslip
Plse confirm

Duties Of PO2
இடது ஆள்காட்டி விரலில்
விரலில் அழியாத மை
வைத்தல்

Duties of PO 3
1.Maintanance of Village Panchayat President Marked copy of Electoral
2 Issueing of Village Panchayat  President
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil

Duties of PO 4
1.Maintanance of Union Councillors
 Marked copy of Electoral
2 Issueing of Union councillors
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil

Duties of PO 5
1.Maintanance of District Councillors
 Marked copy of Electoral
2 Issueing of District  councillors
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil

Duties of PO 6
1.Incharge of Ballot Box
2.Giving 2 sided Arrow CrossMark Rubber Stamp with ink
3வாக்கு சீட்டை செங்குத்தாக நீளவாக்கிலும்,பின்பு குறுக்கே மடித்தல்
4.Confirmation of BP posted in Box

Colours of Ballot paper
1.Dt Panchayat Ward -YELLOW
2.pt.union Council Ward  -Green
3 .Village Pt.President -pink
4.Village pt .Ward -white
(Single Ward)
White&Blue
(Double Ward

TET CASE : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குநீதிமன்ற எண் 12ல் முதல் வழக்காக 04.10.16 அன்று நீதிபதிகள் சிவகீர்த்திசிங் மற்றும் பானுமதி அவர்களின் முன்பு விசாரணை

கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்-செய்தி வெளியீடு!!

கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்-செய்தி வெளியீடு!!

ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

சென்னை,பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.ஜிசாட்-18இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-சோதனைகள்தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.கவுண்ட் டவுன்தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இதற்கான ‘கவுண்ட் டவுன்’ வரும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்

ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு

ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் விதிமுறையில் சில திருத்தங்களை செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நவ., 2 ல் நடக்கிறது. 1995ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதி 94 ல் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும்.

இதில் கூட்டத்தை நடத்துவதற்கான குறைவெண் வரம்பு (கோரம்), ஊராட்சித் தலைவரை வாக்காளராக சேர்ப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் கடந்த கால தேர்தல்களில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் சில திருத்தங்களை செய்து மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்டம் நடத்துவதற்கு தேவையான குறைவெண் வரம்பு கணக்கிடுவதற்கு, ஊராட்சித் தலைவரை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது; மொத்த வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை புரிந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் ஓட்டெடுப்பிற்கு வாக்காளர்களாக வார்டு உறுப்பினர்களுடன், ஊராட்சித் தலைவரையும் சேர்த்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

சென்னை,பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.ஜிசாட்-18இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-சோதனைகள்தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.கவுண்ட் டவுன்தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இதற்கான ‘கவுண்ட் டவுன்’ வரும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்

புத்தகபை எடையை குறைக்கவலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் 7–ம் வகுப்பு மாணவன்!!

புத்தகப்பை எடைகுறைப்பு குறித்த கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 7–ம் வகுப்பு மாணவன் ஒருவன் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க உள்ளான்.7–ம் வகுப்பு மாணவன்

பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடைக்குறைப்பு தொடர்பாக சுவாதி பாட்டீல் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் 
பொது நலன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு புத்தகப்பை மாணவர்களின் எடையில் இருந்து 10 சதவீதம் மட்டுமே இருக்கவேண்டும் என உத்தரவிட்டது. இந்தநிலையில் புத்தகப்பை எடைக்குறைப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி 7–ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளான். மாணவன் ரக்வெட் ராய்கர் சந்திராப்பூரில் உள்ள வித்யா நிகேடன் பள்ளியில் படித்து வருகிறான். புத்தகப்பை எடை குறைப்பு தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை என இவன் கருதுகிறான்.உண்ணாவிரதம்

இதுகுறித்து அவன் கூறும்போது:–அதிக சுமை புத்தகபை பிரச்சினையை அனைத்து மாணவர்களும் எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கும், பயிற்சி வகுப்புக்கும் பறந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் புத்தகப்பை எடை குறித்த கோர்ட்டு உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து ஏற்கனவே நான் கல்வி வாரியத்திற்கு கடிதம் எழுதினேன் பதில் வரவில்லை. என் நண்பருடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினேன். அப்போது யாரும் இதுகுறித்து கேட்கவில்லை. எனவே வேறு வழியின்று உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கிறேன்.இவ்வாறு அவன் கூறினான்.ரக்வெட் ராய்கர் படிக்கும் பள்ளியில் சமிபத்தில் தான் மாணவர்களுக்கு லாக்கர் வசதி செய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது. மாநிலம் முழுவதும் புத்தகப்பை எடை குறைப்பு குறித்த கோர்ட்டு உத்தரவு நடைமுறைப்படுத்தபட வேண்டும் என்பதே மாணவன் ரக்வெட் ராய்கரின் கோரிக்கையாக உள்ளது.

4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் அச்சடிப்பு : 6ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலில், நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்க, அந்தந்த மாவட்டங்களுக்கு, மாதிரி ஓட்டுச்சீட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 உள்ளாட்சி தேர்லில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கான ஓட்டுப்பதிவு மட்டும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்படுகிறது.

ஆணையம் அறிவிப்பு : மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., உறுப்பினர் ஆகிய, நான்கு பொறுப்புகளுக்கான தேர்தல், ஓட்டுச்சீட்டு மூலமே நடத்தப்படும் என,

தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அளவில் ஓட்டுச்சீட்டு, அதில் உள்ள வாசகம், நிறம் போன்றவை, ஒன்று போல இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, ஓட்டுச்சீட்டு மாதிரி, மாநில தேர்தல் ஆணையத்தால், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு - மஞ்சள்; யூனியன் கவுன்சிலர் பதவிக்கு - பச்சை; பஞ்., தலைவர் பதவிக்கு - இளஞ்சிவப்பு; பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு - வெள்ளை நிறத்தில் ஓட்டுச்சீட்டு அச்சிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச்சீட்டு, வழக்கம் போல வெள்ளை நிறத்தில் இருக்கும். தபால் ஓட்டுப்பதிவு செய்யும் ராணுவத்தினர், அரசு பணியுடன், தேர்தல் பணியை கவனிப்பவர்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால், ஒரு ஓட்டுச்சீட்டும்; யூனியன் மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால், மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., உறுப்பினர் என, நான்கு ஓட்டுச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்படும்.

ஓட்டுச் சாவடிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல், 6ம் தேதி மாலை வெளியிடப்படும். அன்றைய தேதியில் இருந்து, ஓட்டுச்சீட்டுகள் அச்சிடும் பணி துவங்கும். ஒரு சில

நாட்களில், பணி முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அனைத்து மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள சுற்றறிக்கை:

மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மழைக்கால விபத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும், நல்ல விபரமான மாணவர்களை, மற்ற மாணவர்களுக்கு

வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டும்

வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் பாதையில், நீர்நிலைகள் இருந்தால், அந்த பாதையை தவிர்க்க, அறிவுறுத்த வேண்டும்

பள்ளிகளில், ஆபத்தான வகையில் எந்த பொருட்களும் இல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும். மின்கசிவு ஏற்படாமல், மின் உபகரணங்களை சரி செய்வது முக்கியம்

பள்ளி வளாகத்தில், நீர் மற்றும் குப்பை தேங்காமல், சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் எண் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், ஆதார் எண் பதிவு செய்ய, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் பதிவு சட்டத்தில் புதிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளின் நலன் கருதியும், உடல் ரீதியான ரேகைகள் வளர்ச்சி குறைந்திருக்கும் என்பதாலும், குழந்தைகளுக்கு மட்டும், 'பயோ மெட்ரிக்' அளவீடு தேவை இல்லை.

குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும். தாய், தந்தை முகவரி மற்றும் ஆதார்எண், குழந்தையின் ஆதார் எண்ணுக்கு, அடிப்படை தகவலாக சேர்க்கப்படும். குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான ரத்த உறவை உறுதி செய்ய, ரேஷன் கார்டு, மத்திய,மாநில அரசுகளின் மருத்துவ அட்டை, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சேர்க்க வேண்டும்.

மேலும், பெற்றோர், தங்களின் ஆதார் அசல் அட்டை மற்றும் நகல்களை, பதிவு செய்யும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்; இதில், தாயின் ஆதார் எண்ணுக்குமுன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த பின், ஐந்து வயது ஆனதும், உடல் ரீதியான பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து குழந்தைகளுக்கும், 15 வயது முடிந்ததும், மீண்டும் பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய க.பரமத்தி தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் பள்ளி ஒரு பார்வை

தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2016

தொடக்க/நடுநிலைப்பள்ளி வகுப்பறை சுவரில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான வரையவேண்டிய 16 படங்களும் அளவுகளும் (மறுபதிவு)