Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 3 October 2016

'எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்!' பழகப் போறாங்க மாணவர்கள்

'மாணவர் பரிமாற்ற திட்டம்' என்ற பெயரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'வாழ்க்கை கல்வி' கற்பிக்கப்பட உள்ளது. கிராமங்களில் உள்ள ஒற்றுமை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள், கோயில் விழாக்கள் உள்ளிட்ட வாழ்க்கை கல்வி குறித்து, நகர்புற மாணவர்கள் அறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதே போல், கிராமப்புற மாணவர்கள் நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.

நகரங்களை பற்றி அறியவும், பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்பிக்கும் முறை, தொழிற்கூடங்கள், நகர்புற வாழ்க்கை முறையை அறியவும், தாழ்வு மனப்பான்மையை போக்கவும் இத்திட்டம் உதவும்.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நகர்புற பள்ளி, ஒரு கிராமப் பள்ளி தேர்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர் வீதம் பரிமாற்றம் செய்யப்படுவர். இவர்கள் ஆறு நாட்கள் அங்கு தங்கி இருப்பர். இத்திட்டத்திற்காக பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

அகஇ -வட்டார வளமையங்களுக்கு வழங்கவிருக்கும் ANIMATED VIDEO CDS தயாரிப்பதற்கு பணிமனை நடத்துதல் (3/10/16 & 4/10/16) சார்ந்த இயக்குனர் செயல்முறைகள்

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி !

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION DECEMBER - 2016 B.Ed Exam Timetable DECEMBER - 2016 B.Ed Exam Application -Hall Ticket.

CLICK HERE - TO DOWNLOAD TIMETABLE...

CLICK HERE TO DOWNLOAD - B.ED EXAM APPLICATION..

INSPIRE AWARD STATE LEVEL COMPETITION POSTPONED - PROCEEDINGS



கலை கல்லூரிகளுக்கான கட்டணம்:பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில், 87 அரசு கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும், 1,178 சுயநிதி கல்லுாரிகள் என, மொத்தம், 1,464 கலை, அறிவியல்மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. மேலும், 600க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்கிடெக்ட் கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
இவற்றில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கும், அரசு அமைத்த நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி, கல்வி கட்டணத்தை நிர்ணயித்துஉள்ளது. ஆனால், 500க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இதுவரைகட்டணம் நிர்ணயிக்கவில்லை. இதனால், கல்லுாரிகள், தங்கள் விருப்பம் போல,பல லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் என்.பசுபதி கூறியதாவது:'கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அடுத்த கல்வி ஆண்டிலாவது, கல்வி கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டிக்கு, உயர் கல்வித்துறை பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன.

இருப்பிட முகவரி இல்லாதவர்களுக்கும் 'ஆதார்':பரிந்துரை கடிதம் கொடுத்து பெறலாம்

இருப்பிட முகவரி இல்லாதவர்களும், பரிந்துரை அடிப்படையில், 'ஆதார்' பெறலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், ஆதார் எண் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது. 
தேசிய மக்கள்தொகை பதிவு அடிப்படையில், ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டன. தற்போது,மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெறாதோருக்கும் ஆதார் எண் பதியப்படுகிறது.முதலில், 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் ஆதார் எண் பதியப்படும் என, அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு, செப்., 14ல், நடத்திய ஆதார் கமிட்டி கூட்டத்தில்,புதிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பிறந்த குழந்தைக்கும், ஆதார் எண் பெறலாம். இருப்பிட முகவரி இல்லாதோரும், கண்டிப்பாக ஆதார் எண் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போர், நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிக்காமல், பல இடங்களுக்கும் சென்று தொழில்செய்வோரின் குடும்பத்தினர் உட்பட, அனைவரும் ஆதார் எண்பெறலாம். இருப்பிட முகவரி இல்லாதோர், ஏதேனும் ஆவணங்கள் அடிப்படையில் ஆதார் எண் பெறலாம். இல்லையெனில், உள்ளாட்சி பிரதிநிதி, கிராம நிர்வாக அலுவலர், கெசட்டட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்ளிட்ட, யாராவது ஒருவரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் அல்லது தெரிந்த ஒருவர், அவரது ஆதார் எண்ணை சேர்த்து, பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.