Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 11 October 2016

"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!

"ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!

ஆதார் விவரங்களை பதிவு செய்த கார்டுதாரர்களுக்கு மட்டுமே,"ஸ்மார்ட்' கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்; வரும், 31க்குள், ஆதார் "ஸ்கேன்' செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 29 ஆயிரத்து, 370 ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 23 லட்சத்து, 45 ஆயிரத்து, 548 நபர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் 
வழங்கப்படுகின்றன.மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 4.75 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 4.12 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த வார நிலவரப்படி, மாவட்ட அளவில் இதுவரை, 14 லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர், ஆதார் விவரத்தை "ஸ்கேன்' செய்துள்ளனர். திருப்பூர் வடக்கில், 55 சதவீதம் பேர்; திருப்பூர் தெற்கில், 56 சதவீதம் பேர், ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்துள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை "ஸ்கேன்' செய்வது எளிதாக உள்ளது. "ஆன்-லைன்' மூலம் பதிவிறக்கம் செய்த அட்டைகளை "ஸ்கேன்' செய்வதில் குளறுபடி நீடிக்கிறது.

பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள், டிச., 31ல் காலாவதியாகிறது. வரும் ஜன., முதல், "ஸ்மார்ட்' கார்டு மூலம், பொருள் வினியோகம் நடக்க உள்ளது. வரும், டிச., மாதம், "ஸ்மார்ட்' கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடக்கும் என்பதால், ஆதார் "ஸ்கேன்' செய்யும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில், ரேஷன்

பயனாளிகளில், 62 சதவீதம் பேரின் ஆதார் விவரம் "ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளது. "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு, "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், கார்டில் <உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீங்கலாக, அனைவரின் ஆதார் விவரத்தையும் "ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரும் நவ., மாதம் முதல், அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டில் உள்ள, அனைத்து நபர்களின் ஆதார் விவரம் பதியாமல் இருந்தால், கார்டு தானாக ரத்தாகிவிடும். குடும்ப தலைவர் அல்லது யாராவது ஒருவரின் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் கிடைக்கும். வரும் டிச., மாதத்தில், "ஸ்மார்ட் கார்டு' தயாரித்து வழங்கும் பணி நடக்க உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கலர் "ஜெராக்ஸ்' தேவையில்லை

ரேஷன் கடையில் உள்ள "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ஆதார் அட்டையை "ஸ்கேன்' செய்ய முடியாதவர்கள், கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பதிலாக, கருப்பு-வெள்ளை ஜெராக்ஸ் எடுத்தால், எளிதாக "ஸ்கேன்' செய்யலாம் என, அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தும், இதுவரை ஆதார் கிடைக்காதவர்கள், அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களில், ஆதார் அட்டை நிலவரத்தை அறிந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை நிலவரம் தெரியாதவர்கள், அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில், உடற்கூறுகளை மீண்டும் பதிவு செய்து, கார்டு பெறலாம்.

"ஸ்மார்ட்' போனில் கூட பதியலாம்

ஆதார் பதிவுக்கு, ரேஷன் கடைக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களது "ஸ்மார்ட்போன்' மூலம், ரேஷன் கடை நிலவரத்தை அறியலாம்; ஆதார் எண்ணையும் "ஸ்கேன்' செய்து கொள்ளலாம். கடையின் இருப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரம், பரிவர்த்தனை போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில், "கூNகஈகு' என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, அதன் வழியாக சென்று, ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள "மொபைல்' எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மொபைல்போனுக்கு வரும் "பாஸ்வேர்ட்' கொண்டு, பொதுவினியோக திட்ட செயலில், ஆதார் விவரம் பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

EMIS COMMON POLE DECLARATION REPORT ..

Teaching of English by Phonetic Method - Rhymes'PUSH PUSH THE AIR"

Teaching of English by Phonetic Method - Rhymes"DONT FEAR MY DEAR"

Teaching of English by Phonetic Method - Rhymes'The vowels of the alphabet'

Teaching of English by Phonetic Method - Rhymes "Little Drops Of Water'

Teaching of English by Phonetic Method - Rhymes"Hoot Hoot Hoot"

கேந்திர வித்தியாலயாவில் 6205 ஆசிரியர் வேலை


5134 மத்திய அரசு பணிஇடங்கள்


"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!

"ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!

ஆதார் விவரங்களை பதிவு செய்த கார்டுதாரர்களுக்கு மட்டுமே,"ஸ்மார்ட்' கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்; வரும், 31க்குள், ஆதார் "ஸ்கேன்' செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 29 ஆயிரத்து, 370 ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 23 லட்சத்து, 45 ஆயிரத்து, 548 நபர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் 
வழங்கப்படுகின்றன.மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 4.75 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 4.12 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த வார நிலவரப்படி, மாவட்ட அளவில் இதுவரை, 14 லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர், ஆதார் விவரத்தை "ஸ்கேன்' செய்துள்ளனர். திருப்பூர் வடக்கில், 55 சதவீதம் பேர்; திருப்பூர் தெற்கில், 56 சதவீதம் பேர், ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்துள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை "ஸ்கேன்' செய்வது எளிதாக உள்ளது. "ஆன்-லைன்' மூலம் பதிவிறக்கம் செய்த அட்டைகளை "ஸ்கேன்' செய்வதில் குளறுபடி நீடிக்கிறது.

பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள், டிச., 31ல் காலாவதியாகிறது. வரும் ஜன., முதல், "ஸ்மார்ட்' கார்டு மூலம், பொருள் வினியோகம் நடக்க உள்ளது. வரும், டிச., மாதம், "ஸ்மார்ட்' கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடக்கும் என்பதால், ஆதார் "ஸ்கேன்' செய்யும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில், ரேஷன்

பயனாளிகளில், 62 சதவீதம் பேரின் ஆதார் விவரம் "ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளது. "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு, "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், கார்டில் <உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீங்கலாக, அனைவரின் ஆதார் விவரத்தையும் "ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரும் நவ., மாதம் முதல், அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டில் உள்ள, அனைத்து நபர்களின் ஆதார் விவரம் பதியாமல் இருந்தால், கார்டு தானாக ரத்தாகிவிடும். குடும்ப தலைவர் அல்லது யாராவது ஒருவரின் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் கிடைக்கும். வரும் டிச., மாதத்தில், "ஸ்மார்ட் கார்டு' தயாரித்து வழங்கும் பணி நடக்க உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கலர் "ஜெராக்ஸ்' தேவையில்லை

ரேஷன் கடையில் உள்ள "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ஆதார் அட்டையை "ஸ்கேன்' செய்ய முடியாதவர்கள், கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பதிலாக, கருப்பு-வெள்ளை ஜெராக்ஸ் எடுத்தால், எளிதாக "ஸ்கேன்' செய்யலாம் என, அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தும், இதுவரை ஆதார் கிடைக்காதவர்கள், அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களில், ஆதார் அட்டை நிலவரத்தை அறிந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை நிலவரம் தெரியாதவர்கள், அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில், உடற்கூறுகளை மீண்டும் பதிவு செய்து, கார்டு பெறலாம்.

"ஸ்மார்ட்' போனில் கூட பதியலாம்

ஆதார் பதிவுக்கு, ரேஷன் கடைக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களது "ஸ்மார்ட்போன்' மூலம், ரேஷன் கடை நிலவரத்தை அறியலாம்; ஆதார் எண்ணையும் "ஸ்கேன்' செய்து கொள்ளலாம். கடையின் இருப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரம், பரிவர்த்தனை போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில், "கூNகஈகு' என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, அதன் வழியாக சென்று, ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள "மொபைல்' எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மொபைல்போனுக்கு வரும் "பாஸ்வேர்ட்' கொண்டு, பொதுவினியோக திட்ட செயலில், ஆதார் விவரம் பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் பட்டம் நடத்திய கனவு ஆசிரியர் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி

தமிழ்நாடு அளவில் தினமலர் பட்டம் நடத்திய கனவு ஆசிரியர் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி அளவில் ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி பரமேஸ்வரி

தினமலர் பட்டம் நாளிதழில் கனவு ஆசிரியர் போட்டியில் பல மாவட்டங்களில் குவிந்த கடிதங்களில் இருந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின் கடிதமும் தேர்வாகி உள்ளது.தமிழக அளவில் நடுநிலைப் பள்ளி அளவில் தேர்வாகி உள்ள ஒரே மாணவி இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைத்து பள்ளிகளும் மேல்நிலைப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய தினமலர் பட்டம்  நாளிதழில் வெளியாகி உள்ளது.

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை

தேர்வே எழுதாமல் முதலிடம் பிடித்த மாணவி !!

பீஹார் மாநில கல்வித்துறையின் அவலம்!!

பீஹாரில், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய், தேர்வே எழுதவில்லை என, தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாநில முதல் மாணவி :

பீஹாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மே மாதம் நடந்த, பிளஸ் 2 தேர்வில், ரூபி ராய் என்ற மாணவி, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாதாரண விஷயங்களை கூட, ரூபி ராய், தப்பும் தவறுமாக கூறியதை பார்த்த நிருபர்கள், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

பேட்டியில் சொதப்பல் :

'பொலிட்டிகல் சயின்ஸ்' பாடத்தை, 'பிராக்டிகல் சயின்ஸ்' என, அவர் கூறியது, அனைவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிருபர்களுடன் ரூபி ராய், சொதப்பலாக பேசிய வீடியோ, இணையத்தில், 'வைரல்' ஆக பரவியது. இதனால், பீஹார் மாநில கல்வி முறை, பலத்த கேலிக்குள்ளானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரூபி ராயிடம் விசாரணை நடத்தினர். அவரின் கையெழுத்தையும், விடைத்தாள்களையும் ஒப்பிட்டு, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில், 'ஹோம் சயின்ஸ்' பாடத்தை தவிர, வேறு எந்த தேர்வையும் அவர் எழுதவே இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

தடவியல் ஆய்வு :

இதுகுறித்து, பாட்னா எஸ்.பி., மனு மஹராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வின் ஆறு பாடங்களில், ஹோம் சயின்ஸ் பாடத் தேர்வை மட்டுமே ரூபி ராய் எழுதியுள்ளார். மீதமுள்ள ஹிந்தி, ஆங்கிலம், புவியியல், பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் இசை ஆகிய தேர்வுகளை, வேறு சிலர் எழுதி உள்ளனர். தடவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல விடைத்தாள்களில், பீஹார் மாநில கல்வி வாரியத்தின் குறியீடு காணப்படவில்லை. அந்த தாள்கள், இடைச்செருகலாக சேர்க்கப்பட்டுள்ளன. ரூபி ராயை போன்று, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோரின் விடைத்தாள்களும், தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன; அவற்றின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கு சிக்கல் :

பீஹாரின் வைஷாலி நகரில் உள்ள விஷ்ணு ராய் பள்ளியில் படித்த, ரூபி ராய் உள்ளிட்ட நான்கு பேர், மாநில அளவில், முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இவர்கள் அனைவரும், மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விஷ்ணு ராய் பள்ளிக்கு எதிராக, மாநில கல்வித்துறை புகார் செய்தது.

கைது :

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மாணவி ரூபி ராய், கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீஹார் மாநில கல்வி வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவர் மனைவியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான உஷா சின்ஹா, விஷ்ணு ராய் பள்ளி முதல்வர் பச்சா ராய் ஆகியோரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்

CPS MISSING CREDIT

🍁CPS MISSING CREDIT🍁

👉� வலைதளத்தில்
http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

👉� தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
(DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

👉� உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

மாணவிகள் தேசிய டேக்வாண்டோ பதக்கங்களை குவித்தது தமிழகம்

தெலுங்கானாவில் நடந்த மாணவிகளுக்கான தேசிய டேக்வாண்டோ போட்டியில், ஒரு தங்கம் உட்பட பத்து பதக்கங்களுடன் தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்தது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், மாணவிகளுக்கான தேசிய டேக்வாண்டோ போட்டி தெலுங்கானா ரெங்காரெட்டி மாவட்டத்தில் நடந்தது.
இதில் 14, 17 வயதினருக்கான போட்டியில், தமிழக அணி சார்பில் தலா 10 பேர் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம், நாகாலாந்து இரண்டாமிடம் பிடித்தது. ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களுடன் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்தது. இதில்,17 வயதினருக்கான 32--35 கிலோ எடை பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்., பள்ளியின் சவுமியா தங்கப் பதக்கம் வென்றார். 35--38 கிலோ பிரிவில் அபிதா, 48--52 கிலோ பிரிவில் கோவை சாரி சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி அவந்திகா, 60 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில், சேலம் பள்ளபட்டி வித்யா பீடம் பள்ளியின் அனுசியா பிரியதர்ஷினி, 14 வயதினருக்கான 26--29 கிலோ பிரிவில் கோத்தகிரி விஸ்வசாந்தி வித்யாலயா பள்ளி நிமிஷா வெள்ளி பதக்கம் வென்றனர். 17 வயதினர் 32 கிலோ பிரிவில் வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் மஞ்சு, 38--41 கிலோ பிரிவில் கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா பள்ளி சபிதா, 44--48 கிலோ பிரிவில் சென்னை ஜெய்பால் கரோடியா பள்ளி ஹேமாஸ்ரீ, 14 வயதினருக்கான 22--24 கிலோ பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்., பள்ளி விந்தியா, 29--35 கிலோ பிரிவில் பவதாரிணி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால்,உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17, 19ம் தேதிகளில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது; போட்டியிட, 4.97 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு,சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிச., 31க்குள் தேர்தல் நடத்திமுடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சிரமம்இந்நிலையில், வட கிழக்கு பருவமழை வரும், 20ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பருவமழை காலத்தில், தேர்தல்நடத்த வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலை, பருவமழைக்கு முன் நடத்திமுடிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது; அதற்கு, தடை விதிக்கப்பட்டு விட்டது. இப்போது, பருவமழை காலத்தில், தேர்தல் நடத்த வேண்டியுள்ளது; அது, சிரமம். எனவே, தேர்தலைதள்ளிப் போடுவது சம்பந்தமாக, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA  மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்*

அகஇ - சேலம் மாவட்டம் KGBV பள்ளி பாட ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர் பணியிடத்திற்கான தெரிவு ( பெண்கள் மட்டும் )

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.
3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.
4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.
5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.
7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.
8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.
10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கலை, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், கைவினை, தோட்டக்கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், 5,000த்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்களும் உள்ளனர். இதில் சேர, பிளஸ் 2 முடித்து, அரசு தேர்வுத் துறை நடத்தும், தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின், மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், டி.டி.சி., என்ற, ஆசிரியர் பயிற்சி படிப்பில், சான்றிதழ் பெற வேண்டும். இத்தேர்வுக்கு, 1976ல் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித் துறையை, அரசு தேர்வுத் துறை வலியுறுத்தியது. இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவுப்படி, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் நடக்கும் தேர்வை மட்டும், பழைய பாடத்திட்டத்தில் நடத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான தேர்வை, புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள, அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.

அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் சார்பில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. அதிக செல்வாக்கு : வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும், மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வில் தலையிடுவது; சாதகமில்லாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அனுப்புவது என, ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன. அதனால், சங்க நிர்வாகிகளுக்கு, கல்வித் துறையில் அதிக செல்வாக்கு உள்ளது. இடமாறுதல் கவுன்சிலிங்கில், அரசியல் செல்வாக்கு உள்ளோருக்கு சமமாக, சில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும், ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், சங்க நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு, பணிக்கு செல்லாமல், சொந்த பணிகளையும், சங்க பணிகளையும் பார்ப்பதாக கூறப்படுகிறது. புகார் : சில ஆசிரியர்கள், தங்களுக்கு பதிலாக, வேறு சிலரை, 'உள் சம்பளத்துக்கு' அமர்த்தி, வருகை பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்திட்டு, சம்பளம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைத்து ஆய்வு நடத்த, உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சங்க நிர்வாகிகள் பணியாற்றும் பள்ளிகளின் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது; விரைவில், அதிரடி ஆய்வு நடக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, சில ஆசிரியர்களிடம் விசாரித்த போது, 'பெரும்பாலான சங்க நிர்வாகிகள், பள்ளி விடுமுறை நாட்களிலேயே, சங்க பணிகளை பார்க்கின்றனர்; அதிகாரிகள் செயல்பாட்டை, முதலில் ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.