Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 12 October 2016

மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும் !

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, வரும் 13ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.
அடுத்த  ஆண்டுமார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத் துறை
இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது.பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அதற்கு பிறகு அந்த விவரங்களை பள்ளியில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றுதேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் தயாரிக்கப்படும் இந்த பட்டியல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மேற்கண்ட பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்கு பிறகே தேர்வுத்துறை அந்த பட்டியல்களை சரிபார்க்கும். அதில் சந்தேகம் இருந்தால் அவற்றை திருத்த வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் செய்முறைத் தேர்வுக்குரிய மாணவ, மாணவியர் விவரங்களும் தனியாக தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் அனைத்து பள்ளியிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!

நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது. மேலும் பேருந்துச் சீட்டு, தங்குமிட முன்பதிவு, திரையரங்கச் சீட்டு,

செல்பேசிகளுக்கான பயன்பாட்டு கட்டண முறை, உணவு விற்பனை என அனைத்தையும் மக்கள் செல்பேசிமூலம் பயன்படுத்துகின்றனர். இந்த செல்பேசிகளுக்கு நாடுமுழுவதும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளது. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், 10 இலக்க எண்களைப் பயன்படுத்திவரும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 'நம்பர் தட்டுப்பாடு' ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க செல்பேசி எண்ணை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்பேசி எண்களை நடைமுறைப்படுத்த தொலைதொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து செல்பேசி நிறுவனங்களிடம் இருந்து மிகவிரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு, 30 ஆண்டுகள் எண் திட்டம் என்ற அடிப்படையில் இப்போதுள்ள செல்பேசி எண்கள் மத்திய தொலைதொடர்புத் துறையால் கொண்டு வரப்பட்டது. ஆனால் செல்பேசியின் வளர்ச்சி, அதிகரித்துவரும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றால் தொலைதொடர்புத் துறை மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போதுள்ள 10 இலக்க செல்போன் எண்களை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்போன் எண்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொலைதொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, இனி ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட வரிசை அடிப்படையில் 11 இலக்க செல்போன் எண்களைத் தர உள்ளன. இந்த 11 இலக்க எண் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்புத் துறை அனைத்து செல்பேசி நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெட்’ தகுதி தேர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு!!

நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு, வரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்வதற்கும், பி.எச்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும், மத்திய கல்வி வாரியத்தால் நெட் தகுதி தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2017ம் கல்வியாண்டிற்கான தேர்வு, ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது.

தேர்வர்கள் வரும், 17ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை, &'ஆன்-லைன்&' மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணங்களை, நவ.,17ம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிச., 21ம் தேதி சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, தெளிவான விபரங்களை சி.பி.எஸ்.இ., இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இரண்டாம் பருவம் எட்டாம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

இரண்டாம் பருவம் ஏழாம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

இரண்டாம் பருவம் ஆறாம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

இரண்டாம் பருவம் ஐந்தாம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

இரண்டாம் பருவம் நான்காம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

இரண்டாம் பருவம் மூன்றாம் வகுப்பிற்கு பயன்படும் ஆங்கில வார்த்தைகள்

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன்
2. கயிலை மலையை அசைக்க முயலும் ராவணனின் சிற்பம் யாரால் உருவாக்கப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
3. தசாவதாரச் சிற்பம் யார் காலத்தில் எழுப்ப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
4. பிற்காலச் சோழர்களின் காலம் - 850 - 1200

5. பிற்காலச் சோழர்களின் தலைநகரம் - தஞ்சாவூர்
6. பிற்காலச் சோழர்களின் ஆட்சியை புதுப்பித்தவர் - விஜயாலயச் சோழன்
7. பிற்காலச் சோழர்களின் உயர்வுக்குக் காரணமாணவர் - முதலாம் பராந்தகச் சோழன்
8. பிற்கால சோழர்களின் வலிமைமிக்க அரசன் - ராஜராஜ சோழன்
9. முதலாம் பராந்தகச் சோழகன் ஆண்ட காலம் - 907 - 955
10. மதுரை கொண்டான் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் - முதலாம் பராந்தகச் சோழன்
11. பராந்தகனின் மகன் கொல்லப்பட்ட இடம் - தக்கோலம்
12. முதலாம் பராந்தகன் போரிட்ட ராஷ்டிரகூட அரசன் - மூன்றாம் கிருஷ்ணன்
13. ராஜராஜனின் தந்தை - இரண்டாம் பராந்தகன்
14. ராஜராஜன் சேர நாட்டுக் கடற்படையை வென்ற இடம் - காந்தளூர்
15. ராஜராஜனுக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் - ராஜசேகர்
16. அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவன் - ராஜராஜன்
17. மும்முடிச்சோழன் என அழைக்கப்பட்டவர் - ராஜராஜன்
18. ராஜராஜன் கடலில் உள்ள எந்தப் பகுதியைப் போரில் வென்றான் - மாலத்தீவுகள்
19. தஞ்சை பெறிய கோவிலைக் (பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் - ராஜராஜன்
20. ராஜராஜன் புத்த மடாலயம் கடட உதவிய இடம் - நரகப்பட்டினம்
21. முதலாம் ராஜேந்திரனின் காலம் - 1012 - 1044
22. கங்கை கொண்டான் என அழைக்கப்பட்டவன் - முதலாம் ராஜேந்திரன்
23. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் - ராஜேந்திரன்
24. முதலாம் ராஜேந்திரன் வெற்றி கண்ட வங்காள மன்னன் - மஹிபாலன்
25. சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டிக் கங்கை நீரைக் கலந்தவன் - ராஜேந்திரன்
26. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தைத் தோற்றுவித்தவன் - முதலாம் ராஜேந்திரன்
27. தஞ்சை பெரிய கோவில் - சிவன் கோவில்
28. குலோத்துங்கன் தன் மகளை மணம் செய்து கொடுத்தது - இலங்கை மன்னன் விஜயபாகுவிற்கு
29. கலிங்கப் போருடன் தொடர்புடையவன் - குலோத்துங்கன்
30. குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப்பைப் பாடும் இலக்கியம் - கலிங்கத்துப் பரணி
31. விஜயாலயச் சோழன் ஆண்ட காலம் - 850 - 880
32. விஜயாலனுக்குப் பின் அரசாண்டவன் - மகன் ஆதித்தியன்
33. ஆதித்திய சோழன் வெற்றிகண்ட பல்லவ அரசன் - அபராஜிதன்
34. சேக்கிழார் இயற்றிய நூல் - திருத்தொண்டர் புராணம்
35. திருத்தொண்டர் புராணத்தின் மரு பெயர் - பெரிய புராணம்
36. பெரிய புராணத்தில் இடம் பெறுவது - நாயன்மார் வரலாறு
37. கம்பர் யாருடைய அவையிலிருந்தார் - இரண்டாம் குலோத்துங்கன்
38. ஒட்டக்கூத்தரும் புகழேந்திப் புலவரும் அலங்கரித்த அரசவை யாருடையது - இரண்டாம் குலோத்துங்கன்
39. சோழப்பேரரசை வெற்றி கொண்டவர்கள் - ஹோய்சாளர், காகதியர்கள்
40. சோழப் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம்
41. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன் - கோட்டம்
42. கோட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டது - நாடு அல்லது மாவட்டம்
43. சோழர்களின் முக்கிய வருவாய் - நிலவரி
44. கிராமசபை, வாரியங்களின் உறுப்பினர்கள் எம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் - குடவோலை முறை
45. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை - கப்பல் படை
46. கப்பல் படைத்தலைவர்கள் எவ்வாங் அழைக்கப்பட்டனர் - நாயகர், சேனாதிபதி, மகாதண்ட நாயகர்
47. சோழர் காலத்தில் வருமானம் பெற்றுத்தரும் வணிக முறை - உள்நாட்டு வணிகம்
48. பிற்காலப் பாண்டியர்களின் காலம் - கி.பி.1200 - 1300
49. பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தியவர் - கடுங்கோன்
50. கடுங்கோனுக்குப்பின் அரசனான பாண்டியன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன்

மேள தாளத்துடன் மாணவர்கள்

சமுதாய சீர்கேடுகளுக்கு கல்விதான் தீர்வு

31 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி!

மத்திய அரசு, தனியார்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தனியார்துறையில் பயிற்சி பெற்றுவரும் 36,000 பேருக்கு, திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த ’மத்திய தொழில் முனைவோர் அமைச்சகம்’ தனியார் நிறுவன அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு தலா ரூ.18,000 ஊதியமும் வழங்கப்படுகிறது.

தனியார்துறைகளில் 12 முதல் 15 சதவிகிதம் வரை ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்மூலம் தேவைக்கு அதிகமாக உள்ள ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கி, ஊதியமும் வழங்கப்படுவதால் இந்தத் திட்டம் தனியார்துறைக்கு சாதகமான சூழலையே உருவாக்கும். ஒருபுறம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாலும் மறுபுறம் தனியார்துறையினருக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாலும் இத்திட்டம் மத்திய அரசுக்கும் தனியார்துறையினருக்கும் பயன் தரும்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின்மூலம் ஊழியர்களின் திறன் அதிகரித்து, அதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பா.ஜ.க. தலைமையில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பொறுப்பேற்று இரண்டாண்டு நிறைவடைந்துள்ளநிலையில், போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.டி., ஆட்டோமொபைல், ஜவுளித்துறை உட்பட எட்டு முக்கியத் துறைகளில் 4.21 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது. இதையடுத்து, 2015ஆம் ஆண்டு வெறும் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் இதுபோன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்மூலமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி நோட்-7 மொபைல் வைத்திருக்கிறீர்களா? சாம்சங் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போன் பேட்டரிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாவதால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

   சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரில் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பில்இருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன் உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம். அதோடு, பல முக்கிய செல்போன் விற்பனை நிறுவனங்களும் இவ்வகை போன்களை விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்தியது.

பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும், விமான பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன்களை ஆன் செய்ய தடை விதித்துத.

இந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 ரக போன்களை வைத்திருக்கும் பயனாளர்கள், செல்போனை சுவிட் ஆப் செய்து வைக்கவும், அவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆலோசனைப்படியே ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆளுநர் அறிவிப்பு

ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயரும் !!!

7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டம்:
7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து அமைச்சரவைசெயலாளர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக உயர்கிறது. இதனையடுத்து, ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாநில கவர்னர்களின் மாத சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் சட்டத்தை தயாரித்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

பரிசீலனை:இதேபோல் துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என தனியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், ராஜ்யசபா தலைவர் என்ற முறையில், அவரது மாதசம்பளம் ரூ.1.25 லட்சமாக உள்ளது. துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்தும் போது துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் சம்பளம் கடைசியாக கடந்த 2008 ஆண்டு 3 மடங்கு உயர்த்தப்பட்டது. அதுவரை, ஜனாதிபதி சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரமாகவும், கவர்னர் சம்பளம் ரூ.36 ஆயிரமாக இருந்தது.

உ.பி.,யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி., அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இலவச ஸ்மார்ட் போன் திட்டம்:

உ.பி., மாநிலத்தில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது.
அடுத்த ஆண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்புமுடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார்.தேர்தல் முடிந்த பின்:இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன் பெற விருப்பம் உள்ளவர்கள் அக்.,10 முதல் நவ., 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சட்டசபை தேர்தல் முடிந்த பின் பதிவு செய்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு: ஆளுநர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 166, உட்பிரிவு 3ன் படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள், நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து

விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட உள்ளது.பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை

பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.

இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காலாண்டு தேர்ச்சி பள்ளி வாரியாக ஆய்வு

காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன. தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது; அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளின் காலாண்டு தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற்று வருகின்றனர்.

பாட வாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பின்தங்கிய பள்ளி மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட உள்ளது. 'வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆண்டுதோறும் வினாக்களின் வகைகள் மாற்றப்படுகின்றன. முன்னர், பொதுத்தேர்வில், பாட புத்தகத்தின் பின்பக்க வினாக்கள் மட்டுமே இடம்பெற்றன. கடந்த ஆண்டு, பாடங்களின் உட்பகுதிகளில் இருந்தும், வினாக்கள் கேட்கப்பட்டன.

இது குறித்து, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தேர்வுத் துறையால் சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 'புத்தகம் முழுவதையும், மாணவர்கள் படிக்க வேண்டும்; எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும், வினாக்கள் இடம் பெறும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு, அது போன்ற சுற்றறிக்கை எதையும், தேர்வுத் துறை வெளியிடவில்லை. பெரும்பாலான பள்ளிகள், பாடங்களை நடத்துவதுடன், புத்தகத்தின் பின் பக்க கேள்வி களுக்கே முக்கியத்துவம் அளித்து, மாதிரி தேர்வுகளை நடத்துகின்றன.

அதனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில், எந்த வகை வினாக்கள் இடம் பெறும்; புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டுமா அல்லது பின் பக்க வினாக்கள், வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான பதில்களை படித்தால் போதுமா என, மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.