Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 13 October 2016

சென்டம்' தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க வெள்ளி நாணயம்

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 2004ம் ஆண்டு முதல் பல்வேறு ஊக்கப்பரிசு திட்டங்களை பள்ளி கல்வித் துறை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கினை எட்டிய நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கும், 90 சதவீதம் தேர்ச்சிஅளித்த கிராமப்புற பள்ளிகளுக்கும், ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப் படுகிறது.அத்துடன், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.இத்திட்டம், 2011ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டது.தங்கள் பாடத்தில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் மத்தியில் இது பெரும் குறையாக இருந்து வந்தது.பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார் மேற்கொண்ட முயற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அளித்த 3,935 ஆசிரியர்கள், சில மாதங்களுக்கு முன் கவுரவிக்கப் பட்டனர்.ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தங்கள் பாடத்தில் 'சென்டம்' தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படாமல் இருந்தனர்.தற்போது, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக சென்டம் தேர்ச்சி கொடுத்த, அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 775 ஆசிரியர்களைகவுரப்படுத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கடந்த காலங்களில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் விதமாக, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது, ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.அதையடுத்து, தற்போது கவுரவிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பரிசாக, 92 சதவீத துாய்மை கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி நாணயங்களை தயாரித்து வழங்க, பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி உள்ளது. நவம்பர் 3ம் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*

🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*


🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா

✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*

🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்

🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;

🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.

🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;

🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

*​சமூக நலனில் அக்கறையுடன்​*
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*

🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*

🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா

✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*

🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்

🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;

🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.

🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;

🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

SSLC Special Supplementary Exam June 2016 - Mark Certificate Distribution - Information

Thanks:Mr Nisar Ahmed

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஆதார்அட்டை பெற இதுவரை பதிவுசெய்யாத மாணவர்களைஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில்நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச்சென்று ஆதார்அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவிதொடக்ககல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிதலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தங்களதுகட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைபள்ளிகளில்பயிலும் மாணவர்கள் அனைவரும்ஆதார் அட்டைபெற்றுவிட்டார்களா என்பதைஉறுதி செய்ய வேண்டும். இந்தப்பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமைஆசிரியர்களிடம் இருந்துபெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப்பணி மிகமுக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி,மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார்அட்டை பெற்று 100 சதவீதம்இலக்கை அடைய உரியநடவடிக்கைஎடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்

5. மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்
6. மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219
7. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251
8. ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு
 9. கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்
10. முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்
11. முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்
12. சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்
13. மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்
14. மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்
15. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்
16. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்
17. ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
18. யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்
19. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்
20. ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்
21. ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை
22. ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து
23. ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36
24. பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி
25. பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்
26. அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்
27. பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்
28. பாஜராஜனின் காலம் - 836 - 885
29. பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்
30. ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி
31. சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
32. சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்
33. சவ்ஹான்களில் சிறந்த மன்னன் -  விசாலதேவர்
34. விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்
35. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191
36. முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்
37. இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192
38. இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்
39. பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்
40. ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்
41. பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா
42. பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா
43. போஜராஜன் காலம் - 1018 - 1055
44. போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்
45. போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்
46. சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு
47. சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
48. சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்
49. சாந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ
50. யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955

TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை கடந்த 2014-இல் டிஆர்பி வெளியிட்டது.அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தச் சிக்கலுக்கு தற்போது தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் பணியிடத் தேர்வை டிஆர்பி மீண்டும் வெளியிட்டு விண்ணப்பங்களை வரவேற்றது. இம்முறை விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
எழுத்துத் தேர்வு மூலம் இந்த நேரடி நியமனம் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வானது வரும் 22 -ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை டிஆர்பி இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்ற பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 32 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் டிஆர்பி வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய பகுதி களில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாதிரி பள்ளிகள் திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மூலம்செயல்படுத் தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய அரியலூர், பெரம்பலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம் உள்பட 13 மாவட்டங்களில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.பொதுவாக, தனியார் பள்ளி களில் படிக்கின்ற மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், தேர்ச்சி நிலை உள்ளிட்ட விவரங் கள் அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக் கப்படும். கனமழை உள்ளிட்ட எதிர் பாராத சூழலில் திடீரென பள்ளி களுக்கு விடுமுறை விடப்படும் விவரமும் இது போன்று எஸ்எம்எஸ் மூலமாக மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.இந்நிலையில், தனியார் பள்ளி களைப் போன்று மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியை 44 அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளிகளில் விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு ஆர்எம்எஸ்ஏ திட்டமிட்டுள்ளது.

இதற்காக அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த எஸ்எம்எஸ் சேவை திட்டத்தை ஒரு மாதத்தில் செயல்படுத்தவும் அது வெற்றிகரமாக வரும்பட்சத் தில் இதர பள்ளிகளுக்கும் விரிவு படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆர்எம்எஸ்ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்

பாரத ஸ்டேட் வங்கியில் 2,428 அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு.

பாரத ஸ்டேட் வங்கி 2,428 அதிகாரிகளை போட்டித் தேர்வு மூலம் நேரடியாக தேர்வுசெய்யும் வகையில் கடந்த மே மாதம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வுஆன்லைன் வழியில் கடந்த ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜூலை 31-ல் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இத்தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்தது.இந்த நிலையில், மெயின் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தேர்வு பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி தனது இணையதளத்தில் (www.sbi.co.in/careers) வெளியிட்டுள்ளது.

தேர்வு பட்டியல் அக்டோபர் 15-21-ம் தேதியிட்ட ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ பத்திரிகையிலும் வெளியிடப்படும் என்றும் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கும் அதுகுறித்த தகவல் தபால்மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

விஐடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!

அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள். ‘வரலாற்றைப் படைப்பவர் ஆசிரியர்தான்’ என்றார் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்றழைக்கப்படும் எச்.ஜி. வெல்ஸ். எப்போதுமே ஆசிரியர்களுக்கு உலக அளவில் தனி மதிப்புண்டு. 

இப்படியெல்லாம் ஆசிரியர் பணியை எப்போதுமே சிலாகித்தாலும் பெரும்பாலான சிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக விரும்புவதில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பில் உச்சபட்ச மதிப்பெண்களும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களில் எத்தனை பேர் ஆசிரியராகக் கனவு காண்கிறார்கள்? தலைசிறந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் எப்படி அவசியமோ அதே போல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இன்றைய முக்கியத் தேவைகளில் ஒன்று.

உலக அளவிலேயே நல்லாசிரியர்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்டதும், “நான்கூட ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய அதற்கான சூழல் வாய்க்கவில்லையே!” என நினைப்பவர்கள் இருக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாரானால் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் நல்லாசிரியரை இப்போதே வெளிகொணரலாம்.

தேவையும் வரவேற்பும்

ஒரு பாடப் பிரிவில் அல்லது துறையில் நிபுணராகவும், அதை அழகாக எடுத்துரைக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியராக முடியும். இதைச் செய்ய உங்களுக்கு வயது வரம்போ, குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இதற்குப் பெயர்தான் ‘ஆன்லைன் டீச்சிங். இணையம் வழியாகக் கற்பிக்கும் ஆன்லைன் டீச்சிங் முறைக்கு இன்று மிகப் பெரிய தேவையும் வரவேற்பும் உருவாகியுள்ளது.

ஆன்லைன் ஆசிரியராக யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை தர காத்திருக்கத் தேவை இல்லை. ஸ்கைப் (Skype), யூடியூப் (Youtube), சமூக ஊடகங்கள் (Social media), இமெயில் (Email), சாட் ரூம்ஸ் (Chat Rooms), மெசேஜ் போர்ட் (Message Board), பாட்காஸ்ட் (Podcast), வலைப்பூ (Blog) போன்ற இணைய ஊடகங்களைப் பயன்படுத்தி இலவசமாகவோ, கட்டண வசூலித்தோ கற்பிக்கலாம்.

ஆன்லைன் கற்பித்தல் நுட்பங்களைக் கற்றுக்கொண்டால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் ஆசிரியராக முடியும். இப்படியாக, ஐ.ஐ.டி. ஜெ.ஈ.ஈ (IIT JEE) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு பொறியாளர் வழிகாட்டலாம், மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை ஒரு மருத்துவரே கற்பிக்கலாம், கைவினைப் பொருள்களின் செய்முறை சொல்லித்தரலாம், மொழிகளைப் பேச-படிக்கக் கற்பிக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை அறிவு, அனுபவம், கொஞ்சம் தொழில்நுட்பம் மற்றும் தான் அறிந்ததைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் எண்ணம்.

ஆன்லைன் கற்பித்தல் முறைகள்

# நிகழ்நேர மெய்நிகர் வகுப்பு (Live Virtual Class) ஆசிரியரும் மாணவர்களும் வெவ்வேறு இடத்தில் இருந்தால்கூடக் கற்பித்தலைச் சாத்தியமாக்கியிருக்கிறது சாட்டிலைட் தொழில்நுட்பம். இணையம் தொடர்புடைய கணினி மூலமாக வீடியோ அழைப்புகளை (video calls) விடுத்து இந்த வகுப்பு நடைபெறும்.

அதே நேரத்தில் பாரம்பரிய வகுப்பறையில் இருப்பது போலவே ஆசிரியரும் மாணவர்களும் உடனுக்குடன் இதில் உரையாட முடியும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். சொல்லப்போனால், கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் கேமராவின் முன்னால் ஒரு கரும்பலகையில் எழுதிக்கூடப் பாடம் நடத்தலாம். தொலைக்காட்சியில் நம்மிடம் ஒருவர் நேரடியாக உரையாடுவது போன்றதுதான் இந்த வகுப்பு.

# மேஸிவ் ஓபன் ஆன்லைன் கோர்ஸஸ் MOOCS (Massive Open Online Courses) - பதிவு செய்யப்பட்ட வகுப்பை ஆன்லைனில் பதிவிடுவதுதான் MOOCS. இந்த முறையில் பல புதிய படிப்புகள் இணையத்தில் அளிக்கப்படுகின்றன. இதற்கு ஆசிரியரும் மாணவரும் ஒரே நேரத்தில் இணையத்தில் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் விரிவுரைகளைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். இதன் மூலம் மிகச் சிறந்த கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியரிடம் உலகத்தின் ஏதோ முனையில் இருக்கும் மாணவர்கூடப் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

# ஒரு மாணவர்- ஒரு ஆசிரியர்- வகுப்பு (One-to-one-class): ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்கிற ரீதியிலும் கற்பித்தல் நிகழலாம். பாடம் சம்பந்தமாகத் தனிப்பட்ட சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

# ஒருங்கிணைந்த இணையவழி கற்பித்தல் (Integrated Online Teaching): மொபைல் ஃபோன், டேப்லெட், லேப்டாப், மேஜை கணினி உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் இப்படி அழைக்கப்படுகிறது.

விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை

மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளார். 

கடந்த, 2014ல், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், கல்வி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. பள்ளிப் பாடங்களில் சமஸ்கிருதம் சேர்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், கல்வி, காவி மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டின. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, 30 ஆண்டுகளுக்கு மேலாக, எவ்வித மாற்றம் இன்றி நீடித்து வரும் கல்விக் கொள்கையில், தற்காலத்துக்கு ஏற்ப அதிரடி மாற்றங்களை புகுத்த, மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்தது. புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான, நிபுணர் குழுவிடம், மே மாதம் ஒப்படைக்கப்பட்டது. 

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறக் கூடிய விஷயங்களின் சாராம்சம், 40 பக்கத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, பார்லி மென்ட் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டுப் பெற, மனித வள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. 

இதற்காக நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில், கல்விக் கொள்கை, தொடர்புடைய பிரச்னைகள், இதுவரை பெறப்பட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. சி.ஏ.பி.இ., எனப்படும், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உயரதிகாரிகளுடன், மற்றொரு ஆலோசனைக் கூட்டம், 25ல் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை, எட்டாம் வகுப்பு வரை, 'பெயில்' ஆக்காமல், தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் குறித்து,

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.