Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 15 October 2016

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1ரூ. 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2ரூ. 37 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?

மத்தியரசின் திட்டங்களில்*
இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும்.

இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்றுக் கொள்வதிலும் இந்த கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும். மேலும் மாநில மொழிகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்த தெளிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இதன் மூலம் மக்களிடையே கம்ப்யூட்டர் கற்றவர்கள் மற்றும் அறியாதவர்கள் என்ற இடைவெளி குறைய இவை பயன்படும். கம்ப்யூட்டர்கள், அவை இயங்கத் தேவையான சாப்ட்வேர், கல்வி சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், மின்சார இணைப்பு, யு.பி.எஸ்., இணைய இணைப்பு ஆகியவை ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும்.

இந்த தகவலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் மூலம் 1.5 கோடி மாணவர்களும் 10 லட்சம் ஆசிரியர்களும் பயனடைய இருப்பதாக பிரதமர், திட்டம் தொடங்கியபோது தெரிவித்தார்.

எனவே திட்டத்திற்கு நிதியும் சாதனங்களும் தரப்படுவதோடு நிற்காமல், மாநில அரசுகளின் துறை அதிகாரிகள் இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தர வேண்டும்.தமிழக அரசு கம்ப்யூட்டர் கல்விய விரும்ப வில்லையா மத்திய அரசு போதிய நிதி வழங்கியும் இன்னும் ஏன்  தமிழகத்தில் கணினி கல்வி தொடங்கப்படவில்லை.

தமிழக அரசின் பார்வைக்கு துறை சார்ந்த அதிகாரிகள்  பல நல்ல திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்.

தேசியக்கொடி மற்றும் சின்னங்கள் பயன்படுத்துவது குறித்தான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை

தமிழில் நுழைவுத்தேர்வு கோரிய மனு தள்ளுபடி

அகில இந்திய பொறியியல், மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழ் மொழியில் நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.பச்சைமால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “இந்தியஅளவில் நடத்தப்படும் பொறியியல்/ கட்டிட வரைகலை (ஏஐஇஇஇ)நுழைவுத் தேர்வு, அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளிலும் வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுச் செயலர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், சிபிஎஸ்இ சேர்மன் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற கிளையின் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வு முறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், இந்த மனு காலாவதியாகிவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் - பணியிடைப் பயிற்சி - சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று தலைப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம்

ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகளை எளிமைப்படுத்துவதற்காக, சென்னை மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக, செப்., 1 முதல், 30 வரை, வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இரண்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டதால், ஒரு மாதத்தில், 21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றை சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தரப்பட்டு உள்ளது. அவர்கள், உரிய அலுவலகங்களுக்கு சென்று, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். பின், ஓட்டுச்சாவடி பகுதி களில் உள்ள, விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கள ஆய்வு செய்து தகவல் அனுப்ப வேண்டும்.

இதற்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு, பல முறை அலைய நேரிடும். இதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், 'புதிய ஆப்' ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு செய்து, தகவல் உண்மையா; தவறானதா என, மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.வாக்காளர் விண்ணப்ப படிவத்தில், திருத்தம் செய்ய விரும்பினால், அதையும் ஓட்டுச்சாவடி அலுவலரின், மொபைல் ஆப் வழியே செய்யலாம்.

சோதனை ரீதியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 2,750 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இந்த வசதி ஏற் படுத்தி தரப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில், மொபைல் போனில் பதிவுசெய்து, இணைப்பு கிடைக்கும் பகுதிக்கு வந்ததும் அனுப்பலாம். இத்திட்டம் படிப்படியாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்

6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கான வீடியோ பாடங்கள்

Ranipet DIET மூலம் Term-2 video lessons  6th to 8th all subjects all lessons pendrive ல்  digital தரத்தில் துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் திரு.இறையருள் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Cell: 8098773950
         8220087326

அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எடுக்க வேண்டிய உறுதி மொழிகள்...

இன்று உலக கை கழுவும் தினம்

"சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்" என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்கிறது பழமொழி.

செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம்
நோயற்ற வாழ்வுதான்.

இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவார்கள். ஆனால் இந்தப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம். இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.

எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்?
-----------------------------------------------------------

* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

* மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

* வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

* கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

Global Handwashing Day was originally created for children and schools, but can be celebrated by anyone promoting handwashing with soap.

Why Handwashing with Soap?
-----------------------------------

Handwashing with soap is the “vaccine” that prevents infections.
Human feces are the main source of diarrheal pathogens. They are the source of shigellosis, typhoid, cholera, all other common endemic gastro-enteric infections and some respiratory infections such as influenza and pneumonia. A single gram of human feces can contain 10 million viruses and one million bacteria.
These pathogens are passed from an infected host to a new one via various routes but all of these illnesses emanate from feces. Removing excreta and cleaning hands with soap after contact with fecal material –from using the toilet or cleaning a child – prevents the transmission of the bacteria, viruses and protozoa that cause diarrheal diseases.

Other measures (food handling, water purification, and fly control) have an impact on these diseases as well, but sanitation and handwashing provide the necessary protection against fecal contact. They start by creating initial barriers to fecal pathogens from reaching the domestic environment. Handwashing with soap stops the transmission of disease agents and so can significantly reduce diarrhea and respiratory infections, and may impact skin and eye infections.
Research shows that children living in households exposed to handwashing promotion and soap had half the diarrheal rates of children living in control neighborhoods. Because handwashing can prevent the transmission of a variety of pathogens, it may be more effective than any single vaccine. Promoted on a wide enough scale, handwashing with soap can be thought of as a “do-it-yourself” vaccine. Ingraining the habit of handwashing could save more lives than any single vaccine or medical intervention.

Handwashing with soap is the most effective and inexpensive way to prevent diarrheal and acute respiratory infections, which take the lives of millions of children in developing countries every year. Together, they are responsible for the majority of all child deaths. Yet, despite its lifesaving potential, handwashing with soap is seldom practiced and difficult to promote.

Turning handwashing with soap before eating and after using the toilet into an ingrained habit could save more lives than any single vaccine or medical intervention, cutting deaths from diarrhea by almost half and deaths from acute respiratory infections by one-quarter. A vast change in handwashing behavior is critical to meeting the Millennium Development Goal of reducing deaths among children under the age of five by two-thirds by 2015.

Global Handwashing Day focuses on children because not only do they suffer disproportionately from diarrheal and respiratory diseases and deaths, but research shows that children – the segment of society so often the most energetic, enthusiastic, and open to new ideas – can also be powerful agents for changing behaviors like handwashing with soap in their communities.

81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு பெறும் சந்திரன்

பூமியை சுற்றி வரும் நிலவு 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு அடைவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நிலவின் மேற்பரப்பில் 180 குழிகள் உருவாகுகிறது.

விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும் இந்த குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கின்றன. 81, 000 ஆண்டுகலுக்கு ஒருமுறை நிலவு புதுப்பொலிவடைகிறது, இந்த பொலிவு இதற்கு முன்பு இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை கொண்டு நிலவின் வயதையும், மற்ற நட்சத்திரங்களின் வயதையும் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க... 'மொபைல் ஆப்!':தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். 

ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி உருவாக்கப்படுகிறது.  இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர். 

தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, 'ஆன்' செய்து, புகைப்படம் எடுக்கலாம்; ஆசிரியர் பாடம் நடத்துவதை, 'ஆடியோ' பதிவு செய்யலாம்; 'வீடியோ'வும் எடுக்கலாம். அதை அப்படியே, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

'ஆப்' எப்படி செயல்படும்?

* ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம் நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்

* பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்

* ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும் 

* கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார், எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்

* உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம். தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்

தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய  இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

விரும்பிய இடங்களுக்கே பணியிட மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்ந்தனர். ஆனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் விடுவிப்பு உத்தரவுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த மாவட்ட ஆசிரியர்கள் தங்களுக்குரிய பணியிடங்களில் சேரமுடியாமல் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் விடுவிக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் விடுவிப்பு உத்தரவு  வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். ஆனால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் ரத்தாகிவிட்டது. 

எனவே, விடுவிப்பு உத்தரவு வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். உதவி தொடக்க கல்வி அதிகாரியோ, மாவட்ட கல்வி அதிகாரியை பாருங்கள் என்று கூறுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியை சந்தித்தால், இயக்குநரை சந்தியுங்கள் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  தொடக்க கல்வி இயக்குநரை கடந்த வாரம் ஆசிரியர்கள் சந்தித்து முறையிட்டனர். அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் 5 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். 

அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடக்கத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. 


ஆனால் இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு  அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் ஒவ்வொரு ஆசிரியரிடமும் தனித்தனியாக கையொப்பம் பெறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும், மீறி கொண்டு வந்தால் செல்போனை பறிமுதல் செய்து பள்ளி தலைமையாசிரியர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், இதை பின்பற்றாவிட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'லீவு' எடுக்க தனியார் பள்ளிகளில் தடை

தனியார் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பில், 8.5 லட்சம் மாணவர்கள்; பிளஸ் 2 வகுப்பில், ஏழு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், தேர்வுத்துறை தயாரித்த பொது வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

வரும் கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு எழுத, பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.

அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மாணவர்களும், அந்த வகுப்பு ஆசிரியர்களும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. 

10ம் வகுப்பு மாணவர்களுக்கும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, 'ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் கண்டிப்பாக, பள்ளிக்கு வர வேண்டும்; தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகளில், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, மாணவர்களுக்கு, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்துள்ளனர். 

10 நாள் கூடுதல் வகுப்பு : பள்ளி மாணவர்கள் நிம்மதி

உள்ளாட்சி தேர்தல் ரத்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 நாட்கள் கூடுதல் வகுப்பு கிடைத்துள்ளது, அவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. 

ஆசிரியர்கள் கவலை : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணி என, ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் மாற்றுப்பணி வழங்கப்பட்டது. அக்., முதல், டிசம்பர் வரை, பல பண்டிகை விடுமுறைகள் உள்ள நிலையில், தேர்தல் பணிக்கு, 10 நாட்கள் ஒதுக்கப்பட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை அடைந்தனர்.உள்ளாட்சி தேர்தல் ரத்தானதால், தேர்தல் பணி வகுப்புகள் ரத்தாகி விட்டன; ஆசிரியர்களும், மாணவர்களும் நிம்மதியடைந்து உள்ளனர். இருப்பினும், மீண்டும் தேர்தல் அறிவித்தால், பாடங்கள் நடத்துவது தடைபடுமோ என்ற, குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், தியாகராஜன் கூறியதாவது: 

தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வழக்கமான வகுப்புகளுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உட்பட, வேறு எந்த பணிகளும் கிடையாது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், தேர்தல் பணி, வாக்காளர் கணக்கெடுப்பு என, பல வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால், 50 நாட்கள் வரை வீணாகிறது.

வேறு பணிகள் : எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணி தவிர, வேறு பணிகள் வழங்கக் கூடாது. இதை கல்வித் துறை கடைபிடித்தால், பொதுத்தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களும் மதிப்பெண் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். 

இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்

மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது: 

தமிழகம் போன்ற மாநிலங்களில் பல்கலையின் படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தால் மட்டும் போதாது. எனவே, அடுத்த ஆறு மாதத்தில் முக்கிய படிப்புகள், தமிழ் மொழியில் துவங்கப்படும். தமிழ்மொழியில் தேர்வுகள் நடத்தப்படும் போது, வினாத்தாள் திருத்தும் பணியை, மேற்கொள்ள ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வரும் ஜன., 2017 முதல் இணையதளம் மூலம் கற்பிக்கும் திட்டமான 'மூக்' செயல்பாட்டுக்கு வரும். அதன் மூலம், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.இணையதள கல்வியை எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ் பெற உரிய கட்டணம் செலுத்த வேண்டும். 

அடுத்த சில மாதங்களில், கலாசார மேம்பாடு, ஆசிரியர் கல்வி போன்றவற்றுக்காக நான்கு தொலைக்காட்சி சேனல்கள் துவங்கப்பட உள்ளன. அவற்றில் 'இக்னோ' பல்கலை பெரும்பங்கு வகிக்கும். பல்கலை சார்பில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது.புதிய கல்வி கொள்கை, பல்கலையின் பாடத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாகவே உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு கட்டணமின்றி கல்வி அளிக்கப்படுகிறது. அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். 

பல்கலையின் மண்டல சேவை பிரிவு இயக்குனர் வேணுகோபால் ரெட்டி, மண்டல இயக்குனர் மோகனன் மற்றும் பலர் பங்கேற்றனர்

302 இ-சேவை மையங்கள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம் : அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள 302 இ-சேவை மையங்கள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல, பகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த இ-சேவை மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 தற்பொழுது முதற்கட்டமாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி  தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் ரூ.25 (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள 302 அரசு இ-சேவை மையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.